Wednesday, May 14, 2014

வசந்தமலர்கள்- பாப்பி (Poppy)

முதன்முதலில் பாப்பி மலர்கள் அறிமுகமானது ஒரு சில வருடங்கள் முன்பாகத்தான். இங்கே அபார்ட்மென்ட்டில் ஒரு வசந்தத்திற்கு இந்த வண்ண மலர்களை நட்டிருந்தார்கள். அப்போது நான் செடிகள் வளர்க்கத்துவங்காத சமயம்..செடிகள் வளர்க்க ஆரம்பித்தும் 2-3 வருஷங்கள் கழித்தே இந்த வசந்தத்தில் பாப்பி நாற்றுகள் ஹோம் டிப்போ-வில் கிடைத்தன. பளிச் என்ற ஆரஞ்சு வண்ணம் கவர என் மனம் கவர்ந்த மஞ்சளை விட்டு இந்தப்பூவை எடுத்துவந்தேன். :) 
வாங்கிவருகையில் இருந்த பூக்கள் நீஈஈஈளமான காம்புகளுடன் ஒய்யாரமாக நின்றன. அதன்பிறகு வளர்ந்த மொட்டுக்கள் உயரம் குறைவாகவே இருந்தன. மலர்ந்த பூக்களும்  திடீரென அடித்த காற்றில் அதிகநாள் தாக்குப்பிடிக்காமல் சட்டென்று உதிர்ந்தும் போயின. அப்படி இப்படியென்று கேமராவில் சிக்கிய ஒரு சில பாப்பி மலர்கள் இவை.
கடந்த சனிக்கிழமை கடைக்குப்போனபோது இரண்டு மஞ்சக்கலர் (ஜிங்குச்சா! :)) வாங்கிவந்தேன். 
எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் ஒரு மேரிகோல்ட்/செண்டுமல்லிச் செடி..இந்த நிறம் இதுவரை இருக்கும் பூக்களில் இல்லை என்பதை என்னவர் நினைவுபடுத்த இன்னுங்கொஞ்சம் சந்தோஷத்துடன் வாங்கிவந்தேன். :) 

அப்படியே சும்மா பேபி செக்‌ஷனில் வலம் வந்தபோது மாட்டியது இந்த மஞ்சக்கலர் ஜிங்குச்சா! :) பிங்கி பிங்க்கிற்கு மாற்றாக ஒரு டிரெஸ்  சிக்கியது லயாவிற்கு! 
படத்தில் மஞ்சள் கொஞ்சம் மங்கலாகத்தான் தெரியுது, நேரில் அழகான மஞ்சளாக்கும்! ;)
...
......
...சரி, ரொம்ப காஞ்சுட்டீங்களா? கூல்..கூல்! இந்தாங்க ஐஸ்க்ரீம் கேக்...சாப்ட்டு கூலாக்கிங்குங்கோ!! :)
இந்த வாரம் முழுக்க இங்கே சரியான வெயில்..ஸ்பிரிங் ஹீட் வேவ் வந்திருப்பதாக நியூஸில் சொல்கிறார்கள். 90,95, 100 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயில் எகிறுகிறது. 
சமீபத்தில் என் தொட்டிச் செடிகளுடன் புதிதாக இணைந்தவை... நியூயார்க்கில் இருந்து வந்த பேனா நட்பூ ஒருவர் கொணர்ந்த செடிகள். இங்கே வின்டர் ஜாஸ்மின் இருப்பது தெரியாமல் அதுவும், கூடவே சன் ஸ்டார்-ம் வாங்கி வந்திருந்தார். இன்னும் இவர்களை இடம் மாற்றிவைக்கவில்லை. அதற்குள் வெயில் கொளுத்துகிறது..அவ்வ்வ்! 
இந்த சன் ஸ்டார் ஒரு இன் - டோர் ப்ளாண்ட் என இணையம் சொல்கிறது. இன்னுங்கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிவிட்டு விரைவில் மாற்றி நடவேண்டும். அதுவரை என்ஜாய் த வெயில்ல்ல்ல்ல்! நன்றி! :) 

6 comments:

  1. அழகு கொஞ்சும் வசந்த மலர்கள்...

    ReplyDelete
  2. கண்ணைக் கவரும் அழகிய மலர்களின் அணிவகுப்பு! மஞ்சள் மலரும் மஞ்சள் டிரஸ்ஸும் அழகு! சட்டை வாசகம் வசீகரிக்கிறது. ;)

    ReplyDelete
  3. வாவ் அதே மல்லிகை. ஆரஞ்ச் மலர்கள் அழகு. ஆனா குண்டு செவ்வந்திப்பூ அழகு. அதைவிட லயாவினது மஞ்சள்கலர் ட்ரெஸ் அழகூஊஊ. இனிவரும் நாட்கள் நல்ல வெயில் இங்கு
    என சொல்லியிருக்கிறார்கள். கூலான பகிர்வு.

    ReplyDelete
  4. மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே !!! நானும் ஷரனுக்கு இப்படி நிறைய யெல்லோ கலர் ட்ரெஸ் வச்சிருந்தேன் மஹி ..
    எல்லா எல்லோ மலர்களும் அழகு !!! இன்னிக்கு உங்க ப்ளாக் என்னை block பண்ணலை :) வைரஸ் ஓடிருச்சா

    ReplyDelete
  5. Nice flowers. I have kanagambaram from Walmart. The last photo looks like kanagambaram.

    ReplyDelete
  6. //இந்தாங்க ஐஸ்க்ரீம் கேக்...சாப்ட்டு கூலாக்கிங்குங்கோ!! :)// அவ்வ்!! இது நல்ல கதையா இருக்கே! கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைக்கப்படாது. கடைக்காரருக்கு மட்டும்தான் அது. ;)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails