Wednesday, May 20, 2015

சந்திர கிரகணம், 2015

கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி அதிகாலையில் நடந்த சந்திரகிரகணத்தின் சில படங்கள் இங்கே..





காலையிலயே எழுந்து இப்படி படமெடுக்கும் ஆள் நான் இல்லைங்க..என் கணவர் எடுத்த படங்கள் இவை. காலையில் கேமராவுடன் அங்குமிங்கும் நடந்து பல இடங்களில் இருந்து எடுத்த படங்கள். மேலேயுள்ள படத்தின் நீலவண்ணம் வெகு அழகு! :)
இது காலை 6.45க்கு நிலாவின் தோற்றம். கிட்டத்தட்ட முழு கிரகணத்தையும் படமெடுத்து முகப்புத்தகத்திலும் பகிர்ந்திருந்தார். அந்தப் படங்களை நான் இங்கே பகிர இத்தனை நாட்களாகி விட்டது. :)

Monday, May 11, 2015

பூ பூக்கும் ஓசை..

மொட்டிலிருந்து ஒரு ரோஜாவின் பயணம்..
மொட்டவிழ்ந்த முதல்நாள்..
இரண்டாம் நாள்..இன்னும் கொஞ்சம் மொட்டு பாக்கியிருக்கிறது..
..இதோ ஆகிட்டது...முழுவதும் விரியத்தயார்!
"பப்பரக்கா"- என விரிந்த ரோசாப்பூவக்கா! :)
இனி வண்ணம் மங்கி...
உதிரும் முன்னே இன்னொரு பூ பூத்தாச்சு! :)

இந்த ஏழு நாட்கள் ரோஜாவுடன் பயணித்தமைக்கு மிக்க நன்றிகள்! 

Tuesday, May 5, 2015

Shrikhand/ஶ்ரீகண்ட்

தேவையான பொருட்கள்
கெட்டித் தயிர்/Greek Yogurt-1கப்
பொடித்த சர்க்கரை/Powdered Sugar -1/4கப்
ஏலக்காய்-1
ஆரஞ்ச் கலர் - சில துளிகள் (விரும்பினால் மட்டும்)

செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.
கெட்டித்தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து விஸ்க்-ஆல் கலக்கவும்.
நன்றாக கலந்து க்ரீம் போல பதம் வந்ததும் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து கலக்கவும்.
ஏலக்காய்ப் பொடி மற்றும் கலர்(விருப்பப்பட்டால்) சேர்க்கவும்.
கலந்து விடவும்.,
இதனை 5-6 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும்.
சுவையான ஶ்ரீகண்ட் சுவைக்கத் தயார்..
சிம்பிளாக சீக்கிரமாகச் செய்துவிடலாம். 
குறிப்பு
சாதாரண தயிரை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி வைத்து நீரை முழுவதும் வடித்துவிட்டு கிடைக்கும் கெட்டித் தயிரே ஶ்ரீகண்ட் செய்ய பயன்படுவது.  (தயிரை வடிகட்டி, அதனை 4-5 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜினுள் வைத்தால் தண்ணீர் முற்றிலும் வடிந்துவிடும்)
க்ரீக் யோகர்ட் இப்படி வடிக்கட்டப்பட்டது என்றாலும் அதிலும் தண்ணீர் இருக்கிறது, அதனால் அதனையும் ஒரு மணி நேரமாவது துணியில் வடிகட்டி பயன்படுத்துவது நலம்.

LinkWithin

Related Posts with Thumbnails