Friday, October 1, 2010

மண்டே ப்ளூஸ்...[Monday blues...]

பொதுவா வீகெண்ட் 2 நாட்களும் ரிலாக்ஸ்டா இருக்கும்..திங்கட்கிழமை "மண்டே ப்ளூ'ஸ்"தான்!! மூணு நாட்களும் ஊர்சுத்தல்,இரவு முழுக்க டிவி பார்க்க என்று போயிடுமா..திங்கட்கிழம ஏண்டா வருதுன்னு இருக்கும். இந்த சலுப்பு எனக்கு ஒரு நாள் அட்வான்ஸ்டாவே வந்துடும்.ஞாயிறு காலை கண்ண முழிக்கும்போதே..அடடா..ஞாயித்துக்கிழமையாயிடுச்சே,நாளைக்கு இந்நேரம் பாதிவேலை ஆகிருக்கணுமே என்று பீலிங்(!!) ஆரம்பிச்சிடும்.

வாரத்துல எல்லா நாட்களுமே வெள்ளிக்கிழமையா இருந்தா( என்ன வெவரம் பாருங்களேன்,சனி,ஞாயிறு கூட இல்ல..வெள்ளிக்கிழமையாவே இருக்கணுமாம்.)எவ்வளவு நல்லா இருக்கும்? அடுத்து 2 நாள் ஆபீஸ் போகவேணாம்..8.20க்குள்ள லன்ச்பேக்,ப்ரேக்பாஸ்ட் ரெடியாகவேணாம்..நேரத்துக்கு சமைக்க வேணாம்(!??)..ரொம்ப நல்லா இருக்கும்ல??? ஹிஹிஹி! என்ன சொல்றீங்க லேடீஸ்? நான் சொல்றது கரெக்ட்தானே?
சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை, மஷ்ரூம் பிரியாணி செய்தேன்.என்னவருக்கு மிகவும் பிடித்துப்போய், திங்கட்கிழமைக்கும் லன்ச் பாக்ஸுக்கு இதே கொண்டு போறேன்-னு, அவரே லன்ச் பாக்ஸ்ல பேக் பண்ணி,பத்திரமா ப்ரிட்ஜ்ல எடுத்தும் வைச்சுட்டார்.காலைலயும் சீரியல் சாப்ப்டுக்கறேன்னும் சொல்லிட்டார்.நானும் ரிலாக்ஸ்டா மார்னிங் எழுந்து காபி குடிச்சிட்டு, லேப்டாப்ல உட்கார்ந்தேன். இவரும் ரெடியாகி ஆபீஸ் போனதும், சீரியலை சாப்ட்டுட்டு, இன்டர்நெட்டுல உலாவ(!!) ஆரம்பிச்சேன். 11.30 வாக்குல, ஒரு ப்ரெண்ட் ஆன்லைன்ல வரவும், அரட்டை ஆரம்பம்! அரைமணி நேரத்துக்கப்புறம் 'இன்னிக்கு என்ன சமையல்?'-னு கேட்டாங்க. அப்பதான் எனக்கு லன்ச்சுக்கு எதுவுமே பண்ணல என்பது நினைவு வந்தது.

அப்பவாவது கிடுகிடுன்னு கிச்சனுக்குப் போயி சமையலை ஆரம்பிச்சேனா? அதான் இல்ல..என்ன சமைக்கறதுன்னு ஒரு ஐடியாவும் வராததால,இந்த ஐடில இருந்து வெளியே போய் வேறொரு ஜிமெய்ல் ஐடில லாக்-இன் பண்ணேன்.அங்கே இன்னொரு ப்ரெண்ட் இருந்தாங்க. அவிங்க கூட அரட்டைய ஆரம்பிச்சேன். பசி வேற வயித்த கிள்ள ஆரம்பிச்சது. பேச்சுவாக்குல இப்புடி-இப்புடின்னு சொன்னனா..மைக்ரோவேவ்ல சமைச்சிருங்களேன்னாங்க. சரின்னு ஓடிப்போயி கொஞ்சம் ரைஸை தண்ணிக்குள்ள போட்டுட்டு வந்துட்டேன். சோறு ஓக்கே,அதுக்கு குழம்புவேணுமே?

அப்பதான் இந்த 'வெள்ளைக் கறி" ரெசிப்பிய சொன்னாங்க. அதைக்கொஞ்சம் என்னோட டேஸ்டுக்கு ஏத்த மாதிரி மாடிபிகேஷன் பண்ணி செய்தேன்.ஏனா அவங்க காரத்துக்கு பெப்பர் போட்டுப்பாங்களாம்.எனக்கு நாக்கு கொஞ்சம் நீளம்,மிளகு பொடி காரமெல்லாம், ஆம்லெட்டுக்கே பத்தாது.குழம்புன்னா மொளகாப்பொடி போடாம எப்படி? கூடவே கொஞ்சம் M.D.H. கறி பவுடரும் போட்டு காரசாரமா வெள்ளைக்கறி(சும்மா வெ.கறி,வெ.கறி-ன்னு சொல்லறீங்க,ஆனா மஞ்சளா இருக்கே?ன்னு எடக்கு-மடக்கா எல்லாம் யாரும் கேக்கக்கூடாது. கர்ர்ர்!)

ஊறிய அரிசிய, மைக்ரோவேவ்-ல 9 நிமிஷம் வைத்துட்டு, காய்கள் கட் பண்ணேன்..30 நிமிடங்கள்ல மொத்த வேலையும் ரொம்ப ஈஸியா வேலை முடிந்தது..சுடச்சுட சாப்பாடு ரெடி!

தேவையான பொருட்கள்
கேரட்(சிறியது)-1
பீன்ஸ்-7 (அதென்ன கணக்குன்னு கேக்கப்படாது,என்னோட லக்கி நம்பர் 7..ஸோ, ஏழு பீன்ஸ்)
பட்டாணி- சுமாரா 50
வெங்காயம்(சிறியது)-1
பச்சைமிளகாய்-2
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
M.D.H.கறி பவுடர்-1/2 ஸ்பூன்
பால் -1/4கப் (தேங்காய்ப்பால் இல்ல..பசும் பால்)
உப்பு

செய்முறை
கேரட்-பீன்ஸை நடுத்தரமான அளவில் நறுக்கவும்.ஒரு மைக்ரோவேவ் ஸேஃப் பவுலில் கேரட்-பீன்ஸுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவில் வேகவைக்கவும்.

காய்கள் வேகும் நேரத்தில் வெங்காயம்-மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
கேரட்-பீன்ஸூடன் பட்டாணி,வெங்காயம் மிளகாய் சேர்த்து 2 நிமிடம் மைக்ரோவேவில் வைக்கவும்.

இந்த டைம்கேப்ல உப்பு,ம.தூள்,மி.தூள் இவற்றை ரெடியாக எடுத்துவைக்கவும். கேரட் பீன்ஸ் பட்டாணி வெங்காயம் மிளகாய் கலவையுடன் ம.தூள்,மி.தூள்,உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் வைக்கவும்.

2 நிமிடம் கழித்து,காய்களுடன் பாலை சேர்த்து கலந்து மேலும் 3 நிமிடம் வைக்கவும்.

3 நிமிடங்கள் கழித்து மைக்ரோவேவிலிருந்து குழம்பை எடுத்து M.D.H.கறி பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் மைக்ரோவேவ் செய்யவும்.

அவ்ளோதாங்க..வெள்ளை கறி ரெடி!


குறிப்பு
  • யாரும் சிறிய கேரட்,சிறிய வெங்காயம்-னா என்னன்னு சந்தேகம் கேக்கமாட்டீங்கன்னு நம்பறேன். கேக்கறதுன்னா சொல்லுங்க..ஆனியன் சந்தேகத்த ஆல்ரெடி தீர்த்துட்டேன்.பேபி கேரட்ல ஆரம்பிச்சு ஒரு கேரட் ஆராய்ச்சி பண்ணிடலாம். ஹிஹி
  • பட்டாணிய எண்ணியெல்லாம் போட வேண்டாங்க.சும்மா, குத்துமதிப்பா,கையிலே ஒரு நாம்பல்[இது எங்கூரு பழக்கம்..ஒரு நாம்பல்=ஒரு கைப்பிடி] எடுத்துப்போடுங்க,போதும்.
  • வெ.கறில பால் சேர்த்து வைக்கும்போது எப்படி மூடி வைத்தாலும், பொங்கி மைக்ரோவேவ்ல கொஞ்சம் சிந்தும்.அதையெல்லாம் கண்டுக்காம க்ளீன் பண்ணிடுங்க. [ஸ்டவையே தொடாம சமையல் முடிச்சிருக்கோம், நிமிஷத்துல இதய க்ளீன் பண்ணிடமாட்டமா? :)]
  • இன்னொரு விஷயம்,ரெசிப்பில சொல்லிருக்க டைம் முடிந்ததும் பொடக்குன்னு மைக்ரோவேவைத் திறந்துரக் கூடாது.ஒரு நிமிஷம் ஸ்டேண்டிங் டைம் குடுத்து நிதானமா திறங்க.அப்பதான் காய்கள் நல்லா வேகும்.
சமையலை முடித்ததும் ரெசிப்பி சொன்னவுகளுக்கு போட்டோவ அனுப்பினேன். சூப்பரா இருக்குதுன்னு சர்டிபிகேட் குடுத்துட்டாங்க.அதனால நீங்களும் தைரியமா செய்யலாம்.ஒரு அவசர-ஆத்திரத்துக்கு டக்குன்னு அரைமணி நேரத்துல சமையலை முடிச்சுடலாம்ல??:)

ஹேப்பி வீகெண்ட் மக்களே!

20 comments:

  1. வெள்ளைக்கறி மல்டிகலரா இருக்கு. பாராட்டுக்கள். இட்லிக்கு நல்லா இருக்கும் போல.

    //பீன்ஸ்-7 (அதென்ன கணக்குன்னு// கேட்கத்தான் கேட்பேன். //என்னோட லக்கி நம்பர் 7..ஸோ, ஏழு//மிளகாய், 7 வெங்;)காயம், 7 கோப்பைப் பால், 7 பட்டாணி, 7 ஸ்பூன் மி.தூள் எல்லாம் ஏன் இல்லை!!!

    யூரேக்கா!! குறிப்புக் கொடுத்த ஃப்ரெண்டைக் கிட்டத்தட்டக் கண்டுபிடித்துவிட்டேன் தோழி. ;) 'முட்டைச்சொதி' ஆள் தானே!!

    அவசரத்துக்கு சரி, அது என்ன 'ஆத்திரத்துக்கு'!! கோவம் வந்தா சமைக்கிற ரெசிபியா!! (நான் அங்க வந்தா இதான் எனக்கு என்று நினைக்கிறேன்.) கிக் கிக்.

    சும்மா சொல்லக் கூடாது, டைம் கணக்கு எல்லாம் வச்சு... கலக்கிட்டீங்க.

    ReplyDelete
  2. அட.. இவ்வளவு சுலபமா, சீக்கிரத்தில செய்ய கூடிய சமையலா! டிரை பண்ணிட வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. மகி, எனக்கும் ஞாயிற்றுக்கிழமை வந்தா ஒரே சோக மயம் தான். சில நேரம் தொட்டதற்கெல்லாம் எரிஞ்சு விழுவேன். ஒன்றா இரண்டா வேலைகள், லாண்ட்ரி, அயர்னிங், காலை சாப்பாடு, மதியம், இரவு சாப்பாடு, பிள்ளைகளின் வேலைகள், மகனின் வீட்டுப்பாடங்கள்....இப்படி பெரிய லிஸ்ட்.

    இமா, முட்டைச் சொதி ஆளின் ரெசிப்பி அல்ல. அது சரி என் லக்கி நம்பர் 7 என்று எப்படி தெரியும்???!!!!

    ReplyDelete
  4. very nice tips for easy and quick cooking Mahi, curry looks delicious, sari..... mushroom Biriyani photo enga????????????????

    ReplyDelete
  5. naanum naanum.. I love Friday evenings and Saturdays.. I hate Sunday evenings and nights.. I always feel tensed before sleeping on Sunday nights and waking up on Mondays.. :(

    will try this soon.. milk??????? athu thaan idikkuthu :) what abt evaporated milk?

    ReplyDelete
  6. mee the first..

    its very use full for us.

    thank you..

    ReplyDelete
  7. என்னதூஉ..!!! சப்லேபிள் 'மொக்கை'யா!! ;(

    வான்ஸ், //இமா, முட்டைச் சொதி ஆளின் ரெசிப்பி அல்ல.// ஓகே. இமா செபாவின் ரெசிபி. ;)
    //அது சரி என் லக்கி நம்பர் 7 என்று எப்படி தெரியும்???!!!!// காகம் பனம்பழத்தில் உட்கார்ந்தது. ;)

    சிவா, இது என்ன மதராசபட்டினமா!! ;)

    ReplyDelete
  8. very nice dear...

    a surprise for u in my blog...check it out....

    ReplyDelete
  9. ஆஹா..மகி ,உங்கள் கலைபொழுதை அழகாக விளக்கி சுவாரஸ்யம் தந்ததுமில்லாமல் சூப்பரான சைட் டிஷ் கொடுத்து அசத்திட்டீங்கப்பா.

    ReplyDelete
  10. நல்லாயிருக்கு மகி,எங்க அக்காவும் சில சமையலில் பசும்பால் சேர்த்து செய்வாங்க,ரொம்ப நல்லாயிருக்கும்னு சொல்வாங்க.நான் செய்ததில்லை, இனிப்பு வகைகளுக்கு மட்டும் சேர்ப்பேன்...

    ReplyDelete
  11. Nalla irukku Mahi vellaikkari.....adhoda monday blues story superb...ennadhan friednsoda arattai adichaalum usefulla vellaikkari kaththukittu seythu saappittum irukkeenga that is mahi.....good.

    ReplyDelete
  12. நான் அதிகம் மைக்ரோவேவில் சமைத்தது இல்லை.அருமை.மகி.

    ReplyDelete
  13. மீண்டும் ஒரு உபயோகமான சமையல் குறிப்பு; வாழ்த்துக்கள் மகி !

    ReplyDelete
  14. //இந்த சலுப்பு எனக்கு ஒரு நாள் அட்வான்ஸ்டாவே வந்துடும்.ஞாயிறு காலை கண்ண முழிக்கும்போதே//
    எனக்கு சனிக்கிழமை நைட்ஏ "ஐயோ ஒரு நாள் லீவ் முடிஞ்சதே" னு கவலை வந்துடும்... கொடும தான் போங்க

    //வாரத்துல எல்லா நாட்களுமே வெள்ளிக்கிழமையா இருந்தா//
    அட என்னை போலவே நெனக்கரீங்களே மகி...சரி ஒரே ஊர் காத்து பட்டு வளந்த தோஷம் போல... ஹா ஹா ஹா

    வாவ் சூப்பர் ரெசிபி... கலக்கல் மகி

    ReplyDelete
  15. ~~~~
    /எல்லாம் ஏன் இல்லை!!!/இமா,7 பேருக்கு சமைக்கையில் நீங்க கேட்டபடி சமைப்பேன்.இது ஒரு ஆளுக்கு சமையல்.ஹிஹி
    /அது சரி என் லக்கி நம்பர் 7 என்று எப்படி தெரியும்???!!!!/ வானதி,என் லக்கி நம்பர் 7தான்..உங்களுக்குமா??:)
    /mushroom Biriyani photo enga????????????????/வேணி,அது போட்டோ எடுக்கலைங்க.நெக்ஸ்ட் டைம் எடுத்து போஸ்ட் பண்ணறேன்.
    /what abt evaporated milk?/தாராளமா யூஸ் பண்ணலாம் அம்மணி..ஆனா வீட்டுல இருந்த திங்க்ஸ்-ஐ வைத்து செய்தேன்.பசும்பாலும் நல்லா இருந்தது.
    மேனகா,நானும் சில சமையல்ல பால் சேர்ப்பேன்.நல்லா இருக்கும்.
    புவனா,அதெல்லாம் சேம் blood-ங்க..அப்படித்தேன் இருப்போம் எல்லாரும்.
    ~~~~
    நித்து,மஹேஸ்,இமா,ப்ரியா,சுகந்திக்கா,வானதி,வேணி,சந்தனா,சிவா,அகிலா,ஸாதிகாக்கா,மேனகா,கொயினி,சாரு,ஆசியாக்கா,ப்ரியா,புவனா.. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  16. Interesting story, with a tasty and quick recipe. My MIL makes this with coconut milk. I simplied (lazy) it further by using (mixed) frozen vegetables and milk.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails