Thursday, February 20, 2014

சாதிமல்லிப் பூச்சரமே..

சாதிமல்லிப் பூச்சரமே..
சங்கத்தமிழ்ப் பாச்சரமே!
ஆசையென்ன ஆசையடி...
அவ்வளவு ஆசையடி! 
ஆசையாசையாய்ப் போன டிசம்பரில் வாங்கிவந்து வைத்த வின்டர் ஜாஸ்மின் இந்த வருடம் ஃபிப்ரவரியில் பூப்பூவாய்ப் பூத்துச் சொரிகிறது எங்க வீட்டில்! :)  

 2013 டிசம்பரில் செடி கொள்ளாமல் பூக்களுடன் காஸ்ட்கோ-வில் வாங்கிவந்த செடி/கொடி இந்த கோடை-இலையுதிர்காலங்கள் கடந்து குளிர்காலம் வந்தபின்னும் கம்மென்று வெறும் இலைகளுடனே நின்றிருந்தது. பூக்கள் வருவதற்கான எந்த முகாந்தரமும் காணோம்! கொடிகளை கட் செய்து விடுவோம், புதிதாகத் தழைகையில் பூக்கள் வரும் என என்னவரிடம் சொல்லிப்பார்த்தேன், அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
டிசம்பரில் வீடு மாற்றியதில், முதல் மாடியிலிருந்து இறக்கப்பட்டு காரில் சில நூறடிகள் பிரயாணித்து, மீண்டும் முதல் மாடியேற்றப்பட்டதில் செடி/கொடி கொஞ்சம் ஷீணப்பட்டுவிட்டது. கூடவே குளிர் காலத்தின் இடையே திடீரென எகிறிய வெயிலில் தண்ணீர் ஊற்றப்படாமல் விட்டதில் வாடவே துவங்கிவிட்டது! :-| அப்பொழுதுதான் என் தொட்டில்ப் பூவைக் கவனிப்பதில் ஆழ்ந்து,  தொட்டிப்பூக்களைக் கவனிக்காமல் விட்டிருக்கிறேன் என உரைத்து, செடிகளைக் கவனித்துத் தண்ணீர் விட்டு, சாதிமல்லிப் பெண்ணிடம் பேசிச் சமாதானம் செய்துவிட்டேன். அவளும் போனால் போகிறதென்று பெரிய மனசுடன் என்னை மன்னித்துப் பூத்துவிட்டாள்! :D
மொட்டுக்கள் வந்து பலநாட்களானபின் கடந்த வாரத்தில் முதன்முதலாகப் பறித்த மலர்கள்...
வாரக்கடைசியில் 3 நாட்கள் ஊர் சுற்றிவிட்டு வந்து பார்த்தபோது செடி பூராவும் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன.  படத்திலிருப்பவை ஒரு பாதிப் பூக்கள்! இதே போல இன்னொரு மடங்கு செடியிலேயே இருந்தது, பறிக்க நேரமில்லை!
பூக்களைச் சரமாக்கிவிட்டு, அடுத்தநாள் மீதமிருந்த மலர்களில் கொஞ்சத்தைப் பறித்து ஆசைதீரச் சரம்தொடுத்து ("இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மகேஸ்வரி!" என்று என் சாதிமல்லிச் செடி மனசுக்குள் சிரித்திருப்பாள்! :)) படமும் எடுத்துவிட்டேன்..
 எங்கள் வீட்டுச் சாதிமல்லிப் பூச்சரம்!..இது நேராகச்  சென்று அலங்கரித்தது..


மஞ்சளும் தந்த, மலர்களும் தந்த மங்கல மங்கை மீனாக்‌ஷியின் படத்தை! :) 
பொறுமையாகப் பார்த்து/படித்து ரசித்த அனைவரும் ஒரு கிள்ளு பூ எடுத்துக்குங்க..நன்றி!
:))))

12 comments:

  1. ம்ம் படத்தை மட்டும் பார்த்து பெருமூச்சு விட்டுக்குறேன் மகி...ஊருக்கு போனா ஆசை தீர தலையில் வச்சுக்கனும்.

    ReplyDelete
  2. வாசனை வருதே,
    வாசனை வருதே !!__________ நாங்களும் பாடுவோமில்ல !!! பறிச்சு கட்ற வரைக்கும் தொட்டில்பூ விட்டுச்சா !

    எனக்கு முதல்நாள் மாலை பறித்த மொட்டுக்கள்தான் வேணும், இல்லாட்டி ரெண்டாவது படத்திலிருக்கிற பூங்கொத்தை அனுப்பிடுங்க.

    ReplyDelete
  3. ஆகா...! என்னவொரு மகிழ்ச்சி...!

    முதல் பாடலும், காணொளி பாடலும் என்றும் ரசிக்கத்தக்கவை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. This is my favorite flower, just love the fragrance, loved reading the write up, as beautiful as those flowers..

    ReplyDelete
  5. மல்லிப்பூ தெரியும் .. சாதி மல்லி இது தானா ... இதை நாங்க கலர் பிச்சின்னு சொல்லுவோம் மகி. நம்ம வீட்டில பூத்த பூன்னா அதை தொடுக்கும் போது கிடைக்கிற சந்தோஷத்திற்கு ஈடு இணை இல்லை. பூ அழகா நெருக்கமா தொடுத்திருக்கீங்க. நல்லா இருக்கு.

    ReplyDelete
  6. ஒரு கிள்ளு எல்லாம் பத்தாது....:)))

    எனக்கும் மொட்டாக வைத்துக் கொள்ளத்தான் மிகவும் பிடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்து மணம் பரப்பும் சுகமே அலாதி தான்....:))

    இந்த ஒன்றரை வருடங்களாகத் தான் தமிழகம் வந்ததில் பூக்கள் வைத்துக் கொள்ள முடிகிறது.

    பாடல் எனக்கும் பிடித்தது தான்.

    ReplyDelete
  7. Nice post...மல்லிகை வாசம் இங்கே வரைக்கும் வீசுதே !!!

    ReplyDelete
  8. சாதிமல்லிப்பூவின் வாசத்தோடு மணக்கிறது என் பிறந்தமண்ணின் மணமும். மலரையும் பதிவையும் மைக அழகாகத் தொடுத்திருக்கிறீர்கள் மகி.

    ReplyDelete
  9. மல்லிகைச் செடியையும் குழந்தையாகப் பாவித்து மென்மையான நடையில் ஒரு இடுகை. அருமை மகி.

    ReplyDelete
  10. //மல்லிகைச் செடியையும் குழந்தையாகப் பாவித்து மென்மையான நடையில் ஒரு இடுகை//

    இங்கு துபாயில் எங்காவது இந்த பூ கிட்டும், வருடம் இரு முறை ஈதுக்கு தொழ பள்ளிக்கு செல்லும் வழியில் சாதிமல்லி பூ மரம் இருக்கும்., அந்த வாசனை தூரத்தில் இருந்து வரும் போதே ரொம்ப நல்ல இருக்கும், கொஞ்சம் பறித்து தலைவைத்து கொள்வேன்.

    ReplyDelete
  11. எனக்கும் மொட்டாக வைத்துகொள்ளதான் பிடிக்கும்

    ReplyDelete
  12. @மேனகா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! இங்கே கோயிலுக்குப் போகையில் நம்ம தென்னிந்தியப் பெண்கள் பூ வைச்சுட்டு வருவாங்க. அடுத்த வருஷம் நாங்களும் வைச்சுட்டுப் போவோமே! :)
    ~~
    // பறிச்சு கட்ற வரைக்கும் தொட்டில்பூ விட்டுச்சா !// சித்ராக்கா, அந்தப்பூவை கவனிச்சுகிட்டே அப்பப்ப கிடைச்ச ப்ரேக்ல கட்டியதுதான்! :)

    //முதல்நாள் மாலை பறித்த மொட்டுக்கள்தான் வேணும், இல்லாட்டி ரெண்டாவது படத்திலிருக்கிற பூங்கொத்தை அனுப்பிடுங்க.// ஓ, அனுப்பிட்டாப் போச்சு! :) நம்ம ஊர் ஜாதிப்பூ மாதிரி இதுவும் காலையில் சிவந்துபோகுமான்னு தெரில, சும்மாவே சிவப்பு கலந்துதானிருக்கு. டெஸ்ட் பண்ணிப் பார்க்கணும்!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
    ~~
    டிடி சார், நம்ம வீட்டுச் செடியில் வரும் காய்-பழம்-பூ எதுன்னாலும் ஒரு தனி மகிழ்ச்சிதானே! :)
    வருகைக்கும், பாடலை ரசித்து கருத்து தந்ததுக்கும் மிக்க நன்றிங்க!
    ~~
    ஹேமா, உங்க கமெண்ட்டைப் படிச்சாலே ஒரு தனி சந்தோஷம்தாங்க! தேங்க் யூ! :)
    ~~
    ராதாராணி, பிச்சிப்பூ நான் கேள்விப்பட்டிருக்கேன், ஆனா ஜாதிமல்லியத்தான் அப்படி சொல்வாங்க என கொஞ்சநாள் முந்தித்தான் தெரியும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! :) பை த வே, நான் எல்லாப்பூவையும் நெருக்கமாவே தொடுப்பது வழக்கம்..கோர்த்தாலும் அப்படியே! ;)
    ~~
    ஆதி, அப்படியே பழைய நினைப்பெல்லாம் கிளப்பி விடுது உங்க கருத்து! நீங்க ஶ்ரீரங்கத்தில என்ஸாய் பண்ணறீங்க, நாங்க ஏதோ இங்க கிடைச்சத வச்சு சந்தோஷப் பட்டுக்கிறோம்! :)
    அடுத்த முறை பறிச்சு தொடுக்கும்போது ஒரு முழம் பூ அனுப்பிவைக்கிறேன், சரியா? :) நன்றிங்க!
    ~~
    உஷா மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    கீத மஞ்சரி, நீங்களும் கோவையா?? ரொம்ப சந்தோஷம்! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    //மல்லிகைச் செடியையும் குழந்தையாகப் பாவித்து // இமா, இப்படியும் சொல்லலாம், அல்லது குழந்தையையும் பூவாகப் பாவித்து-ந்னும் சொல்லலாம்! ;) :) :)
    நீங்க சொன்னதும்தான் நானே அதை கவனிச்சேன். தேங்க்ஸு! ;)
    ~~
    //சாதிமல்லி பூ மரம் இருக்கும்.,// ஜலீலாக்கா, போட்டீங்களே ஒரு போடு!!! :)))) சாதிமல்லி மரமாஆஆஆஆ?? :))))
    வருகைக்கும் நேரமெடுத்து கருத்துக்கள் தந்ததுக்கும் நன்றி அக்கா!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails