மல்லிகே இட்லி(mallige idli)... சமீபத்தில் சமையல் வலைப்பூக்களில் உலாவிக் கொண்டிருக்கையில் இந்தப் பெயர் என் கவனத்தைக் கவர்ந்தது. அவல்,தயிர்,பேக்கிங் சோடா எல்லாம் போட்டு அதை செய்வார்கள் போலும். "மல்லிகே இட்லி வெள்ளை வெளேர்னு குண்...........டா இருக்கும்"---இது பெங்களூரில் 4 வருஷம் வசித்தவரின் ஸ்டேட்மென்ட்! நான் இருந்த 4 மாதத்தில் ஒரு முறை கூட இதைக் கேள்விப்படவேயில்லை.
ஊருக்குப் போயிருந்தபொழுது வீட்டில் இட்லிக்கு மாவரைக்கும்போது ஒரு ஸ்பெஷல் இன்கிரிடியன்ட் சேர்த்தாங்க. இட்லியும் நல்லா புஸுபுஸுன்னு வந்தது. அந்த ஸ்பெஷல் இன்கிரிடியன்ட் என்னன்னா...போட்டோ பாருங்க,இதான்! :)
இதை கொட்டைமுத்து-ன்னு பேச்சு வழக்குல சொல்லுவாங்க. ப்ராப்பரான பேர்னா ஆமணக்கு விதை..இதனை அரைத்துதான் விளக்கெண்ணெய் எடுப்பார்கள். இந்த கொட்டைமுத்தை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை இட்லிக்கு அரைக்கையில் அரிசியுடன் சேர்த்து அரைத்து இட்லி செய்தால் மல்லிகைப் பூ மாதிரியே இருக்கு! ;)
இங்கே வரும்போது 2 பேக்கட் கொட்டைமுத்தை வாங்கிட்டு வந்தேன்..வந்து மறந்தும் போனேன்..திடீர்னு ஒரு நாள் நினைவு வந்து எடுத்து யூஸ் பண்ண ஆரம்பித்தேன். அப்ப கிடைத்த மல்லிகே இட்லியை ருசித்ததும்தான் இங்கேயும் இந்தப் பதிவு! வெளியூரில்/ வெளிநாட்டில் இருக்கும் ஆட்களெல்லாம் "நாங்கள்லாம் ஆமணக்கு விதைக்கு எங்கே போக?"ன்னு கட்டையத் தூக்கிட்டு என்னை அடிக்க வந்தீங்கன்னா...வாணாம்,முடியாது...அழுதுருவேன்! அவ்வ்வ்வ்வ்வ்......:))))))))))))
மூணு கப்(~750கிராம்) அரிசி, ஒரு கைப்பிடி அவல், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஆறு மணி நேரம் ஊறவைத்து, 10 ஆமணக்கு விதை என்ற கணக்கில் சேர்த்து அரைச்சுக்கணும். 3/4கப் உருட்டு உளுந்தை 11/2 மணி நேரம் ஊறவிட்டு அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து கலந்து புளிக்கவிடணும்.
மாவு நல்லா புளித்து, பொங்கி வந்தால்தான் இட்லி நல்லா வரும். பொங்கிய மாவு இருக்கும் பாத்திரத்தை எடுத்துப் பார்த்தால் கனமே இல்லாமல் இருக்கும். கரண்டியால் கலக்கும்போது காற்றுக்குமிழிகள் நிறைய வரும். கொஞ்சம் பச்சைத்தண்ணீரில் இந்த மாவு ஒரு துளியை எடுத்துப் போட்டா அழகா(!) மிதக்கணும். இதெல்லாம்தான் இட்லி நல்லா வரும் என்பதுக்கான (எனக்குத் தெரிந்த) அடையாளங்கள்.
அப்புறம் என்ன...இட்லிய சுட்டு எடுக்க வேண்டியதுதான். குக்கர் இட்லின்னா இட்லித்தட்டை ஆறவைச்சுதான் இட்லிகளை முழுசா எடுக்க முடியும். ஆனா இட்லிப் பாத்திரத்தில் துணி போட்டு இட்லி ஊற்றினா, இறக்கின உடனே தண்ணி தெளிச்சு, இட்லித் தட்டைக் கவிழ்த்தா மல்லிகே:) இட்லி சூப்பரா வந்துரும்.
இட்லிய ஆவி பறக்க தட்டுல வச்சு, அது மேலே இதயம் நல்லெண்ணெயை ஊத்தி சட்னில தொட்டு சாப்ட்டா சூஊஊஊப்பர் போங்க!:P:P இன்ஃபாக்ட் சட்னி சாம்பார் கூட வேணாம், வெறும் இட்லி+நல்லெண்ணெயே செமையா இருக்கும்! :))))))))
இட்லி ஸ்பாஞ்ச் மாதிரி இருக்குமா..சூடா இருக்கையில் மேலே நல்லெண்ணெயை ஊத்தினா இட்லி எண்ணெயை உறிஞ்சிரும். போட்டோலே பாருங்க, இட்லில குட்டிக்குட்டிகுட்டியா எவ்ளோ ஹோல்ஸ்னு!! அதில எல்லாம் எண்ணெய் கடகடன்னு இறங்கிரும். சாப்பிட சுவையா இருக்கும். இந்த கொட்டைமுத்து டெக்னிக் தமிழகத்தின் எல்லாப் பகுதிகள்லயும் வழக்கத்தில் இருக்கான்னு தெரில..எங்க ஊர்ல,எங்க வீட்ல வழக்கத்தில இருப்பதால இது கோவை ஸ்பெஷல் ரெசிப்பீங்கோ! ;)))))))))))))
ரொம்ப நல்ல விளக்கம் குடுக்கறீங்க மகி நீங்க :) soooper....
ReplyDeleteinteresting...idly sema soft...
ReplyDeleteIdly nandraka irukirathu...nice recipe with aamanakku:-)
ReplyDeleteNeenga namma ooraa..:))) Mahi, nenjai thottutteenga..:) Idli azhagaa irrukku..:) Aamanakku kalanthu seitha idli maavu romba super..:)
ReplyDeleteAsatheeteenga..:)
Reva
wonderful post mahi :)
ReplyDeleteidli supera irruku ....
கோவை இட்லி சூப்பர்.நல்ல பக்குவம்.
ReplyDeleteஇட்லி அழகா வந்திருக்கு மகி .ஆமணக்கு விதை பற்றி முன்பே தெரிஞ்சிருந்தா ஊரிலிருந்து கொண்டு வந்திருப்பேன் .
ReplyDeleteஇட்லி சூப்பரா பூனைக் குட்டி போல ( கவனிக்கவும் பூஸார் அல்ல ) இருக்கு. ஒராளுக்கு நாலு இட்லி அதிகமில்லையா??? ( டவுட்டு )
ReplyDeleteஎங்க பக்கம் முத்துக் கொட்டைன்னு சொல்லுவோம். விளக்கெண்ணெய் எடுப்பது இதிலிருந்துதான். இட்டிலி அசத்தலாக இருக்கு. எண்ணெயின் உபயோகம் முன்பெல்லாம் மிகவும் அதிகம். கிராமங்களில் இந்த எண்ணெய் வீட்டிலேயே தயாரிப்பார்கள்.
ReplyDeleteஇட்லியைப்பத்தி பேசாமல் எண்ணெய் பத்தி என்ன பேச்சு. நல்ல குறிப்பு.
உடம்பிற்கு மிகவும் நல்லதைச் செய்யும். நானும் செய்து பார்க்கிறேன்.
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே நாங்கல்லாம்அந்தக்கொட்டைக்கு எங்க போக.படத்தைப்பார்த்து திருதிபட்டுக்கவேண்டியதுதான்
ReplyDeleteஹ்ம்ம்ம்.எண்ணெயை எப்படி எல்லாம் குறைக்கலாம் என்று யோசிக்கும் பொழுது சூடான இட்லியில் இதயம் நல்லெண்ணெய் விட்டு வார்த்தைகளால் ஆசை காட்டி இப்படி நாவூற வைத்துவிட்டீர்களே மகி.நியாயமா?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
ReplyDeleteஇங்கு இட்லி மாவு பாக்கெட் வியாபாரம் செய்பவர்கள் இந்த கொட்டையைத்தான் சேர்த்து அரைக்கின்றனர் என்கினறனர்.
ஆத்தாடும் ஆத்தாடும் மல்லிகே:))... மகி இட்லிக்கு பேமஸ்:)... நான் சொன்னதுக்கு அடிக்க வந்தீங்க... ஆனா இப்ப்பாஆஆஆ பாருங்கோ இட்லி இட்லியாப் போட்டுக் கலக்குறேள் போங்கோ:)))
ReplyDeleteகொட்டைமுத்துவோ? ஹையோ ஹையோ..... நான் எங்கின போவேன் முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈஈ:)))
ReplyDelete//மாவு நல்லா புளித்து, பொங்கி வந்தால்தான் இட்லி நல்லா வரும். பொங்கிய மாவு இருக்கும் பாத்திரத்தை எடுத்துப் பார்த்தால் கனமே இல்லாமல் இருக்கும்.//
ReplyDeleteஇது கரெக்ட்... என் பிரச்சனையும் இதேதான்... பொங்காது எனக்கு... அதுக்கு காரணம் இங்குள்ள குளிர்...
ரைஸ் எல்லாம் 2 நாட்கள் கிச்சினில் இருந்தாலும் அப்படியே கல்லுப்போல இருக்கும் பழுதாகாது. இத்தனைக்கும் 24 மணி நேரமும் ஹீட்டர் ஓன்னிலேயேதான் இருக்கும்.... அது சொன்னால் புரியாது சொல்லுக்குள் அடங்காது எங்கட குளிர் பாருங்கோ...:)))
செய்ய ஆசையாக இருக்கு ஆனாப் பயமாக இருக்கு. போனமாதம்தான் ஒருகப் உழுந்து, 3 கப் அரிசி வீதம் போட்டேன்..... ஆனா பூய்க்கவில்லை:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... நான் சேர்த்தது பசுமதி அரிசி:))... இட்லி அரிசி எனக்குத்தெரியாது, இங்கு தமிழ்ப் பெயரில் எதுவும் கிடைக்காது.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))..
ReplyDeleteசிவா இன்னமும் வளராதபடியால்... சே..சே.. என்னப்பா இது சிவா இன்னும் வராதபடியால்.. மல்லிகைப்பூ இட்லி எல்லாம் எனக்கே எனக்கா:)))
அதிரா,இட்லி அரிசி அங்கே கிடைக்காதா? எ.கொ.அ.இ.?! யு.கே.ல எல்லா இந்தியப் பொருளுமே கிடைக்கும்ணு கேள்விப்பட்டேனே!
ReplyDeleteஇட்லி அரிசி இல்லைன்னா boiled rice(புழுங்கல் அரிசி) அல்லது par-boiled rice (அரை வேக்காடு:) அரிசி) கிடைக்குதான்னு பாருங்க,பாஸ்மதிய விட இந்தவகை அரிசிகள்தான் இட்லிக்கு நல்லா இருக்கும்.
மாவு புளிக்க, கன்வென்ஷனல் அவன்-ஐ கொஞ்சம் ஹீட் பண்ணி ஆஃப் பண்ணிட்டு உள்ளே வைங்க அதிரா.இல்லனா ஒரு பாத்திரத்தில் தண்ணிய நல்லா கொதிக்கவிட்டு அடுப்பை ஆஃப் பண்ணி, பாத்திரத்தை தட்டு போட்டு மூடிட்டு அது மேல அரைச்ச இட்லி மாவை வைச்சிருங்க. இந்த ரெண்டு முறையுமே நல்லா மாவை புளிக்கவைக்கும். அதுவும் இல்லன்னா, சமைக்கும்போது ஸ்டவ் டாப் ஏரியா நல்லா சூடா இருக்கும்ல, அது பக்கத்திலயே அரைச்ச மாவுப் பாத்திரத்தை வைச்சிருங்க. அப்பவும் நல்லாப் பொங்கும்.
நான் உப்பேரிபாளையத்திலயும் விடாம இட்லி செய்திருக்கேன்..அப்ப யூஸ் பண்ணின டெக்னிக்ஸ்தான் இதெல்லாம். நல்லாவே வொர்க் ஆகும்,ட்ரை பண்ணிப் பாருங்க.
உப்பேரிபாளையம்= உப்பு+ஏரி+பாளையம் = Salt + Lake + City, Utah..one of the coldest places in here! ;) ;)
/இப்ப்பாஆஆஆ பாருங்கோ இட்லி இட்லியாப் போட்டுக் கலக்குறேள் போங்கோ:)))/என்னாச்சு மாமி,நன்னா ப்ராம்மணாள் தமிழ் பேசறேள்? ஸ்கேட் பண்ணதுல பாஷை மாறிடுத்தோ?;))))
ReplyDeleteகொட்டைமுத்து ஊர்லருந்து பார்சல் போடச் சொல்லிருங்கோ,நோ அதர் கோ! ;)
சிவா வந்தாலும் உங்களுக்கு இட்லி உண்டு! பழைய பதிவுல நீங்க கேக்கலைன்னா இந்தப் போஸ்ட் போட்டுருக்கவே மாட்டேன்! தேங்க்ஸ் அதிரா!
**
ஸாதிகாக்கா,நீங்க டயட்ல இருக்கீங்களோ?? நாங்களும் டயட்டுதேன்..ஹிஹிஹி! நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லது.காய்ச்சாம அப்புடியேதானே சாப்பிடறோம்,அதனால அவ்வளவு கெடுதலா இருக்காதுன்னு நினைக்கிறேன். ஜஸ்ட் ஒரு இட்லிக்கு மட்டும் ஊத்தி சாப்டுங்க. நான் அதான் பண்ணுவேன்! :)
கருத்துக்கு நன்றி ஸாதிகாக்கா!
**
லஷ்மிம்மா,உங்களுக்கும் கிடைக்காதா? சரி விடுங்க,அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து சாப்ட்டுட்டுப் போலாம்! நன்றிமா!
**
காமாட்சிம்மா,செய்து பாருங்க,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
**
/இட்லி சூப்பரா பூனைக் குட்டி போல(கவனிக்கவும் பூஸார் அல்ல)இருக்கு./வானதி,நீங்க கவனிக்கச் சொல்லியும் கவனிக்காம போயிருச்சு பூஸ்! ;))))))
/ஒராளுக்கு நாலு இட்லி அதிகமில்லையா???(டவுட்டு )/ வளந்த ஆட்களுக்கு நாலு இட்லில்லாம் சாதாரணம் வானதி! ;) 5 இட்லி சாப்பிடலாம். ட்ரை பண்ணிப் பாருங்க! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
**
ஏஞ்சல் அக்கா, நீங்க ஊருல இருந்து வந்தப்புறம்தான் நான் ஊருக்கே போனேனா..அதான் லேட் இன்பர்மேஷன்! :)
கருத்துக்கு நன்றி!
**
aamam naanum kelvi pattu erukken ,soft idly kku kottamuthu pottu araipanganu...idly paakave saapidanumnu aasaiya erukku...super soft n tempting...maavu adhaivida azhaga erukku :)
ReplyDeletesorry b bare my thanglish :))
Spicy Treats
Ongoing Event : Bake Fest # 2
Do participate in My 300th Post Giveaway
ஆசியா அக்கா,நன்றி!
ReplyDelete**
அருணா,தேங்க்ஸ்ங்க!
**
ரேவதி,ஆமாங்க! நம்ம ஊருதான்! :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
**
நித்து,ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்! கருத்துக்கு நன்றி!
**
ஸ்ரீவித்யா,தேங்க்ஸ்ங்க!
**
வித்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
சங்கீதா,தேங்க்ஸ்ங்க! இட்லிமாவு இவ்வளவு வரவேற்பு பெறும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல! :)
ReplyDelete/வானதி,நீங்க கவனிக்கச் சொல்லியும் கவனிக்காம போயிருச்சு பூஸ்//அது வந்து பூஸூக்கு வயசாடுச்சி இல்லையா.???!!!! பாவம் போகட்டும்.
ReplyDeletesuper idly.
ReplyDeleteகோவை ஸ்பெஷல்..; சூப்பர்!!
ReplyDeleteமகி, இன்னுமொரு சந்தேகம்.... இட்லிக்கு அரிசி அரைக்கும்போது, நல்லா அரைக்கவேண்டுமோ? எனக்குச் சொன்னார்கள், ரவ்வைபோல கரகரப்பான பதமாக அரைக்க வேணுமென, அதுதானாக்கும் எனக்கு பொய்ங்கவில்லை:))).... எப்பவாவது உழுந்து + ரவ்வை இட்டலி நல்லா வரும்... ஆனா அரிசி வரவே வராது.
ReplyDeleteஅவனுக்குள் வைக்கும்முறை நானும் கேள்விப்பட்டேன், ஆனா செய்து பார்த்ததில்லை அவ்வ்வ்வ்வ்:))).
///இட்லி சூப்பரா பூனைக் குட்டி போல(கவனிக்கவும் பூஸார் அல்ல)இருக்கு./வானதி,நீங்க கவனிக்கச் சொல்லியும் கவனிக்காம போயிருச்சு பூஸ்! ;))))))///
ReplyDeleteஹையோ இது எப்போ நடந்தது, நான் இட்லி பார்த்து ரொம்ப சீரியசாகிட்டேனா... அதுதான் கவனிக்காமல் விட்டிட்டேன்போல அவ்வ்வ்வ்வ்வ்:)))).... ஓம் ஓம் பூஸார் இல்லை... இன்னும் குட்டிதானே கையோ ஹையோ:))).
///vanathy said...
/வானதி,நீங்க கவனிக்கச் சொல்லியும் கவனிக்காம போயிருச்சு பூஸ்//அது வந்து பூஸூக்கு வயசாடுச்சி இல்லையா.???!!!! பாவம் போகட்டும்///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... அது அங்கின எலி ஒன்று ஓடிச்சா... அதுதான்.... திசை மாறிப்போச்ச்ச்ச்ச்:))))
ஸாதிகா அக்கா, நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லது, அதில் கொழுப்பில்லை என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஊரில் எங்களுக்கு தெரிந்த ஒரு ஆன்ரி, அவ எப்பவுமே தினமும் நல்லெண்ணெய் மட்டுமே விட்டு நிறைய வெங்காயம் வதக்கி, அதனுள் முருங்கைக்காய் போட்டு வதக்கி, பின்பு கறித்தூள் போட்டு வதக்கி அப்படியே நல்ல பிரட்டல் கறியாக செய்வா. தண்ணி சேர்த்ததாக தெரியவில்லை எனக்கு...
அவ நல்ல மினுமினுவென(ஆளும் வெள்ளை:)) இருப்பா.. எல்லோரும் சொல்லுவினம் நல்லெண்ணெய் சாப்பிடுவதால்தான் உப்படி என:))))))
அதிரா sharon brand/niru brand /vani brand,thanjavur idli rice இத்தனை ப்ராண்டிலும் இட்லி அரிசி கிடைக்குதே .வெம்ப்ளில போய் பாருங்க கண்டிப்பா கிடைக்கும்
ReplyDeleteசில இடங்கள் இருக்கு ஒரு ஏசியன் பொருளும் கிடைக்காது .எங்க பகுதில
எல்லா வடஇந்திய பொருளும் கிடைக்கும்
Very informative, Mahi! Where can I get these seeds in Covai? I have tagged you and please visit my blog for details. http://gayathriscookspot.blogspot.com/2011/12/7-links-challenge.html
ReplyDeleteHello magi , ithu thaan kushbu idly nnu solranga. naanum try pannirukken but ivalo buss buss nnu valara. unga method try panren. Neenga narrate panna vidham super !! ;)
ReplyDeletekarrrrrrrrrrrrrr 4 mahi:).
ReplyDeleteஅஞ்சு ட்ரை பண்ணுகிறேன்... மியாவ் மியாவ்.
வீகெண்டில் கொஞ்சம் கடை கண்ணிக்குப்போயிட்டு வரதுக்குள்ள பூஸ்மாமி வந்து கர்ச்சனை பண்ணிட்டுப் போயிருக்காரே!
ReplyDeleteஅதிராமாமி!;),இட்லி மாவை நான் ரவை போல எல்லாம் அரைக்கமாட்டேன். நைஸாதான் அரைப்பேன். கொறகொறன்னு அரிசியை அரைக்கும் டெக்னிக் எங்க வீட்டுல கிடையாது! :)
ஏஞ்சல்அக்கா சொன்ன இட்லிஅரிசி வாங்கி வந்து இட்லி சுட்டு (படமாவது) அனுப்புங்கோ!:))) sorry for the delayed reply!
வணக்கம் சகோதரி! பதிவுலகில் புதியவன். என் மனைவி உங்கள் தளத்தை விரும்பிப் பார்ப்பார்கள். நான் இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். நிறைய தகவல்கள் அருமை. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:
ReplyDelete"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
சூப்பர் மகி!! எங்க வீட்லயும் கொட்ட முத்து சேத்து அரைப்பாங்க. நான் 6-8 சோயா பீன் சேர்த்து அரைப்பேன். அதுவும் இட்லி நல்லா வரும்.
ReplyDeleteமகி இட்லி சூப்பர்.
ReplyDeleteஆதிரா, இட்லி அரிசி கிடைக்கலேன்னா LONG GRAIN RICE (ENRICHED) இந்த வகை அரிசி இட்லிகி வாங்கி அரைக்கலாம் ,uk ல எல்லா asian கடைகளும் கிடைகிதாம்
அதிராமாமி!;),இட்லி மாவை நான் ரவை போல எல்லாம் அரைக்கமாட்டேன். நைஸாதான் அரைப்பேன். கொறகொறன்னு அரிசியை அரைக்கும் டெக்னிக் எங்க வீட்டுல கிடையாது! :)///
ReplyDeleteஎன்னாது மாமீஈஈஈஈஈஈ யோ? ஹையோ... என்னிடம் மகனிருக்கும் விஷயம், மகிக்கு எப்பூடித் தெரியும் அவ்வ்வ்வ்வ்வ்:)))).
அப்பூடியோ சங்கதி இம்முறை பாருங்கோ.... படம் அனுப்புறேன்:).
// sorry for the delayed reply!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதில இங்கிலீசு வேற:)))))))
//priya said...
ReplyDeleteமகி இட்லி சூப்பர்.
ஆதிரா, இட்லி அரிசி கிடைக்கலேன்னா LONG GRAIN RICE (ENRICHED) இந்த வகை அரிசி இட்லிகி வாங்கி அரைக்கலாம் ,uk ல எல்லா asian கடைகளும் கிடைகிதாம்//
அடடா லோங் கிரைன் ரைஸ் இங்கு எல்லா சுப்பமார்க்கட்டிலும் கிடைக்குது, எனக்கு அதுதான் அதிகம் சமைக்க பிடிக்கும், ரில்டா லோங் கிரைன் ரைஸ் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
இனி ஓக்கே இக்கிழமையே வாங்கி செய்து வந்து சொல்லுறேன்.... மிக்க நன்றி பிரியா... மீ அதிரா:).
ஆதிரா மாமீஈஈஈஈ!;) நான் சொன்னது நீங்க நினைச்ச மாதிரி இல்லை..இது வேஏஏஏஏஏஏஏஏஏற மாமி! ப்ராமணாள் பாஷை பேசினேளோன்னோ,அவாள்ளாம் வயசில பெரிய பொம்மனாட்டிகளை "மாமீ,மாமீ"ன்னு கூப்டுவா,அதாக்கும் நான் சொன்னது. மைக்கேல்மதனகாமராஜன் படம் பாத்ததில்லியோ நீங்க?
ReplyDelete/லோங் கிரைன் ரைஸ் இங்கு எல்லா சுப்பமார்க்கட்டிலும் கிடைக்குது,இனி ஓக்கே இக்கிழமையே வாங்கி செய்து வந்து சொல்லுறேன்/ ஸ்ரொப்ப்ப்ப்ப்! in my opinion, idli rice/boiled rice will give better idlies than long grain! :) இட்லி அரிசி கிடைக்காதுன்னா லாங் க்ரெய்ன் ஓக்கே.கிடைக்கும்னா அதே வாங்கி செய்து பாருங்கோ!
@வானதி, :)
ReplyDelete@விஜி அக்கா,நன்றி!
@ப்ரியா,நன்றி!
@அதிரா,நல்லெண்ணெய் ஆன்ரி கதை சூப்பர்!;) தேங்க்ஸ்!
@ஏஞ்சல் அக்கா,பூஸ்மாமிக்கு ஹெல்ப் பண்ணியதுக்கு தேங்க்ஸ்! ;)
@காயத்ரி,தொடர்பதிவில் இணைத்தமைக்கு நன்றிங்க. தொடர்கிறேன்.
கோவையில் கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்,ஹோம் மேஜிக் மற்ற சூப்பர் மார்க்கெட்ஸ் எல்லாத்திலயுமே கிடைக்கும்னு நினைக்கிறேன் காயத்ரி. நான் வாங்கியது ஹோம் மேஜிக்-ல! தெருமுனை கடைகள்லயுமே கூடக் கிடைக்கலாம், ட்ரை பண்ணிப் பாருங்க.
வருகைக்கும் கருத்துக்கு நன்றி!
@சித்ரா,முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!இட்லி செய்துபாருங்க. :)
@தனபாலன்,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. உங்க மனைவிக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிருங்க.:)
விரைவில் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.நன்றி!
@சுகந்திக்கா,சோயாபீன் சேர்த்து அரைப்பது நான் கேள்விப்பட்டிருக்கேன்,ஆனா எங்க வீட்டில கொட்டைமுத்துதான் யூஸ் பண்ணறோம். கொ.முத்து கிடைக்காதவங்களுக்கு நல்ல ஐடியா சொல்லியிருக்கீங்க,தேங்க்ஸ்!
@ப்ரியா, புது ப்ரியா,நீங்களும் யு.கே.வா??;) தகவலுக்கு நன்றிங்க. லாங் க்ரெய்னும் பச்சரிசிதான்..புழுங்கலரிசிதான் இட்லிக்கு சூப்பரா இருக்கும். இங்கே அரிசிப்பஞ்சம் வந்த நாட்களில் நான் லாங் க்ரெய்ன் அரிசியில் இட்லி செய்திருக்கேன்.நன்றாகவே வரும். பட்,கம்பேரிட்டிவ்லி இட்லிஅரிசி பெஸ்ட்!:)
//@ப்ரியா, புது ப்ரியா,நீங்களும் யு.கே.வா??;)//
ReplyDeleteமகி, நான் US ல தான் இருக்கேன். என் friends UK ல இருகாங்க அவர்களிடம் கேட்டுத்தான் சொனேன் . நான் Los angeles யில் இருக்கும் போது பக்கத்தில் Indian store கிடையாது ,பக்கத்தில் இருக்கும் costco வில் LONG GRAIN RICE வாங்கி இட்லி சுட்டதுண்டு ,நன்றாக இருக்கும், அந்த அனுபவத்தில்தான் சொனேன் .
/நான் US ல தான் இருக்கேன்./நீங்க ஜார்ஜியா-ல இருக்கீங்கன்னு எனக்குத் தெரியுமே!;) நீங்களே சொல்லட்டும்னுதான் அப்படி கேட்டேன்! :))))
ReplyDeleteLA-ல எப்ப இருந்தீங்க..எங்க இருந்தீங்க? நான் ஒரு 4 மாதம் அந்த ஏரியாவில் இருந்திருக்கேன். லாங் க்ரெய்ன் இட்லி நல்லா இருக்காதுன்னு நான் சொல்லவே இல்லைங்க. நானும் சால்ட்லேக்ல இருக்கப்ப அதை யூஸ் பண்ணிருக்கேன்.:)
தேங்க்ஸ்ப்பா!
Thanks Mahi..
ReplyDeleteஎப்புடி மகி எப்புடி!!!!!!!!!! நான் Los angeles ல ஒரு 6 மாதம் Torrance ல இருந்திருக்கேன்
ReplyDeleteWhat a surprise? I was there in the same place for 4 months in 2008 begining! Used to go to artesia to gey grocery! I think there is a gujarathi indian store near Lomita Blvd...Hmmm...nice surprises because of my blog! :)
ReplyDeleteme the firstu..
ReplyDeleteim idleein ragasiam...:)
ReplyDelete//போட்டோலே பாருங்க, இட்லில குட்டிக்குட்டிகுட்டியா எவ்ளோ ஹோல்ஸ்னு//
ReplyDeleteஇதையெல்லாம் பாத்தா எனக்கு ஹார்ட்ல தான் ஹோல்ஸ் விழுகுது... போ மகி...ஹ்ம்ம்ம்
சிவா,நன்றி!
ReplyDeleteபுவனா,உன் கமென்ட்டைப் படிச்சு விழுந்து பொரண்டு உருண்டு சிரிச்சுட்டேன்! ஹாஹாஹா! :))))))
கருத்துக்கு நன்றி புவனா!
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு