Friday, June 3, 2016

பீட்ரூட் குருமா

ஜஸ்ட் ஃபார் எ சேஞ்ச்...இந்த முறை "படம் பார்த்து பொருளறிக" முறையில் ஒரு பதிவு!! :) 


விளக்கம் தேவைப்பட்டால் கருத்துப்பெட்டியில் தாராளமாகக் கேட்கலாம். இந்த பீட்ரூட் குருமா சாதம், சப்பாத்தி இரண்டுக்குமே நன்றாக இருக்கும்.
~~~
1. வெங்காயம், ப.மிளகாய்,  தக்காளி அரிந்து வைக்கவும். 
2. பீட்ரூட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
3. குக்கரில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
4. நறுக்கிய பீட்ரூட்டையும் சேர்த்து வதக்கவும்.
5. இதற்கிடையில் மிக்ஸியில் 3 வரமிளகாய், 1 டீஸ்பூன் கொத்துமல்லி விதை, 1 டீஸ்பூன் சீரகம்,  ஏழெட்டு மிளகு, கொஞ்சம் தேங்காய், 1 டேபிள்ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைக்கவும். 
6. அரைத்த மசாலாவை குக்கரில் உள்ள காயுடன் சேர்த்து கலக்கவும். 

7. தேவைக்கு தண்ணீர் விட்டு (சுமார் 1, ஒன்றேகால் கப்) சுவைக்கு உப்பும் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வரும்வரை சமைக்கவும். 
8. ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நறுக்கிய கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும். 

5 comments:

  1. கர்ர்ர்...ஜும் பண்ணி பார்த்து கண்ணு போச்சு...
    காரம் போதுமா அக்கா?? இல்ல பொடி எதுனா சேர்க்கணுமா??
    சூப்பர் குருமா & கலர்..

    ReplyDelete
    Replies
    1. :v
      அபிக்கு கண்ணாடி போடணும் போலிருக்கே??! B-) அவ்வளவு கஷ்டமாவா இருக்கு போட்டோவைப் பார்க்க? டீசண்ட் சைஸ்ல ஓபன் ஆனதால தான் எதுவும் எழுதாம விட்டேன். ;) :)

      வர மிளகாயும் மிளகும் சேர்ப்பதால் காரம் சரியா இருக்கும் அபி..பொடி எதுவும் சேர்க்க தேவையில்லை.. இதில 3 வரமிளகாயும், ஏழெட்டு மிளகும் சேர்த்திருக்கேன். செய்து பாரு. சூப்பரா இருக்கும்.

      Delete
    2. சிரிச்சுராதிங்க அக்கா.. கண்ணாடி போட்டு தான் இருக்கேன்..
      மிளகு சேர்த்து குருமா புதுசா இருக்கு.. ட்ரை பண்றேன்..

      Delete
  2. குருமாவை இங்கேயே பார்த்துக்கொள்கிறேன். இத‌ன் நிறத்தினால் பொரியல் தவிர வேறெதுவும் செய்வதில்லை மகி.

    ReplyDelete

  3. நானும் பொரியல் மட்டும் தான் செய்வது உண்டு ...


    குக்கர் படம் எல்லாம் எனக்கு மிக்சி ஜார் மாத்ரி இருந்துச்சு ...

    ஆன ஒன்னு மட்டும் தான் ஜார் படம் ....


    நல்ல குறிப்பு

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails