கடந்த கோடையில் புதிதாக அன்புப் பரிசு வடிவில் வீட்டுக்கு வந்த ஜாதிமல்லி ..
அரும்பு கட்டி, மொட்டாகிப் பூத்தும் விட்டாள்!! :)
2013-ல் மூன்று நிறங்களில் வாங்கிவந்த ஜெரேனியம் மலர்களில் தங்கித் தழைத்தது இந்த ஒன்று மட்டுமே..முதல் கொத்து மலர்கள் ஆன் த வே! :)
போன வருஷம் வாங்கிய வயோலாச் செடிகளின் விதை தானாக விழுந்து இந்த வருடம் எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை வழங்கியது. பெரிய தொட்டியில் ஓரு ஓரத்தில் இந்தம்மா இருப்பதால் அத்தொட்டியில் வேறு செடிகள் நடலாமா வேண்டாமா என மனம் அலைபாய்கிறது. கார்டன் எக்ஸ்பர்ட்ஸ்..அட்வைஸ் ப்ளீஸ்! :)
கதவைத் திறந்த உடனே கம்மென்று அசத்தும் மணத்துடன் இந்த அழகுப்பூக்கள்..
வெய்யிலில் குளித்து அழகு வண்ணங்கள் காட்டி..
நீலவானப் பின்னணியில் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இந்தப் பூக்கள் என்ன பூக்கள்? எட்டியெட்டிப் படம்பிடித்தாலும் சைட் போஸ் மட்டுமே தெரிகின்றனவே??!
பெரிய கேமராவை வைத்துவிட்டு ஐஃபோனில் சுட்ட ஒரு படத்தில் பூ பூத்திருச்சுங்க...
இது என்ன பூ? என்பது அப்படியொன்றும் கடினமான கேள்வியில்லை..இருந்தாலும் கேட்டு வைக்கிறேன். அறிந்தோர் நேரமனுபதிப்பின், கருத்துப்பெட்டியில் பதியுங்க..பதில் கண்டபின் அடுத்த படத்தை இணைக்கிறேன். நன்றி!எலுமிச்சை மரத்தின் மலர்கள்தான் அவை..சரியாகக் கணித்தவர்களுக்கு பழம் பழுத்ததும் ஒரு பழம் அனுப்புகிறேன். ஹிஹி...மொத்தமே 4 பிஞ்சுகள்தான் வெற்றிகரமாக வளர்ந்துவருகின்றன. இப்போது மலரும் மலர்கள் பழமானால் ஆளுக்கொரு டஜன் பழம் கூட அனுப்பிருவேன். காத்திருந்து பார்க்கலாம்..:)
நன்றி..நன்றி!
அழகோ அழகு...
ReplyDeleteஎலுமிச்சை, எலுமிச்சை, எலுமிச்சை ... மீதியை நாளை வந்து சொல்கிறேன்.
ReplyDeleteஅழகு.....
ReplyDeleteபூ பூத்தாச்சா. சூப்பர். நல்ல மணமாக இருக்கும்.என்னோடது பட்டுப்போயிற்று. அந்த வயோலா செடி அப்படியே இருந்தால் நல்லது என நான் நினைக்கிறேன். லயாக்குட்டியும் உதவிக்கு வந்திக்கா போல. கை பூப்பறிக்குமா?ஜீனோவும் கூடவே.
ReplyDeleteஎனக்கு அந்த பூவைப்பார்க்கும்போது magnolia வின் ரகம் மாதிரி இருக்கு.
நீலவான் பின்னணி படம் அழகூ.
வணக்கம்
ReplyDeleteபடங்களும் விளக்கமும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மலர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
ReplyDeleteகடைசியில் உள்ள ஐந்து படங்கள் ஆரஞ்சு / எலுமிச்சை என்று எண்ணுகிறேன்.
பகிர்வுக்கு நன்றிகள் தோழி.
citrus flower.
ReplyDeleteCan be anything. Lemon! or as Angel suggested, lime.
There is a grape fruit at Mum's place. The scent... m.. divine.
ஜுணோ,ஜாதிமல்லி,குட்டி பாப்பா, ஜெரேனியம் மலர்கள்,வயோலா செடி , நீல வானம் அனைத்தும் அழகோ அழகு. வீட்டில் எலுமிச்சை செடி, படம் எடுத்த விதமும் அருமை . உங்கள் வீட்டு மாடியில் நின்றாலே போதும் இயற்க்கையை ரசிக்க என்று நினைக்கிறேன் , நல்ல ரம்ய்மான சூழல் , பார்த்தாலே தெரிகிறது. 9 படம் மிகவும் பிடித்தது , நல்ல view.
ReplyDeleteலயா அம்மாவுக்கு உதவியா ஃபோட்டோ எடுக்கற மாதிரி தெரியுது. ஆஹா, ரொம்ப நாளைக்குப் பிறகு ஒருவர் எட்டிப் பார்க்கிறார்.
ReplyDeleteஇங்குதான் எங்கும் எலுமிச்சை எதிலும் எலுமிச்சையா இருக்கே, அதான் டக்குன்னு சொல்லிட்டேன்.