Wednesday, June 15, 2016

கோவைக்காய் வறுவல் / Tindora fry/ Ivy gourd fry

கோவையில் இருக்கும்வரை, "கோவைக் கொடி" எங்கேனும் வேலிகளில் படர்ந்திருக்கும், அவ்வளவு சீக்கிரம் கண்ணுக்கு சிக்காது. அதன் கீரையப் பறித்து சமைப்பார்கள், கோவைப்பழம் சாப்பிடுவார்கள் என்பது மட்டுமே பரிச்சயம். கோவைக்காயைச் சமைப்பார்கள் என்பதே இங்கே வந்த பிறகுதான் தெரியவந்தது. :) இப்போதெல்லாம் கோவையிலும் கோவைக்காய்கள் விற்க ஆரம்பித்துவிட்டார்களாம்! சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிகவும் நல்லது என்ற ஒரு பாயிண்டை வைத்தே கோவைக்காய் வி.ஐ.பி. ஆகியிருக்கக்கூடும்! ;) 

தேவையான பொருட்கள்
கோவைக்காய் - 150கிராம்
மிளகாய்த்தூள்- 11/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
கடுகு 
உளுந்துப்பருப்பு 

செய்முறை
கோவைக்காயை கழுவி, ஓரங்களை நறுக்கிவிட்டு நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும். 

கடாயில் எண்ணெய் காயவைத்து கடு-உளுந்து தாளித்து,நறுக்கிய கோவைக்காய் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
 காய் ஓரளவு வதங்கியதும் உப்பு சேர்த்து வதக்கவும்.
 முக்கால் பாகம் வெந்ததும் மிளகாய்த்தூள் சேர்த்து சுருள வதக்கவும்.
நன்கு வெந்து லேசாக முறுவலானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சாம்பார், புளிக்குழம்பு, ரசம், தயிர் சாதம் எல்லாவற்றுடனும் ஜோடி சேரும் சிம்பிள் அண்ட் யம்மி கோவைக்காய் வறுவல் தயார்!  

4 comments:

  1. நல்லா இருக்கு.. ஒரு நாளாவது இந்த கோவைக்காய் வைக்க முடியுமானு பார்க்கிறேன்..
    ஊரில் வீட்டு பின் பக்கம் நிறைய காய்க்கும் அக்கா.. பழம் பறித்து கிளிக்கு கொடுப்போம்.. கீரை உபயோகப்படும் என நீங்க சொல்லவும் தான் தெரியும்..பக்கத்து வீட்டில் வெளியூரில் செட்டிலானவங்க வந்தப்போ இதை பறித்து சமைத்திருப்பாங்க போல அம்மா என்கிட்ட அவ்வளவு ஆச்சரியமா சொன்னாங்க.. :)
    எனக்கும் இந்த ஊருக்கு வந்த பிறகுதான் மார்க்கெட்டில் பார்க்கவும் சமைப்பாங்கனே தெரியும்..
    மதுரையில் இன்னமும் எங்கேயும் விற்று பார்த்ததில்லை..
    இங்க பாகற்காயே என்னை தவிர யாருக்கும் பிடிக்காது..கோவைக்காய் ம்கூம்...

    ReplyDelete
    Replies
    1. கோவைக்கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது அபி..பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிடுவோம். ருசியா இருக்கும் , செய்து பாருங்க.
      கோவைக்காய் கசப்பெல்லாம் இல்லை, தைரியமா செய்யலாம்..ஒரு முறை செய்து பாரு, பிடிச்சா, காயும் கிடைச்சா அடிக்கடி சாப்பிடலாம்! :)

      Delete
  2. மகி,

    எனக்குத் தெரிஞ்சி கோவைக்காயை சிலேட்டுக்குத் தடவுவோம், பையனுங்க இலைகளை கசக்கி பள்ளி கரும்பலகையில் தேய்த்து பளிச்சிட வைப்பாங்க, பழம் இருந்தா சாப்பிடுவோம், இலை & காயை ஆட்டுக்குத் தருவாங்க. சமைத்ததில்லை.

    இங்கு வந்த பிறகுதான் தெரியும் கோவைக்காயை சமைப்பாங்கன்னு. நான் வாங்கியதில்லை. செய்முறையை பார்த்துக்கறேன். வாங்குவேனா ? சந்தேகம்தான்.

    ReplyDelete
  3. I didn't know that they used the keerai also, Bangalorela kandippa kidaikadhu, simple and delicious varuval..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails