Thursday, March 12, 2015

Aaloo Subzi / ஆலூ சப்ஜி / உருளைக்கிழங்கு மசாலா

/// உருளைக்கிழங்கு சப்ஜி செய்வது சுலபம் தான். வெங்காயம், தக்காளி மற்றும் ஜீரகம் ஆகியவற்றை வதக்காமல் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளலாம். Pressure Pan [அ] குக்கரில் கொஞ்சம் எண்ணை விட்டு, கடுகு தாளித்துக் கொள்ளுங்கள். கடுகு வெடித்தபின் அதில் அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பிறகு, உப்பு, கரம் மசாலாப் பொடி, பெருங்காயத் தூள் போட்டு, கசூரி மேத்தி பொடி, [கடைகளில் கிடைக்கும். நம் ஊரில் கிடைக்கிறதா தெரியவில்லை. இது இல்லாவிட்டாலும் தவறில்லை] கூடவே உருளைக்கிழங்கும் போட்டு விடுங்கள். தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி வேக வையுங்கள். நான்கு ஐந்து விசில் வந்தால் போதும். உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி.

சுருக்கமாகச் சொல்லி விட்டேன் என நினைக்கிறேன்! :)///

என்று கிடைத்த ரெசிப்பியைக் கொண்டு செய்த சப்ஜி இது. சுருக்கமாக 7 வரிகளில் திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள் சொன்னதை நான் சும்மா பத்துப்படம் போட்டு தெள்ளத்தெளிவா (பார்ப்பவர்களுக்கு போரடிக்காது, உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்...ஹிஹி..) செய்ததன் விளைவு உங்கள் பார்வைக்கு. அவர் கூறிய ரெசிப்பியில் கடுகு-பெருங்காயப்பொடியை மறந்தேன், பச்சைமிளகாய்-இஞ்சி-மஞ்சள்தூளைச் சேர்த்துக்கொண்டேன். ஆக மொத்தம் வழக்கமாகச் செய்யும் மசாலாவிற்கு மாற்றாக சுவையான உருளைக் கிழங்கு மசாலா ரெடி! :) 

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு-2
வெங்காயம்-1
தக்காளி-2
சீரகம்-1டீஸ்பூன்
பச்சைமிளகாய்-2
இஞ்சி - சிறுதுண்டு
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கரம் மசாலா தூள்-1டீஸ்பூன்
கசூரி மேத்தி-1/2டீஸ்பூன் 
சர்க்கரை-1/2டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு 

செய்முறை
வெங்காயம், தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி.. 
சீரகத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
உருளைக் கிழங்குகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
சிறிய குக்கரில் எண்ணெய் காயவைத்து இஞ்சி-பச்சைமிளகாயை சேர்த்து வதக்கி, அரைத்த கலவையைச் சேர்க்கவும்.
பச்சை வாசம் போகும் வரை வதக்கி, கரம் கசாலா, மஞ்சள்தூள், கசூரி மேத்தி இவற்றை சேர்க்கவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து, சர்க்கரை மற்றும் உப்பும் சேர்த்து..
தேவையான தண்ணீர் விட்டு, குக்கரை மூடி மிதமான தீயில் 2-3 விஸில்கள் வரும் வரை வைக்கவும்.
ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து..
 நறுக்கிய கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.
குறிப்பு: 
ரெசிப்பியில் காரத்துக்கு கரம் மசாலா மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. ஆனால் எங்கள் நாக்குக்கு இன்னும் கொஞ்சம் காரம் வேண்டும் என நினைத்து 2 பச்சைமிளகாயும், துளி இஞ்சியும் சேர்த்துக்கொண்டேன். 
கடுகு-பெருங்காயம் சேர்க்க சுத்தமாக மறந்துபோய்விட்டது. நீங்க மறக்காமல் சேர்த்து செய்து பாருங்க. 
எல்லா குழம்பு-குருமா-ரசம் வகைகளிலும் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்ப்பது என்பது என் வழக்கமாகி விட்டது. விஷயம் தெரியாமல் ருசிப்போருக்கு சர்க்கரை சேர்த்திருப்பது தெரியாது, மிக மிக லேசான இனிப்புச் சுவை மிகவும் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. 

நறுக்கென்று ஒரு சுவையான ரெசிப்பியைத் தந்த சகோதரர் வெங்கட் நாகராஜுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!

9 comments:

  1. படத்துடன் விளக்கம்... யப்பா...! இழுக்கிறது...!

    ReplyDelete
  2. பச்சை மிளகாய் - இஞ்சி ஆகியவற்றை தக்காளி-வெங்காயம்-சீரகம் அரைக்கும்போதே சேர்த்து அரைத்து விடுவேன்! அதைச் சொல்ல நான் விட்டு விட்டேன்! :) சிலருக்கு காரம் பிடிக்காது என்பதால்! :)

    நல்லா வந்துருக்கு - புகைப்படங்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.

    வாழ்த்துகளும் நன்றியும்!

    ReplyDelete
  3. எனக்கு சைடிஷ் செய்வதுதான் பிரச்சனை.திரும்ப ஒன்றையே செய்தால் இங்கு கர்... தான். இப்படி வித்தியாசமா செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    குறிப்பினை தந்த திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும், அதை விளக்கமா படத்துடன் தந்த மகிக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  4. படிப்படியான படங்களுடன் அசத்தலா வந்திருக்கு.

    நான் கொஞ்சம் மிளகாய்த்தூள், தனியாத்தூள் வதக்கும் போது சேர்ப்பேன். இத்துடன் பச்சை பட்டாணி, அல்லது ஊறவைத்த கொண்டக்கடலை கூட சேர்த்து சப்ஜி செய்யலாம். இறக்கியதும் கொத்தமல்லி நறுக்கி சேர்த்து கொஞ்சமா எலுமிச்சை சாறு சேர்த்தா சூப்பரா இருக்கும். வெங்காயம் தக்காளி அரைக்காமலும் பொடியாக நறுக்கி வதக்கி செய்தாலும் நன்றாக இருக்கும். குக்கரைத் திறந்ததும் சற்று மசித்து விட்டாலும் க்ரேவி திக்காக இருக்கும்..

    நான் தினம் தினம் ஏதாவது விதவிதமான சப்ஜி செய்து பேக் பண்ணி நாளாச்சு....:)) இங்க பண்ணினா நான் மட்டும் தான் சாப்பிடணும்....:)))

    ReplyDelete
  5. வணக்கம்

    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. சப்ஜி கமகம வாசத்துட‌ன் கலக்கலா வந்திருக்கு மகி. பேரெல்லாம் வித்தியாசமா வச்சு கலக்குறீங்க. ஒரே மாதிரியா செஞ்சாலும் போரடிச்சிடும். இப்படி மாற்றி செய்தால்தான் நமக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

    வெங்கட் ரெஸிபியில் ஆதியின் டிப்ஸும் சூப்பர்.

    ReplyDelete
  7. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்! :)

    @ஆதி, தக்காளி வெங்காயம் வதக்கி நானும் செய்வதுண்டு. எலுமிச்சம்பழம் கைவசம் இல்லை, அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

    மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails