Friday, November 1, 2013

மல்டிக்ரெய்ன் முறுக்கு & தீபாவளி வாழ்த்துக்கள்

கடலைபருப்பு-உளுந்துபருப்பு-பொட்டுக்கடலை முறுக்கு 
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி(அ) புழுங்கல் அரிசி-3 டம்ளர்
கடலைப்பருப்பு-1/2டம்ளர்
உளுந்துப்பருப்பு-1/2டம்ளர்
பொட்டுக்கடலை-1/2டம்ளர்
வெள்ளை எள்-2டேபிள்ஸ்பூன்
ஓமம்-2டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-2டீஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/2டீஸ்பூன்
சூடான எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா-2 சிட்டிகை
உப்பு
எண்ணெய்-பொரிக்க  
செய்முறை
கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பை வெறும் வாணலியில் வாசம் வர வறுத்து ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொடித்து சலிக்கவும்.
பொட்டுக்கடலையையும் பொடித்து சலித்துக் கொள்ளவும். 
இட்லி அரிசியை 2-3 முறை களைந்து இரண்டு மணி நேரங்கள் ஊறவைக்கவும்.
ஊறிய அரிசியை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய்த்தூளையும் அரிசிமாவுடன் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரிசி மாவுடன் பொடித்த பருப்பு வகைகள், பொட்டுக்கடலை மாவு, எள்ளு, ஓமம், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் கொஞ்சமாகத் தெளித்து முறுக்கு மாவைப் பிசையவும்.
2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை நன்றாக சூடாக்கி மாவுடன் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.

முறுக்கு பொரிக்கத் தேவையான எண்ணெயைக் காயவைக்கவும்.
முறுக்கு மாவை முறுக்குப் பிடியில் எடுத்து வட்டமாகப் பிழிந்து, காய்ந்த எண்ணெயில் கவனமாகப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான மணமான கரகர மொறுமொறு முறுக்குகள் தயார். 
அரிசியை ஊறவைத்து, பருப்புக்கள் வறுத்து, பொடித்து சலிக்க நேரமில்லையா? இதோ, சுலபமாகச் செய்யக்கூடிய மைதா முறுக்கு...
~~~
அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்! 

20 comments:

  1. அடடா மகி வீட்டில் தீபாவளி ஆரம்பமாச்சா?:) மல்ட்டிக்க்ரெயின் முறுக்கு சூப்பரோ சூப்பர்ர்.. இந்த ஸ்டைலில் நான் தோசைக்கு வைப்பதுண்டு:). அதாவது... நிறைய ஐட்டங்கள் சேர்த்து.

    மைதா முறுக்கு ரெசிப்பி போய்ப் பார்க்கிறேன்ன்... முன்பு செய்திருக்கிறேன் மறந்திட்டேன்.

    ReplyDelete
  2. எல்லோருக்கும்.. மகிக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

    முறுக்கோடு இஞ்சி ரீ குடிங்க செமிச்சிடுமாக்கும்... எங்களுக்குப் புகையேல்லைஐஐஐஐஐஐ:))...

    ReplyDelete
  3. நல்ல குறிப்பாக முறுக்கை கொடுத்திருக்கிறீங்க மகி.இப்படியான ஸ்நாக்ஸ் என்றா வீட்டில செய்துகொண்டிருக்கும்போதே போய்விடும். குறிப்புக்கு நன்றி.
    உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மகி, அசத்தல் போங்கள். நான் இது வரை ட்ரை பண்ணாத பொருள் இது தான். என்னிடம் முறுக்கு அச்சு இல்லை.
    உங்கள் வீட்டில் எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Happy Devali Mahi. Rompa super recipe.

    ReplyDelete
  6. Healthy murukku. Thanks for sharing. Happy Diwali mahi.

    ReplyDelete

  7. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  8. மூன்றாவது படத்தைப் பார்த்தால் ஆளுக்கு ஒரு பார்சல் வரும்போல தெரியுது.பார்க்கவே கரகர மொறுமொறுனு இருக்கு.உங்க அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் மகி.

    ReplyDelete
  9. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    அருமை முறுக்கு வகைகள்!

    உங்க அவல் மிக்‌ஷர்தான் நம் வீட்டில்.. ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிச் சாப்பிட்டார்கள்!..:)

    மிக்க நன்றி மகி!

    ReplyDelete
  10. பேகிங் புவுடர் போட்டால் நமுத்து விடாதா?

    ReplyDelete
  11. ராஜி மேடம், //பேகிங் புவுடர் போட்டால் நமுத்து விடாதா?// அது பேக்கிங் பவுடர் இல்லை, பேக்கிங் சோடா! அதுவும் ஜஸ்ட் 2 சிட்டிகை தானே சேர்க்கிறோம்? கட்டாயம் நமுத்துப்போகாது, தைரியமாச் செய்து பாருங்க.
    ~~
    இளமதி, மிக்ஸர் உங்க வீட்டிலனைவருக்கும் பிடித்ததில் சந்தோஷம்! இது என் மாமியாரின் கைவண்ணமாக்கும். அவர்களிடம் சொல்கிறேன். சந்தோஷப்படுவாங்க. நன்றிங்க!
    ~~
    சித்ராக்கா, //ஆளுக்கு ஒரு பார்சல் வரும்போல தெரியுது.// ஆமாம், நேத்து கொஞ்சம் டிஸ்ட்ரிப்யூஷன் முடிந்தது. இன்னும் சிலது மீதி இருக்கு! :)
    தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி, உங்க வீட்டு தீபாவளி முறுக்குடன் கருக்மொருக்னு கலகலப்பா இருந்திருக்கும் என்று நம்புகிறேன்! :) நன்றி!
    ~~
    கவிதையில் வாழ்த்துச் சொன்ன கம்பன் கழகக் கவிஞருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
    ~~
    சுபா, வாழ்த்துக்கு நன்றிங்க! உங்க தீபாவளியும் இனிமையாய் இருந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் நன்றிகள்!
    ~~
    அனானி, வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்! உங்க தீபாவளியும் இனிமையாய் இருந்திருக்கும் என்ற நம்புகிறேன்.
    ~~
    வானதி, முறுக்கு அச்சு இல்லையா? என்னதிது!! இண்டியன் ஸ்டோரில சீக்கிரமா வாங்கிருங்க. பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஸ்னாக் அல்லவா இது! செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!
    ~~
    அம்முலு, எங்க வீட்டில் இனிப்பு சாப்பிடும் ஆள் நான் ஒருத்திதான். மத்தபடி இப்படி ஸ்னாக்ஸ் என்றால் கடகடவென காலியாகிவிடும். :) சீக்கிரம் செய்துபாருங்க. நன்றி அம்முலு!
    ~~
    அதிராவ், //முறுக்கோடு இஞ்சி ரீ குடிங்க செமிச்சிடுமாக்கும்... எங்களுக்குப் புகையேல்லைஐஐஐஐஐஐ:))...// நன்றி ஃபார் தி சஜஸன்! கட்டாயம் இஞ்சி ரீ குடிக்கிறேன். புகை மூட்டம் தாங்காம தேம்ஸ் நதியில் கப்பல்கள் அலைமோதுவதா பிபிசி-நியூஸில காட்டினம். ஃபயர் சர்வீஸுக்கு கோல்;) பண்ணீயாச், தே ஆர் ஆன் த வே! காதை திருப்பி வைங்க ரெடியா!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ! ஹவ் வாஸ் யுவர் டிவாளி? ;) ஹோப் யு ஹேட் அ ப்ளாஸ்ட்!
    மைதா ரெசிப்பில உங்க கருத்தைப் பார்த்தேன். செய்து பார்த்து எப்படி இருந்தது என சொல்லுங் அதிரா. தேங்க்யூ வெரி மச்!
    ~~
    தனபாலன் சார், நன்றி!
    ~~

    ReplyDelete
  12. சும்மாவே சரவெடி போடுவ... இனி தீவாளின்னா கேக்கணுமா என்ன?...:) என்ஜாய் அண்ட் டேக் கேர்

    ReplyDelete
  13. அடடே...அப்பாவி! :) சுகம்தானே? பலநாள் கழிச்சு பார்ப்பதில் மகிழ்ச்சி!

    சும்மாவே சரவெடிதான்..இந்த தீவாளிக்குதான் ஊசிவெடியோட நிறுத்திக்கற மாதிரி ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு முறுக்கு ரெசிப்பி மட்டும் போட்டிருக்கேன். ;) அடுத்த தீபாவளிக்கு டென் தவுஸண்ட் வாலாதான்! :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனா!

    ReplyDelete
  14. அட, நல்ல சத்தான டிஷ் போலிருக்கே! ருசிக்கு ருசி. சத்துக்கு சத்து!

    ReplyDelete
  15. Yummy Murukku.Belated Diwali Wishes.

    ReplyDelete
  16. Belated Diwali wishes Mahi.. முறுக்கு கலக்கலா இருக்கே.. அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  17. wow! The murukku are so crispy. Enjoyed the virtual post, Mahi. Hope you enjoyed the celebrations. Jangiri / Jalebi neenga suttadha? ulundu or maida?

    ReplyDelete
  18. Yummy collections, belated Divali wishes :)

    ReplyDelete
  19. ஜனா சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்க வீட்டில என்ன பலகாரம் தீபாவளிக்கு? :)
    ~~
    ஆசியாக்கா, கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்!
    ~~
    நன்றி த்யானா, உங்க தீபாவளியும் இனிமையாக கழிந்திருக்கும் என நம்புகிறேன். முறுக்கு செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க! :)
    ~~
    மீரா, தேங்க்யூ! இது ப்யூர் நெய்யில் பொரிச்ச உளுந்து மாவு ஜிலேபி ஃப்ரம் அடையார் ஆனந்தபவன்! :) ஜிலேபி செய்யற கான்ஃபிடன்ஸ் எல்லாம் நேக்கு இன்னும் வரல்லே, கேட்டேளா? ;)
    ~~
    நீலா, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  20. அன்பின் மகி - தீபாவளீக்குச் சுட்ட முறுக்குகள - இப்பொழுது தான் பார்க்கிறேன் - நல்லதொரு செய்முறையுடன் படஙளையும் சேர்த்து வெளீயிட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails