நேற்றுதான் எங்க வீட்டு குட்டி தேவதையின் வரவை உங்களுடன் பகிர்ந்த மாதிரி இருக்கிறது, ஆனால் அதற்குள் முழுதாக ஐந்து ஆண்டுகள் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்துவிட்டன!!
இப்ப்பொபொழுது அந்த குட்டி தேவதை அக்கா தேவதையாகவும் மாறிவிட்டாள்..தன் பிறந்தநாளுக்கு என்னென்ன வேண்டும் என தெளிவாக அறிவிக்கவும் ஆரம்பித்துவிட்டாள்.
:) :) :)
15ஆம் தேதி வியாழக்கிழமையானதால், சிம்பிளாக ஒரு குக்கீ கேக் வாங்கி நாங்க 5 பேர் மட்டும் 5வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு பள்ளி சென்றாயிற்று.
வாரக்கடைசியில் ஒரு ப்ரின்ஸஸ் கேஸல் வாடகைக்கு எடுத்து,
"ஸ்கை" நாய்க்குட்டி படம் போட்ட கேக் வாங்கி, அவளின் நண்பர்களை எல்லாம் அழைத்து விளையாடி, உண்டு மகிழ்ந்து கொண்டாடியாயிற்று.
சின்னக் குட்டி தேவதை கேக் வெட்ட ஆர்வமாக இருந்தார்..ஆனால் நித்திராதேவி கேக் வெட்டும் நேரத்தில் அவரை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள..பின்மாலையில் எழுந்து கேக்கை சுவைத்தார். ;) :)
அப்புறம், முதல் படத்தில் இருக்கும் அந்த டெடி இதோ இந்தப்படத்தில் இருப்பதேதான்..லயா பிறந்தபொழுது இதே படத்துடன் தான் பதிவிட்டிருந்தேன்..அதனால் இப்பவும் அதே டெடி..பலூன் வேற!! B-) :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லயா :)
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteமனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லயா செல்லம்.
ReplyDeleteஅதற்குள் 5 வயதாகிவிட்டது. அக்காவாக பொறுப்பாகிவிட்டாங்க. கை பிடித்து அழைத்து செல்லும் படம் அழகு. அவங்க தங்களுக்கு என்ன வேண்டுமென்பதில் இனிமே லிஸ்ட் போட்டு தருவாங்க.
வாவ் சூப்பர் சூப்பர்..
ReplyDeleteகுட்டி அக்கா க்கு எனது வாழ்த்துக்களும்..
ஹப்பி பேர்த்டே லயா...அதுக்குள் 5 வயதோ...
ReplyDeleteமஹி மிஸ்ட் திஸ் வெரி சாரிமா...
ReplyDeleteதாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் லயாவிற்கு....இனி தொடர்கிறோம்...
கீதா
வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்! :) :)
ReplyDelete