Monday, December 31, 2012

தேங்காய் பிஸ்கட் / Eggless Coconut Biscuit

தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் மாவு/ மைதா மாவு - 11/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
வெண்ணெய்-115கிராம்
பேக்கிங் பவுடர்-1/2டீஸ்பூன்
ஸ்வீட்டன்ட் கோக்கனட் ஃப்ளேக்ஸ் - 1/2கப்

செய்முறை
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

வெண்ணெய் அறை வெப்பநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
மைதா + பேக்கிங் பவுடர் சேர்த்து 2-3முறை சலித்து வைக்கவும்.

இனிப்பு தேங்காய்த் துருவல் இங்கே கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. ஒரு அவன் ப்ரூஃப் தட்டில் அலுமினியம் ஃபாயில் விரித்து, கோக்கனட் ஃப்ளேக்ஸை அதில் வைக்கவும்.
Oven-ஐ 300F ப்ரீஹீட் செய்து தேங்காய்த்துருவல் தட்டை  வைத்து 10-15 நிமிடங்கள் (நல்ல பொன்னிறமானால் போதும், பத்து நிமிடங்களுக்குப் பின் அவ்வப்பொழுது பார்த்து கவனமாக எடுக்கவும். தே.துருவல் சீக்கிரம் கருகிவிடும், ஜாக்கிரதை! :)) bake செய்யவும்.

வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து எலக்ட்ரிக் பீட்டர் அல்லது விஸ்க்-ஆல் சில நிமிடங்கள் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை  சேர்த்து கலக்கவும்.

வெண்ணெய்+ சர்க்கரை கலவை க்ரீமியாக வரும்வரை நன்றாக கலக்கவேண்டும். கிட்டத்தட்ட உளுந்துமாவு போல fluffy-ஆக ஆகும்வரை கலக்கவும்.

பிறகு அதனுடன் சலித்துவைத்த மாவு+பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து விரல்களால் மிருதுவாக கலந்துவிடவும்.(அழுத்திப் பிசையவேண்டாம்).
தேங்காய்த் துருவலையும் மாவுக்கலவையுடன் சேர்த்துப் பிசிறிவிடவும்.

இப்பொழுது மாவு கிட்டத்தட்ட புட்டுமாவு போல, உருட்டினால் உருண்டை சேரும், உதிரி-உதிரியாகவும் இருக்கும்
பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் விரித்துக் கொண்டு, மாவுக் கலவையை விருப்பமான வடிவில் பிடித்து வைக்கவும். (இந்த ஷேப் எனக்கு ஈஸியாக வருவதால் "கொழுக்கட்டை" போல பிடித்திருக்கிறேன், உங்க வசதிக்கேற்ப உருண்டையாகவோ, சதுரமாகவோ,செவ்வகமாகவோ, கனசதுரமாகவோ செய்துக்கலாம். :))))

எல்லா பிஸ்கட்டுகளையும்  செய்து அடுக்கியபிறகு பேக்கிங் ட்ரேயை 15நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.
Oven-ஐ 350F ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.
பிஸ்கட் ட்ரேயை oven-ல் வைத்து 15 நிமிடங்கள் bake  செய்யவும்.

பிஸ்கட்டுகள் வெந்து இப்படி நிறம் மாறி இருக்கும், oven-ல் இருந்து எடுத்து நன்றாக ஆறவைக்கவும். சுவையான கோக்கனட் பிஸ்கட் தயார். காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.   

என்னைப் பொறுத்தவரை இந்த பிஸ்கட் ஒரு fool proof ரெசிப்பி. பலமுறைகள் செய்திருக்கிறேன். போனவருஷத்தில் ஒரு முறை செய்தபொழுது மிகவும் அழகான வடிவம் & texture கிடைத்தது. என்னவரின் ஆஃபீஸுக்கு கொடுத்தனுப்பினேன், எல்லாரின் பாராட்டுக்களும் கிடைத்தது. :) 

விரும்பினால் முந்திரி-பாதாம்-வால்நட் போன்ற nuts-ஐ பொடித்து தேங்காய் கலவையுடன் சேர்த்தும் bake  செய்யலாம். தேங்காய் சுவை மட்டுமே போதும் என்றால் ப்ளெய்னாகவும் செய்யலாம். இனிப்பு தேங்காய்த் துருவல் இல்லையென்றால் சும்மா dry coconut flakes சேர்க்கலாம், ஆனால் சர்க்கரையின் அளவை சரிபார்த்து, தேவையென்றால் அதிகம் சேர்க்கவேண்டும்.

13 comments:

  1. Love this coconut biscuits. Thanks for sharing. Happy New Year Mahi:-)

    ReplyDelete
  2. மகி..நல்ல குறிப்பு..ஆறுதலா வந்து பார்த்து எழுதறேன்..

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புதுவருட நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தேங்காய் பிஸ்கட் படங்களுடன் நல்லாருக்கு.எனக்கும் 'பேக்கிங்'கிற்கும் ரொம்ப தூரம்.பலமுறை முயற்சித்தும் சரிவராமல் கடையில் கிடைக்கும் ரெடிமேட் மிக்ஸ் வாங்கி செய்திடுவேன்.இன்னும் 'ஜாக்கிரதை!' எல்லாம் போட்டு பயமுறுத்தறீங்க. சும்மா படித்துவிட்டுப் போகிறேன்.

    ReplyDelete
  4. super biscuits. I will try this recipe one day.

    ReplyDelete
  5. "என்னைப் பொறுத்தவரை இந்த பிஸ்கட் ஒரு fool proof ரெசிப்பி." அப்பனா உங்க ப்ளாக்-ல இருக்கும் மத்த ரெசிப்பி எல்லாம்? ஹி ஹி ஹி.
    மஹி, தேங்காய் வாசன சும்மா கும்முனு தூக்குது :) இதுல ஏலக்காய் பொடி சேர்த்து பன்னலாமா? லவ் தி biscuits.

    ReplyDelete
  6. //அப்பனா உங்க ப்ளாக்-ல இருக்கும் மத்த ரெசிப்பி எல்லாம்? ஹி ஹி ஹி. // ஹாந்ஹ்ஹா! நோ கமென்ட்ஸ் மீனாக்ஷி! ;):) நீங்கதான் ட்ரை பண்ணிப்பார்த்து சொல்லுங்களேன்?! ;)))

    //தேங்காய் வாசன சும்மா கும்முனு தூக்குது :) இதுல ஏலக்காய் பொடி சேர்த்து பன்னலாமா?// பதிலும் சொல்லிட்டு கேள்வியும் கேட்டிருக்கீங்க! :) எனக்கு தேங்காய் வாசனையே போதுமா இருந்தது, அதனால ஏலக்காய் தேவைப்படல. விரும்பினா சேர்த்துக்குங்க!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. Mahi இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ..yum yum bikkis :))

    ReplyDelete
  8. wow semma...superb ah panirukinga..thanks for ur post...wish you a happy new year.

    ReplyDelete
  9. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. My mom loves this much Mahi...
    http://recipe-excavator.blogspot.com
    Happy New Year !!!

    ReplyDelete
  11. இதை இப்பத்தான் பார்க்கிறேன் மகி. செய்துபார்க்கிறேன். ஸ்வீட் கோகோனட் கிடைக்குமா எனப்பார்க்கனும். குறிப்பு உடன் தந்தமைக்கு தாங்க்ஸ்.

    ReplyDelete
  12. Delicious, love the coconut flavor..

    ReplyDelete
  13. கண்டிப்பா ட்ரை செய்வேன். முதல்ல layered-biriyani, அப்பறம் தேங்காய் பிஸ்கட்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails