Tuesday, January 20, 2015

கல்கண்டு பொங்கல்

2015-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்பாய்த் தொடங்கலாமே என பொங்கலுக்கு செய்த ரெசிப்பியுடன் ஆரம்பமாகிறது.  

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1/2கப்
பாசிப்பருப்பு-2டேபிள்ஸ்பூன்
கல்கண்டு-1/4கப்
சர்க்கரை-1/4கப் 
(கல்கண்டு மட்டுமே கூட சேர்த்துக்கொள்ளலாம். அப்படியாயின் அரை கப் கல்கண்டு அல்லது இனிப்பிற்கேற்ப சேர்த்துக்கொள்ளவும்.
பால்-1/4கப் 
நெய்-3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்-2
முந்திரி-திராட்சை 

செய்முறை
அரிசியை களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசம் வர வறுத்து வைக்கவும்.
குக்கரில் அரிசி-பருப்புடன் 21/2 கப் தண்ணீர் விட்டு 3 விசில்கள் வரும்வரை வேகவைக்கவும்.

ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சூடான பாலைச் சேர்த்து பொங்கலை மசித்துக்கொள்ளவும்.
அதனுடன் கல்கண்டு மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து குறைவான சூட்டில் வைத்து கிளறவும். 
கற்கண்டு கரையும் வரை குறைந்த சூட்டில் கிளறவேண்டும். இடையில் ஓரொரு டேபிள்ஸ்பூனாக 2 முறை நெய்யையும் சேர்த்துக் கொண்டு கிளறவும்.
மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி-திராட்சையை பொரித்துக் கொள்ளவும். பொடித்த ஏலக்காய், முந்திரி திராட்சையை பொங்கலில் சேர்த்து கலக்கவும்.
கல்கண்டு பொங்கல் தயார்.
குறிப்பு
அரைக்கப் கல்கண்டைச் சேர்க்காமல் ஏன் கால் கப் மட்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு பதில் தேவைப்பட்டால் அடுத்துள்ள வரிகளைப் படிங்க..அல்லது கமெண்ட் பாக்ஸுக்கு ஜம்ப் பண்ணிருங்க! ;) 
ஏதோ ஒரு காலத்தில் லட்டு செய்வதற்காக வாங்கிய கல்கண்டு கொஞ்சம் இருப்பது நினைவு வரவே க.பொங்கல் செய்ய ஆரம்பித்தேன், வீட்டுக்குள் ஒரு கூகுள் சர்ச் செஞ்சு கல்கண்டு பேக்கட்டைக் கண்டுபிடிச்சு பார்த்தா.....கால் கப் கல்கண்டுதேன் இருக்கு!! அவ்வ்வ்வ்வ்...இதுக்காக முன் வைச்ச காலை பின் வைக்க முடியுமா? மிச்சம் மீதிக்கு சர்க்கரையச் சேத்து பொங்கிட்டேன்.  ஹிஹி...

6 comments:

  1. இன்னும் பொங்கல் வரவில்லையே என்று பார்த்தேன், எதிர்பார்த்தது சக்கரை பொங்கல் , நீங்கள் கொடுத்தது கல்கண்டு பொங்கல். எனிஹௌ எல்லாம் பொங்கல் தான் " பொங்கலோ பொங்கல் ". பார்த்தாலே தெரிகிறது குட்டிப்பாபப்பாவுக்காக நல்ல குழைவா இருக்கிறது, குட்டி பௌலில், நிச்சயம் இது லயா குட்டிக்காக தான்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கல்கண்டு பொங்கல் சூப்ப்ப்பர் மகி. ஆரம்பம் இனிமையாக. வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  3. சக்கரையை விட கற்கண்டுப் பொங்கல்தான் எனக்குப் பிடிக்கும். சூப்பர்ர்.

    ReplyDelete
  4. கல்கண்டு பொங்கல் நல்லா இனிப்பா இருக்கு மஹி.

    வீட்டுக்குள்ளும் கூகுள் சர்ச்சா ! சர்க்கரை சேர்த்து பொங்கல் செஞ்சதில்லை. ஆனால் லட்டுக்கு என வாங்கும் கல்கண்டை கடகடவென மென்று முழுங்கியதுபோக இப்படித்தான் (நினைவிருந்தால்) பொங்கலில் கொஞ்சம் போடுவேன்.

    ReplyDelete
  5. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கல்கண்டு பொங்கல் சூப்பர் மகி. செய்முறையும் எளிதாக கொடுத்துள்ளீர்கள். சர்க்கரை சேர்ப்பது புதிது. செய்து பார்க்கிறேன் மகி.

    ReplyDelete
  6. கல்கண்டு பொங்கல்... சூப்பர் ஐடியா

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails