Monday, October 31, 2011

மோத்தி லட்டு

லட்டு/மோத்தி லட்டு/மோத்தி சூர் லட்டு [Laddoo/ Moti laddoo/ Motichoor laddoo] எல்லாமே பூந்தி லட்டுகள்தான். சின்ன பூந்தி கரண்டியில பூந்தி பொரிச்சு லட்டு பிடிச்சா அது மோத்தி சூர் லட்டு, நார்மல் சைஸ் பூந்தில லட்டு செய்தா அது லட்டு..அம்புட்டுதாங்க! சாதா லட்டு மஞ்சக் கலர்ல இருக்கும்,மோத்தி லட்டு ஆரஞ்ச் கலர்ல அட்ராக்டிவா இருக்கும். திருப்பதி லட்டும் பூந்தி லட்டுதான், வெங்கடாசலபதியின் அருள் தவிர, அதுக்கு எதாச்சும் ஸ்பெஷல் ரெசிப்பி இருக்குதான்னு எனக்குத் தெரியலை! :)

பேசன் லட்டு, ரவா லட்டு,இந்த லட்டுன்னு பலவகைகள் இருந்தாலும்,என்னைப் பொறுத்தவரை லட்டுன்னா பூந்தி லட்டுதான்! ரவா லட்டுன்னு சொல்லறத விட ரவை உருண்டைன்னு சொல்லுவதுதான் எங்க வீட்டில் வழக்கம். அதனால் லட்டுன்னாலே பூந்தி லட்டுதான்.

சின்ன வயசில இருந்தே விநாயகர் கிட்ட இருக்கும் லட்டுத்தட்டு மேல எனக்கு ஒரு கண்ணு! ;) விநாயகர் படத்தை கவனிச்சுப் பார்த்தீங்கன்னா மோஸ்ட்லி எல்லாப் படங்கள்லயும் லட்டு கண்டிப்பா இருக்கும், சில படங்களில் தும்பிக்கையிலயும் லட்டை வச்சு டேஸ்ட் பண்ணிட்டும் இருப்பார்! அவரோட வாகனமான மூஞ்சூறும் கூட லட்டு சாப்பிடுவார்! :)

சாமி கும்பிடும்போதும் லட்டு ஞாபகமா?!!!! சரியான சாப்பாட்டு ராமி(ராமனுக்கு பெண்பால்..ஹிஹிஹி!) போலவே இந்தப்பொண்ணுன்னு நீங்க நினைக்கமாட்டீங்க, அவ்ளோ கெட்டவங்களா என்ன நீங்கள்லாம்? :) ;) ;)

இந்த வருஷம் தீபாவளிக்கு நிறைய ப்ளாக்ஸ்ல லட்டு ரெசிப்பி கண்ணில பட்டுது,இருந்தாலும் ட்ரை பண்ணிப்பார்க்கும் தைரியம் வரல..ரேவதியின் காரசாரம்-ல வந்த லட்டு ரெம்ப டெம்ப்ட் பண்ணிடுச்சு, கொஞ்சமா செய்துபார்ப்போம்னு ஆரம்பிச்சேன், அங்கிருந்த ரெசிப்பியவும் அப்படியே செய்யல, என் வசதிக்கேத்த மாதிரி கொஞ்சம் கொஞ்சம் மாத்தி செய்தேன். சூப்பரா வந்தது லட்டு! Thanks for the tempting snaps Reva! :)


தேவையான பொருட்கள்
பூந்திக்கு
கடலைமாவு-1கப்
அரிசிமாவு-1டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1சிட்டிகை
மஞ்சள் & சிவப்பு food colors- தலா 2 துளிகள்
தண்ணீர் -1/2கப் to 3/4கப்
எண்ணெய்

சர்க்கரைப் பாகுக்கு
சர்க்கரை -1கப்
தண்ணீர் 1 கப்

அலங்காரத்துக்கு :)
ஏலக்காய்-2
கிராம்பு-2
முந்திரி -10
திராட்சை-10
கல்கண்டு-1 டேபிள்ஸ்பூன்
நெய்-1டேபிள்ஸ்பூன்


செய்முறை
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பிசுபிசுப்பு பதம் வரும்வரை கொதிக்கவிட்டு எடுத்துவைக்கவும். ஏலக்காயைத் தட்டி பாகில் போட்டுவைக்கவும்.

முந்திரி, திராட்சை,கிராம்பு இவற்றை நெய்யில் பொரித்து எடுத்துவைக்கவும்.

கடலைமாவு,அரிசிமாவு,பேக்கிங் சோடாவுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். அதனுடன் food color சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

மிதமான சூட்டில் எண்ணெயை காயவைத்து பூந்திகரண்டியில் மாவை ஊற்றவும். பூந்திகளை அதிகம் முறுகவிடாமல் எடுத்துவிடவும்.[எண்ணெயில் விழுந்த பூந்திகள் சில நொடியிலே எண்ணெய் ஓசை அடங்கி மிதக்க ஆரம்பிக்கும். உடனே எடுத்துருங்க.]

பொரித்த பூந்திகளை பேப்பர் டவலில் வைத்து எண்ணெய் வடியவைத்து எடுத்து வைக்கவும். எல்லாமாவையும் பூந்திகளாக பொரித்து எடுத்ததும், ஒரு கைப்பிடி பூந்தியை மிக்ஸியில் ஒருமுறை pulse-ல் போட்டு எடுத்து பூந்தியுடன் கலக்கவும். வறுத்த முந்திரி-திராட்சை-கிராம்பு, 2 கரண்டி சூடான சர்க்கரைப் பாகு சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து இன்னும் இரண்டு கரண்டி சூடான பாகு சேர்த்து கல்கண்டும் சேர்த்து கலந்துவைக்கவும். [முந்திரி திராட்சை சேர்க்கும்போதே கல்கண்டும் போட்டுக்கலாம், நான் மறந்துட்டேன். ;)]

மீண்டும் 5 நிமிஷங்கள் கழித்து மீதமுள்ள (சூடான) பாகு முழுவதையும் ஊற்றி கலந்து, 1/2 மணி நேரம் ஊறவிடவும். கையில் நெய் தடவிக்கொண்டு லட்டுகளாகப் பிடித்துவைக்கவும். சுவையான சூப்பர் டூப்பர் லட்டு (!) ரெடி!

என்ஜாய்!
குறிப்பு
 • பச்சைக்கற்பூரம், வெள்ளரிவிதை இதெல்லாமும் கிடைச்சால் சேர்த்துக்கோங்க.
 • சர்க்கரைப் பாகை அடுப்பிலிருந்து இறக்கியதும் ஏலக்காய் போடுங்க, ஏலக்காய் சேர்த்தபிறகு கொதிக்கவிடக்கூடாது..கொதிக்கவிட்டா ஏலம் மணம் குறைஞ்சுடுமாம்.
 • பூந்தியில் பாகை சேர்க்கும்போது பாகு ஆறியிருக்கக்கூடாது(அதுக்காக கொதிக்கக் கொதிக்கவும் ஊத்தக்கூடாது,ஹிஹி!) ஆறியிருந்தால் கொஞ்சம் சூடாக்கி ஊற்றி வைக்கவும்.
 • பேக்கிங் சோடா போடாமலே செய்தாலும் பூந்தி நல்லா வரும்னுதான் (எனக்குத்) தோணுது.[காராபூந்தி பொரிக்கும்போதெல்லாம் நான் பேக்கிங் சோடா சேர்க்காமல்தான் செய்தேன்.நன்றாகவே வந்தது.]

22 comments:

 1. எனக்கே முதல் லட்டு

  ReplyDelete
 2. லட்டூஸ் சூப்பரா இருக்கு மகி ..

  ReplyDelete
 3. கணேஷ்ஜி கையில் இருப்பது ஆரஞ்சுன்னு இல்லையா நினைச்சுகிட்டு இருந்தேன் இத்தனைநாளா

  ReplyDelete
 4. superb effort mahi

  u become expert now

  ReplyDelete
 5. super delicious laddo....it looks so perfectly round like the once we get in shops

  ReplyDelete
 6. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் லட்டுப் போயே போயிந்தி:))).

  // angelin said...
  எனக்கே முதல் லட்டு// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  சூபராக இருக்கு மகி. விளக்கமும் தெளிவாக இருக்கு... செய்திடலாம் ஒரு நாளைக்கு:))

  ReplyDelete
 7. //angelin said...
  athira said..//

  மேத்தி லட்டு என்றால்.... திருப்பதி லட்டுத்தானே.... பார்க்க சூப்பராக இருக்கு....//

  கர்ர்ர்ரர்ர்ர்ர் பூஸ் திருப்பதி லட்டு வேற மாதிரி இருக்கும் ,பெர்மின்காம்ல கோவில் இருக்கு ,கிடைச்சா பார்சல் அனுப்பறேn//

  avvvvvvvvvvvvvvvநாங்க போன நேரமெல்லாம் நிறைய வாங்கி வந்து பிரிஜ்ல வைச்சுச் சாப்பிட்டிருக்கிறோமே... அது சூஊஊஊஊஊஊஊஊஉப்பர்:)))

  ReplyDelete
 8. அருமையான லட்டு.எடுத்து சாப்பிடத்தூண்டும் படங்கள்.அசத்தறீங்க மகி.

  ReplyDelete
 9. //ஸாதிகா said...
  அருமையான லட்டு.எடுத்து சாப்பிடத்தூண்டும் படங்கள்.அசத்தறீங்க மகி.//


  அசத்தறீங்க மகி..........

  ReplyDelete
 10. ஆஹா...,என்ன மஹி ஜொல்லு வடிய விடுறீங்களே... நல்ல தெளிவான படங்களால் ஏங்க வச்சிட்டீங்க போங்க மஹி...
  கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சேன்னு நொந்துக்கிட்டேன்.விரைவில் நானும் செய்திட்டு சொல்றேன்.இதுவரை ஒரு முறை தான் செய்துள்ளேன்.மிக்ஸியில் சுத்தி சேர்த்திருப்பது வித்தியாசமாக உள்ளது.இமுறையில் செய்து பார்த்திட வேண்டியதுதான்...
  மஹிக்கு எனது பாராட்டுக்கள்.

  என்றும் அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 11. wow amazing mahi,love those cute ladoos...luks perfect n yum...

  ReplyDelete
 12. Perfect laddos Mahi, I havent tried my hands on it, bit afraid to try and have to agree that i am lazy too ;)

  ReplyDelete
 13. ahh very tempting ladoos mahi,nicely done

  ReplyDelete
 14. படங்களை பார்க்கும்போதே சாப்பிட தோனுது மகி...
  பாஸ் மீ த பிளேட்:-)

  ReplyDelete
 15. மகி லட்டு நல்லா வந்து இருக்கு...பார்க்கும்போதே சாப்பிடனும்போல இருக்கு.நானும் நீங்க செய்யும் முறைப்படியேதான் செய்வேன் மஹி.( .என்னான்னா நான் ஜல்லிகரண்டில ஊற்றும்போது எல்லாம் ஒட்டிக்கிட்டு வரும்.அதனால் நான் எல்லா பூந்தியும் மிக்சில போட்டு ஒரு ரின்ஸ் கொடுத்து எடுப்பேன்) உங்களோடது பூந்தியெல்லாம் அழகா வந்திருக்கு நல்லா இருக்கு.
  ஓக்கே அடுத்து மைசூர்பாக்கை செய்முரையோட போடுங்க.

  ReplyDelete
 16. மோத்தி லட்டா? நான் மேத்தி லட்டுன்னு நினைச்சு கொஞ்சம் பயந்து போய்ட்டேன். நல்ல ரெசிப்பி. ஒரு முறை நான் இந்த லட்டு செய்தேன். மீண்டும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 17. Wow, Mahi laddu has come out nicely.. I should try your method next time..:)All the pics looks awesome... :)
  Reva

  ReplyDelete
 18. @ஏஞ்சல் அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  /கணேஷ்ஜி கையில் இருப்பது ஆரஞ்சுன்னு இல்லையா நினைச்சுகிட்டு இருந்தேன் இத்தனைநாளா/ :) அது ஆரஞ்ச் இல்லை!
  ~~
  @அனானி, நீங்க வேற!!எக்ஸ்பர்ட் எல்லாம் இல்லைங்க.ட்ரையல் நல்லா வந்த சந்தோஷத்துல லட்டை சுத்தி சுத்தி போட்டோ எடுத்து போட்டுட்டேன்! ;)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  @சித்ரா,தேங்க்ஸ்ங்க! நீங்க சொல்லறது கொஞ்சம்;) உண்மைதான்!
  ~~
  @அதிரா,முதல் லட்டு இல்லைன்னா என்ன? நீங்க ப்ரெஷ்ஷா செய்து ப்ளாக்லயும் போஸ்ட் பண்ணிட்டு சாப்பிடுங்க!:)
  நன்றி அதிரா!
  ~~
  @ஸாதிகா அக்கா,அன்பான கருத்துக்கு நன்றி!
  ~~
  @சினேகிதி,நன்றிங்க!
  ~~
  @அப்ஸரா,மிக்ஸியில் பொடிச்சு போட்டா பூந்திகள் உருண்டை சேர கொஞ்சம் ஈஸியா இருக்கும்,அதுக்குத்தான். ட்ரை பண்ணிப் பாருங்க,நன்றி!
  ~~
  @ப்ரேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  @ராஜி,ஈஸியாதான் இருக்குங்க! நானே செய்துட்டேன்,நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! ;)
  /have to agree that i am lazy too ;)///ஹாஹ்ஹா..அப்ப நானெல்லாம்??!!!
  நன்றி ராஜி!
  ~~
  @தேங்க்ஸ் ஜெயஸ்ரீ!
  ~~
  @ப்ரியா,உங்களுக்கில்லாததா?? பார்ஸல் அனுப்பிட்டேன்,வந்திட்டே இருக்கு!;)
  நன்றி ப்ரியா!
  BTW,எங்க ஆளையே காணோம்..பிஸியாகிட்டீங்களா?
  ~~
  @கொயினி, மாவு கரைக்கும்போது தண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி மிக்ஸ் பண்ணுங்க. பதம் கரெக்ட்டா இருந்தா பூந்தி சரியா வரும். எனக்கும் 100% கரெக்ட் பூந்தில்லாம் இல்ல! ;)

  /அடுத்து மைசூர்பாக்கை செய்முரையோட போடுங்க./ அது ஆல்ரெடி ஆங்கிலத்தில் இருக்குது.
  http://mahiarunskitchen.blogspot.com/2010/03/mysore-pak.html

  இந்த முறை ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோ எடுக்கலை,அடுத்த தீபாவளிக்கு வேணா போட்டோ எடுக்க ட்ரை பண்றேன்!;)
  ~~
  @வானதி, பயப்படாம வாங்க, லட்டு சாப்பிடுங்க!:)
  நன்றி வானதி!
  ~~
  @ரேவதி,தேங்க்ஸ்ங்க. உங்க போட்டோஸ் பார்த்து டெம்ப்ட் ஆகித்தான் நான் செய்ததே! ;)

  ReplyDelete
 19. //பச்சைக்கற்பூரம்// இது சமையலுக்கு என்று தனியா விற்குதா! அப்படியானால் பெயர்... ஹிந்தியில் / ஆங்கிலத்தில் !!

  மீதி எல்லாம் தயார். இதற்கு மட்டும் பதில் கிடைத்தால் இன்று இனிக்க இனிக்க பூந்தி சாப்பிடுவேன் மகி.

  ReplyDelete
 20. இமா,பச்சைக் கற்பூரம் சமையலுக்கு என்றே தனியாய் இருக்கிறது,அதைப் பற்றி நான் கேள்விப்பட்டதுடன் சரி,இதுவரை பார்த்ததே இல்லை.அதனால் ஹிந்தியில் ஆங்கிலத்தில் பெயரும் தெரியவில்லை.:-|

  ப.கற்பூரம் இல்லாமல்(லும்) லட்டு செய்யலாம் இமா,செய்து பாருங்க! :)

  நன்றி!

  ReplyDelete
 21. //ப.கற்பூரம் இல்லாமல்// லட்டுப் பின்னூட்டம்...
  http://imaasworld.blogspot.co.nz/

  ReplyDelete
 22. தேங்க்ஸ் இமா!
  http://imaasworld.blogspot.com/2012/04/blog-post_19.html

  சமைத்து,ருசித்து, படத்துடன் பின்னூட்டத்தை ஒரு பதிவாகவே பகிர்ந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்,நன்றி! :)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails