ஜனவரி மாதத்தில் ஒரு முற்பகல் நேரமும், முன்னிரவு நேரமும் இந்தப் பகிர்வில்..
நீல வானிலே வெள்ளி ஓடைகள்..
போடுகின்றதே என்ன ஜாடைகள்?..
விண்வெளியில் இறைத்தது யார், பல நிறங்கள்??..
வானமா..மேகங்களா..கதிரோனா?..
அல்லது
மேகங்களைக் கலைத்து விளையாடும் காற்றா?
அல்லது
மேகங்களைக் கலைத்து விளையாடும் காற்றா?
மரச்செறிவா...மலைச்சரிவாலா?...
யாரால் வந்தது??..
இப்படிக் கண்களைக் கவர்ந்து,
கை வேலையை விட்டு
சில நிமிஷங்களேனும்
இந்தக் காட்சியை மாலைத் தேநீருடன் சேர்த்துப் பருகுவோம் எனும்
இச்சை மூட்டும் அழகு???
இப்படிக் கண்களைக் கவர்ந்து,
கை வேலையை விட்டு
சில நிமிஷங்களேனும்
இந்தக் காட்சியை மாலைத் தேநீருடன் சேர்த்துப் பருகுவோம் எனும்
இச்சை மூட்டும் அழகு???
~~~
லயா : அம்மா அண்ணாந்து கலர் பாத்துகிட்டு என் டிரெஸ்ஸ இப்படி கலர் கலரா போட்டு விட்டுட்டாங்க..நானா கேக்க இன்னுங் கொஞ்சம் நாளாகும்..நீங்க எல்லாருமாவது "என்ன?'-ன்னு ஒரு வார்த்தை கேளுங்களேன்!!! :)"லயாவுக்கு எந்த டிரெஸ், எந்தக் கலர்ல போட்டாலும் நல்லா இருக்கும்!" அப்படின்னு வேற ரெண்டு பேரும் பேசிக்கிறாங்க..அவ்வ்வ்வ்வ்வ்! எ.கொ.ச.இ.?? ஆள விடுங்க சாமீஈஈ..மீ த எஸ்கேப்பூ! ;) :)
என்ன அழகு... என்ன அழகு... முடிவில் செல்லம்...
ReplyDeleteநீலவெளியும் அழகு .....சூர்ய கதிரும் அழகு...
ReplyDeleteஅனைத்தையும் விட லயாவின் நடை அழகோ அழகு ...
சூப்ப்ப்பரா இருக்கு. அழகான படங்கள்.சூரியன் இருக்கும் போட்டோ கூடுதல் அழகு.
ReplyDelete//"லயாவுக்கு எந்த டிரெஸ், எந்தக் கலர்ல போட்டாலும் நல்லா இருக்கும்!" // நானுமே இதைத்தான் சொல்வேன் மகி.தத்திதத்தி அழகு நடை போடும் லயாகுட்டி ஸோ ஸ்வீட்.
;) //அம்மா அண்ணாந்து கலர் பாத்துகிட்டு // மட்டுமில்ல... கவிதை எழுதிட்டும் இருக்காங்க. சூப்பர் ரசனை மகி.
ReplyDelete//"லயாவுக்கு எந்த டிரெஸ், எந்தக் கலர்ல போட்டாலும் நல்லா இருக்கும்!" அப்படின்னு // இமாவும் சொல்றேன். ;)
ரொம்ப நாள் கழித்து நல்ல அழகான இயற்கையை ரசிக்கும்படியான படங்கள் நல்ல வர்ணனையுடன், இரவு மேகங்களின் கலர்புல் படங்கள் ரியலீ ஸூபர். சூரியனின் மறைவு, நல்ல பிக்சர் குவாலிட்டி நேரிலே இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ReplyDelete" வானமா..மேகங்களா..கதிரோனா?..அல்லது மேகங்களைக் கலைத்து விளையாடும் காற்றா? மரச்செறிவா...மலைச்சரிவாலா?... யாரால் வந்தது??..இப்படிக் கண்களைக் கவர்ந்து, கை வேலையை விட்டுசில நிமிஷங்களேனும் இந்தக் காட்சியை மாலைத் தேநீருடன் சேர்த்துப் பருகுவோம் எனும் இச்சை மூட்டும் அழகு??? "
படங்களும், வரிகளும் இன்னும் ரசிக்க வைத்தது.
" நானா கேக்க இன்னுங் கொஞ்சம் நாளாகும்..நீங்க எல்லாருமாவது "என்ன?'-ன்னு ஒரு வார்த்தை கேளுங்களேன்!!! " --------------- நாங்கள் கேட்பதெல்லாம் எப்போது லயாவை எங்களுக்கு காட்டப்போகிறீர்கள் என்றுதான்.
பாப்பூ செல்லம் எங்கே போகுது :) எனக்கு நீல வான் படம் பிடிச்சிருக்கு அதையெல்லாம் விட கால் முளைத்த ரெயின்போ
ReplyDeleteரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு :)
மஹி,
ReplyDeleteநேத்தே பதிவைப் பாத்துட்டேன். நாலாவது, ஆறாவதாக உள்ளவை, வரைந்த படங்கள் போலவே இருந்து குழப்பின. அவ்வ்வ்வ் எப்படி இதெல்லாம் !!!
எங்களுக்கு சில நாட்களில்தான் வானம் இப்படி மேகமூட்டத்துடன் அழகா இருக்கும். மற்ற நாட்களில் ஒரே நீலநிறம் அல்லது பழுப்பு நிறம்தான். படங்கள் எல்லாமே அழகு !
"பாப்பூ, இப்போ அம்மா போட்டு விடுறதையே போட்டுக்கோ, அப்புறமா இந்த பளபளா, வண்ணவண்ண பூக்கள் நிறைந்ததை எல்லாம் நீயே விரும்பினாலும் நீ போடமாட்டாய், என்ன சரியா !"
வானம் , கவிதை , குட்டி பாப்பா மூன்றுமே அழகில் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன...
ReplyDeletesuper layavin nadai alako alagu
ReplyDeleteMathathellam vida nadai payilum kavithai'kku 1000 likes...:)
ReplyDeleteகருத்துக்கள் தந்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்! :)
ReplyDelete