Sunday, April 1, 2012

சந்தைக்குப் போலாமா? :)

கோவையில் எங்க ஊரில் திங்கள் கிழமை சந்தை. அன்று பேருந்துகள் கூட்டத்தில் பிதுங்கி வழியும். திங்கள் காலை முதல் இரவு வரை சந்தைத் திடலில் கனஜோராக வியாபாரம் நடக்கும். அன்று மட்டும் ஜே-ஜேன்னு இருக்கும் இடம் மத்த 6 நாட்களும் காற்று வாங்கிக்கொண்டு கிடக்கும். நான் சிலமுறைகள் மட்டுமே சந்தைக்குப் போயிருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் நீந்தி காய்களை வாங்கிக்கொண்டு வருவதற்குள் போதும் போதும்னு ஆனாலும், அதுவும் ஒரு சந்தோஷம்தான்! :)

சந்தையில் கடலை-பொரியும், தேர் மிட்டாய், பீடி மிட்டாய் போன்ற மிட்டாய்களும்தான் அந்தக் காலத்தில் ரொம்ப ஃபேமஸாக இருந்தது. மேலே படத்தில் இருப்பது தேர் மிட்டாய், ஆனால் சந்தையில் வாங்கியதில்லை! மேட்டுப்பாளையம் கோயில் போயிருந்தபோது வாங்கியது.

இந்தப் பதிவில் வடஅமெரிக்காவில் காய்கள் வாங்கப்போகலாம்,வாங்க! :)
~~~
யூட்டாவில் வீட்டிலிருந்து ஒரு ரோடைக் க்ராஸ் பண்ணினால் வால்மார்ட் சூப்பர் சென்ட்டர் இருக்கும், அங்கே காய்களும் கிடைக்கும். அதனால் ரொம்ப வசதியாக இருந்தது. கலிஃபோர்னியா வந்தபொழுது இங்கே உள்ளூர் விவசாயிகள் வால்மார்ட்டை அனுமதிப்பதில்லை, விவசாயிகளிடம் வால்மார்ட் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கி மக்களுக்கு விற்பனை செய்வதாக ஒரு சர்ச்சை இருந்துகொண்டிருக்கு, அதனால் கலிஃபோர்னியாவில் மூலைக்கொன்றாக சில வால்மார்ட்கள்தான் இருக்கும், சூப்பர் சென்டர் அநேகமாக மொத்த மாநிலத்துக்கும் சேர்த்து ஒன்று இருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது!

வீடு கிடைத்து செட்டில் ஆனபொழுது, வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் வால்மார்ட் இருக்கிறதுன்னு தெரிந்தது. முதல் முறை வால்மார்ட்டில் நுழைந்ததும் ஷாக் ஆகிட்டேன்... பின்னே?? சால்ட் லேக் சிட்டில சூப்ப்ப்ப்பர் சென்டர்ல டைம்பாஸ் பண்ணிட்டு இருந்த என்னைய இப்படி ஒரு தக்குனூண்டு கடையைக் காமிச்சு, இதான் வால்மார்ட்டுன்னு சொன்னா?அவ்வ்வ்வ்வ்!! ... மனுஷங்க நடக்கவே இடம் இல்ல, கடைக்குள்ள! பொருட்களும் நிறைய சாய்ஸ் பார்த்து எடுக்க முடியாது, என்ன இருக்கோ அதான்! அக்கம் பக்கம் பதினெட்டுப் பட்டிக்கும் சேர்த்து எங்கூட்டுப் பக்கத்திலதான் வால்மார்ட்டாம்! [இதிலே ஒரு அல்ப சந்தோஷமான்னு மொறைக்காதீங்க,ப்ளீஸ்! ;) ]

ஆக மொத்தம் இங்கே ரால்ஃப்ஸ் என்ற லோக்கல் சூப்பர் மார்க்கெட்டில்தான் காய்கள் வாங்கிட்டு இருந்தோம். பக்கத்து வீட்டில் இருந்த ஒரு தோழி இந்த மிடில் ஈஸ்டர்ன் சூப்பர் மார்க்கட்டை அறிமுகப் படுத்தினார், அப்ப இருந்து இங்கேயேதான் எங்க ரெகுலர் ஷாப்பிங்.

இங்கே இந்தியப் பொருட்களுக்கும் தனியே ஒரு செக்ஷன் இருக்கிறது. எல்லாக் காய்களும் புதிதாகவும் விலை குறைவாகவும் இருக்கும். கூடவே வெண்டைக்காய், கத்தரிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், சின்ன வெங்காயம், சேப்பங்கிழங்கு, கொய்யாப்பழம் போன்றவையும் இருக்கும். அவ்வப் பொழுது சீஸனல் ஐட்டங்களும் சேல் போடுவார்கள். கடந்த முறை 10 கட்டு கொத்தமல்லி இலை ஒரு டாலர், 6கட்டு புதினா ஒரு டாலர்!! மேலும் தகவலுக்கு(!) படங்களைப் பாருங்க.

நட்ஸ், பேரீட்சை மற்றும் உலர் பழவகைகளும் தரமாகவும் கிடைக்கும். பக்லவா போன்ற இனிப்பு வகைகள், மற்றும் பலவிதமான கேக்ஸ், ப்ரெட்ஸ், சாக்லேட்ஸ் என்று A-Z எல்லாப் பொருட்களும் வைத்திருப்பாங்க.
இதாங்க அந்தக் கடை.பேரிலே ஒரு எழுத்து ஆஃப் ஆகிட்டது, ஆனா கடை சூப்பர்!!:)) அப்படியே அதே ரோட்டில் இன்னும் கொஞ்சம் தூரம் போய் 3 முறை ரைட் டர்ன் எடுத்தா(!) இண்டியன் க்ரோசரி ஸ்டோர் வந்துரும். கீழே இருக்கும் படம் இந்தியன் ஸ்டோரில் காய்கள் இருக்கும் பகுதி..
வெள்ளை முள்ளங்கி தெரியுதுங்களா? ;) இந்த முறை இளநீர்-முருங்கைப் பிஞ்சு(!) எல்லாம் வைச்சிருந்தாங்க..நாம உஷாரில்ல,இதெல்லாம் வாங்கி ரிஸ்க் எடுக்கலை. ஷாப்பிங் எல்லாம் மிஷன் ரான்ச் மார்க்கெட்லயே முடிச்சிட்டு அரிசி-மளிகை-கறிவேப்பிலை மட்டும்தான் இங்கே வாங்குவது. மழை சீஸனாக இருப்பதால் இந்த முறை கறிவேப்பிலையும் சரியில்லை, நைஸா ஃபோட்டோ மட்டும் எடுத்துட்டு ஓடிவந்துட்டேன்! ;)

இந்தக் கடையில் எல்லா இந்தியன் ஸ்டோர்களையும் போலவே உணவகமும் இருக்கிறது, அங்கே பாவ்-பாஜி சூப்பரா இருக்கும்! :P அவ்வப்போது அவசரத்துக்கு இந்தியன் சாப்பாடு சாப்பிட்டுக்கலாம்னு வைங்களேன்.

இது ஒரு மாதிரிக்கு! 2 ஐட்டம் மீல்ஸ்... ரைஸ்-நாண்-2 சைட் டிஷ்- வெஜிடபிள் ஊறுகாய், சாலட், பூந்தி ரைத்தா, தெம்பாச் சாப்புட்டு, சன்னா-பட்டூராவையும் ஒரு புடி புடிச்சு சந்தைக்குப் போன களைப்பைத் தீர்த்துட்டு போங்க என்று கேட்டுக்கொள்கிறேன். :P
நன்றி!

பி.கு. ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கும் இந்தப் பதிவுக்கும் எந்ந்ந்ந்ந்தவிதமான சம்பந்தமும் இல்லீங்கோ! ;)

34 comments:

  1. துடியலூரு சந்தைல இருந்து வால் மார்ட் வரைக்கும் பிச்சு உதறிட்டீங்க!!!

    ReplyDelete
  2. சந்தை அனுபவங்கள் சூப்பரோ சூப்பருங்க

    ReplyDelete
  3. Mahi nice post. enjoyed it.

    The moulded sugar candy are made by people from karnataka for ugadi ( new year).

    I know how enjoyable to pass through the market though it is very crowded & shabby. I get our veggies in the weekly friday market here & enjoy shopping fresh veggies from Nasik.

    ReplyDelete
  4. mahi...an enjoyable post!! sandhai la vangitu vara anubavam oru thani sandosham than...... sooper mahi!!

    ReplyDelete
  5. Had a happy virtual shopping experience with you ,Mahi....
    Starting with Coimbatore Sandhai(is it Thudiyalur Sandhai?)
    to U S hypermarkets ...nice post!

    ReplyDelete
  6. தேர் மிட்டாய்... மெழுகுவர்த்தி மாதிரி இருக்கு. ;)

    ReplyDelete
  7. சந்தையை சுற்றி பார்த்துவிட்டு தெம்பாக சாப்பாடும் போட்டதால் ரொம்ப சந்தோஷமுங்கோ.

    ReplyDelete
  8. Mahi, search for "Superior" market near ur place. they are mexicon chain stores, where u can find lot of indian groceries also.

    ReplyDelete
  9. ஹை ..எங்க ஊர்லயும் திங்கள் கிழமை தான் சந்தை
    செம கூட்டம் இருக்கும்.
    //அந்தக் கூட்டத்தில் நீந்தி காய்களை வாங்கிக்கொண்டு வருவதற்குள் போதும் போதும்னு ஆனாலும், அதுவும் ஒரு சந்தோஷம்தான்! :) //
    எஸ் எஸ் அதுவும் ஜாலி ஆ தான் இருக்கும்

    ReplyDelete
  10. தேர் மிட்டாய் கேள்விப்பட்டதே இல்லை.

    ReplyDelete
  11. Nalla post, athaivida antha pin kurippu miga arpudam..

    ReplyDelete
  12. மகி கோயம்புத்தூருல ஆரம்பிச்சு வட அமெரிக்காவில் முடிச்சு இருக்குறது அருமை. நான் மெட்ராஸ் இல் வளர்ந்ததால் இந்த தேர் மிட்டாய் எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு. டீச்சர் சொன்னது போல மிட்டாய் அழகா மெழுகு வர்த்தி போல இருக்கு.

    ReplyDelete
  13. //ஒரு தக்குனூண்டு கடையைக் காமிச்சு// ஆஆவ்வ்வ்வ் அப்படீன்னா இங்கெல்லாம் வந்து கடைங்கள பார்த்தீங்கன்னா என்ன சொல்லுவீங்க அம்மணி ?

    ReplyDelete
  14. //10 கட்டு கொத்தமல்லி இலை ஒரு டாலர், 6கட்டு புதினா ஒரு டாலர்//// ஆஆஆஆ இங்கெல்லாம் ஒரே ஒரு கட்டு கொத்தமல்லியும் ஒரே ஒரு கட்டு புதினாவும் ஒரு பவுண்டுக்கு கொடுக்கறதையே நாங்க எல்லாம் ஏதோ டீல் ன்னு நெனைச்சு வாங்கி கிட்டு இருக்கோம். இதோ போறேன் போறேன் எங்க இந்தியன் ஷாப் க்கு உங்க பதிவ காமிச்சு சண்டை போட:))

    ReplyDelete
  15. //இந்த முறை இளநீர்-முருங்கைப் பிஞ்சு(!)// இளநீரா ஆஆஅ இளநீருன்னா உயிரையே கொடுப்பேன் (அதுக்காக கேட்ட்ராதீங்க:) ஒவ்வொரு தடவை ஊருக்கு போகும் போதும் இளநீர் இருக்கும் எங்க மாமியார் வீட்டில். ஆனா இங்கே கடைகளில் பார்த்ததில்லை

    ReplyDelete
  16. //இந்த முறை கறிவேப்பிலையும் சரியில்லை,// எனக்கு கறிவேப்பிலை போடலேன்னா ஏதோ நல்லாவே இருக்காத மாதிரி ஒரு பீலிங் (நான் சமைக்குறதுக்கு எல்லாம் ரெம்ப ஓவர் ன்னு நீங்க மனசுக்குள்ளே நெனைக்குறது எனக்கு கேக்குது :))

    ReplyDelete
  17. //ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கும் இந்தப் பதிவுக்கும் எந்ந்ந்ந்ந்தவிதமான சம்பந்தமும் இல்லீங்கோ! ;)//

    இப்பத்தான் டவுட்டே வருது ஊஊ

    ReplyDelete
  18. சந்தைக்கு போகலாம்னு தோன்றது. சண்டைக்கான்னு கேலி செய்யலாம்.
    சந்தை இரைச்சலை வர்ணிக்கலேயே.
    அங்கெல்லாம் சந்தையை பார்க்கலாமே தவிர சந்தை இறைச்சலைப் பார்க்க முடியாது. என்ன ஒரு அழகான கோர்வைகள்.? கோயமுத்தூரிலிருந்து வட அமெரிக்கா
    டிக்கெட் வாங்காமலேயே அழைத்துப் போகும் லாவகம் . கூடவே சாப்பாடும். பஞ்சு மிட்டாயில் செய்த
    தேர் மிட்டாயா? நல்ல நடை. மெச்ச வேண்டிய பதிவு.

    ReplyDelete
  19. Mahi,u can go "Sulthan Market" which is near to "Neenas Groceries"

    ReplyDelete
  20. Ayoo Ayooo namuru pedi mittai!!!!!!
    Mahi unakkum athu theriuma????????/
    Aha America kadaiellam supera irrukke!!!!!!!!!
    There are some Indian stores at Kansas too. But Mahesh never allowed me taste anything from there. He wants me to do at home. So no chance of taste these items Mahi.

    ReplyDelete
  21. மகி,

    சந்தைக்கு (கோவை) வரலாம் என்று வந்தால் கடைசியில் இப்படி காரில் அழைத்துச்சென்று,பக்கத்திலேயே சுற்றிவிட்டு,ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக்கொடுத்து?தேர்மிட்டாயை இப்போதுதான் பார்க்கிறேன்.அதன் நிறமும், அழகும்_சாப்பிடவேத் தோனாது போல.ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  22. எங்களுக்கு எல்லா காய்கறிகளும் கொரியன் கடையில் மலிவாக கிடைக்கும். கொத்தமல்லி தழை 69 காசுகள் ஒரு கட்டு தான் தருவார்கள். புதினா நான் வாங்குவதில்லை. கறிவேப்பிலையும் விலை அதிகம். அந்த மிட்டாய் பேப்பரில் செய்தது போல இருக்கே!

    கிரிசா, இங்கே கடைகள், பார்க்கிங் எல்லாமே பரந்து, விரிந்த இடத்தில் இருக்கும். என் அண்ணி இங்கு வந்தபோது பார்க்கிங், மால் என்று எங்கு போனாலும் ஆவென்று வாய் பிளந்து பார்த்தார். என்ன சொன்னாலும் அமெரிக்கா அமெரிக்கா தான் ( அப்பாடா! அண்டப் புளுகு புளுகினது போதும். கிரிசா வர்றதுக்குள்ளே நான் போய் hide பண்ணுறேன் ).

    ReplyDelete
  23. //என்ன சொன்னாலும் அமெரிக்கா அமெரிக்கா தான் ( அப்பாடா! அண்டப் புளுகு புளுகினது போதும்//

    கர்ர்ர்ர் பூஸ் இல்லாத குறைக்கு நான்தான் அகப்பட்டேன் போல இருக்கு. அமெரிக்காவில் எல்லாமே பெரிசு பெரிசா இருக்கும். இனிமே நானும் எங்க அக்காவும் அமேரிக்கா பெரிசா யு கே பெரிசா ன்னு சண்டை போடுறது;)) போல உங்க கூடவும் சண்டை போடணும் போல இருக்கே!!! ஆனா போன வருஷம் எங்க அக்கா இங்கே வந்த போது இங்கே எல்லாம் சின்னதா கியூட்டா இருக்குன்னு சொல்லிட்டு போனாங்க( என்னைய சமாதான படுத்தவா ன்னு கேக்கணும் :)) எல்லாருக்கும் இருக்குற இடம் தான் சொர்க்கம் எனக்கோ இருந்த எல்லா இடமும் புடிச்ச இடம் சென்னை டு பாஸ்டன் டு அயர்லாந்த் டு யு கே எல்லாமும் என் பேவரிட்.

    ReplyDelete
  24. கிரி, எதுக்கு இப்ப பூஸாரை இழுக்கிறீங்க. அந்தக்கா இல்லை என்ற தைரியத்தில் தான் நான் அமெரிக்காவை புளுகினேன். பாஸ்டனில் என் உறவினர்கள் இருக்கிறார்கள். அங்கே ரோடுகள் மிகவும் சின்னது போல இருக்கும்.

    ReplyDelete
  25. வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க டாக்டர் ஐயா!
    ~~
    லஷ்மிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!
    ~~
    மீரா,கர்நாடகாவிலும் இந்த மிட்டாய் உண்டா? நான் ஆசையா வாங்கி போட்டோ எடுத்தேன்,அவ்வளவுதான்! ;) மார்க்கெட் போவது ஒரு ரிலாக்ஸேஷன்தான்,கண்டிப்பா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
    ~~
    வித்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. ஆமாம், இங்கேயும் கடைக்குப் போய் காய் வாங்கறதுன்னா ஜாலியா இருக்கும்! ;)
    ~~
    உஷா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. ஆமாங்க, துடியலூர் சந்தையேதான்! :)
    ~~
    /தேர் மிட்டாய்... மெழுகுவர்த்தி மாதிரி இருக்கு. ;)/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! மொதப் படத்த மட்டும் பார்த்துட்டு கம்பி நீட்டிட்ட மாதிரி இருக்கே றீச்சர்? ;)
    நன்றி!
    ~~
    ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ஆச்சி,நீங்க சொன்ன மார்க்கெட் கொஞ்சம் தூ...ரமா இருக்குது எங்க வீட்டுல இருந்து! ;) தகவலுக்கு நன்றிங்கோ!
    ~~
    சௌம்யா,சேம் பின்ச்! ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    /தேர் மிட்டாய் கேள்விப்பட்டதே இல்லை./ஓ,உங்க ஊர்ப்பக்கம் இல்லை போலும்! அதனால என்ன ஸாதிகாக்கா,இப்ப படத்தையும் பார்த்துட்டீங்கள்ல? இனிமேல் எங்கயாவது கிடைச்சா மிஸ் பண்ணாம வாங்கிருங்க!
    கருத்துக்கு நன்றி!
    ~~
    ஹேமா,ஏப்ரல் 1-ஆம் தேதி போஸ்ட் பண்ணதால சேர்க்கப்பட்ட பி.கு. அது! ;)
    நன்றிங்க!
    ~~
    சிவா, " :D "
    ~~

    ReplyDelete
  26. கிரிசா,கலகலகலன்னு கருத்தா கத்திக் குமிச்சிட்டுப் போயிட்டீங்க! ;) நன்றி!

    யு.கே.பக்கமெல்லாம் நான் வந்ததே இல்லீங்க. ஆனா யு.எஸ்.அளவுக்கு அது பரந்து விரிந்த நாடு இல்லைன்றது மேப்பை பார்க்கும்போதே தெரியுதுல்ல?! ;) இங்கே பெரும்பாலான அமெரிக்கக் கடைகள் நிஜமாலுமே பெரியதாய்த்தான் இருக்கும். இண்டியன் ஸ்டோர்ஸ் கூட சில இடங்கள்ல நல்லா விசாலமாகவே இருக்கும்.

    எங்க ஏரியாவில் மிடில் ஈஸ்டர்ன் கடைகள் அதிகம். கொத்துமல்லி,புதினா,வெந்தயக்கீரை மற்றும் காய்கள் எல்லாமே நல்லா ப்ரெஷ் & சீப்-ஆக கிடைக்கும்ங்க! முருங்கைக் காயே சம்மரில் நல்லாக் கிடைக்கும். இளநீர் வாங்கி ரிஸ்க் எடுக்க நான் தயாரில்லை,நீங்க வேணா உசுரக் குடுத்து வாங்கிப் பாருங்க! ;) [உசுரைக் குடுத்தாச்சுன்னா, அப்பறம் எளநி எப்படிக் குடிக்கமுடியும்??! ஒண்னுமே புரீலையே! ங்ஙேஏஏஏஏஏ....]

    இந்தமாதிரி பின்குறிப்பு, ஊசிக்குறிப்பெல்லாம் போட்டு உங்க மூளையைக் குத்தி(!) உசுப்பி விட்டாத்தான எனக்கு நிம்மதி?ஹி..ஹி!

    //இதோ போறேன் போறேன் எங்க இந்தியன் ஷாப் க்கு உங்க பதிவ காமிச்சு சண்டை போட:))//ஆஹா,சென்னையில் குழாயடி சண்டை போட்ட அனுபவம் போலவே! எதுக்கும் கொஞ்சம் உஷாராவே இருக்கோணும்.;)

    நன்றி கிரிசா!
    ~~
    ஜெயந்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    காமாட்சிம்மா,அது சர்க்கரையில் செய்த மிட்டாய்! நல்லா கல்லு மாதிரி இருக்கும்! ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!
    ~~
    அனானி,யாருங்க நீங்க? பேரைச் சொல்லுங்களேன்! எனக்குத் தெரிஞ்சவரா? ;)

    இந்த வாரம் மார்க்கெட் எல்லாம் போயிட்டு வந்தபிறகுதான் உங்க கமென்ட்டைப் பார்த்தேன்,அடுத்தமுறை சுல்தான் மார்க்கெட்டை எக்ஸ்ப்ளோர் பண்ணிடறேன், தகவலுக்கு நன்றிங்க!
    ~~
    விஜிம்மா,பீடி மிட்டாய், தேர்மிட்டாய் எல்லாம் எனக்கு அவ்வளவாப் புடிக்காது. ஆனா ப்ளாகுக்காக வாங்கினேன்! ;))

    இந்திய கடைகள்ல அவசரத்துக்கு சாப்பிட்டுக்க வேண்டியதுதான் விஜிமா! நாங்க அவ்வளவு ஹெல்த் கான்ஷியஸ் இல்லை! ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    சித்ரா சுந்தர், ஏமாந்து போயிட்டீங்களா? ;) சந்தை அன்று நான் போகவே இல்லை,காலியா இருந்த திடலை போட்டோ எடுத்த நினைவிருந்தது, தேடித்தேடித் தேய்ந்ததுதான் மிச்சம்,படத்தை கண்டுபுடிக்க முடியலைங்க. அதனால அமெரிக்கா டாமினேட் பண்ணிட்டது! :))))

    தேர்மிட்டாய் அழகா இருக்கில்ல? எனக்கு பார்க்க மட்டுமே பிடிக்கும்! கருத்துக்கு நன்றிங்க!
    ~~
    /அந்த மிட்டாய் பேப்பரில் செய்தது போல இருக்கே!/வான்ஸ், அது அஸ்கா சக்கரையில் செய்ததுங்க,பேப்பரில் செய்தா நாம எப்படி சாப்பிடுவது? ;)))))

    உப்பேரி பாளையத்தில் நீங்க சொன்னமாதிரிதான்,ஆனா இங்கே மல்லி,புதினா,காய்கள் எல்லாமே சூப்பர்! :)

    /என்ன சொன்னாலும் அமெரிக்கா அமெரிக்கா தான் ( அப்பாடா! அண்டப் புளுகு புளுகினது போதும்./முதல் பாதிக்கு ஷொட்டு,இரண்டாம் பாதிக்கு குட்டு! ;)) நீங்க புளுகினது அண்டப் புளுகெல்லாம் கிடையாது.90% உண்மை, hide எல்லாம் பண்ணாதீங்க,நாம தான மெஜாரிட்டி இப்ப? கிரிசா தனியா மாட்டிருக்காக, ஒரு வழி பண்ணிருவோம்,வாங்க! ;)
    நன்றி வானதி!
    ~~

    //அமேரிக்கா பெரிசா யு கே பெரிசா ன்னு சண்டை போடுறது;)) போல உங்க கூடவும் சண்டை போடணும் போல இருக்கே!!// ஐஐஐஐஐ...சண்டையா?? நாங்க ரெடி,நீங்க ரெடியா? ஹா..ஹாஹா!

    ReplyDelete
  27. //கிரிசா,கலகலகலன்னு கருத்தா கத்திக் குமிச்சிட்டுப் போயிட்டீங்க! ;) நன்றி!// அஆவ்வ்வ்வவ் நான் முதல்ல லகலகன்னு படிச்சிட்டேன் ;))

    //யு.கே.பக்கமெல்லாம் நான் வந்ததே இல்லீங்க// ஒரு உறையில ஒரு வாள் தான் இருக்கோணும் நானும் பூசும் இந்த கண்டத்துக்கு போதும் நீங்களும் வான்சும் அந்த பரந்து விரிந்த கண்டத்தில இருந்து கும்மி:)) அடியுங்கோ !!!

    //இங்கே பெரும்பாலான அமெரிக்கக் கடைகள் நிஜமாலுமே பெரியதாய்த்தான் இருக்கும்// உண்மைதான் அக்கா வீட்டுக்கு போகும் போதெல்லாம் ஒரு நாள் முழுக்க ஷாப்பிங் ன்னு பொழுது கழிஞ்சிரும்.

    //முருங்கைக் காயே சம்மரில் நல்லாக் கிடைக்கும்.// முருங்கை இங்கேயும் கிடைக்குது பட் ஸ்டில் நோ இளநீர்

    //ஒண்னுமே புரீலையே! ங்ஙேஏஏஏஏஏ....]// ஒரு பேச்சுக்கு குண்டக்க மண்டக்கன்னு பேசினா பார்த்திபன் வடிவேலு ரேஞ்சுக்கு ஆகிடும் போல இருக்கே நம்ம கதை :))

    //உங்க மூளையைக் குத்தி(!) உசுப்பி விட்டாத்தான எனக்கு நிம்மதி?ஹி..ஹி! // ஐயோ பாவம் அதெல்லாம் மூளை :)) இருக்குறவங்களுக்கு

    ReplyDelete
  28. //கிரி, எதுக்கு இப்ப பூஸாரை இழுக்கிறீங்க// ஐ வான்ஸ் எ பயமுறுத்தியாச்சு .

    //அங்கே ரோடுகள் மிகவும் சின்னது போல இருக்கும்.// எங்களுக்கு எல்லாம் பாஸ்டன் ரோடே பெரிஸூஊ :))


    //இரண்டாம் பாதிக்கு குட்டு! ;)) // வான்ஸ் ஆர் யு ஓகே ? இல்லே மகியின் மோதிர கையால:)) குட்டு வாங்கி இருக்கீங்களே அதான் கேட்டேன் !


    //நாம தான மெஜாரிட்டி இப்ப? கிரிசா தனியா மாட்டிருக்காக, ஒரு வழி பண்ணிருவோம்,வாங்க! ;)// இந்த மாதிரி ஒரு அப்பாவிய போட்டு கும்முறதுக்கு முன்னே மகி அந்த கண்ணாடிய எடுத்து போட்டுக்கிட்டு என் கமெண்ட் படிங்க பார்க்கலாம் எல்லாமும் என் பேவரிட் அப்படின்னு உஷாரா கமெண்ட் ஏற்கனவே போட்டு இருக்கேன். (பூஸ் அப்பப்போ இப்படி அம்போன்னு விட்டிட்டு போகும் போதெல்லாம் நான் வேற எப்படித்தான் சமாளிக்குறது )

    ReplyDelete
  29. //ஆஹா,சென்னையில் குழாயடி சண்டை போட்ட அனுபவம் போலவே! எதுக்கும் கொஞ்சம் உஷாராவே இருக்கோணும்.;)//

    அது அந்த பயம் இருக்கட்டும் வான்ஸ் கூட சேர்ந்து கெட்டு:)) போயிடாதீங்க !!

    ReplyDelete
  30. //ஐஐஐஐஐ...சண்டையா?? நாங்க ரெடி,நீங்க ரெடியா? ஹா..ஹாஹா!//

    ரெம்ப நேரமா வெள்ளை கொடி காமிச்சுக்கிட்டு இருக்கேன் இன்னும்ம் தெரியலையா. அந்த கண்ணாடிய எடுத்து போடுங்க மகி :))

    ReplyDelete
  31. super sandhai posts...enga oor sunday sandhai ninaivum vandhuduchu ammani...:)


    //தேர் மிட்டாய், ஆனால் சந்தையில் வாங்கியதில்லை! மேட்டுப்பாளையம் கோயில் போயிருந்தபோது வாங்கியது//
    @ ammani - adhu karamadai illayo...;)

    ReplyDelete
  32. /ammani - adhu karamadai illayo...;)/இல்லீங்கம்மிணி! மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலுக்குப் போனப்ப வாங்கினது! காரமடை கோயிலுக்கு இன்னும் நான் ஒரு முறை கூடப் போனதே இல்ல! ஒவ்வொரு முறையும் தட்டித்தட்டிப் போயிருது! அவ்வ்வ்வ்...பெருமாள் என்னை பார்க்கமாட்டேங்கறார்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails