Monday, January 13, 2014

புத்தாண்டு-புகைப்படத்தொகுப்பு..


புது வருடத்தில் கோயிலுக்குப் போகலாம் என எண்ணி, பலநாள் தவணையாக இருந்த ஒரு கோயிலுக்குப் போயிருந்தோம். அங்கு எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு! வீட்டிலிருந்து அரைமணி நேரப் பயண தூரத்திலே இருந்தும், என்னவர் தினமும் இதே வழியிலேயே அலுவலகம் சென்றும், இந்த ஸ்வாமிநாராயண் மந்திருக்குச் செல்ல எங்களுக்கு நான்கு வருடங்கள் பிடித்திருக்கின்றன. :) சரி வாருங்கள், என் பார்வையில் கோயிலை ஒரு சுற்று வரலாம்! 
ஶ்ரீ ஸ்வாமி நாராயண் என்பவர் ஒரு விஷ்ணு பக்தர், ஞானஷ்யம் பாண்டே என்ற பெயரில் உத்தர்ப்ரதேஷ் மாநிலத்தில் பிறந்து சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, 7 வருடங்கள் இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து குஜராத் மாநிலத்தில் கோயில் அமைத்தவர். அவரது இயக்கம் BAPS (Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha)  என்ற பெயரில்  பல இடங்களில் வேர்விட்டுப் பரவியிருக்கிறது. குஜராத், நியூடெல்லியில் மிக பிரம்மாண்டமான ஆலயங்கள் உள்ளன. இது மட்டுமில்லாமல் லண்டன், ஹூஸ்டன், ஷிகாகோ, அட்லாண்டா போன்ற இடங்களிலும் இவரது கோயில்கள் உள்ளன.  சலவைக்கற்களாலும், க்ரானைட் கற்களாலும் இழைத்து அழகழகான சிற்பங்களுடன் பார்த்த விழி பூத்துப்போகும்படி அழகான கட்டக்கலையுடன் மிளிர்கிறது இந்தக்கோயில். 

பார்க்கிங் லாட்-ல் காரை நிறுத்திவிட்டு வருகையில் முதலில் நம்மை எதிர்கொள்கிறது "ஹவேலி" என்ற பெயருடன் விசிட்டர் சென்டர்! கட்டிடத்தின் உள்ளேயும் கேரளத்தில் மரவேலைப்பாடுகளை நினைவுபடுத்தும் நுணுக்கமான சிற்பங்களுடன் உள்ளது. இங்கே அழகிய சிற்பங்கள், கைவினைப்பொருட்கள், மற்றும் இந்திய மளிகைப் பொருட்கள், இனிப்புகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.  


இங்கிருந்து நாங்கள் வாங்கிவந்தது ஒரு யானையும், பூந்தி லட்டுவும்! லட்டு காலியாகிட்டதால் யானையார் மட்டும் உங்களைக் காண வந்துள்ளார்! :)

ஶ்ரீ ஸ்வாமி நாராயண் மந்திர் - பளிங்காலும் க்ரானைட் கற்களாலும் இழைத்து கட்டப்பட்ட கோயிலின் முன்னால் நட்சத்திரவடிவில் ஒரு செய்குளம் உள்ளது. அவ்வப்போது நீரூற்றுகள் நட்சத்திரக்குளத்தில் ஆங்காங்கே எழுந்து நடனமாடி அமைதியாகின்றன. நாங்கள் சென்றது ஒரு பொன்மாலைப் பொழுதாகப் போனதால் நிறையப் படங்கள் எடுக்கும்முன் இருள் கவிழ்ந்துவிட்டது.
இருளானாலும் விளக்கு வெளிச்சத்தில் கோவில் தகதகவென ஜொலித்தது.  படிகளில் ஏறி கோவிலின் உள்ளே நுழைகையிலேயே, "ப்ளீஸ் மெய்ன்டெய்ன்  சைலன்ஸ்" என்ற பலகைகள் வரவேற்கின்றன. உள்ளேயும் ஆங்காங்கே "சைலன்ஸ் ப்ளீஸ்" என்ற போர்டுகளைப் பிடித்தவண்ணம் ஆட்கள் நிற்கிறார்கள். ஆனாலும் நம்மூர் ஆட்களை கன்ட்ரோல் செய்ய இயலுமா? ;)

ஸ்வாமி நாராயண் அவர்களின் திருவுருவங்கள், ராதா-கிருஷ்ணர், ராமர்-சீதை-லக்‌ஷ்மணர், சிவன் - பார்வதி இவர்களையெல்லாம் தரிசித்துவிட்டு, கோயிலினுள்ளே உள்ள சிற்பங்களை வாயைப் பிளந்து பார்த்துவிட்டு,  உடன்வந்த இரண்டு நண்பர் குடும்பத்துடனும் இருட்டுக்குள்ளேயே ஃபோட்டோஷூட்-ஐ முடித்துவிட்டு கிளம்பினோம்.
விசிட்டர் சென்டர் அருகிலேயே உணவகம் இருக்கிறது. பூண்டு-வெங்காயம் சேர்க்காத உணவுகள் குறைந்தவிலையில் விற்பனை செய்கிறார்கள்.  நீளமான க்யூவில் நின்று பராத்தா, பனீர் கறி, கமன் டோக்ளா, ஸ்வீட், லஸ்ஸி, ஃப்ரைட் ரைஸ் என்று ஆளுக்கொரு ப்ளேட் வாங்கி ருசித்துவிட்டு, லட்டும் யானையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினோம். ஆக மொத்தத்தில் புத்தாண்டு ஒரு புதிய விதமான கோயிலில் துவங்கியிருக்கிறது. :) 
~~~
இந்தக் கோயில் மாலிபு பாலாஜி கோயில்! கிறிஸ்துமஸ் அன்று சென்றிருந்தோம், அழகாக வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தார்கள். என்னவர் எடுத்த படத்தை உபயோகிக்காமல் இருந்தால் எப்படி? மஹி'ஸ் ஸ்பேஸ்னு பேரடிச்சு பப்ளிஷும் பண்ணிட்டேன்! ;)
~~~
Holliday Bakes, Butter Biscuit & Coconut Biscuit
எல்லாரும் எடுத்துக்குங்க, அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! 

பி.கு. ஸ்வாமி நாராயண் மந்திர் பற்றிய மேலதிகத்தகவல்கள் அறியவிரும்பினால் அங்கேயே இரண்டு இடங்களில் இணைப்பு கொடுத்திருக்கிறேன், க்ளிக் செய்து பார்க்கவும்.  நன்றி! 

12 comments:

  1. சகோதரிக்கு வணக்கம்
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html

    ReplyDelete


  4. ஸ்வாமி நாராயண் மந்திர் பற்றிய அருமையான தகவல்கள்..பாராட்டுக்கள்..!

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய
    பொங்கல் வாழ்த்துக்கள். இப்புத்தாண்டு பல நன்மைகள் கிடைக்க வாழ்த்துக்கள்.
    அழகான கோவில்.படங்கள் நன்றாக இருக்கு.பகிர்விற்கு நன்றி மகி.

    ReplyDelete
  6. அச்சச்சோ எழுத்துப் பிழை... இதை பப்ளிஸ் பண்ணுங்க.

    உங்களுக்கும்.. கணவருக்கும், குட்டி ஏஞ்சலுக்கும் இனிய இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete

  7. உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் & புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு மகி.

    ReplyDelete
  8. புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.ஹாலிடே பேக்கிங் சூப்பர். குட்டி பாப்பாவை எப்போ எங்களுக்கு அறிமுகம் செய்யப் போறீங்க..? வெயிட்டிங்..

    ReplyDelete
  9. யானையார் அழகா இருக்கார்...

    தில்லியில் அக்‌ஷர்தாம் கோவில் இவர்களது தான் என்று நினைக்கிறேன்...

    இரவில் ம்யூசிக்கல் பவுண்டைன் பார்த்தது கண்கொள்ளா அழகு...

    ReplyDelete
  10. தேங்காய் பிஸ்கட்டும் பட்டர் பிஸ்கட்டும் பேக் செய்வதற்கு முன்னாடியே முந்திரிக்கொட்டையாட்டம் போட்டோ எடுத்து விட்டீர்களா மகி?:)

    ReplyDelete
  11. @ஸாதிகாக்கா, ஜோடாப்புட்டிக் கண்ணாடிய மறந்துட்டு வந்து பாத்துட்டீங்களோ? ;) :) ரெண்டுமே bake ஆன பிஸ்கட்தானுங்கோ!! :)))

    @ஆதி, ஆமாங்க! அக்ஷர்தாம் கோயில் இவங்களோடதுதான். அந்தக் கோயில் இங்கிருக்கும் கோயிலை விடவும் பலமடங்கு பெரியது என்றுதான் சொன்னாங்க.

    கருத்துக்கள்/வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!

    ReplyDelete
  12. விளக்கு வெளிச்சத்தில் கோவில் அழகாக இருக்கிறது.

    யானையார் க்யூட்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails