Tuesday, January 13, 2015

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

இங்கு வருகை தரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தைப்பொங்கல் நன்னாள் நல்வாழ்த்துக்கள்!
~~~

ஐந்து நீண்ட வருடங்களைக் கடந்து,
ஆறாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வேளை இது!
அவ்வப்போது சோர்ந்தாலும், ஓய்ந்து விடாமல் மீண்டு வந்து
உங்களையெல்லாம் விடாமல் நச்சரிக்கும்;):)
தெம்பைத்தந்த ஆண்டவனுக்கு நன்றிகள்!
அலுக்காமல் சலிக்காமல் என் பதிவுகளை வாசித்து
மறக்காமல் கருத்துக்கள் பதிக்கும்
நட்பூக்களுக்கும்
நேரமில்லாத காரணத்தால் படித்துவிட்டுப்
பறக்கும் நட்பூக்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்!
நீங்கள் இல்லாமல் இந்த வலைப்பூ இல்லை..
இங்கே உங்கள் வருகை இல்லாமல்
என் வருகையும் இல்லை..
புத்துணர்ச்சியுடன் வலைப்பூவுலகில் வலம் வர வாய்ப்பளிக்கும் வாசகர்களே,
உங்களனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி!
~~~

9 comments:

  1. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் மற்றும் உங்கள் கோவை மக்களுக்கும். பொங்கல் மங்களகரமான திருவிழா, மிகவும் பிடித்த பண்டிகை. மஹி, ஆறாவது வருடம் மட்டுமல்ல இன்னும் தொடரும் உங்கள் வலைப்பூ, உங்கள் வலைப்பூவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் வலைப்பூவை ரசித்ததற்கான காரணம், நல்ல அழகான தமிழ், நகைச்சுவையான தமிழ், உங்கள் கவிதை, பகிரும் விதம் ரியலி ஸூபர் .சமையலில் இருக்கும் அறுசுவை போல, உங்கள் வலைப்பூவில் அனைத்தும் இருக்கிறது.

    அவ்வப்போது சோர்ந்தாலும், ஓய்ந்து விடாமல் மீண்டு வந்து உங்களையெல்லாம் விடாமல் நச்சரிக்கும்;):)தெம்பைத்தந்த ஆண்டவனுக்கு நன்றிகள்!

    ஆண்டவனை வேண்டிகொள்கிறோம், வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மகி.
    6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்கள் வலைப்பூவிற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் மஹி :)

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்க குடும்பத்தார்க்கும்

    ReplyDelete
  4. மஹி,

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். அப்படியே ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். பதிவுலகில் தொடர்நடை போட இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. இனிய பொங்கல் வாழ்த்துகள் உன் குடும்பத்தினர் அனைவருக்கும்.
    அன்புடன்

    ReplyDelete
  8. லேட்டா வந்து வாழ்த்துறேன், ஹாப்பி பொங்கல் மகி. ;D

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails