தேவையான பொருட்கள்
கோதுமைமாவு - 2கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு(மீடியம் சைஸ்) -1
துருவிய பனீர் - 1/2கப்
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
கரம்மசாலத்தூள் - 1/2டீஸ்பூன்
சீரகப்பொடி -1/2டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4டீஸ்பூன்
தயிர்- 2டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
வெந்த உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் உதிர்த்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், தயிர், பொடிவகைகள், உப்பு எல்லாம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அதனுடன் கோதுமை மாவைச் சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் விட்டு பிசைந்துகொள்ளவும்.
பிசைந்த மாவின்மீது ஒரு டீஸ்பூன் எண்ணெய் தடவி, அரைமணி முதல் ஒரு மணி நேரம் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
சுவையான ஆலூ பனீர் பராத்தா, தயிருடன் சூடாக பரிமாறவும்.
குறிப்பு
ஸ்டஃபிங்கை மாவினுள் வைத்து செய்யும் முறை ஏற்கனவே செய்திருந்தாலும், இந்த முறை குழந்தைகளுக்கு கொடுக்க சுலபமாக இருக்கிறது. மசாலா பொடிகளும் அதற்கேற்ப குறைவாகவே சேர்த்திருக்கிறேன். உங்கள் விருப்பப்படி நறுக்கிய பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை அல்லது கசூரி மேத்தி, மற்றும் விருப்பமான மசாலாக்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
இது போல் செய்து பார்க்கிறோம்... நன்றி சகோதரி...
ReplyDeleteஆவ்வ்வ் ஜூப்பர் மகி.. இப்போ தூசு தட்டத் தொடங்கிட்டீங்க.. விடாமல் தட்டுங்கோ.
ReplyDeleteஅழகிய படங்களுன் நல்ல குறிப்பு ...
ReplyDeleteHi Mahi, Potato Paneer combo sounds interesting. As usual, drooling pictures. Thanks for dropping by my blog. Very happy to see you back blogging. Take care.
ReplyDelete//தயிருடன் சூடாக பரிமாறவும்.// சமைச்சவங்க சாப்பிடக் கூடாதா! ;))
ReplyDeleteHello..visiting yours after a long time.hope you are doing good
ReplyDelete