தேவையான பொருட்கள்
மாங்காய் -1
வெல்லம் - 25கிராம் (சுமாராக)
எண்ணெய் - தாளிக்க
கடுகு -1/2டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
வரமிளகாய் -2
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
மாங்காயைக் கழுவி தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மாங்காய்த் துண்டுகள், கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். மாங்காய் வெந்ததும் கரண்டியால் மசிக்கவும்.
ரொம்பவும் மைய மசிக்காமல் ஒரு சில துண்டுகளை விட்டு மசித்திருக்கிறேன்.
வெல்லத்துடன் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து கரையவக்கவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதனுடன் மசித்த மாங்காய்க் கலவையைச் சேர்க்கவும். வெல்லக் கரைசலும் மாங்காயும் நன்கு கலந்து சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை, கிள்ளிய வரமிளகாய் தாளித்து பச்சடியில் சேர்க்கவும். கலந்து விட்டு பரிமாறவும்.
சுவையான மாங்காய் பச்சடி தயார்.
குறிப்பு
வெல்லத்தின் அளவை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். ஒரு அச்சு வெல்லக் கட்டியில் பாதியை சேர்த்திருக்கிறேன்.
வேப்பம்பூ கிடைத்தால் அதனையும் தாளிப்பில் சேர்த்து தாளித்து கொட்டலாம். எனக்கு கிடைக்காததால் சேர்க்கவில்லை.
மாங்காயை நறுக்குவதற்கு பதில் காய் துருவியில் துருவியும் செய்யலாம். குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்தும் வெல்லத்துடன் சேர்க்கலாம், அப்படி செய்கையில் மாங்காய் ஜாம் -பக்குவத்தில் பச்சடி கிடைக்கும். :)Recipe Courtesy : HERE

