Wednesday, May 21, 2014

பழக் கச்சாயம்

தேவையான பொருட்கள் 
பழுத்த வாழைப்பழம் -1
ரவை-1/2கப்
மைதாமாவு-1/4கப்
சர்க்கரை -1/4கப்
பேக்கிங் சோடா-1சிட்டிகை
ஏலக்காய்(விரும்பினால்)-1
எண்ணெய் -பொரிக்க 
செய்முறை
நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஒன்றை தோலுரித்து மசித்துக்கொள்ளவும். 
அதனுடன் ரவை-மைதா-பேக்கிங் சோடா-சர்க்கரை-ஏலக்காய்ப் பொடி இவற்றை சேர்த்து கலந்து தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். 
இந்தக் கலவை குறைந்தது 2 மணி நேரங்களாவது ஊறவேண்டும். [அதிக நேரம் ஊறினாலும் சுவை நன்றாக இருக்கும்.  கரைத்து குளிர்சாதனப்பெட்டியில் 8-9 மணி நேரங்கள் வைத்தும் உபயோகிக்கலாம்.]
எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து கச்சாயக் கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போடவும்.
 பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு ஆறவைத்து பரிமாறவும்.
இந்தக் கச்சாயம் அறை வெப்பநிலையில் 1-2 நாட்கள் நன்றாக இருக்கும். பழசானால்தான் சுவை அதிகரிக்கும். முதல் நாள் செய்து அடுத்த நாள் சாப்பிட்டுப் பாருங்க..உங்களுக்கே தெரியும்! :)

குறிப்பு 
வாழைப்பழத்தின் சுவையே போதுமானதாக இருந்ததால் நான் ஏலப்பொடி சேர்க்கவில்லை.
மாவில் சர்க்கரை சேர்த்து கரைத்திருப்பதால் கச்சாயம் சீக்கிரம் சிவக்கும். கவனமாக கருக விடாமல் எடுக்கவேண்டும். 

10 comments:

  1. ரொம்ப சூப்பர் ஸ்னாக்ஸ் .

    நல்ல இருக்கீங்களா மகி குட்டிப்பாப்பா எப்படி இருக்கிறாள்

    ReplyDelete
  2. செய்முறையே நாவில் சுவையைக் கூட்டுகிறது சகோதரி. செய்து பார்க்கும் வரும் சந்தேகங்கள் நடைமுறைகள் ஆகியவற்றை உணர்ந்து குறிப்பாக தந்தது மிகவும் கவர்கிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  3. அருமையாயிருக்கு. கோவை,ஸ்பெஷல் அன்புடன்

    ReplyDelete
  4. Love this, delicious snack, we call this appams..

    ReplyDelete
  5. அடிக்கடி செய்யும் ஸ்நாக்ஸ் மகி.ஆனா ரவை சேர்த்ததில்லை. உங்க குறிப்பையும் முயற்சிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  6. நானும் ரவை சேர்க்காமல்தான் செய்திருக்கிறேன்.

    //முதல் நாள் செய்து அடுத்த நாள் சாப்பிட்டுப் பாருங்க..உங்களுக்கே தெரியும்! :)// ம்.. நோட்டட்.

    ReplyDelete
  7. நானும் ரவை சேர்த்ததில்லை இது வரை ..இனி செய்யணும் உங்க முறைப்படி .
    முன்பு செய்த கோதுமை கச்சாயம் இன்னும் எங்க குடும்ப விருப்ப பதார்த்தம் :)

    ReplyDelete
  8. Hi Mahi, how do you do? elakayum, vazhaipazhamum.... veede manakkume. Nanga pazham porithadhu -nu oru snack seivom but adula nendharan pazham is used without elakai. To avoid maida i reduce the qty of it and add kadala maavu & arisi maavu with little turmeric powder, sugar, salt, little chilli powder and deep fry. How is the little angel (name ?) and geno doing?

    ReplyDelete
  9. மகி,

    எனக்கு இந்த பெயரும் புதுசா இருக்கு, செய்முறையும் புதுசாதான் இருக்கு. எண்ணெய் நிறைய குடிக்குமோ ? இப்போ செஞ்சா நான் மட்டுமே சாப்பிடணும். அதனால பொண்ணு வந்தபிறகு செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. சித்ராக்கா, ரொம்பவெல்லாம் எண்ணெய் குடிக்காது. தைரியமா செய்து பாருங்க. :) எங்க ஊர்ப்பக்கம் இந்தப் பேர்தான் சொல்லுவோம்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
    ~~
    மீரா, பழம் பொரி ஆங்கில ப்ளாக்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். தமிழ்ல போடலை! எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்னாக் அது. :) நான் மைதாமாவில் மட்டுமே செய்வேன். ஹிஹி...
    லயா & ஜீனோ ரெண்டு பேரும் நலம். நினைவாக விசாரித்ததுக்கு நன்றி!
    ~~
    ஏஞ்சல் அக்கா, செய்து பாருங்க,,இதுவும் உங்க ஃபேவரிட் லிஸ்ட்ல இடம்பிடிச்சுரும். நன்றி!
    ~~
    இமா, ரவை சேர்த்தால் தனி ருசி. செய்து பார்த்துச் சொல்லுங்கோ! நன்றி!
    ~~
    அம்முலு, செய்து பார்த்து சொல்லுங்க. கண்டிப்பா வித்யாசம் தெரியும் சுவையில். நன்றி!
    ~~
    வானதி, நன்றி!
    ~~
    ஹேமா, அப்பம் ரவை சேர்க்காம செய்வது இல்லையா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    காமாட்சிம்மா, வெகுநாள் கழித்து உங்களைப் பார்ப்பது சந்தோஷம்மா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
    ~~
    பாண்டியன், வருகைக்கும் பொறுமையா படிச்சு கருத்து தந்ததுக்கும் நன்றிங்க. செய்து பார்த்து சொல்லுங்க!
    ~~
    ஜலீலாக்கா, நாங்க நல்லா இருக்கோம். குட்டிப் பாப்பா நலம். நீங்க எப்படி இருக்கீங்க?
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails