Wednesday, December 12, 2012

கேரட் கொத்து சப்பாத்தி

தேவையான பொருட்கள்
சப்பாத்தி -3
கேரட் (சிறியதாக) - 1
முட்டை -1
நறுக்கிய வெங்காயம்-3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பச்சைமிளகாய்-1
வரமிளகாய்-1
சக்தி கறி மசாலாபொடி- 2டீஸ்பூன்
எண்ணெய்
கடுகு-1/2டீஸ்பூன்
சோம்பு(பெருஞ்சீரகம்)-1/2டீஸ்பூன்
உப்பு

செய்முறை
கேரட்டை கழுவிவிட்டு காய் துருவியில் துருவி வைக்கவும்.
சப்பாத்தியை மெல்லிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு, கடுகு - சோம்பு சேர்த்து பொரியவிடவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கிள்ளிய  வரமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கேரட்டை  சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கி, முட்டையை உடைத்து ஊற்றவும்.
முட்டையை ஊற்றியதும் நன்றாக கிளறிவிடவும், ஒரு நிமிடத்தில் முட்டை வெந்துவிடும். பின்னர் உப்பு - மசாலாபொடி போட்டு கிளறவும்.
மசாலா வாசம் போனதும் (ரொம்ப நேரமாகாது, ஒரு நிமிஷம் வதக்கினால் போதுமானது.) நறுக்கிய சப்பாத்தி துண்டுகளைச் சேர்த்து கலந்துவிடவும்.

அவ்ளோதாங்க, கேரட் கொத்து சப்பாத்தி ரெடியாகிருச்சு! Maggi hot n sweet tomato chilli sauce உடன் சூடாக சாப்பிட சூப்பராக இருக்கும்.
முன்பே செய்து வைத்த சப்பாத்தி (அ) ரெடிமேட் சப்பாத்தி இருந்தால் சட்டென்று செய்துவிடலாம். சப்பாத்திக்கு செய்த குருமா ஏதாவது மீதம் இருந்தால் ஒரு கரண்டி குருமாவும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதனுடன் கலர் குடைமிளகாய் சேர்த்தாலும் நன்றாக இருக்கும். இவை  இரண்டுமே கைவசம் இல்லாததால் நான் சேர்க்கவில்லை.

Sending this recipe to Bachelor's Feast event happening at Jaleelaa akkaa's Samaiyal attakaasam

19 comments:

  1. Romba simple la super ra iruku mahi.. Apparam veg biryani seithen nalla vanthuchu.. Blog il poodanum

    ReplyDelete
  2. ம்ம்ம்ம் yummy !!!!!
    எங்க வீட்ல எப்பவும் சப்பாத்திதான் கேரட் மட்டும் போட்டு இதுவரை செய்யலை

    சீக்கிரம் செய்யறேன் .

    perfect for the bachelors event mahi .
    நானும் நிறைய செய்து படம்லாம் எடுத்தேன் மற்ற கம்ப்யூட்டர்ல எல்லாமே போச்சு ..


    ReplyDelete
  3. கொத்து சப்பாத்தி! சாப்பிடனும் போல இருக்கே.இங்கேயும் சப்பாத்தி மிகுதியானால் உடனே கொத்துதான்.ஆனா நான் செய்வதில்லை.இதில் கணவர்தான் ஸ்பெஷல்.இதையும் கூறவேண்டும்.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிநேகிதி! பிரியாணி செய்து பார்த்தீங்களா? ரொம்ப சந்தோஷம் + நன்றி!:)
    ~~
    ஏஞ்சல் அக்கா செய்து பாருங்க..கேப்ஸிகம் - கேரட் இரண்டுமே நல்லா இருக்கும். கேப்ஸிகம் ஓவர் குக் ஆகாக க்ரன்ச்சியா இருக்க மாதிரி பாத்துக்குங்கோ! :)
    /மற்ற கம்ப்யூட்டர்ல எல்லாமே போச்சு ../ ஆஹா! அதை ரெக்கவர் பண்ண முடிலையா? டூ bad!
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~
    //இதில் கணவர்தான் ஸ்பெஷல்.இதையும் கூறவேண்டும்.// அட! :))) கலக்கறீங்க அம்முலு! :) முட்டை சேர்க்காம வெஜ் கொத்து சப்பாத்தியா செய்யலாம்னு நினைச்சேன், அன்னைக்குன்னு குருமா ஏதும் மீதி இல்லை, அதனால் முட்டை சேர்த்தே ஆகவேண்டிய கட்டாயம் ஆகிருச்சு.

    கொத்து பரோட்டாதான் கொத்தி:) போடுவேன், இது கத்தரியால் நீளநீளமா நறுக்கித்தான் போட்டிருக்கேன். ஆனா பேர் மட்டும் கொத்து சப்பாத்தி! ஹாஹாஹா! :)))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  5. ம்..நானும் இடைக்கிடை செய்வதுண்டு..:) என்ன இதுக்குன்னு சப்பாத்தியோ ரொட்டியோ செஞ்சு செய்யணும். எங்க வீட்டில மீதம் இருந்தா... ஒரு பொழுதுக்குள்ளே அந்த சப்பாத்தி எங்கேன்னு பார்த்தா அம்மா நாந்தான் ரீயோடு அப்பிடியே சாப்பிட்டேன் என்பார்கள்...;)

    சப்பாத்தி, ரொட்டீன்னா 3வேளையும் ஒரு சைட்டிஸ் இல்லாமலே காணாம போயிடும்...:)

    நல்ல ரெஸிப்பி மகி. பகிர்வுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  6. நானும் இதுமாதிரி செய்வதுண்டு மகி..புதினா, மல்லி பொடியாக நறுக்கி சேர்ப்பேன்..கொத்து சப்பாத்தி சாப்பிட அழைப்பு விடுது..:) ரொம்ப நாளா செய்யல..
    ஞாபக படுத்திட்டீக ,,

    ReplyDelete
  7. முதலில் Bachelor's Feast event ல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.எளிதான செய்முறைதான்.

    வெஜ் அல்லது நான்வெஜ் குருமா செய்யும் அன்று சப்பாத்தி செய்தால் குருமாவை லேசாக சூடுசெய்து அதில் ஒரு சப்பாத்தியைப் பிச்சிப்போட்டுக் கிளறி எடுத்து சாப்பிடப்பிடிக்கும்.ஆனால் கேரட்& முட்டையுடன் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்.இது நிச்சயம் நல்லாதான் இருக்கும்.பார்க்கவே அருமையும் கூட.

    ReplyDelete
  9. Love this ever.... All the very best tooo Mahi !!
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  10. ஆஹா கொத்துபரோட்டா போல் கொத்து சப்பாத்தியா.சப்பாத்தியைக்கூட எத்தனை வடிவாக கலைநயத்தோடு நறுக்கி இருக்கீங்க மகி.இனி சப்பாத்தி மிஞ்சினால் கொத்து சப்பாத்திதான்.

    ReplyDelete
  11. குட்டீஸ்களுக்கு இதுபோல் செய்துகொடுத்தால் ரொம்ப பிடிக்கும்,அருமை!!

    ReplyDelete
  12. ஆவ்வ்வ் இதை நான் எப்படித் தவற விட்டேன்ன்?.. என்னாது நீங்களும் போட்டியில் பங்குபற்றுறீங்களோ?.. ஹையோ முருகா.. பரிசு எனக்கே கிடைக்கப் பண்ணிப்போடப்பா:))

    ReplyDelete
  13. சிம்பிளாகவும் ஈசியாகவும் இருக்கு... ரெடிமேட்டாக் கட் பண்ணிய பரோட்டா கடையில் விக்குது அதை வாங்கியும் இப்படி டக்கெனச் செய்திடலாம்.. வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  14. கொத்து சப்பாத்தி குறிப்பு மிகவும் பிரமாதம்! சீக்கிரம் செய்து பார்க்கிறேன்!!

    ReplyDelete
  15. "athira said...
    ஆவ்வ்வ் இதை நான் எப்படித் தவற விட்டேன்ன்?.. என்னாது நீங்களும் போட்டியில் பங்குபற்றுறீங்களோ?.. ஹையோ முருகா.. பரிசு எனக்கே கிடைக்கப் பண்ணிப்போடப்பா:))"
    ---- ஹி ஹி ஹி ... :D :D

    மகி, இந்த மாதிரி கொத்து ரொட்டி-ல முட்ட துண்டு நல்லா பெரிசா இருந்தா எனக்கு ரொம்ப பிடிக்கும் :)

    ReplyDelete
  16. இளமதி, உங்கவீட்டுல அவ்வளவு சப்பாத்தி பிரியர்களா? நானும் மீதமான சப்பாத்தின்னா இப்படி செய்வேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    //ராதா ராணி said... //மல்லி,புதினா சேர்த்து செய்யலீங்க இதுவரை! செய்து பார்க்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    //ஒரு சப்பாத்தியைப் பிச்சிப்போட்டுக் கிளறி எடுத்து சாப்பிடப்பிடிக்கும்.//ஊரில லோக்கல் ஹோட்டல்கள்ல இப்படி சாப்புடுவோம்! :) அதே மாதிரிதான் இந்த கொத்து பரோட்டாவும் பெரீய்ய தோசைக்கல்லுல கொத்துவாங்களே சித்ராக்கா, நீங்க சாப்பிட்டதில்லையா? இப்படி செய்து பாருங்க, சூப்பரா இருக்கும்.
    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க!
    ~~
    ஆசியாக்கா, எனக்கும் அந்த 1ஸ்ட் போட்டோ ரொம்ப பிடிச்சது! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    சங்கீதா, தேங்க் யூ!:)
    ~~
    /சப்பாத்தியைக்கூட எத்தனை வடிவாக கலைநயத்தோடு நறுக்கி இருக்கீங்க மகி./ ஸாதிகாக்கா, சில சமயம் mood நல்லா இருந்தா இதெல்லாம் நடக்கும்! :) கவனித்து கருத்துச் சொன்னது ரொம்ப சந்தோஷம்! நன்றிக்கா!
    ~~
    விஜி, நன்றி!
    ~~
    ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    /Vijiskitchencreations said... / வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! செய்து பாருங்க!
    ~~
    மேனகா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    //என்னாது நீங்களும் போட்டியில் பங்குபற்றுறீங்களோ?..// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! சமைக்கன்னு தனி ப்ளாகே வச்சிருக்கும் ஒரு பிரபல;) ப்ளாகரைப் பாத்து உப்பூடியும் கேப்பீங்களோஓஓஓஓ அதிராவ்?! ;)))))))

    /ஹையோ முருகா.. பரிசு எனக்கே கிடைக்கப் பண்ணிப்போடப்பா:)) / மருதமலை முருகனுக்கு படி பூரா அடிப்பிரதட்சணம் செய்யவைக்கிறேன் பூஸை-அப்படீன்னு நேர்ந்திருக்கேன், வெற்றி எனக்கே! 4 காலுக்கும்/கையுக்கும் நல்லா கை;) கீல்;) ஷூவாப் போட்டுட்டு ரெடியா இருங்கோ, தனி விமானம் வரும், ப்ரித்தானியா டு மருதமலைக்கு! :)))

    வருகைக்கும் பயப்பட்டதுக்கும் மெத்த நன்றி பூஸாரே! :)
    ~~
    மனோ மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! செய்து பாருங்க, நல்லா இருக்கும்!
    ~~
    மீனாக்ஷி, பூஸைப் பார்த்து இவ்ளோ சிக்கனமாச் சிரிச்சா எப்படி? :))))))))))) நல்லா நீஈஈஈஈஈஈளமாச் சிரிக்கலாம்! :)))))))

    /முட்ட துண்டு நல்லா பெரிசா இருந்தா/ ஹவ்இஸ் இட் பாஸிபிள்?! முட்டைய நல்லா கலக்காம விடலாமோ? 2-3 முட்டை போட்டு நிறைய செய்தா அப்படி செய்யலாம்னு நினைக்கிறேன், ட்ரை பண்ணிப் பாருங்க! :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~

    ReplyDelete
  17. ரொம்ப நல்ல இருக்கு மகி நானும் இதே போல் தான் கத்திரியால் கட் பண்ணுவேன்.
    அழகாக பரிமாறி இருக்கீங்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails