Thursday, December 27, 2012

Christmas 2012

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸுக்கு முன்பு ஒருவாரம் அருகில் இருக்கும் ஒரு கடற்கரையில் boat parade இருக்கும். வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகள் இரவு நேரத்தில் அணிவகுத்துச் செல்வது கண்களுக்கு விருந்து!
கடந்த ஞாயிறன்று இந்த படகுப் பரேடின் கடைசிநாள். நல்ல குளிர், நல்ல ஜலதோஷம், இருந்தாலும் போட் பரேடைப் பார்த்துவிட்டோம்.

இருள், காமெராவைக் கையாளப் போதுமான உடல்நலமின்மை இவற்றால் படங்கள் சரியாக வரவில்லை. சுமாராக வந்த படங்கள் உங்கள் பார்வைக்கு..
ஒரு சில படகுகளில் சான்டா க்ளாஸ் மைக்கில் பேசியவாறும், Merry Christmas என்று வாழ்த்துச் சொல்லியவாறும் சென்றார்(கள்).
வீடியோ எடுத்தேன் என்றாலும் அது அவ்வளவு தெளிவாக வராத காரணத்தால் யுட்யூபின் உதவியை நாடினேன். தெளிவான வீடியோக்கள் பல கிடைத்தன. அவற்றில் ஒன்று இங்கே.. நாங்கள் ரசித்தது, நீங்களும் ரசிக்க!


க்றிஸ்மஸூக்கு ஒரு இனிப்பும்...
காரமும்...
 இனிப்பு- தேங்காய் பிஸ்கட், காரம்- ரசவடை...தேங்கா பிஸ்கட் ரெசிப்பி விரைவில் வெளியிடப்படும். ரசம் + வடை = இதற்கு ரெசிப்பி உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன். ;) :)

10 comments:

  1. கிறிஸ்துமஸ் பகிர்வுகள் ரசிக்கவைத்து ருசிக்கவைத்தன .. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. thanks for sharing this... Hope u enjoyed !
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  3. மகி..நீங்க காண்பிச்சப்புறம்தான் இப்பிடியெல்லாம் இருக்கான்னு ஆ.ன்னு பாக்கிறேன்...:)

    ஜலதோஷத்தோடு ஜலத்தில போற கிறிஸ்மஸ் போட் பரேட் கிளிக் பண்ணி எங்களுக்கும் பார்க்க போட்டுவிட்டிருக்கீங்க..நீங்க எங்கையோ.....போயி..வேணாம் நா ஒண்ணும் சொல்லலை...:)))

    நல்லா இருக்கு படங்கள். யூரியூப் வீடியோவும் ரசிச்சேன்.

    தே.பூ பிஸ்கட்டா அது...லட்டு மாதிரி இருக்கு..ஓ..இப்பெல்லாம் லட்டை பிஸ்கட்டுன்னும் மாத்திட்டாய்ங்களோ?.... சொல்லவே இல்லை...:))

    அழகான பதிவு..பகிர்வுக்கு மிக்க நன்றி மகி!

    ReplyDelete
  4. மஹி,

    அருமையான வீடியோ பதிவு.
    நல்ல ஜல்தோஷத்திலும் நல்லப் பதிவு.

    பாராட்டுக்கள்.

    ராஜி

    ReplyDelete
  5. கிறிஸ்மஸூக்கு ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில கொண்டாடுறாங்க. ஒவ்வொரு BOATம் அழகாக இருக்கு. யூடியூப்பில் நானும் பார்த்து ரசித்தேன். தேங்காபூ பிஸ்கட் ரெசிப்பி போடுங்க. உடல்நலமில்லாதபோது படங்கள் எடுத்து போட்டமைக்கு மிக்க நன்றி. TAKE CARE MAHI.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.தேங்காய் பிஸ்கட் விரைவில் எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete
  7. Parade looks beautiful, nice post Mahi..

    ReplyDelete
  8. கேமராவைப் பிடிக்குமளவுக்குக் கூட உடல் நலமினமையா??? டேக் கேர் மகி:)... yet to see the video clip :)

    நான் ஏதோ கொழுக்கட்டைனு நினச்சேன்... பிஸ்கட்னு சொல்றீங்க???....படம் மாத்தி போட்டுட்டீங்களா இல்ல என் கண்ணு சரியா தெரியமாட்டேங்குதா.?அவ்வ்வ்வ்.....

    ReplyDelete
  9. இந்தக்குளிரில்,இரவில்,பீச்சில்,உடல்நிலை சரியில்லாதபோது!நேர்ல பார்த்தால் அழகாக இருந்திருக்கும்.யுட்டியூபில் பார்த்தாச்சு.நல்லாருக்கு.

    தேங்காய் பிஸ்கட் ரெஸிபிக்கு வெயிட்டிங்.வடை பாயஸம்,வடை சாம்பார் தவிர வேறு ட்ரை பண்ணியதில்லை.உடல்நிலை சரியாகி சீக்கிரம் வாங்க.

    ReplyDelete
  10. ரசித்தேன் படங்களை.
    ரசவடை... ரெசிபி ப்ளீஸ். ;)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails