சேது படத்தில் வரும் "எங்கே செல்லும் இந்தப் பாதை?.." பாடலைக் கேட்டால் இதயத்தை அழுத்திப் பிழிவது போன்ற ஒரு வலி ஏற்படும். மேலே இருக்கும் அந்த ஃபோட்டோவைப் பார்க்கையிலும் அது போன்ற ஒரு வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு வரும் எனக்கு! :) ;) பயப்படாதீங்க, இது சோகமான பதிவெல்லாம் இல்லை, வழக்கம் போல feel good பதிவுதான்! தைரியமா மேற்கொண்டு படிக்கலாம். அடுத்த கொலாஜ்-ஐப் பார்த்த உடனே கண்டுபிடிச்சிருப்பீங்க, அந்தப் பாதை எங்கே சென்று சேர்ந்திருக்கிறது என்று!
இது இங்கே அருகில், கிட்டத்தட்ட காட்டுக்குள் இருக்கும் ராமகிருஷ்ணா மடம். அதற்குச் செல்லும் பாதைதான் அப்படி வளைந்து நெளிந்து சென்றது. அதிலே சற்றே வேகமாக என்னவர் காரை ஓட்டிக்கொண்டிருக்க, தலை சுற்றுவது போன்ற உணர்வுடனே நான் க்ளிக்கிய படம்தான் பதிவின் முதல் படம். :)
வனப்பகுதியில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைதியான சூழ்நிலையில் இருக்கிறது இந்த மடம். இந்தியாவை நினைவு படுத்தும் அழகான வளைவுகளோடு கூடிய செங்கல் கட்டடங்கள், சிறிய செய்குளத்தின் நடுவில் வீற்றிருக்கும் விவேகானந்தர், குளம் முழுக்க வளர்ந்திருக்கும் அல்லிமலர்ச் செடிகள், அங்கே இசை பாடும் தேனீக்கள், நீந்தும் வண்ண மீன்கள், சற்றே நகர்ந்து பார்த்தால் இயற்கையன்னை பச்சைக்கம்பளம் விரித்து வைத்திருக்கும் சமவெளி என்று பரந்து விரிந்து கிடக்கும் இடமிது.
இந்த வீட்டைப் பார்க்கையில் நம்ம ஊர் கிராமத்து வீடு நினைவு வருகிறது. மடத்தில் பெரும்பாலும் இந்திய சாயலோடு, பெயர்களோடு அமெரிக்கர்களே இருக்கிறார்கள். மாயா-சாது என்ற இரண்டு பெரீஈஈஈய்ய பைரவர்கள் இருக்கிறார்கள். முதல் பார்வையில் பயமூட்டும் தோற்றம் இருந்தாலும் மாயாவும் சாதுவும் ரொம்பவுமே ஃப்ரெண்ட்லி! :)
மடத்தின் வெளியே ஒரு சிறிய ஹைக்கிங் ட்ரெய்ல் இருக்கிறது. ஸ்பிரிச்சுவல் ஹைக் என்று சொல்லும் இந்தப் பாதையில் ஆங்காங்கே ஒவ்வொரு மத சின்னங்களும், அமர்ந்து தியானம் செய்ய/ ஓய்வெடுக்க இருக்கைகளும் இருக்கின்றன. ட்ரெய்ல் முழுவதும் அழகழகான காட்சிகள். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு மாதிரியாக இயற்கை பூத்துச் சிரிக்கிறது. மேலே, இடப்பக்கம் இரண்டு படங்களும் கடந்த பிப்ரவரியில் எடுத்தது..வலப்புறம் இருப்பவை இந்த மே மாதம் எடுத்தது. இந்த வரிசை அடுத்த கொலாஜில் vice-versa -வாக மாறிடுச்சு, அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு பாருங்க! :)
கிட்டத்தட்ட ஒரு மைல் இருக்கும் ஹைக்கிங் ட்ரெய்ல் சில இடங்களில் சற்றே கடினமான ஒற்றையடிப்பாதையாக இருக்கிறது, பலமுறை இங்கே ஹைக்கிங் போய்விட்டோம். எப்பொழுது சென்றாலும் விதவிதமான (மஞ்சள்) மலர்கள் பூத்திருக்கும். இந்த முறை ட்ரெய்ல் முழுக்க கடுகுச் செடிகள் காய் காய்த்திருந்தன. கண்ணைக் கவரும் மஞ்சள் பூக்கள் உங்கள் பார்வைக்கு..
மடத்தில் சிறியதாக ஒரு கடையும் உண்டு. புத்தகங்கள், கடவுளர்கள் சிலைகள், இந்திய ஆடைகள், ஊதுபத்தி மற்றும் அலங்காரப் பொருட்கள், மடத்தின் சிறிய தோட்டத்தில் விளையும் காய்கனிகள் எல்லாம் விற்பனைக்கு இருக்கும். இந்தமுறை நாங்கள் என்ன வாங்கிவந்தோம் தெரியுமா? :)
ஆலிலையில் ஒயிலாக அமர்ந்திருக்கும் ஆனைமுகக் கடவுளை எங்கள் இல்லத்துக்கு அழைத்துவந்திருக்கிறோம்.
ஹ்ம்ம்ம்...பாதை எங்கெங்கோ சுற்றுகிறது..மறுபடி புறப்பட்ட இடத்துக்கே உங்க எல்லாரையும் கொண்டுவந்து விட்டுடறேன்! அதாங்க, மகி கிச்சன்ல இருந்து கிளம்பினீங்க, ஸோ...வெல்கம் பேக் டு மகிஸ் கிச்சன்!
அஃபிஷியலா அமெரிக்க ஸம்மர் சீஸன் ஜூன் 20ஆம் தேதியில இருந்து தொடங்கிருச்சாம், அதனால கூலா இதைச் சாப்பிட்டுட்டுப் போங்க. இது சும்மா ஒரு வெள்ளோட்டம்தான்! என்ன பதார்த்தம்னு யூகிச்சு வைங்க, அடுத்த வாரம் அக்கு வேறு -ஆணி வேறா பிரிச்சு மேய்ஞ்சுரலாம்! :)) ஹேப்பி வீகென்ட் எவ்ரிபடி!
யூகம் 1 நட்சத்திரம்
ReplyDeleteயூகம் 2 நத்தார்மரத்துக்கு டெக்கரேஷன்
ReplyDeleteயூகம் 3 சுவர்ல ஒட்டுறதுக்கு டாலர் ஷாப்ல விக்குற ஃப்ளோரசண்ட் நட்சத்திரம்.
ReplyDeleteயூகம் 4.... மற்றவங்க யூகத்துக்கு விட்டுருறேன்.
ReplyDeleteசேலைக்கு மாட்சிங்கா காதில மாட்ட நல்லாருக்கும் போல.
அந்த நிலாவைத்தான் நான் கைல புடிச்சேன்... நிலாவைப் புடிக்க முடியலன்னு நட்சத்திரம். சரிதானே மகி!!
ReplyDelete/யூகம் 1/..
ReplyDelete/யூகம் 2/..
/யூகம் 3/..
கிண்டல்தானே இமா? ;) நேயர் விருப்பம் நிறைவேறலைன்னு கர்ர்ர்ர்ர்ர்-னு இருக்கீங்க போல?
முழுப்பதிவையும் விட்டுப்புட்டு டைரக்ட்டா நட்சத்திரத்தில லேண்ட் ஆகிருக்கீங்க? அவ்வ்வ்வ்....
தங்கள் யூகத்துக்கு தாங்ஸூ! ;) ஆனா எல்லாமே தப்பூ! ;) ;)
முதல் படம்... கூட ஒரு ம்யூசிக் போட்டிருக்கலாம். இங்க போகுது. கேட்டுட்டே பார்க்க உள்ள பயணிக்கிறது போலவே இருக்கு.
ReplyDeleteஅமைதி ரசிகையே!! சூப்பர் போஸ்டிங். அடுத்த தடவை நானும் வருகிறேன்.
அங்க போயும் ம.பூ. ;)) அது இங்கு நாவல், வெள்ளை நிறங்களிலும் பூத்திருக்கும்.
AGAR AGAR JELLY:))))))
ReplyDelete/யூகம் 4.... மற்றவங்க யூகத்துக்கு விட்டுருறேன்./ இது சரி! ஏற்றுக்கொள்ளப் படுகிறது. :)))
ReplyDelete/சேலைக்கு மாட்சிங்கா காதில மாட்ட நல்லாருக்கும் போல./ அடடா..அடடா!!! என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன ஒரு கற்பனை?! புல்லா அரிச்சுப் போச்சுது இமா! BTW, என்கிட்ட இந்த இரண்டு வண்ணத்திலுமே சேலைகள் உண்டு, உங்ககிட்ட? :)
/அந்த நிலாவைத்தான் நான் கைல புடிச்சேன்... நிலாவைப் புடிக்க முடியலன்னு நட்சத்திரம். சரிதானே மகி!! / இப்புடி அநியாயத்துக்கு புல்ல்ல்ல்ல்ல்லா அரிக்கவைச்சீங்க, நல்லால்ல! அவசர உதவிக்கு கால் பண்ணவேண்டிய நிலைமை வந்துரும்! ;)))
கற்பனை அருமையா இருக்குது ஆனா! ஜூப்பர் இமா, கலக்கறேள் போங்கோ! :D
இடம் பார்க்க ரம்யமா மனசுக்கு அமைதியா இருக்கு மகி
ReplyDelete//நேயர் விருப்பம் நிறைவேறலைன்னு// //டைரக்ட்டா நட்சத்திரத்தில லேண்ட்// புரிஞ்சா சரி. ;)
ReplyDelete//தப்பூ!// அதான் தெரியுமே! மீதிப் பேர் சுவாரசியத்தைக் கெடுக்க வேண்டாம்.
நான் சும்மாவாச்சும் பூஸ் பக்கம் போய் /அங்கே போகல்லியானு போட்டேன் /அதுக்குள்ள மகி போஸ்ட்
ReplyDelete/angelin said... / பாயின்ட்டைப் புடிச்சுட்டாங்க பாருங்க! இப்பவும் எனக்குப் புல்லா அரிக்குதே! எல்லாம் வியாள;) மாற்றம்னு நினைக்கிறேன்! :)
ReplyDeleteமக்கள்ஸ், கடைசிப் படத்துக்கு முன்னால நான் மூணு மணி நேரம் உட்கார்ந்து கம்போஸ் பண்ணின ஒரு கட்டுரை + படங்கள் இருக்குது. அதையும் பாருங்க என்று பணிவோடு கேட்டுக்கொள்(ல்)கிறேன்! ;)))
மாயா/ சாது இவங்க படம் எங்கே ??
ReplyDeleteஆலிலை பிள்ளையார் அழகா இருக்கார்
ReplyDeleteஇமா :/சூப்பர் போஸ்டிங். அடுத்த தடவை நானும் வருகிறேன். /
ReplyDeleteஏஞ்சல் அக்கா:/இடம் பார்க்க ரம்யமா மனசுக்கு அமைதியா இருக்கு மகி /
அப்பாடா, இப்பவாவது பார்த்தீங்களே, ரொம்ப சந்தோஷம்! :)
இமா: /கூட ஒரு ம்யூசிக் போட்டிருக்கலாம். இங்க போகுது. கேட்டுட்டே பார்க்க உள்ள பயணிக்கிறது போலவே இருக்கு.
/ம்யூஸிக்(!) அட்டாச் பண்ணலாம்னு யு ட்யூப் போனேன் இமா, ஆனா அந்தப் பாட்டைக் கேட்டா (எனக்கு) மனசு ரொம்ப அப்ஸெட் ஆகிரும், அதான் போடல்ல.
GOOD NIGHT MAHI AND IMMA :))
ReplyDelete/மாயா/ சாது இவங்க படம் எங்கே ?? / check collage -1! They are in a long shot!
ReplyDeleteக்ளோஸ் அப்-ல அவங்க கூட வேறு ஆட்களும்(!) இருப்பதால் போட முடியல்லை, சாரி!
//உங்ககிட்ட? :) // nope. ;( வாங்கி அனுப்புங்க.
ReplyDeleteWhy is Angel saying a gar x 2 !!! எனக்கா? மகிக்கா? ;)))))
I didn't know about the new post was still commenting on the old one KARRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR
ReplyDelete//அதையும் பாருங்க என்று பணிவோடு கேட்டுக்கொள்(ல்)கிறேன்! ;))) // ஹி ஹி ஹீஈ..
ReplyDelete//ஆலிலை பிள்ளையார் அழகா இருக்கார்// ஆமாம். பிடிச்சு இருக்கு.
//பாட்டு// ம். வேணாம்.
குட் நைட் அஞ்சூஸ்.
ஹை!!!!!! சாது! மாயா! அழ...கா இருக்காங்க. எப்போ வந்தாங்க இவங்க!!!
ReplyDeleteகிரி... ;)) குட் நைட் சொல்லிட்டு தூங்காம இருந்தான் இதான் ஆகும்.
ReplyDeleteWill come back in a little while if tomorrow. Open panni vechchittu ivlo neram phone il akkaa kooda arattai adichchathula i missed your post Mahi. Sorry !!!
ReplyDelete//க்ளோஸ் அப்-ல அவங்க கூட வேறு ஆட்களும்(!)// ஆஹா! கண்டுபுடிச்சுட்டேனே. கை காட்டிக் கொடுக்குது. ;)
ReplyDeleteயார் மாயா? யார் சாது?
ஐரோப்பா மக்களுக்கு நல்லிரவு!
ReplyDeleteகிரி : டேக் யுவர் ஓன் டைம்! :)
இமா : நெக்ஸ்ட் டைம் அங்க போகையில, மாயா-சாதுகிட்ட ஒரு வீடியோ பேட்டி(!) எடுத்துட்டு வந்துடறேன் இமா! டைரக்ட்டா அவங்கள்ட்டயே கேட்டுருங்க! ;))))
m.
ReplyDeleteகிரி... ;)) குட் நைட் சொல்லிட்டு தூங்காம இருந்தான் இதான் ஆகும்.//
ReplyDeleteஅப்படி சொன்னாலும் மறுபடியும் ஒரு வலம் வரணும் என்னை மாதிரி
SAADHU ;G.S.D
ReplyDeleteMAYA; LABRADOR
:)))
ஹா!! இருங்க, நானு செக் பண்ணிட்டு வரேன்.
ReplyDeleteநானு ஒண்..ணும் சொல்றதுக்கு இல்லை. ;) முன்னொரு காலம்... ஜீனோ, ஜீனோ என்று ஒரு பப்பி இருந்தது. அப்போ.. அதீஸ் என்னமோ ஆராய்ச்சியெல்லாம் பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ அதுல்லாம் நினைவுக்கு வருது. ;D
ReplyDeleteநல்லாயிருக்கு,
ReplyDeleteEnjoyed the post Mahi. The place looks so peaceful.
ReplyDeleteMy guess is Jelly / Candy :-)
[win pannina adha parisa kudupeengala?! ;-) ]
Mira’s Talent Gallery
:-) Mira
சமவெளிகள்
ReplyDeleteசிறு சிறு குன்றுகள்
பச்சை பசேல் மரங்கள்
செடிகள்
கால பைரவர்கள்
ஓட்டு வீடு
எல்லாமே அழகு
மனிதர்கள் இல்லாத இடத்தில்
கடவுள் அதிகம் இருப்பர் போல
எனக்கும்
ReplyDeleteஜெல்லி மிட்டாய்
கொடுங்க :)
அவ்வ்வ்!! சிவா!! கவிதை சூப்பர். ஒரேயொரு காலைத்தான் காணோம். ஆமாம்... பொன்னி யாரு!!! ;)
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இங்கினமோ என்னைக் காணவில்லை எனச் சொன்னனீங்க அஞ்சுவும் இமாவும்.. நான் என்ன பண்ணுவேன் சாமீஈஈஈஈஈஇ.. நாயைக் கண்டால் கல்லைக் காணம், கல்லைக் கண்டால் நாயைக் காணம்:)) என ஆச்சு என் நிலைமை.. சமர் முடியும்வரை இப்பூடித்தான் இருக்கும்போல...
ReplyDeleteவின்ரரே நீ எப்போ வருவாயோ?:))))))
மகி, அது மெழுகு தானே??? எப்பூடி என் கண்டுபிடிப்பு???
ReplyDeleteகலிபோர்னியாவில் இப்படி ஒரு இடமா??? இங்கு முருகன் கோயிலில் ஒரு அமெரிக்கன் பண்டாரம் இருக்கிறார். எனக்கு கோயிலுக்கு போனால் அவரை பார்ப்பதே வேலை. என்னைவிட நல்ல பக்திமான். ஓடி ஓடி சாமி கும்பிடுவார். திருவிழா சமயங்களில் சாமி தூக்குவார். இப்ப நிறைய அமெரிக்கர்கள் கோயில் பக்கம் பார்க்க முடிகிறது.
Dogs look cute.
//இமா said...
ReplyDeleteஅவ்வ்வ்!! சிவா!! கவிதை சூப்பர். ஒரேயொரு காலைத்தான் காணோம். ஆமாம்... பொன்னி யாரு!!! ;)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர் இத்தனை காலத்துக்குப் பின்பு பொன்னியில் உப்பூடிச் சந்தேகம் வரலாமோ? பொன்னி சிவாவின் மூத்த மாமாவின் மூத்த மகள்:)))
இப்போதான் அனைத்தும் பார்த்தேன் மகி.. படங்கள் உள்ளம் கொள்ளை போகுதே...
ReplyDeleteமகி அமெரிக்காவில் இப்படி ஒரு இடமா? ஆச்சர்யமா இருக்கு. ரொம்ப அழகா இருக்கு. நீங்க சொன்னது போல ஊர் வீடு மாதிரியே இருக்கு. மாயா அண்ட் சாது இவ்ளோ பவ்வியமா இருக்காங்க எல்லாம் உங்கள பார்த்த எபக்டோ ???
ReplyDeleteகுளம் அண்ட் ஆசிரமம் ரொம்ப ரம்மியமா அழகா இருக்கு. பூக்கள் அண்ட் குட்டி மீன்ஸ் அழகோ அழகு.
ஆலிலை புள்ளையார் அருமை. ஆலிலை கண்ணன் எனக்கு ரொம்ப புடிச்ச படம். அந்த குட்டி கண்ணனை நினைத்து தான் கண்ணன் இன் இன்னொரு பெயர் என் பையனுக்கு வெச்சோம்.
//அதனால கூலா இதைச் சாப்பிட்டுட்டுப் போங்க. இது சும்மா ஒரு வெள்ளோட்டம்தான்// உங்க பதிவ என்னை தவிர யாரும் சரியா படிக்குறதில்லே. டீச்சர் இந்த லைன் எ மிஸ் பண்ணிட்டு மூணு யூகம் பண்ணி உங்கள 10 ஷன் பண்ணி இருக்காங்க!!! வான்ஸ் வேற மெழுகு வர்த்தி ன்னு சொல்லிட்டு போய் இருக்காங்க.
ReplyDeleteஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியது இது ஜெல்லி மாதிரி சுவீட் ஆனா ஜெல்லி இவ்ளோ firm ஆ இருக்காது. ஸோ ....... இது ஜெல்லி firm சுவீட் :)) (இதுக்கு டீச்சர் வான்சே பறவா இல்லேன்னு திட்டுறது கேக்குது :))
பூஸ் guess எல்லாம் பண்ணாம ஓடிட்டாங்க ????
//சமர் முடியும்வரை இப்பூடித்தான் இருக்கும்போல...
ReplyDeleteவின்ரரே நீ எப்போ வருவாயோ?:))))))//
கர்ர்ர்ர் இங்க இன்னிக்கு மழை :(( சம்மர் வருவதே ஏதோ கொஞ்ச நாட்கள் தான் இதுல இப்பவே விண்டர் எ கூப்புடுற பூசுக்கு கர்ர்ரர்ர்ர் )
//இடப்பக்கம் இரண்டு படங்களும் கடந்த பிப்ரவரியில் எடுத்தது..வலப்புறம் இருப்பவை இந்த மே மாதம் எடுத்தது//
ReplyDeleteஇந்த மாதிரி ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை தம்பி அருண் அமைதியை தேடி :)) போய் கிட்டு இருக்காரு போல இருக்கு. ச்சே பாவம் உங்க வீ.காரர்:))))
//கிரி... ;)) குட் நைட் சொல்லிட்டு தூங்காம இருந்தான் இதான் ஆகும்.//
ReplyDeleteஅப்படி சொன்னாலும் மறுபடியும் ஒரு வலம் வரணும் என்னை மாதிரி//
இமா அண்ட் அஞ்சு அடுத்த தடவ இதை நெனப்புல வெச்சுக்குறேன் டாங்க்ஸ் :))
எங்கே போகும் இந்தப்பாதை. இதுகூடத் தெறியாதா.
ReplyDeleteஇராம கிருஷ்ண மடத்திற்கு. அரசமரத்துப் பிள்ளையாரா. ஆலிலைக்கு வந்துவிட்டாரா . பக்திப் பரவசமா இடம் இருக்கு. படிக்கவும் அழகாயிருக்கு.
வந்துவிட்டு சாப்பிடவும் ஏதோ இருக்கு போல. நானும் வந்துண்டே இருக்கேன்.
உங்க பதிவ என்னை தவிர யாரும் சரியா படிக்குறதில்லே.//
ReplyDeleteaaaaw ::: நாந்தேன் முதல்ல கேஸ் பண்ணினது அகர் அகர் ஜெல்லி :)))
have a great day God Bless YOU Sister .
ReplyDeleteஏஞ்சல் அக்கா & இமா றீச்சர், யார் சாது யார் மாயா என்று எனக்கு சுத்தமாக நினைவில்லை, ஐ யம் ஸோ ஸாரி! :)
ReplyDelete//கே. பி. ஜனா... said... நல்லாயிருக்கு,// ரொம்ப நன்றிங்க!
//Mira said... My guess is Jelly / Candy :-) [win pannina adha parisa kudupeengala?! ;-) ] // மீரா, நீங்க வின் பண்ணிட்டீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, பரிசு வந்துகிட்டே இருக்கு! ;) நன்றி மீரா!
/மனிதர்கள் இல்லாத இடத்தில்
கடவுள் அதிகம் இருப்பர் போல / சிவா, ஒரு காலைக் காணோம்னு றீச்சர் கிண்டலடிக்கிறாங்க பார்த்தீங்களா? :) இவ்வளவு அழகான ஒரு தத்துவம் சொல்லியிருக்கார், அதைக் கவனிக்காம காலக் காணம்-கையக் காணம்னு சொல்லிகிட்டு!? இல்ல சிவா? ;)
/எனக்கும்
ஜெல்லி மிட்டாய்
கொடுங்க :) / சிவாவுக்கு இல்லாத ஜெல்லி முட்டாயா? என்ன கலர் வேணும் தம்பி? கொஞ்சம் இருங்க, தட்டோட தரேன்! :)
கருத்துக்களுக்கு மிக்க நன்றி!
/என் நிலைமை.. சமர் முடியும்வரை இப்பூடித்தான் இருக்கும்போல.../ பூஸாருக்கு திண்டாட்டம், எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்! :) உங்களை எல்லா இடத்திலயும் தேடறாங்களாம் அதிராவ்! ;)
/படங்கள் உள்ளம் கொள்ளை போகுதே... / :) மிக்க நன்றி அதிரா! :)
பொன்னி யாருன்னு றீச்சருக்கு விளக்கியதுக்கு சிவா சார்பாக;) நன்றி!
நன்றி அதிரா!
/கலிபோர்னியாவில் இப்படி ஒரு இடமா??? / /அமெரிக்காவில் இப்படி ஒரு இடமா? / வானதி & கிரிஜா எப்படி இருக்கு எங்க ஏரியா? :))))) இதுக்கே மூக்கு மேல விரல வைச்சிட்டீங்க? இன்னும் அழகான இடங்கள் நிறைய இருக்குதாக்கும்! :)
ReplyDelete/முருகன் கோயிலில் ஒரு அமெரிக்கன் பண்டாரம் / நீங்க வேற வானதி! இங்க இருக்கும் இஸ்கான் கோயில் போனால் எனக்கு அங்கே நடக்கும் பூஜையில் ஆட்களை வேடிக்கை பார்ப்பதுதான் வேலையே! அதையும் ஒரு பதிவாய்ப் போடலாம்னு நினைச்சேன், யு ஸீ? ;) நம்ம ஆட்களை விட அமெரிக்கர்கள் பக்தியுடன் இருப்பது உண்மைதான். கருத்துக்கு நன்றி வானதி! அப்புறம் அது மெழுகு இல்லே! ஹிஹி!
/எல்லாம் உங்கள பார்த்த எபக்டோ ??? / ஹாஹா! கிரிஜா, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாப் பாயின்ட்டைப் புடிக்கறது நீங்கதான்! மாயா-சாது இன்டர்வியூ வரும்போது(!) நீங்களே தெரிஞ்சுப்பீங்க, வெயிட் பண்ணுங்க! ;)
/குட்டி மீன்ஸ்/?? போட்டோலே அப்படி தெரியுதுங்க கிரி, ஆனா ஓரொரு மீனும் நம்ம கை அளவுக்கு நீளம்! :) /கண்ணன் இன் இன்னொரு பெயர் என் பையனுக்கு வெச்சோம். / ஓஹோ..கண்ணன் பக்தையா நீங்க? தகவலுக்குநன்றி! பையன் பேர சீக்கிரம் guess பண்ணிடறேன்! :)
/ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியது / அட,அட,அட! அப்படியே மெய் சிலிர்த்துப் போச் உங்க தன்னடக்கத்தைப் பார்த்து! அது அகர்-அகர் அப்படின்னு ஏஞ்சல் அக்கா கரீக்ட்டாச் சொல்லிட்டாங்க, நீங்க கவனிக்கலையா? விட்டா மெழுகுவர்த்தி ஏத்தி வைச்சிருவீங்க போலிருக்குதே எல்லாரும்? அவ்வ்வ்வ்.....
/அமைதியை தேடி :)) போய் கிட்டு இருக்காரு போல இருக்கு. ச்சே பாவம் உங்க வீ.காரர்:))))/ இதை அவர்கிட்ட படிச்சுக் காமிச்சனா, நல்லாச் சிரிச்சிட்டார்! :D அவரோட சேர்ந்து நானும் போயிட்டு இருக்கேனே? நான் எதைத் தேடிங்க போறேன்? அதையும் சொன்னீங்கன்னா இன்னுங்கொஞ்சம் சிரிக்கலாம்!:)
காமாட்சிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றீம்மா! சாப்பிட இருக்கும் வஸ்து:) சைவம்தான், நீங்களும் சாப்பிடலாம்! :)
ஏஞ்சல் அக்கா,வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! :)
அருமையான அழகான இடம்,அழைத்து சென்றமைக்கு மகிழ்ச்சி. நானும் அடுத்த பதிவை பார்த்து விட்டு இங்கே வந்ததால் மகி கிச்சன் பகிர்வை முதலிலேயே தெரிஞிகிட்டேன்.இது முதலில் தெரிந்திருந்தால் இங்கே வந்திருப்பேன்.
ReplyDeleteஆஹா மகி இந்த கொலாஜ் ஒர்க் எப்படி செய்வதுன்னு ஒரு பதிவு போடேன், நிறைய விஷயங்கள் உன் கிட்ட மெயிலில் கேட்டு தெரிஞ்சிப்பேன், பதிவாக போட்டால் பலபேருக்கு உபயோகமாக இருக்கும்.மிக்க நன்றி மகி.
ReplyDelete//வானதி & கிரிஜா எப்படி இருக்கு எங்க ஏரியா? :))))) இதுக்கே மூக்கு மேல விரல வைச்சிட்டீங்க? இன்னும் அழகான இடங்கள் நிறைய இருக்குதாக்கும்! :) //
ReplyDeleteசீக்கிரம் அதை எல்லாம் எங்களுக்கு பதிவா போட்டு உங்க ஊர சுத்தி காமிங்க வி ஆர் வெய்டிங்.
//பையன் பேர சீக்கிரம் guess பண்ணிடறேன்! :)//
நீங்க கண்டிப்பா guess பண்ணிடுவீங்க மகி. இது உங்களுக்கு ஜுஜூபி :)) தனியா ஒரு கடவள் பக்தைன்னா மீதி பேர் எல்லாம் கோச்சுக்குவாங்க என்னைய மிஸ் பண்ண மாட்டாங்க ஸோ எல்லாருக்கும் ஒரு ஹலோ சொல்லுறதுதான். ஆலிலை கண்ணன் படம் தான் என் பையன் பொறக்க முன்னே பார்த்து கிட்டு இருப்பேன் I Love the picture.
//அட,அட,அட! அப்படியே மெய் சிலிர்த்துப் போச் உங்க தன்னடக்கத்தைப் பார்த்து!// டாங்க்ஸ் மகி
//அவரோட சேர்ந்து நானும் போயிட்டு இருக்கேனே? நான் எதைத் தேடிங்க போறேன்// அமைதிய தேடி போற மனுஷனா விடாது கருப்பா :)) நீங்க follow பண்ணிட்டு என்னைய இப்புடி கிராஸ் குவேஷன் எல்லாம் கேக்க கூடாது :))
ஆசியாக்கா, கொலாஜ் பற்றி/// நிறைய படங்கள் போட்டா பதிவு முழுக்க படமா ஆகிவிடும், அதுவும் இல்லாம பிக்காஸா ஸ்டோரேஜும் காலியாகிடும்னுதான் இப்படி செய்யறேன். :) கொலாஜ் நிறைய பேருக்கு புடிச்சிருக்கோ இல்லையோ என்ற சந்தேகம் அடிக்கடி வரும் எனக்கு. உங்க கருத்தைப் பார்த்து சந்தோஷமா இருக்கு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியாக்கா!
~~
கிரி,வாங்க../பதிவா போட்டு உங்க ஊர சுத்தி காமிங்க வி ஆர் வெய்டிங்./ சொந்தச் செலவில சூனியம் வைச்சிகிட்டேன்னு நினைக்கிறேன். ஹிஹி! ;)))))) இப்பல்லாம் எங்கயாவது ட்ரிப் போயிட்டு வந்த உடனே ப்ளாகில எழுதிடறேன். இதுக்கு முன்னால போன இடங்களைப் பற்றி எழுத சோம்பேறித்தனமா இருக்குது. ஆனாலும் 4 வாரத்துக்கு ஒருமுறையாவது ஒரு பெரிய ட்ரிப் பற்றி எழுத நினைச்சிருக்கேன், பார்க்கலாம்!
/விடாது கருப்பா :)) நீங்க follow பண்ணிட்டு என்னைய இப்புடி கிராஸ் குவேஷன் எல்லாம் கேக்க கூடாது :))/ ஹூம்..கலிகாலமாப் போச்சு! என்னன்னு சொல்றது?! அவ்வ்....