அவ்வப்பொழுது இந்த வலைப்பூ பக்கம் வந்து போகும் அனைவரின் நலமும் அறிய ஆவல். [ நாங்க நலம். நன்றி! :)]
ஊருக்கு போயிட்டு வந்தாச்சுங்க, ஆனா ப்ளாக் பக்கம் வரலை..வர முடியலை..முடியலை..முடியலை! ;)
சற்றே நீண்ட விடுமுறையாக கோவை போனாலும் நாட்கள் படுவேகமாக, படு பிஸியாக ஓடிவிட்டன.
கோவை ரோட்டோரக் கடையிலிருந்து சுடச்சுட வடை & சட்னிகள்! சாப்பிடுங்க..
முதல் படத்திலும், மேலே உள்ள படத்திலும் உள்ள பூக்கள் அம்மா வீட்டிலிருந்து..
~~~
அவ்வப்போது வலைப்பூக்களை எட்டிப் பார்த்தாலும் கருத்துக்கள் தரும் அளவு நிதானமாகப் பார்க்க முடிவதில்லை. பகிர்வதற்கு நிறைய இருந்தாலும், அதற்கு நேரம் அனுமதிக்கவில்லை! ஆனாலும் அவ்வப்பொழுது இங்கே வர முயல்வேன். இது அதற்கு ஒரு உதாரணப்பதிவு. :)
இந்தப் படத்தில், கோவையில் வீட்டருகே உலாவிய அம்மாவும் குட்டியும்..
நான் பிஸியாக இருப்பதற்கும் இந்தப் படத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை..இல்லை.. இல்லை என ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்ம்ம்ம்ம்!!!!
உங்களை ப்ளாக் ல் திரும்ப பார்த்து மகிழ்ச்சி மகி. லயா எப்படி இருக்கிறாங்க. எல்லாரும் நலம்தானே. நீங்க நிதானமா்நேரம்கிடைக்கும்போது வாங்க. நாங்க நம்பிட்டோம். நன்றி மகி.
ReplyDeleteஅம்முலு, லயா நலமா இருக்கிறாங்க. எல்லோரும் நலம்! நம்பியதற்கும், நேரமெடுத்து இங்கே வந்து பார்த்து கருத்தும் தந்தமைக்கும் மிக்க நன்றி அம்முலு.
Delete//நான் பிஸியாக இருப்பதற்கும் இந்தப் படத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை..இல்லை.. இல்லை என ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்ம்ம்ம்ம்!!!! //
ReplyDeletehaaa haaa :) அதான் சொல்லாமலயே தெரியுதே !!குட்டி மேடம் நடக்க ஆரம்பிச்சா நீங்க ஓடணும் ..
ஒண்ணு வடை பக்கத்தில் அது என்ன ? வெங்காயம்லாம் போட்ட அனியன் பஜ்ஜி ???
..மஞ்சள் பூக்கள் அழகு ..மகியின் அம்மாவும் மஞ்சள் பூ ரசிகைஎன்று நினைக்கிறேன் :))
அக்கா, அது பஜ்ஜி மாதிரி வடை! ஹி,,ஹிஹி! நல்லா ருசியா இருந்தது, அதனால நான் ஆராய்ச்சியெல்லாம் செய்யாம சாப்பிட்டுட்டேன். :)
Delete/மஞ்சள் பூ ரசிகைஎன்று நினைக்கிறேன் :))// :) எல்லாம் ஒரு கோ-இன்சிடன்ஸ் தான். மஞ்ச ரோஜா கூட இருக்கு, படமெடுக்க விட்டுப்போச்சு.
//குட்டி மேடம் நடக்க ஆரம்பிச்சா நீங்க ஓடணும் ..// அது சரிதான், அதான் இப்ப இருந்தே ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன். ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அக்கா!