Tuesday, October 12, 2010

Dry ஜாமூன்

கோவை அன்னபூர்ணா-கௌரிஷங்கரில் இந்த dry ஜாமூன்கள் அருமையாக இருக்கும். சில மாதங்கள் முன்பு ப்ரேமாவின் ப்ளாக்ல வந்த ரெசிப்பி பார்த்து டெம்ப்ட் ஆகி விரைவில் செய்துபார்க்க நினைத்தேன். இத்தனை நாட்களாகிவிட்டது. :) Dry குலாப் ஜாமூன் ஐடியாவுக்கு நன்றிங்க ப்ரேமா!

தேவையான பொருட்கள்

பால் பவுடர்(non-fat dry milk powder)-11/2கப்
மைதாமாவு(all purpose flour)-1/2கப்
பேக்கிங் சோடா-1/4ஸ்பூன்
பேக்கிங் பவுடர்-1/4ஸ்பூன்
வெள்ளை ரவை-2ஸ்பூன்
பால்(half&half or 2% milk)-1/4கப்
சர்க்கரை-11/4கப்+1/4கப்
ஏலக்காய்-3
நெய்-1டேபிள்ஸ்பூன்
எண்ணெய்-ஜாமூன்கள் பொரிக்க.

செய்முறை
ரவையை சிறிது பாலில் 10நிமிடம் ஊறவைக்கவும்.
மைதாவுடன் பேக்கிங்சோடா,பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும்.
பால்பவுடர்,மைதா,ஊறவைத்த ரவை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக பாலைத் தெளித்து பிசைந்துகொள்ளவும்.பிசைந்த மாவை கால் மணி நேரம் மூடி வைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.


11/4கப் சர்க்கரையை மூழ்கும் அளவு நீர் சேர்த்து சூடாக்கவும். பாகு கொதிவந்து 7 நிமிடங்களில்,ஏலக்காய் தட்டிப்போட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

எண்ணெயுடன் நெய்யை கலந்து,மிதமான சூட்டில் காயவைத்து ஜாமூன்களை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
பொரித்த ஜாமூன்கள் சற்றே சூடாக இருக்கும்போதே தயாரித்து வைத்த சர்க்கரைப்பாகில் போடவும்.பாகும் கொஞ்சம் சூடாக இருக்கவேண்டும்.எல்லா ஜாமூன்களையும் பொரித்து சர்க்கரைப்பாகில் 2மணிநேரம் ஊறவிடவும்.

சுவையான குலாப்-ஜாமூன் ரெடி!

மீதமிருக்கும் கால்கப் சர்க்கரையை மிக்ஸியில் பொடித்து,ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும். ஊறிய ஜாமூன்களை பொடித்த சர்க்கரையில் நன்றாக புரட்டி எடுக்கவும்.

Dry ஜாமூன் ரெடி!!

குறிப்பு
 • பால்பவுடர்+மைதா+ரவை கலவையில் பால் சேர்த்து பிசையும்போது அழுத்திப் பிசையாமல் மெதுவாக கலந்து வைத்துவிட்டு, உருண்டைகளாக உருட்டும்போது ஒவ்வொரு உருண்டையையும் நன்றாக அழுத்தி விரிசல் விழாமல் உருட்டினால் ஈஸியாக இருக்கும்.
 • Half&Half மில்க் ஊற்றினால் ஜாமூன்கள் ரிச்சாக இருக்கும். இந்த முறை அது வாங்க மறந்ததால், 2% மில்க் ஊற்றி பிசைந்தேன்.இதுவும் நன்றாக இருந்தது,சுவையில் வித்யாசம் தெரியல.மே பி,நான் குலாப்ஜாமூன் சாப்ட்டு கொஞ்சம் நாளாகிட்டதால் அந்த டேஸ்ட் மறந்துபோச்சுன்னு நினைக்கிறேன். ஹிஹி! அடுத்தமுறை ஹாப்&ஹாப் உபயோகித்து செய்துபார்த்து அப்டேட் பண்ணிடறேன்.
ஹாட் குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம்!
இது என் கணவரின் பேவரிட்!:)))))

25 comments:

 1. enakku hot jamun with ice cream pidikkum. tempting pictures..have to try sometime soon.

  ReplyDelete
 2. வாவ்வ்வ் சூப்பர் சூப்பர்ர் சூப்பர்ர் மகி...

  ReplyDelete
 3. வெரி யம்மி.. ஆசையா இருக்கு.. ம்ம்ம்.. கண்ணால பாத்தே சாப்பிட்டுக்க வேண்டியது தான்..

  ReplyDelete
 4. நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. எல்ஸ் சொன்ன கமண்ட்டை மீண்டும் படிக்கவும். ;)
  (ம்!! தண்ணிக்குக் கூடவா இந்தக் கதி!!)

  ReplyDelete
 6. இமா,அண்ணி ஒரு மூலை,தண்ணி ஒரு மூலை!! என்ன செய்ய?ஏது செய்ய?ஏட்டுசுரைக்காயும் அப்பப்ப கறிக்கு உதவுதாம்.நியூஸ் வந்துச்சு.;)

  நான் இருப்பது பூமியின் இந்தப்பக்கம்..நீங்க இருப்பது அந்தப்பக்கம்.அதனால் ///ஏட்டு.......உதவுதாம்////இதை மறுபடியும் படியுங்க.:) ;)

  ReplyDelete
 7. aha..arumaya iruku... this is correct time i think.... lovley..

  ReplyDelete
 8. அருமை மகி.இந்த சீனி பொடித்து இறுதியில் கோட்டிங் செய்து பரிமாறுவது சூப்பர் ஐடியா.ட்ரை ஜாமுன் பார்க்க அழகோ அழகு.

  ReplyDelete
 9. நல்ல ஐடியா.

  சீனிப்பாகைக் கொஞ்சம் திக்காகக் காய்ச்சி, மேலே உறைவதுபோல ஊற்றினாலும் இதே எஃபெக்ட் இருக்குமா? (பாதுஷா மேலே ஒரு வெள்ளை கோட்டிங் இருக்குமே, அதுபோல?)

  ReplyDelete
 10. neenga panina elam enakuthan..

  elatilum 2kg parcel panidunga,

  marakama anupidnaum..

  mahima..na vanthu check panuven..

  hio epovey devali kondadanum pola erukkey..

  ReplyDelete
 11. //வெள்ளை ரவை-2ஸ்பூன் //

  இது என்னங்க புதுசா இருக்கு இது எங்கே கிடைக்கும் ..? இது வரை ரவைன்னா அது ....என்ன கலர்...மறந்துப்போச்சே...!!

  ReplyDelete
 12. //பால்(half&half or 2% milk)-1/4கப் //

  எங்கூரில பாலே தண்ணீ மாதிரிதான் இருக்கும் இதுல 2 % பாலா... ஆனாலும் குசும்பு ஜாஸ்திங்க உங்களுக்கு ஹி..ஹி.. !!

  ReplyDelete
 13. //நான் குலாப்ஜாமூன் சாப்ட்டு கொஞ்சம் நாளாகிட்டதால் அந்த டேஸ்ட் மறந்துபோச்சுன்னு நினைக்கிறேன். //

  இதை படிச்சி எனக்கு கண்ணெல்லம் கலங்குது...அவ்வ்வ்வ்...!!


  //இது என் கணவரின் பேவரிட்!:))))) //


  ஏன் அழுவாச்சியா வருதுன்னு இப்பதான் புரியுது..அவ்வ்வ்வ்வ்வ்வ்..

  ReplyDelete
 14. வாவ் மகி! அன்னபூர்ணால பாத்த மாதிரியே இருக்குது! சூப்பர்!

  ReplyDelete
 15. மகி, சூப்பரோ சூப்பர். விரைவில் செய்து பார்த்திட்டு சொல்றேன்.

  ReplyDelete
 16. Hi Mahi....Dry Jamun superba irukkuppa......drynaalum adhula oru jucy pakkuvam theriyuthu...photos nalla irukku.paarkkumpothe naakkula thanni ooruthu...Thanks Mahi.

  ReplyDelete
 17. Super O Super,Jamun sapittu romba natkal aakirathu...

  ReplyDelete
 18. நித்து,மேனகா,சந்தனா,கவுண்டரய்யா,இமா,ஆசியாக்கா,சாரு,அனைவருக்கும் நன்றி!
  ~~~~~
  ஹூஸைனம்மா,பாகு காய்ச்சி dip பண்ணினா இனிப்பு அதிகமாகிடும்.நார்மலா நாம செய்யற குலாப்ஜாமூன் ஊறினப்புறம்,சர்க்கரைப்பாகில்லாம ட்ரையா இருக்க சர்க்கரைல லைட்டா புரட்டறோம்.இது இனிப்பும் சரியா இருக்கும்.ஒருக்கா ட்ரை பண்ணிப்பாருங்க.:)
  நன்றி ஹூஸைனம்மா!
  ~~~~~
  தம்பி சிவா,எல்லாத்துலயும் 2கிலோவா??இப்படி இனிப்பு சாப்ட்டா,அந்த 2-3 பல்லும் சொத்தையாகிரப் போகுது,ஜாக்கிரதை!:)
  நன்றி சிவா!
  ~~~~~
  ஜெய் அண்ணா,கோதுமை ரவைய ப்ரவுன் ரவைன்னு சொல்லிப் பழகிட்டேன்,அதான் இது வெள்ளை ரவை.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய் அண்ணா!
  ~~~~~
  சுகந்திக்கா,வானதி,கொயினி,புஷ்பா அனைவரின் அன்பான கருத்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 19. ஸ்ரீவித்யா,பலநாளைக்கப்புறம் உங்க கருத்தைப் பார்த்து மகிழ்ச்சி,நன்றிங்க!

  ReplyDelete
 20. ரெசிப்பியும் போட்டோக்களும் சூப்பர். செய்து பார்க்கறேன். .

  ReplyDelete
 21. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க என்றும் 16!

  ReplyDelete
 22. hi dry jamun looks delicious i love dry jamun surely i will try

  ReplyDelete
 23. மஹா,கருத்துக்கு நன்றிங்க!ஜாமூன் செய்து பாருங்க.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails