Tuesday, March 11, 2014

கொள்ளுப் பருப்பு மற்றொருமுறை

மற்றொரு முறையா? அப்ப ஏற்கனவே ஒரு முறை கொள்ளுப்பருப்பு கடைஞ்சிருக்கீங்களா?- ன்னு கேட்பவர்கள் இங்கே க்ளிக்கி ஒரு எட்டு பார்த்துட்டு வந்துருங்கோ!  அது "பச்சை செலவு" போட்டு கடைஞ்சது..இது மொளகா வேவிச்சுக் கொட்டி கடைஞ்சது! :) 
ஆக்ச்சுவலி, கடைவது என்பதை விட (ஊரில் என்றால்) அம்மி அல்லது ஆட்டுக்கல்லில் அரைத்தெடுப்பது வழக்கம். இங்கே மிக்ஸியில் பல்ஸ்-ல போட்டு எடுத்திருக்கேன். 
~~~
தேவையான பொருட்கள்
கொள்ளு-1/4கப்
தக்காளி-1
சின்னவெங்காயம்-8 (அ) நறுக்கிய வெங்காயம்-1/4கப்
பச்சைமிளகாய்-3 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை -ஒரு கொத்து
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
கொத்துமல்லி/தனியா-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
எண்ணெய்-2டீஸ்பூன்
உப்பு 
செய்முறை
குக்கரில் 11/2 கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, கொதி வந்ததும் கொள்ளு, தக்காளி, ஓரிரு சொட்டு எண்ணெய்,  மஞ்சள்தூள் சேர்த்து 4-5 விசில்கள் வரும்வரை மிதமான தீயில் வேகவைக்கவும். 
கடாயில் எண்ணெய் காயவிட்டு கொத்துமல்லி-சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். 
ஆறியதும் மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துவைக்கவும்.
வெந்த கொள்ளின் தண்ணீரை இருத்துவைத்துவிட்டு,  கொள்ளு மற்றும் தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த வெங்காயக் கலவை-அரைத்த கொள்ளு-தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
சுவையான கொள்ளுப் பருப்பு தயார்.
சுடுசாதம்-தேங்காயெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட சூப்பரா இருக்கும். 
பி.கு. கொள்ளுடன் 2 தக்காளியாகப் போட்டு வேகவைத்தால் வெந்ததும் ஒரு தக்காளியையும், கொள்ளுத்தண்ணீரையும் இருத்து கொள்ளுரசம் வைத்துக்கொள்ளலாம்.  படத்தில் குக்கரில் 2 தக்காளி இருப்பதை பார்த்து(பார்த்தீங்க??? ;)) குழம்பாமலிருக்க இந்தப் பின்னிணைப்பு. 

15 comments:

 1. இது முறை புதுசா இருக்கு ..விரைவில் செய்றேன்

  கொள்ளுத்தண்ணீரையும் //இருத்து //அடிக்கடி எங்கம்மா இந்த வார்த்தையை யூஸ் பண்ணுவாங்க :)

  ReplyDelete
 2. கொள்ளு சூடுன்னு நான் சாப்பிடுவதில்லை. ஒருதடவ வாங்கி வீணாக்கியாச்சு. கொள்ளு ரசம்கூட கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் செய்ததில்லை. மீண்டும் வாங்கினா செஞ்சு பார்க்கிறேன்.

  இப்போதைக்கு மீதி துவையல் இருந்தா ரெண்டு ஸ்பூன் குடுங்க, சாதத்துக்கு தொட்டு சாப்பிட்டுக்கிறேன்.

  ReplyDelete
 3. வாட் இஸ் "பச்சை செலவு" !!!!

  ReplyDelete
 4. //aaaw meee thaan first :// நான் சிவாவாக்கும் என்று நினைச்சு ஏமாந்தேன். கர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 5. மாதம் குறைந்த பட்சம் இரு முறையாவது "கொள்ளு" சேர்த்துக் கொள்வோம்... உங்கள் செய்முறைக்கு நன்றி...

  ReplyDelete
 6. படங்களுடன் விளக்கம் சூப்பர்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. இமாMarch 11, 2014 at 8:26 PM
  வாட் இஸ் "பச்சை செலவு" !!!!
  //////
  Pls. Check the following link Imma!

  http://mahikitchen.blogspot.com/2010/05/blog-post_23.html?m=1

  ReplyDelete
 8. கொள்ளு ரசம் வைத்திருக்கேன் மகி.. இதுவும்,பச்சை செலவு ம் வித்தியாசமாக இருக்கு. செய்துபார்க்கிறேன்.நன்றி

  ReplyDelete
 9. @இமா
  ஹா ஹா :) இமா meeee tha firstu தான் சிவாவின் ட்ரேட் மார்க் வசனம் .லாஸ்ட்ல first :)

  ReplyDelete
 10. Super recipe. Will try out this soon.

  ReplyDelete
 11. ஏஞ்சல் அக்கா, எஸ்...யு ஆர் தி ஃப்ர்ஸ்ட்டூ! :)
  //எங்கம்மா இந்த வார்த்தையை யூஸ் பண்ணுவாங்க :)// சேம் பின்ச்! எங்கம்மாவும் யூஸ் பண்ணுவாங்க. :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா! செய்து பார்த்து சொல்லுங்க!
  ~~
  சித்ராக்கா, "கொள்ளு சட்னி" என்றும் இதைச் சொல்வாங்க, எங்க வீட்ல கொள்ளுப்பருப்புன்னு சொல்வதே வழக்கம்! அந்த கிண்ணம் முழுக்க எடுத்துக்குங்க..அதென்ன 2 ஸ்பூனு? கர்ர்ர்ர்ர்! ;) :)
  கொள்ளு சூடுதான், அடிக்கடி செய்யாம மாசத்துக்கொருக்கா..2 மாசத்துக்கொருக்கா செய்யலாம்ல? உடம்புக்கு நல்லது. இப்படி கடையலாம், அல்லது முளைக்கவைச்சு குழம்பு வைக்கலாம். செய்து பாருங்க.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  டிடி சார், இந்த மாதிரி செய்து பாருங்க..கண்டிப்பா உங்க வீட்டில எல்லாருக்கும் புடிக்கும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
  ~~
  இமா, பச்சை செலவு - என்னன்னு பார்த்திருப்பீங்கன்னு நம்புகின்றேன். :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

  சிவா-வை எல்லாருமே மிஸ் பண்ணுகிறோம் போல..சீக்கிரம் இங்கே அவரைப் பார்க்க முடிந்தால் நல்லா இருக்கும்.
  ~~
  அம்முலு, செய்து பாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
  ~~

  ReplyDelete
 12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

  வலைச்சர தள இணைப்பு : டீ வித் DD ஆபீசியல் ப்ரோமோ...

  ReplyDelete
 13. //சுடுசாதம்-தேங்காயெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட சூப்பரா இருக்கும்.// குழம்பு வைக்காம வெறும் சோற்றை வச்சே ஒரு வேளையை ஓட்டிடலாமுன்னு சொல்லுங்க ஹா...ஹா.... :)

  ReplyDelete
 14. தனபாலன் சார், தகவலுக்கு மிக்க நன்றி!
  ஜெய் அண்ணே...பலகாலம் கழிச்சு பார்த்ததில் சந்தோஷம்ம்ம்! :)
  சுடச் சுட வெறுஞ் சோத்துக்கு தேங்காயெண்ணெய் ஊத்தி ஒரு கல்லு;) உப்பு மட்டும் போட்டுப் பிசைஞ்சு சாப்ட்டிருக்கீங்க? ஆமான்னா இப்படி ஒரு கேள்வியே கேட்டிருக்கமாட்டீங்க..ஒரு முறை டிரை பண்ணிப் பாருங்கோ!! பக்கத்தில சட்டில கொள்ளுப் பருப்பை மறக்காம வைச்சு வைச்சு பார்த்துக்கோணும்..என்ன? ;)))
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails