தேவையான பொருட்கள்
உளுந்து பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
வரமிளகாய் - 1
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய்த்துருவல் -2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
கடுகு -1/2டீஸ்பூன்
உளுந்துபருப்பு -1/2டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்
கொழுக்கட்டைக்கு மேல் மாவு
செய்முறை
உளுந்து மற்றும் பாசிப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
அதனை வடித்து எடுத்து, பச்சை மிளகாய், வரமிளகாய், உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கொறகொறப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை சிறிய இட்லிகளாக இட்லித்தட்டில் (10 முதல் 15 நிமிடங்கள்) வேகவைத்து எடுக்கவும்.
வெந்த மாவை மிக்ஸியில் இட்டு பல்ஸ்-ல் அரைத்து உதிர்த்துக்கொள்ளவும்.
கடாயில் கடுகு, உளுந்துபருப்பு, மஞ்சள் தூள் தாளித்து உதிர்த்த பருப்பை சேர்த்து வாசனை வரும்வரை வதக்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
கொழுக்கட்டை மாவை சிறு உருண்டைகளாக்கி, வட்டமாகத் தட்டி ஒரு டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து விருப்பமான வடிவில் மடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
சுவையான காரக்கொழுக்கட்டை தயார். நான் சிலவற்றை மோதகமாகவும், சிலதை தட்டையாகவும் மடித்திருக்கிறேன்.
கொழுக்கட்டை மேல்மாவுக்கு, அரிசியை 2-3 மணி நேரம் ஊறவைத்து, கொஞ்சமாக உப்பு சேர்த்து, க்ரைண்டரில் நைஸாக அரைத்து, கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு இந்த மாவையும் சேர்த்து கிளறவேண்டும். கடாயில் ஒட்டாமல் திரண்டுவந்ததும் ஆறவைத்து கொழுக்கட்டை பிடிக்கலாம். அரிசியுடன் கொஞ்சம் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்.
அல்லது ரெடிமேட் அரிசி மாவுக்கு ஒரு கப் மாவுக்கு ஒரு கப் அளவு தண்ணீர்+ஒரு ஸ்பூன் தேங்காயெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து, மாவைக் கொட்டி கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட்டு கொழுக்கட்டை பிடிக்கலாம்.
அடுத்த படத்தில் இருப்பது இனிப்பு கொழுக்கட்டை...வெல்லம், தேங்காய்த்துருவல், எள்ளு, ஏலப்பொடி சேர்த்த பூரணம் கொழுக்கட்டை மாவில் வைத்து செய்தது.
இந்த வருடம், பிள்ளையாருக்கு இனிப்பு கொழுக்கட்டை, காரக்கொழுக்கட்டை, பச்சைப்பயறு சுண்டல் எல்லாம் பிறந்தநாள் சிறப்பு உணவுகளாகப் படைத்து சாமி கும்பிட்டாயிற்று.
ஹேப்பி பர்த்டே டு யூ ஆனைசாமி...
இப்படிதான் எங்க வீட்டு சின்ன வாண்டு சொல்றாங்க..அதனால விநாயகரை ஆனைசாமி, ஆஞ்சநேயரை மங்க்கி சாமி (மன்னிச்சுக்கோ ஆஞ்சநேயா!!) ன்னு சொல்றோம். ;) :) :D
பிள்ளையார் வித்தியாசமாக அழகாக உள்ளார். இனிய வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeleteஅருமை... பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துகள்...
ReplyDeleteகாரக்கொழுக்கட்டை குறிப்புக்கு நன்றி. :-)
ReplyDeleteஇத்தனை வேலை செய்ய விட்டிருக்காங்களே உங்க குட்டீஸ்! சூப்பர் மஹி. ஆனைசாமி! ;))
சூப்பர்...இத்தனை கொழுக்கட்டை பண்ணிருக்கீங்க..நான் இனிப்பு பிடிகொழுக்கட்டை,பூரண கொழுக்கட்டை,சுண்டல் பண்ணேன்..குட்டீஸ் வச்சிட்டு இவ்ளோ வேலை பண்ணிருக்கீங்க அக்கா கிரேட்..என் பையன் மாவு சுண்டல் பார்த்ததும் வேணும்னு கேட்டு ஒரே அழுகை..அவன் கிட்ட இருந்து ஒளிச்சு வைக்க நான் பட்டபாடு:((
ReplyDeleteArumaiya irruku Mahi, vazhthukal🙏
ReplyDeleteசூப்பரான பெயர் பிள்ளையாருக்கு.. கார +இனிப்புகொழுக்கட்டை அருமை. வித்தியாசமான,அழகான பிள்ளையார்.
ReplyDeleteஅருமையான கொழுக்கட்டை.. பிள்ளையார் சூப்பராக இருக்கிறார்.
ReplyDeleteநல்லா இருக்கு கொழுக்கட்டை ...எனக்கு புதுசும் கூட.
ReplyDeleteபெரும்பாலும் நான் இனிப்பு மட்டும் தான் செய்வேன் ...காரத்துக்கு பிடிகொழுக்கட்டை மட்டும் தான்..