...இப்படி இருந்த நீ
இப்புடி ஆகிட்டே!
:)
இந்த படங்கள் & செய்தி என்னவர் எனக்கு அனுப்பியது!! :))) எப்போதும் அலைபேசி கையிலேயே இருக்கும், அடிக்கடி/அவ்வப்போது பேசுவதும் செய்திகள் அனுப்பிக்கொள்வதுமாக இருப்போம் இருவரும். சமீப காலமாக அலைபேசி சைலண்ட் மோட்-ல் போனதால் அவர் அனுப்பும் ஐ-மெஸேஜ்களை உடனே பார்ப்பது தவறுவதும், போனில் அழைப்பு வருகையில் சத்தமில்லாமலிருப்பதால் கவனிக்காமல் விடுவதுமாக நடப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் வெறுத்துப் போய் வந்த அழகுக் குதிரைப் படங்கள்தான் இவை! :D
அம்மாவும் பெண்ணும்..
அப்பாவும் பெண்ணும்...
எங்க குட்டி தேவதையின் பெயரைத் தெரிந்துகொள்ள ஆவலாகக் கேட்ட அனைவருக்கும் நன்றிகள்! குட்டிப் பாப்புவின் பெயர் "லயா"
ஷார்ட் & ஸ்வீட்டாக, வடமொழி எழுத்துக்கள் இல்லாததாக, இருக்கும் நாட்டு மக்களும் உச்சரிக்க சுலபமாக, நட்சத்திரத்துக்கேற்ற எழுத்தில், நியூமரலாஜி எண்ணும் சரியாக என பல்வேறு கட்டுப்பாடுகளையும் நிறைவு செய்து எங்கள் மகளுக்கென அமைந்த பெயர் இது.
இனிமேல் ஜீனோ புராணத்துடன் லயா அருண்குமாரின் பங்களிப்பும் என் வலைப்பூவில் அவ்வப்போது இடம்பெறும். :)))
என்னுயிர்த் தோழன் படத்தில் வரும் இந்தப் பாடல் பாதிக்குப் பாதி வசனகவிதையாக வரும். படிப்பதற்கு(எனக்குப் பாடத் தெரியாதுங்கோ!! ;)) நன்றாக இருப்பதால் அடிக்கடி காக்கைக்குரலில் கத்தி(!) என் குட்டிப் பெண்ணைப் பயமுறுத்திக் கொண்டிருப்பேன், நீங்களும் கேட்டுப் பாருங்க! :)
~~~
தீபாவளி-கிறிஸ்துமஸ்-நியூ இயர் நாட்களில் மின்விளக்குகள் போட்டு அலங்கரித்திருந்தோம். வீடு மாறி செடிகள் எல்லாம் இறங்கி ஏறி கொஞ்சம் பாதிக்கப்பட்டு ஓரளவு சீராகி இருக்கின்றன. குளிர் என்பதால் குறிப்பிடத்தக்க அப்டேட் எதுவுமில்லை. இந்த வீட்டில் செடிகளுக்கு வெயில் கிடைப்பதும் கொஞ்சம் குறைவாக இருக்கும் என நினைக்கிறேன். வசந்தம் வந்தால் தெரியும்.
வீட்டிலிருந்து கீழே இறங்கியதும் சாலை இருப்பதால் எங்க Furry Baby-யின் பாதுகாப்புக்காக..
கேட் போட்டு அவரை லாக் பண்ணிவிட்டோம். இருந்தாலும் வெளியே வந்து குரைப்பது குறையவில்லை! ;)
~~~
பொறுமையா இங்கே வந்து இதுவரை படிச்சுட்டும் வந்துட்டீங்க..லட்டு சாப்ட்டுட்டுப் போங்க! :)
நன்றி!
பதிவு மிகவும் அழகா இருந்தது..
ReplyDeleteகுதிரை அழகா பின்னல் போட்டிருக்கே... அவ்வப்போது அலைபேசியையும் கவனிங்க...:))
லயா பெயர் இனிமையா இருக்குங்க.... அம்மாவின் அரவணைப்பிலும், அப்பாவின் பாதுகாப்பிலும் குழந்தை நல்லபடியாக வளரட்டும்..வெற்றிகள் பல அவளுக்கு கிடைக்கட்டும்..
பாட்டுக்கும் லிங்க எங்கப்பா?
என்ன லட்டுன்னு சொல்லலையே...
ஆஆஆ.....அழகான குட்டியூண்டு கை ! 'லயா'___ பெயர் அழகா இருக்கு மகி.
ReplyDeleteஎப்பவோ இப்படி ஆகிப்போன எங்களை மாதிரி..... இப்பவாவது நீங்க இப்படி ஆனதுல அளவிலா மகிழ்ச்சி ! இது ஆரம்பம்தான், இன்னும் எவ்ளோ இருக்கு. என்னால முடிஞ்சவரைக்கும் பயமுறுத்தியாச்சு.
Laya short and sweet name. Congratulations.
ReplyDeleteLakshmi
Laya, nice name Mahi and the clicks with the horses, nice humor..
ReplyDeleteவாழ்த்துகள்! பெயர் அருமையாய் இருக்கிறது.
ReplyDelete@ஆதி, பாடல் லிங்க் எடிட் பண்ணும்போது எப்படியோ மிஸ் ஆகியிருக்குங்க..இப்ப இணைத்துட்டேன்! நன்றி! :) குதிரை படம் முகப்புத்தகத்தில் வந்திருக்கும் போல, டைமிங்-கா யூஸ் பண்ணிட்டார்! முதல் கருத்துக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்! :))))
ReplyDeleteலட்டு ரெசிப்பி சீக்கிரம் போஸ்ட் பண்ணறேன்(என நம்புகிறேன்!) அதுவரை என்னன்னு யூகம் பண்ணிட்டே இருங்க! ஹஹஹா!!
@சித்ராக்கா, (ரொம்ப)பயப்பட்டது முதல் 6 வாரங்களில்தான்..இப்ப கொஞ்சம் கம்மியா பயப்பட்டுட்டுதான் இருக்கேன். இருந்தாலும் எங்கள மாதிரி சின்னப்புள்ளைங்களை இப்படியெல்லாம் சொல்லிப் பயமுறுத்தக்கூடாது! கர்ர்ர்ர்ர்ர்!;)
நன்றி அக்கா!
@ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
@கிரேஸ், பெயர் உங்களுக்கும் பிடிச்சிருக்கா? ரொம்ப சந்தோஷம்..நன்றிங்க! :)
அம்மாவும் பெண்ணும் + அப்பாவும் பெண்ணும் படங்கள் மிகவும் அருமை...
ReplyDeleteலயா செல்லத்திற்கு வாழ்த்துக்கள்...
மீண்டும் வந்து பாட்டையும் ரசித்து விட்டேன்... எனக்கும் பிடித்த பாடல்..
ReplyDeleteபேசன் லட்டு? சூர்மா லட்டு?
@lakshmi, thanks very much for the comment! :)
ReplyDelete@DD Sir, thanks for the wishes n comment! :)
@Adhi, thank you! it's wheat flour&edible gum laddu. Shall try to post the recipe soon.
குட்டி பொண்ணு அப்பாவின் கையை இறுக்கி ஹோல்ட் செய்திருக்கா so sweet and cute !! மஹி ...லயா குட்டி கிளெவர் செல்லம் ..
ReplyDeleteமஹி நானும் காக்கா கத்துற மாதிரிதான் பாடுவேன் பொண்ணுக்கு விவரம் தெரிஞ்சவுடன் டப்புன்னு சின்ன கையால் வாயை மூடுவாங்க (அனுபவம் ) :)) நம்ம குரல் வளத்தை தாங்க முடியாம அவங்களே பாட ஆரம்பிச்சிடுவாங்க :)
ஜீனோ :) நல்லா என்ஜாய் பண்றார் போலிருக்கு ..இவ்ளோ நாளும் ஜன்னல் வழியா பார்ப்பார் இப்போ அண்ணாவ்க்கு ரொம்ப ஜாலியா டைம் பாஸாகும் :)
குதிரையும் குட்டியும் லட்டும் அழகு..!
ReplyDeleteலயாவிற்கு ஆசிகள் பல. குட்டிக் கையைப் பார்க்கும் போதே செம க்யூட் ஆக இருக்கிறது. சித்ரா சொல்வது போல் இது ஆரம்பமே. ஒவ்வொரு நொடியும் ரசிக்க வேண்டிய நேரம் இது. ரசித்துக் கொண்டிருங்கள்........
ReplyDelete"லயா" மிகவும் அழகான பெயர் வைத்திருக்கிறீங்க மகி. அழகா அப்பாவோட கையை பிடித்திருக்கிறா. இப்பவே நல்லா புரிஞ்சிட்டாங்க. ஜீனோவுக்கு ஓரே குஷி போல.படங்கள் ,லட்டும் அழகு.வாழ்த்துக்கள் மகி
ReplyDeleteஆஹா ! மகி அருமையான பகிர்வு.உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை. ~ லயா ~ அழகான பெயர்.அழைக்க இனிப்பாக இருக்கு,.லயா லட்டுக் குட்டியை அடுத்த பகிர்வில் பார்ப்போம்ம்ம்ம்... ! அம்மாவும் மகளும் பாவம் அப்பாவையும் கவனியுங்கோ !
ReplyDeleteVery nice name Mahi. My hugs and kisses to baby Laya. Nice to meet geno after a long time. so we had the darshan of the tenderr hands. Gold bless you all. take care
ReplyDeleteLaya nicr name mahi........nalla surukkamaana anaivatukkum use panuramaadhiri easyaana name.kuttikku anbana vaalhukkal
ReplyDeletereally shaort and sweet name mahi.
ReplyDeleteஏஞ்சல் அக்கா, பப்ளிக்குல நம்ம குரல்வளம் பற்றிய ரகசியத்தையெல்லாம் போட்டு உடைக்கறீங்க? ;)
ReplyDeleteஜீனோ இப்பல்லாம் பால்கனி வழியா கார் கிளம்பறத பாத்துட்டு ஒரே அழுகாச்சு! ஏன் கேக்கறீங்க? ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
இராஜராஜேஸ்வரி மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ராஜி மேடம், வர்கைக்கும் கருத்துக்கும் நன்றி! ரசிக்கும் தருணங்களை ரசித்தும் கேமராவில் பதித்தும் கொண்டுதானிருக்கேன், ஆனா நாட்கள் படு வேகமா ஓடறது போல ஒரு பீலிங்கு! :)
~~
அம்முலு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! ஆமாம், லயா அப்பா கைய இறுக்கமாதான் பிடிச்சிட்டாங்க! :)
~~
ஆசியாக்கா, //அம்மாவும் மகளும் பாவம் அப்பாவையும் கவனியுங்கோ // ஹிஹி..கவனிக்கத்தான் நினைக்கிறோம், ஆனாலும் அப்பப்ப மிஸ் ஆகிருது! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
~~
மீரா, வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி! :)
~~
கொயினி, கரெக்ட்டாதான் சொல்லிருக்கீங்க! நன்றி!
~~
குறிஞ்சி, நன்றிங்க!
~~
கடைசியா வந்து ரசிச்சு படிச்சுட்டுப் போறேன். :)
ReplyDeleteஇன்னும் அதிகம் வசந்தங்கள் காண என் அன்பு வாழ்த்துக்கள்.
Best Wishes to Baby. LAYA...!
ReplyDelete