Saturday, February 8, 2014

வானம் பார்க்க வாரீகளா? :)

வானம் பார்த்து பலநாளாச்சே, வாங்க பார்க்கலாம்! :)

தினமும் வீட்ட விட்டு வெளியே வரும்போதெல்லாம் பார்த்துட்டேதானே இருக்கோம், இப்ப என்ன புதுசாப் பார்க்கிறது?-ன்னு புருவத்தை உயர்த்துபவர்களுக்கு...

இது தென்-கலிஃபோர்னியா வானம்..மகி வீட்டுப் பக்கத்து வானம், மகியின் தொலைபேசியில் சிறைப்பட்டு வலைப்பூவில் விடுதலையாகி உங்களைக் காண வந்திருக்கும் வானம்! :)
படத்தில் மேலே தெரியும் வீடுதான் இப்போது நாங்கள் மாத்திக் குடி வந்திருக்கும் வீடு..ஒரு நாள் ஜீனோவுடன் மதியம் வாக் போய்விட்டு மலையேறி வருகையில், பச்சைப் பின்னணியில்  நீலவானமும் லேசாகத் தீற்றிய மேகங்களும், கூடவே ப்ரவுன் கலரில் வீடும் தெரிய க்ளிக்கியது! :)
இது கடந்த ஞாயிறு பின்மதியம்..சில்லென்று சூரியனும், குளிர்காற்றும் போட்டி போட்டுக்கொண்டு குளிரூட்டிய ஒரு பகற்பொழுது! வானத்தில் மேகங்கள் உல்லாசமாக ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன!  
எந்தப்புறம் திரும்பிப் பார்த்தாலும் எழில் சிந்தும் வானம்!
எல்லா மேகப் பசங்களும் சற்றே அழுக்காக:) நோஞ்சான் பிள்ளைகளாகத் திரிய, ஒரு மேகம் மட்டும் புஷ்டியாக, சர்ஃப் எக்ஸல் போட்டுக் குளிச்சுட்டு நைஸாக மலையில் பின்னாலிருந்து எட்டிப் பார்க்குது! ;)
எட்டிப் பார்த்த சுட்டி மேகத்தை என் தொட்டிச் செடிகளுடன் க்ளிக்கியது..

அதே நாளின் மாலையில் எல்லா மேகங்களும் கார்மேகங்களாகிப் பொதுக்கூட்டம் போட்டபொழுது   அபார்ட்மெண்ட் கட்டிடங்கள்...
~~~
பொறுமை இழக்காமல் படத்தைக் கண்டு களித்த;) அனைவருக்கும் அன்பான நன்றிகள்! 
தெம்பா சாப்ட்டுப் போங்க..
 வெங்காய பஜ்ஜி & பகோடா
 Italian Cheesecake..
Enjoy a Slice! 
:) 

12 comments:

 1. தேன் சிந்தும் வானம் .. அழகு ..!

  ReplyDelete
 2. என்ன ஒரு ஒற்றுமை ! கொஞ்ச நாளாவே நானும் வானத்தைதான் படம் எடுக்கிறேன். ஒரே மாதிரி இல்லாமல் இப்போல்லாம் லைட் ப்ளூ கலரில் பளிச் வெண்மையில் எங்கும் மேகக்கூட்டம்.

  மலைப்பகுதியில் வீடு, சூப்பரா இருக்கு மகி உங்க இடம் & பொறாமையாவும் இருக்கு. படங்கள் எல்லாம் சூப்பரா வந்திருக்கு. சரிசரி, காலை இட்லிக்கு ரெண்டு பஜ்ஜியும் ரெண்டு வடையும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க.

  ReplyDelete
 3. வானம் ஒரு அழகு என்றால் அதற்கான உங்கள் கமெண்டுகள் ஒரு அழகு மகி. கரும்பு தின்னக் கூலி போல் வானம் ரசிக்க வந்ததற்கு நாவூறவைக்கும் பஜ்ஜி பக்கோடா கூலியா? பேஷ் பேஷ்!

  ReplyDelete
 4. ;)) மகி எழுத்து கலக்கல். ;)) சர்ஃப் போட்ட மேகம்!! அவ்வ்!

  ReplyDelete
 5. ஆகா...! ரசித்தேன்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. நல்ல ரசனை .வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. உங்க ரசனையை ரசித்தேன்.. மனதுக்கும்,வயிற்றுக்கும் நல்விருந்து.

  ReplyDelete
 8. Lovely clicks Mahi, especially andha last apartment photo..

  ReplyDelete
 9. பகிர்வுக்கு மகிழ்ச்சி,அழகான பகிர்வு,சூப்பர் ஸ்நாக்ஸ்,கேக் ஆஹா அசத்திட்டீங்க. உங்க விட்டு செல்லக் குட்டிக்கு என் அன்பு முத்தங்கள்.

  ReplyDelete
 10. ரசித்து கருத்து தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!

  ReplyDelete
 11. i too love to see the sky...beautiful clicks

  by
  anuprem

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails