Thursday, August 19, 2010

சந்தகை

சுகந்திக்கா சந்தகை போஸ்டிங் போட்டதில இருந்தே சந்தகை ஞாபகம் வந்துவிட்டது..வீகெண்டில் இடியப்பம் செய்திருந்தேன். அப்பவே என்னவருக்கும் சந்தகை நினைவு வந்துவிட்டது. "எங்கம்மா அடிக்கடி செய்வாங்க..நாங்கள்லாம்(இவர்&2 தம்பிகள்)தான் சந்தகை மெஷின்ல சந்தகை பிழிஞ்சு தருவோம்"னு மலரும் நினைவுகளுக்குப் போய்விட்டார்.

இடியாப்பமும் கிட்டத்தட்ட அப்படியேதானே இருக்கு,அப்புறம் என்ன?ன்னு கேட்டா,"இடியப்பம் குட்டிக்குட்டியா இருக்கு..சந்தகை நீள-நீளமா புழு(!!?) மாதிரியே இருக்கும்..தேங்காயும்,சர்க்கரையும் போட்டு சாப்பிடுவோம்..லெமன் சேவை/தேங்காய்சேவை/தக்காளிசேவையா தாளிச்சு தருவாங்க.."ன்னு விளக்கம். சரி,நாமும் ஒரு நாள் செய்துபார்ப்போம்னு ஆரம்பித்தேன்.

11/2 டம்ளர் புழுங்கல்அரிசியை 2மணிநேரம் ஊறவைச்சு, நைஸா மாவா அரைச்சு எடுத்து,இட்லிதட்டுகளில் ஊற்றி வேகவைத்தேன்.


சந்தகை பிழிய என்று ஸ்பெஷலா ஒரு மெஷின் இருக்கு(படம் இங்கே&இங்கே).அதிலே பிழிவது கொஞ்சம் ஈஸியா இருக்கும்.ஆனால் என்னிடம் இருப்பதோ இந்த குட்டியூண்டு முறுக்கு அச்சுதான்..
இட்லி வெந்தாச்சு..எடுத்து முறுக்கு அச்சில் போட்டு பிழிய ஆரம்பிச்சேன்..

என் மாமியார் புத்திசாலித்தனமா பசங்க வீட்டிலிருக்கையில் சந்தகை செய்திருக்காங்க..நான் இவர் ஆபீஸ்ல இருந்து வரும் முன்பே இந்த வேலைய ஆரம்பிச்சு ஒரு அனுபவப்பாடம் கத்துகிட்டேன்.முதல்முறை சூடா இருந்த இட்லிய கொஞ்சம் கஷ்டப்பட்டு பிழியமுடிஞ்சுது.

அடுத்த ஈடு போட்டதும்தான் வம்பு ஆரம்பம்!இட்லி ஆறிப்போனா கல்லு மாதிரியே ஆகிடும்..இந்த முறை அச்சிலே இட்லிய திணிச்சாச்சு.ஆனா அசைக்ககூட முடியல! :-| :-|
எப்படியோ ஒரு வழியா பிழிஞ்சு முடிச்சேன்.அதுக்கும் மேல தெம்பு இல்ல. மீதிஇருந்த மாவை, கடாய்ல ஒரு ஸ்பூன் எண்ணெய் காயவச்சு, கொழுக்கட்டைக்கு வதக்கற மாதிரி வதக்கி, இட்லிதட்டிலே பிழிஞ்சு வேகவைத்தேன்.அது சுலபமா இருந்தது.

சந்தகை ரெடியாகிவிட்டது(அப்பாடீ..பெண்டு நிமிர்ந்துபோச்சு போங்க:))..இதிலே இருந்து நான் கண்டுபிடிச்ச உண்மை, சரியான உபகரணங்கள் இல்லாம சந்தகை செய்கையில் மாவை வேகவச்சு பிழியறத விட....பிழிஞ்சு வேக வைப்பதுதான் ஈஸி!!! :)))))

இடியப்பத்துக்கும்,சந்தகைக்கும் கண்டிப்பா வித்யாசம் உண்டு..எங்க வீடுகளில் பச்சரிசி அவ்வளவா சாப்பிட மாட்டோம். இடியப்பத்துக்கு மாதிரியே தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிடலாம்..அல்லது தேங்காய்த்துருவல்,சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.தாளிச்சும் சாப்பிடலாம். இந்த முறை எலுமிச்சம்பழம் பிழிஞ்சு லெமன் சேவையா தாளிச்சுட்டேன்.

ஆக மொத்தம் இனி எங்க வீட்டில் அடிக்கடி சந்தகை உண்டு..சாப்பிட வரீங்களா?

நன்றி:என் சமையலறையில்-தெய்வசுகந்தி& கிருஷ்ணவேணி'ஸ் கிச்சன்-கிருஷ்ணவேணி

35 comments:

  1. Mahi, sandagai and Idiyappam vera, vera-nu eppo than therium..procedure vera complicated-da irukku..nan idiyappam-laye thakkali, lemon ellam seiven..taste-la enna vithyasam irukkum??

    ReplyDelete
  2. நித்து,சந்தகை சாஃப்ட்டா இருக்குங்க..டேஸ்ட்டும் கொஞ்சம் வித்யாசமா இருக்கும்.சிலருக்கு பச்சரிசி ஒத்துக்காது.வயித்துவலி வரும்.இதிலே அந்த பிரச்சனைகள் இல்லை.

    இன்ஸ்டன்ட் கமண்ட்டுக்கு நன்றி நித்து!

    ReplyDelete
  3. காம்ப்ளிகேட் ப்ரொஸீஜர் எல்லாம் இல்லைங்க நித்து,ஈஸிதான்! நான் போட்ட மொக்கை உங்கள அப்படி நினைக்கவச்சிருக்கு.:)

    ReplyDelete
  4. Sari, ennamo thairiyam thareenga..seidhu thaan parpomey..

    ReplyDelete
  5. இட்லியை பிச்சிப்போட்டு உப்புமா செய்யுரதை பார்த்திருக்கேன் . உங்க கை ..ச்சே..அந்த கை..அட சந்தகை செய்யறத இப்பதான் பார்கிரேன் .ஹி..ஹி..

    ReplyDelete
  6. //.இந்த முறை அச்சிலே இட்லிய திணிச்சாச்சு.ஆனா அசைக்ககூட முடியல! :-| :-| //


    அதுக்கு மேல சுத்தியலால ஒரு தட்டு தட்ட வேண்டியதுதானே இல்லாட்டி பூரி கட்டை..


    //எப்படியோ ஒரு வழியா பிழிஞ்சு முடிச்சேன்.அதுக்கும் மேல தெம்பு இல்ல.//

    எதுக்கு நீங்க செஞ்சதை நீங்களே சாப்பிடவா..க்கி..க்கி..

    ReplyDelete
  7. //மீதிஇருந்த மாவை, கடாய்ல ஒரு ஸ்பூன் எண்ணெய் காயவச்சு, கொழுக்கட்டைக்கு வதக்கற மாதிரி வதக்கி, இட்லிதட்டிலே பிழிஞ்சு வேகவைத்தேன்.அது சுலபமா இருந்தது.//


    என்னது கொழுக்கட்டை உங்க ஊர்ல வதக்குவாங்களாஆஆஆஆஆ.

    ReplyDelete
  8. //இடியப்பத்துக்கும்,சந்தகைக்கும் கண்டிப்பா வித்யாசம் உண்டு.//

    இட்லி இடியாப்பமா மாறலாம் இடியாப்பம் சந்தகையா மாறலாம் ஆனா சந்தகை இட்லியா மாறமுடியாது..

    //இந்த முறை எலுமிச்சம்பழம் பிழிஞ்சு லெமன் சேவையா தாளிச்சுட்டேன்.//

    எச்சுஸுமி...ஒரு சின்ன கன்புயூசன் அப்ப நீங்க செஞ்சது எது..?

    //ஆக மொத்தம் இனி எங்க வீட்டில் அடிக்கடி சந்தகை உண்டு..சாப்பிட வரீங்களா?//

    ஏங்க இந்த விஷப்பரிச்சை , கொல வெறி..

    (( மாம்ஸ் உங்களை நினைச்சா பாராட்டாம இருக்க முடியல விதி வலியது )

    ReplyDelete
  9. கடைசியா இன்னும் ரெண்டு பேர் டெஸ்ட் பண்ணியிருக்காங்க ..அப்ப நல்லாதான் இருக்கும் ..

    குட் ரெஸிபி...

    ReplyDelete
  10. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!ஜெய் அண்ணா,ஒரு முடிவுலதான் இருக்கீங்க போலருக்கு..முடிஞ்சதா கமெண்ட்டு கதகளி,இல்ல இன்னுமிருக்கா? :))))))))))))))))

    ReplyDelete
  11. பாவம் , சகோ போதுமுன்னு விட்டுட்டேன் ஹி..ஹி.. ( ஜஸ்ட் ஜோக் , நோ டென்ஷன் ஓக்கே)

    ReplyDelete
  12. மஹி, நானும் இங்கே வந்த புதுசுல இதே மாதிரி முறுக்கு குழல்ல கோவிந்தை பிழிய விட்டேன், அப்புறம் கொஞ்ச நாள் சந்தகைன்னாலே வேண்டாம்னுருவாரு. அடுத்த முறை சந்தகை மரம் வாங்கிட்டு வந்துட்டேன். இப்பவும் ஒவ்வொரு முறை சந்தகை செய்யறப்பவும் சொல்லி சிரிப்போம்.

    ReplyDelete
  13. டென்ஷன்லாம் இல்லைங்க ஜெய் அண்ணா! ஒவ்வொருமுறையும் நீங்க கவனமாப் படிச்சு கமண்ட் போடறது பாத்து சந்தோஷம்தான்! காமெடிக்குதான் சொல்றீங்கன்னு தெரியாதா எனக்கு?

    /என்னது கொழுக்கட்டை உங்க ஊர்ல வதக்குவாங்களாஆஆஆஆஆ//ஆமாங்கோஓஓ!!:)
    மாவை வதக்கித்தான் ஆவில வேகவைப்போம்.

    /சுத்தியலால ஒரு தட்டு தட்ட வேண்டியதுதானே இல்லாட்டி பூரி கட்டை../ஹிஹி,இது தட்டற முறுக்குப்புடி இல்லை,சுத்தற முறுக்குப்புடி.3வது படத்தைப்பாருங்க.

    /இட்லி இடியாப்பமா மாறலாம் இடியாப்பம் சந்தகையா மாறலாம் ஆனா சந்தகை இட்லியா மாறமுடியாது../ஆஹா,அருமை!சூப்பர் கண்டுபிடிப்பு!

    /ஒரு சின்ன கன்புயூசன் அப்ப நீங்க செஞ்சது எது..? /நான் செஞ்சது சந்தகைதான்..இப்படி தாளிச்சா அதுக்குப்பேர் சேவை.(உடனே உங்கள் சேவை,எங்களுக்குத் தேவைன்னு சொல்லிடாதீங்க:))

    /ஏங்க இந்த விஷப்பரிச்சை , கொல வெறி.. /ஹிஹிஹி,பொழுது போகலைங்க,அதான்!!!

    சுகந்திக்கா,நானும் அடுத்தமுறை ஊருக்குப் போறப்ப வாங்கிட்டு வந்துடறேன்.உங்க வீட்டுலயும் இதே கதைதானா? ஹா..ஹா!!

    ReplyDelete
  14. மகி, சந்தகை சுகந்தியின் ப்ளாக்கில் பார்த்தேன். உங்களின் முயற்சி வீண் போகலை. படங்கள் நல்லா இருக்கு.
    ஜெய், என்ன சந்தகை செய்யப்போறீங்களா? செய்து ஸ்டெப் பை ஸ்டெப்பா போட்டோ போடுங்கோ சரியா!!!

    ReplyDelete
  15. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..
    அம்மாவும் அத்தையும்
    பிழிஞ்சு கொடுக்க
    பழஞ்சக்கர பெசஞ்சு
    சந்தவய வழிச்சுத் தின்னது
    ஞாபகம் வருதே..

    (அதே மெட்டுல பாடிக்கிட்டே படிக்கோனும்)

    ReplyDelete
  16. wow...very interesting recipe Mahi...new to your space..loved your collections...Am your happy followr now...:)
    Do stop in at my space sometime.

    ReplyDelete
  17. கடைசிப் படம் நீளமான அரிசிய வேக வச்சுப் பண்ணுன லெமன் ரைஸ் மாதிரி இருக்குது ஹிஹி..

    ReplyDelete
  18. சூப்பர்ப் சந்தகை...அருமையாக பதிவு....கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...சூப்பர்ப் குறிப்பு....

    ReplyDelete
  19. சந்தகைன்னு கேள்விப்பட்டுள்ளேன்.இப்போதான் பார்க்கிறேன்.டிரைபண்ணிவிடுவோம்.

    ReplyDelete
  20. Santhoos.. nice song. ;)

    எனக்கும் ஞாபகம் வருதே! ஆனால் என்னவென்று ஞாபகம் வர மாட்டேன் என்கிறதே!!! முன்னால எங்காவது சந்தகை சங்கதி சொன்னீங்களா மகி!!!!

    ReplyDelete
  21. eanakkum santhagai , idiyappam rendum vera veranu ippa than theriyum ana idli avichu puliyura method kelvi pattu iruken but athuku per santhagainu theriyathu , nan eppavume idiyappam seiyum pothu ennavar than pulunchu kodupar nana seiyum pothu seiyamatar so enna tiffen pannrathunu avarai kulapi sari idiyappam pannu nan pulinchu tharenu sonnathukappuram adutha nimisam nan kitchenla than nippen ... mattiyachula he he he....

    ReplyDelete
  22. wow, santhavai ennoda fav, my daughter tells santhavai as Noonoochi (noodles), she is also a great fan of this lovely dish, am going to try soon, superb photos. Thanks for my site's link.

    ReplyDelete
  23. My mom makes this way but I never knew that its named different,we call everything idiyappam! I love the tangy versions like lemon and tamarind varieties very much! Mom makes with jaggery and coconut syrup too!

    ReplyDelete
  24. //கடைசிப் படம் நீளமான அரிசிய வேக வச்சுப் பண்ணுன லெமன் ரைஸ் மாதிரி இருக்குது ஹிஹி..//

    சந்தூஊஊ ஏன் கஸ்டப்படுறீங்க சொல்ல, பேசாம நூடுல்ஸ் மாதிரின்னு சொல்லிடுங்க ஹி..ஹி..

    ReplyDelete
  25. sandagai looks super mahi..soon i want to try this..nice clicks!!

    ReplyDelete
  26. //nan eppavume idiyappam seiyum pothu ennavar than pulunchu kodupar nana seiyum pothu seiyamatar so enna tiffen pannrathunu avarai kulapi sari idiyappam pannu nan pulinchu tharenu sonnathukappuram adutha nimisam nan kitchenla than nippen ... mattiyachula he he he....//

    ஆஹா . இப்பவும் ஒரு உண்மை வெளியே வந்திருக்கு . பாவம் மாம்ஸை பிழிஞ்சி எடுக்குறீங்க மட்டும் நல்லா புரியுது .அவ்வ்வ்வ்

    ReplyDelete
  27. நானும் என் தோழிகளும் சேர்ந்து கோவையில் சந்தகை செய்திருக்கோம்,எப்படி தெரியுமா கிரைண்டரில் ஆட்டி அந்த மாவை அடுப்பில் போட்டு கிண்டி வெந்ததும் பிழிந்து அவித்து சாப்பிட்டால் பஞ்சு போல் அருமையாக இருந்துச்சு.இது என் தோழி சொல்லி தந்த ஸ்டைல்.இப்ப அதை நினைச்சு பார்க்கிறது கூட கிடையாது.பிழிய யாரால் முடியும்.ஒரு சல்யூட் மகி.

    ReplyDelete
  28. இந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.

    http://cookeryindexer.blogspot.com/

    ReplyDelete
  29. @வானதி,ஆமாங்க..டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது,அதான் ஒரு போஸ்ட்டா போட்டேன்.நன்றி வானதி!

    @சந்தனா,ஊருக்கே போயிட்டு வந்துட்டே போலிருக்கு?:)
    /நீளமான அரிசிய வேக வச்சுப் பண்ணுன லெமன் ரைஸ் மாதிரி இருக்குது/கர்ர்ர்ர்x100!

    @Jay,நன்றிங்க..பாலோயரா ஆனதுக்கு மிகவும் நன்றி! நானும் உங்கள பாலோ பண்ணிட்டுதான் இருக்கேன்.

    @கீதா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!சீக்கிரம் செய்துபாருங்க.

    @ஸாதிகாக்கா,செய்து பார்த்து சொல்லுங்க,நன்றி!

    @/முன்னால எங்காவது சந்தகை சங்கதி சொன்னீங்களா மகி!!!!/ஆமாம் இமா! சொல்லிருக்கேன்.நன்றி இமா!

    @சாரு,வீட்டுக்கு வீடு வாசப்படி!:) எல்லார் வீட்டிலும் நடக்கற கதைதான் போலிருக்கே! இப்பூடியே மெய்ன்டெய்ன் பண்ணுங்க.ஹிஹி!

    ReplyDelete
  30. @வேணி,உங்க பொண்ணுக்கும் பிடிக்குமா? இங்கே எங்களுக்கும் பிடிக்கும்.ரொம்ப நாள் கழிச்சு செஞ்சிருக்கேன்.
    நன்றி வேணி!

    @ராஜி,சந்தகையைவே நீங்க வேற பெயர்லே சாப்ட்டிருக்கிங்க!:)
    நன்றிங்க,வருகைக்கும் கருத்துக்கும்.

    @/பேசாம நூடுல்ஸ் மாதிரின்னு சொல்லிடுங்க ஹி..ஹி../ஜெய் அண்ணா,உங்களுக்கு கர்ர்ர்ர்ர்x1000

    @மேனகா,செய்துபாருங்க!நன்றி மேனகா.

    @/பாவம் மாம்ஸை பிழிஞ்சி எடுக்குறீங்க மட்டும் நல்லா புரியுது .அவ்வ்வ்வ்/ஹா..ஹா!ஜெய் அண்ணா,இதெல்லாம் குடும்பரகசியம்.கஷ்டப்பட்டாதான டேஸ்ட்டியா சாப்புட முடியும்? எங்கூர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க.'நோகாம நோம்பி கும்புட முடியுமா?'ஹிஹ்ஹிஹீ!

    ReplyDelete
  31. @ஆசியா அக்கா,உங்க மலரும் நினைவுகள் சூப்பர்.
    எங்க வீட்டுல எப்பவுமே இட்லியா ஊத்தி,வேகவைத்துதான் பிழியுவோம்.அங்கே துணிபோட்டு ஊற்றும் இட்லிதட்டு-இட்லிச்சட்டி உண்டு.வெந்த உடனே எல்லா இட்லிகளும் சூப்பரா எடுத்துடலாம்.இந்த குக்கர் இட்லில அப்படி எடுத்தா,பாதி இட்லி தட்டோட ஒட்டிக்குது! :-|
    அதான்,/மாவை அடுப்பில் போட்டு கிண்டி வெந்ததும் பிழிந்து அவித்து/சாப்ட்டுட்டோம்.:)
    நன்றி ஆசியாக்கா!

    @பிரபா,ப்ரீ பப்ளிசிட்டி பண்ணறீங்க போல இருக்கு?:)

    ReplyDelete
  32. சந்தகை நல்லா இருக்கு மகி...எனக்கு இதுவெல்லாம் புது ரெசிப்பீஸ்..நான் இப்பொ கொஞ்ச நாளாதான் இதெல்லாம் கேள்விபடுரேன்...இடியாப்பம்தான் தெரியும்...சூப்பரா இருக்கு எப்பொவாச்சும் செய்துபார்க்கிரேன்.....நன்றி மகி.

    //என் மாமியார் புத்திசாலித்தனமா பசங்க வீட்டிலிருக்கையில் சந்தகை செய்திருக்காங்க.//

    மகி நம்ம மாமியார்கிட்ட இருந்து நம்மளும் அவற்றையெல்லாம் கத்துகிடனும்......இனிமேல் நீங்க அண்ணன் வீட்டுல இருக்கும்போதுதான் சந்தகை செய்யுவீங்க அப்படிதானே.....

    ReplyDelete
  33. சந்தகை முதல் முதல் ரேணுகா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்,

    அடுத்து கிருஷ்ன வேனி பர்பெக்டா செய்து இருப்பாங்க
    அடுத்து இங்கு பார்க்கிறேன்.

    நல்ல இருக்கு அதுவும் லெமன் சந்தகை ந்லல் இருக்கு,

    மகி .இவ்வளவுகழ்டபட்டு செய்து பதிவு போட்டத பார்க்கும் போது ,


    அப்படியே பிலாஷ் பேக், இடியாப்பம் மட்டும் சரியா வராது,

    அது எப்படியாவது செய்தே ஆகனும் என்று
    15 முறை தினம் செய்து பார்த்து அதோடு கிடைந்தௌ மாய்ந்து மல் கொடுத்து அப்பா எத்தனை சாமா கழுவ சேர்ந்து விட்டது,

    கடைசியா சரியா வந்தது,

    ஆனால் இப்ப எல்லாம் ரெடி மேட் தான்ன்.

    ReplyDelete
  34. ஹும்... மலரும் நினைவுகள கொண்டு வந்துடீங்க... நாங்களும் எங்க அம்மா சந்தகை செய்யறப்ப ஹெல்ப் செய்வோம்.... அதுக்கு புட்டு குழல் மாதிரி ஒரு machine இருக்கும் வீட்டுல... ரெம்ப நாள் ஆச்சு... முறுக்கு பிடில கூட செய்யலாமா...செஞ்சுடுவோம்... நன்றி மகி

    ReplyDelete
  35. /இனிமேல் நீங்க அண்ணன் வீட்டுல இருக்கும்போதுதான் சந்தகை செய்யுவீங்க அப்படிதானே/கொயினி,ஷ்ஷ்..மெதுவா,மெதுவா சொல்லுங்க! இந்த மாதிரி உண்மையெல்லாம் பப்ளிக்கா சொன்னா ஜெய்அண்ணா நியாயம் கேக்க வந்துடுவாரு.ஹிஹி!:)

    ஜலீலாக்கா,உங்க ஃப்ளாஷ்பேக் சூப்பர்!நல்லாவே வேலை குடுத்திருக்கீங்க.:)
    மிக்க நன்றி ஜலீலாக்கா,வருகைக்கும் கருத்துக்கும்.

    புவனா,அந்த சந்தகை மரம் போட்டோ நம்ம ப்ரெண்ட்ஸ் ப்ளாக்ல இருந்து லிங்க்ஸ் குடுத்திருக்கேன்.அடுத்தமுறை ஊருக்கு போறப்ப நானும் வாங்கிட்டுவந்துடுவேன்.:)
    நன்றிங்க,வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails