எனது தோட்டப்பைத்தியம் உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரிந்ததுதான்!! ஒவ்வொரு முறை தொட்டிச்செடிகள் வாங்கும்போதெல்லாம் "எதற்கு செடிகளாய்ச் சேர்க்கிறாய்? ஏற்கனவே 30 தொட்டிக்கு மேல இருக்கு!" என்ற செல்ல முணுமுணுப்பு கேட்கும், இருந்தாலும் மெல்ல மெல்ல அவரையும் என் பக்கம் இழுத்துவிட்டேன் என்பதற்குச் சான்று இந்தப் பணமரம்! :)
ஒருநாள் காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போன என்னவர் வரும்போது இந்த மரத்துடன் வந்தார். "Money Tree" என்ற லேபிளுடன் காஸ்ட்கோவில் விற்பனைக்கு இருந்திருக்கிறது, இவரும் வாங்கிவந்துவிட்டார். இப்போது அவரின் அலுவலக அறையை அலங்கரிக்கிறது இந்த மணி ட்ரீ!
இந்த மரம் ஆசியாக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டது, "போன்சாய்" வகையைச் சேர்ந்த ஒன்று. 1980களில் தைவான் நாட்டில் உருவாக்கப்பட்டது. அதிர்ஷ்டத்தையும், பணவரவையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் இலைகள் நமது உள்ளங்கை போல 5 இலைகளைக் கொண்டிருக்கும். சில மரங்களில் 7 இலைகளும் உள்ளனவாம், அவை இன்னும் அதிர்ஷ்டம் வாய்ந்த மரங்களாகக் கருதப்படுகின்றன. [எங்க மரத்தில 7 இல்ல, 5 தான்! :)].1980களில் தைவான் நாட்டைச் சேர்ந்த ட்ரக் டிரைவர் ஒருவர் பல்வேறு மரங்களின் தண்டுகளை இப்படி ஜடை போல பின்னி இந்தப் புதுவகை மரத்தை உருவாக்கியதாக கதை சொல்லப்படுகிறது. "ஃபெங் சுய்" நம்பிக்கையின்படி வீட்டில் பவர்ஃபுல்லான இடங்களில் இந்த மரத்தை வைப்பது நல்லதாம். உயிருள்ள பொருட்களை வீட்டில் வைப்பது நன்மை பயக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை.
பணமரத்துக்கு அதிக வெயில் தேவையில்லை. இன்டைரக்ட் சன்லைட் போதுமானது. ஒவ்வொரு முறையும் தொட்டியில் மண் நன்றாகக் காய்ந்தவுடன் தண்ணீர் ஊற்றினால் போதும். புது இலைகள் வந்திருக்கிறது படத்தைப் பார்த்தாலே தெரியும், ஆகக்கூடி எங்கூட்டுலயும் பணமரம் வளருதுங்கோ! ;)))
ஜீனோ: இது பணங்காய்க்கற மரமாமே, காய்க்குமா? சில்லறை வருமா, நோட்டாக் காய்க்குமா? ;)
:)
~~~
பதிவில் ஜீனோவின் படம் வந்ததால் இன்னும் சில ஜீனோ'ஸ் டைம்ஸ்!!
லயாவிற்கு தொட்டில் கட்டியதும் ஜீனோவிற்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. தொட்டிலுக்குக் கீழேயே உட்கார்ந்து அண்ணாந்து வேடிக்கை பார்ப்பதும், சமயம் கிடைக்கையில் 2 கால்களில் நின்று:) பாப்புவை எட்டிப்பார்ப்பதும் அவன் வழக்கமாக இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு ஐயா பழகிவிட்டார். இப்ப தொட்டில் பக்கம் அவ்வப்போது விஸிட் அடிப்பதுடன் சரி! :)
ஒரு நாள் பகலில் கரடி பொம்மையுடன் சுவாரசியமாக விளையாடிக்கொண்டிருந்தார் ஜீனோ. அப்போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அமைதியாக இருந்த வீட்டில் திடீரென டெலிஃபோன் மணி ஒலிக்கவும் ஜீனோவுக்கு கையும் ஓடல, காலும் ஓடல! ;)வானேஜ் பெட்டியில் ஆரஞ்ச் நிற லைட் எரியும், அங்கேதான் ஏதோ நடக்கிறது என அதனைப் போய்ப் போய்ப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்... :))))
பேசாமல், தொலைபேசியை எடுத்து பதில்சொல்ல:) பழக்கிடலாமா ஜீனோவுக்கு என்று சீரியஸாகத் திங்க் பண்ணிக் கொண்டிருக்கேன். ஹிஹிஹி..
~~~
ரவா கிச்சடி & ரவா கேசரி
ஏன் அது ரெண்டும் சண்டை போட்டு, கோவிச்சுட்டு தள்ளித் தள்ளி உட்கார்ந்திருக்கு என என்னவர் மாதிரி கோக்கு மாக்கா கேள்வி கேக்காம அமைதியாச் சாப்புடுங்க என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
:)))






















