Saturday, August 14, 2010

கோக்கனட் மக்ரூன்ஸ் & விருதுகள்


இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
~~~~~~~~~~

சமீபத்தில் ஒருநாள் எதேச்சையாக "yum-yum donuts"ல் கோக்கனட் மக்ரூன் சுவைக்க நேர்ந்தது. நான் கண்டெண்ஸ்ட் மில்க் சேர்த்து கோக்கனட் மக்ரூன் செய்திருக்கிறேன்.(இங்கே பாருங்கள்)
இந்த முறை சுவைத்தது,கொஞ்சம் வித்யாசமான சுவையில் இருந்தது.மிகவும் ருசியாக இருந்தது.வீட்டில் இதை செய்துபார்க்கவேண்டும் என்று அப்பொழுதே முடிவு செய்து..முயற்சியும் செய்துவிட்டேன். கிட்டத்தட்ட அதே சுவை வந்தது.அடுத்த முறை கடைக்குச் செல்லநேர்ந்தால், அந்த மக்ரூனையும் படமெடுத்து இணைக்கிறேன்.:) இப்போ, ரெசிப்பிக்கு போலாமா?

தேவையான பொருட்கள்
ஸ்வீட்டன்ட் கோக்கனட் ஃப்ளேக்ஸ்-1கப்

(இந்த ஸ்வீட்டன்ட் கோக்கனட் ஃப்ளேக்ஸ் அமெரிக்கன் சூப்பர்மார்க்கெட்டுகளில் பேக்கிங் செக்ஷ்னில் கிடைக்கிறது)
ஆல் பர்ப்பஸ் மாவு-1/4கப்
பேக்கிங் பவுடர்-1/2ஸ்பூன்
சர்க்கரை-1/4கப்
வெனிலா எஸ்ஸன்ஸ்-2டீஸ்பூன்
வெண்ணெய்-1ஸ்பூன்
முட்டையின் வெள்ளைக்கரு-2

செய்முறை
மாவுடன் பேக்கிங் சோடா சேர்த்து சலித்துவைக்கவும்.
உருக்கிய வெண்ணையுடன் முட்டையின் வெள்ளைக்கரு,சர்க்கரை,வெனிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்றாக கலந்துகொள்ளவும்.
அத்துடன் மாவு+பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து, கோக்கனட் ஃப்ளேக்ஸையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.


ஒரு பேக்கிங் ட்ரேயில் கோக்கனட் கலவையை 2ஸ்பூன் அளவுக்கு எடுத்து சற்று இடைவெளி விட்டு வைக்கவும்.

350F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 20நிமிடம்(அ) மக்ரூன்கள் பொன்னிறமாகும்வரை பேக் செய்யவும்.

கோக்கனட் மக்ரூன் ரெடி! :)

இனிப்பான மக்ரூன்களுடன் எனக்கு கிடைத்த அவார்டுகளையும் பகிர்ந்துகொள்கிறேன்.
என் இனிய இல்லத்தின் அன்புதோழி ஃபாயிஸா வழங்கிய விருதுகள்..

நன்றி ஃபாயிஸா!

சமைத்து அசத்தலாம் -ஆசியாக்கா எனக்குத்தரும் மூன்றாவது விருது இது!

மிக்க நன்றி ஆசியாக்கா!

25 comments:

  1. சுதந்திரதின வாழ்த்துக்கள்.மக்ரூன்ஸ் சூப்பர்.விருதிற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் மஹி. எங்கேயும் இன்று எனக்கு வட கிடைக்கவில்லை:(((. என் பக்கத்தில் உங்களை இணைத்திட்டேன், அதுதான் உடனே ஓடிவந்தேன்.

    பெயர் வாயில வருகுதில்ல.... கோக்கனற் மக்ரூண் சூப்பர். நோமல் கோகனட் ஃப்ளேக்ஸ் தான் எனக்கு தெரியும். சுவீட்டண்ட் எனவும் கிடைக்குதோ?

    ReplyDelete
  3. looks good and yummy, beautiful Mahi

    ReplyDelete
  4. அப்படியே கேக்குடன் ஒரு கப் காஃபி பிளிஸ்..

    ReplyDelete
  5. விருதுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..


    இந்த கேக்குக்கு கோகனட் பர்பின்னு ஒரு பேர் இருக்கே . அதுவா இது . இல்லை இதுவா அது . இல்லை ரெண்டும் ஒன்னா . இல்லை ரெண்டும் வேறு வேறேயா . விளக்கம் பிளிஸ்.

    ReplyDelete
  6. பேரு வைக்காட்டி சாப்பிட மாட்டோமா என்ன .. ? ஹி..ஹி... அதிஸ் வேனாட்டி எனக்கு குடுத்துங்கோ..

    ReplyDelete
  7. Hi unga recipe nalla irukku egg illaamal pannalaama?

    thanks
    Ani

    ReplyDelete
  8. மக்ரூன்ஸ் மிகவும் அருமையாக இருக்கு...பேக்கிங் ஐயிட்டம்ஸ்லாம் பெர்பெக்ட்டா செய்றீங்க மகி!! விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!!..இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. சூப்பர் மக்ரூன்ஸ் மகி!! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ஜெய்லானி said...
    பேரு வைக்காட்டி சாப்பிட மாட்டோமா என்ன .. ? ஹி..ஹி... அதிஸ் வேனாட்டி எனக்கு குடுத்துங்கோ..
    //// ஹா..ஹா..ஹா... ஜெய், என்ன பெரிய மனசு உங்களுக்கு, இப்பத்தான் சாப்பிட்டு முடித்தேன், உடனே கேட்கிறீங்களே டிஷ்சை:)))), இருக்கட்டும் இருக்கட்டும் டிஷ் வோஷரில மஹி போடுவாவாம், உங்களுக்கெதுக்கு வீண் சிரமம்??:))).

    ReplyDelete
  11. superaa irukku mahi ... happy independence day to you too

    ReplyDelete
  12. //இருக்கட்டும் இருக்கட்டும் டிஷ் வோஷரில மஹி போடுவாவாம், உங்களுக்கெதுக்கு வீண் சிரமம்??:))). //

    ஹி..ஹி. அப்ப ஐட்டம் சரியில்லையா..?

    ReplyDelete
  13. விருதுக்கு வாழ்த்துக்கள் , மக்ரூன்ஸ் ரொம்ப சுவையா இருக்கு.

    ReplyDelete
  14. Macroons sounds very nice,should be very flavorful with coconut,wish I could taste some...is there any eggless version in this ?

    ReplyDelete
  15. சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    விருதுகளுக்கும் வாழ்த்துக்கள். மேலும் பற்பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன். ;)

    ம்... மகி.. நான் தேடிப் பார்த்து அலுத்துவிட்டேன். என் கண்ணில் ஸ்வீட்டன்ட் கோக்கனட் ஃப்ளேக்ஸ் படவே மாட்டேன் என்கிறது. ;( சாதாரண டெசிகேடட் கோகனட் சேர்த்துச் செய்து பார்க்கப் போகிறேன். ஆனால் இப்போ இல்லை.

    ReplyDelete
  16. lovely recipe !!
    Do drop by
    http://padhuskitchen.blogspot.com/
    when u find time

    ReplyDelete
  17. விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. Superb recipe...I love it...Mahi enral baking...avalavu famous...mahi neega bakingla......

    ReplyDelete
  19. வாவ்.. அப்படியே கடைல வாங்கறது போலவே இருக்கே பாக்றதுக்கு... இந்த sweeted coconut flakes கடைலயே கெடைக்குதா ரெடிமேடா? Thanks for the sweet recipe Mahi

    ReplyDelete
  20. @ஆசியாக்கா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    @அதிரா,இங்கே பேக்கிங் செக்ஷன்ல ஸ்வீட்டன்ட் கோக்கனட் ஃப்ளேக்ஸ் கிடைக்குது.நீங்க சொல்வது இண்டியன்ஸ்டோர்ல கிடைக்கும் கோக்கனட் ஃப்ளேக்ஸ் தானே? படம் இணைத்திருக்கேன் பாருங்க.வாழ்த்துக்கு நன்றி அதிரா!

    @வேணி,நன்றிங்க!

    @/கோகனட் பர்பின்னு ஒரு பேர் இருக்கே . அதுவா இது . இல்லை இதுவா அது / ஜெய்அண்ணா,இது இங்கத்த கோக்கனட் பர்ஃபி!:)

    கொஞ்சம் வேற மாதிரி..முட்டையும்,கண்டன்ஸ்ட்மில்க்கும் சேர்த்து செய்வாங்க.ருசி பர்ஃபிய விட கொஞ்சம் வேறுபடும். காபிதானே,கட்டாயம் தரேன்.நன்றி அண்ணா!

    @அனி,மக்ரூன்ஸ்ல மெய்ன் இன்க்ரிடியன்ட்டே முட்டை தாங்க.அது இல்லாம செய்யலாமான்னு தெரியலை..எக் சப்ஸ்டிட்யூட் போட்டு செய்து பார்க்கலாம்னு நினைக்கிறேன்.
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க!

    @மேனகா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேனகா!

    @தெய்வசுகந்தி-வாழ்த்துக்கு மிக்க நன்றி சுகந்திக்கா!

    @பவித்ரா,நன்றி பவித்ரா!

    ReplyDelete
  21. ////இருக்கட்டும் இருக்கட்டும் டிஷ் வோஷரில மஹி போடுவாவாம், உங்களுக்கெதுக்கு வீண் சிரமம்??:))).

    ஹி..ஹி. அப்ப ஐட்டம் சரியில்லையா..?////இவிங்க காமெடி தாங்க முடிலயே!! நான் யாருக்குன்னு பதில் சொல்லுவேன்??:):)

    (நைஸா எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆயிடுவோம்!;))


    @சாரு,வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சாரு!

    @ராஜி,எக்லெஸ் வர்ஷன் இருக்கறமாதிரி தெரிலைங்க.எல்லா ரெசிப்பிலயும் எக்-வொயிட் சேத்துதான் இருக்கு.எக் இல்லாம செய்துபார்க்கிறேன் ஒருமுறை,நல்லா வந்தா கட்டாயம் சொல்கிறேன்.நன்றிங்க!

    @இமா,வாழ்த்துக்கு மிக்க நன்றி! உங்களுக்கும் ஸ்வீட்டன்ட் கோக்கனட் கிடைக்கலியா? :-| பெரீய்ய கடைல நல்லாஆஆ தேடிப்பாருங்களேன்.இருக்கும்னுதான் நினைக்கிறேன்.

    @அதிரா,நீங்களும் பேக்கிங் செக்ஷன்ல பாருங்க.யு.கே.லயும் இருக்கணும்னுதான் தோணுது!

    @பது,வருகைக்கு மிக்க நன்றிங்க.சீக்கிரமா வரேன் உங்க ப்ளாகுக்கு.(நான் உங்க ஃபாலோயர் ஆகி பலநாளாகுது;))

    @அகிலா,முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    @ப்ரியா.நன்றிங்க!!

    @கீதா,ரொம்ப சந்தோஷம் உங்க கருத்தைப் பார்த்து! மிக்க நன்றி கீதா.

    @புவனா,ரெசிப்பில ஸ்வீட்டன்ட் கோக்கனட் பேக்கட் போட்டோ சேர்த்திருக்கேன்,பாருங்க. சூப்பர்மார்க்கட்ல ரெடிமேடாவே கிடைக்குது.முதல்முறை நார்மல் தேங்காய்னு நினைத்து வாங்கிட்டேன்.அது ஒரு இனிப்பான விபத்தாகிடுச்சு! இப்ப அடிக்கடி வாங்க ஆரம்பிச்சுட்டேன்.:)
    நன்றி புவனா!

    ReplyDelete
  22. மகி, விருதுக்கு வாழ்த்துக்கள். கோக்கனட் மக்ரூன்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  23. இப்போதான் உங்க கமெண்ட்டைப் பாத்தேன்.நன்றி வானதி!

    ReplyDelete
  24. Mahi, check this link
    http://www.nithubala.com/2010/11/eggless-coconut-macaroons-baked-goodies.html

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails