எங்கள் தொட்டித் தோட்ட ரோஜாக்கள்...ஊருக்குப் போய்வந்த பின்னர் என் கவனிப்பில் உவகை கொண்டு..
குட்டிக் குட்டிப் பூக்கள் பூத்து..
குட்டிக் குட்டிப் பூக்கள் பூத்து..
எங்களை மகிழ்விக்கின்றன. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல ரோசாக்கள் சிறியவை எனினும் எழிலுக்குக் குறைவில்லை! :)
மேலே உள்ள பூக்களின் வண்ணம் எனக்கு மிகப்பிடித்த வண்ணம்.
அடுத்து வருபவை செந்நிற ரோஜாக்கள்..2010-ஆம் ஆண்டு 99 காசுக்கு ஒரு செடி என இரு செடிகள் வாங்கிவந்தேன்..
ஆண்டுகள் நான்கு கடந்த பின்னரும் பொலிவு குறையாமல் புன்னகை புரியும் பூக்களிவை!
கதிரவனின் ஒளியில் குளித்தவாறே என் படங்களுக்கு மென்னகை புரிந்த பூக்கள்..
கடேசிப் பன்ச்..!! :))))) என் ஆல்டைம் ஃபேவரிட் மஞ்ச ரோசாஆஆஆ!
பூக்களை ரசித்துப் புன்னகைப் பூக்கள் சிந்தப்போகும் அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்! :)
ரோஜாப்பூ சின்ன ரோஜாப்பூ !!யாரோ பாடும் இனிமையான குரல் பிரிட்டன் வரைக்கும்கேட்டுதே :)
ReplyDeleteலயா தானே :)
அது அதிரா பாடுறேனாக்கும்:)
Deleteஎனக்கு மின்னால;) வந்து ஏஞ்சலக்காவிற்கு பதில் கூறிய பூஸாரை வன்மையாகக் க(ண்)டிக்கிறேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
Deleteஅக்கா, மெய்யாலுமே லயாவுக்கு என்னைவிட இனிமையான குரல்தான்! ஹிஹி...இப்பல்லாம் நான் பாடினா கூடவே அவளும் பாட ஆரம்பிச்சிட்டா..[எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? உங்க டயலாக் தான்! ஹஹஹ!]
ஹா ஹா :) நம்ம குரல் வளம் அப்படி மஹி :)..
Deleteமஹி இப்பெல்லாம் பூஸ் தமிழ் மிஸ்டேக் இல்லாம எழுதறாங்க கவனிச்சீங்களா :)
ஒரு நாலு தமிழ் மாஸ்டர்ஸ் அனுப்பி விட்டேன் அவங்களுக்கு ஸ்பெஷலா :)
மென்னகை !!! ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா கவிதையா கொட்டுதே இங்கே :)
ReplyDeleteஎல்லாமே அழகு ஆனால் அந்த குட்டி மஞ்சள் ரோசா எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு :)
நாலு வரிதான் மொத்தமே இருக்குது பதிவில, அதுக்கே கவித கொட்டுதுன்னு சொன்னா எப்பூடி? இன்னும் நிறைய்ய்ய்ய இருக்குல்ல! ;)))
Deleteஅந்த மஞ்சள் ரோஜா எனக்கும் மிகப் பிடிக்கும். அருண் ஒருமுறை எனக்காக வாங்கிவந்த தொட்டியாக்கும் அது! :))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
பரவாயில்லையே மகி, இத்தனை வருஷங்களா பூத்திட்டிருக்கு. பெரிய பூக்களைவிட குட்டிகுட்டியா இருந்தாத்தான் அழகா இருக்கும். மொட்டு வருவதும், பூக்க ஆரம்பிப்பதும், பூத்துவிடுவதும் என எல்லாமே அழகுதான். படங்களும் அழகு.
ReplyDeleteஎங்க வீட்டுத் தொட்டியில இப்போதைக்கு ஒரு செடியையும்(அதாவது ஒரு கீரையையும்) காணோம். புறாவும், சிட்டுக் குருவியும் சேர்ந்து வந்து கும்மி அடிக்கின்றன.
சித்ராக்கா, ஆமாம்! ஆண்டவன் புண்ணியத்தில நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் இவங்களுக்கும் ஒரு வழி பிறந்துடுது. நானும் காப்பாத்திட்டு வரேன்.
Deleteபுறாவும் சிட்டுக்குருவியும் கீரை சாப்பிட வராங்களா? அப்ப அவிங்களை படமெடுத்துப் போடுங்களேன்! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
எல்லா படங்களும் அழகு.... முதல் படத்திலுள்ள ரோஜாவும் அதன் இதழ்களும் ரொம்ம்ப அழகு. லயா நலமா...ஜீனோ எப்பிடிருக்கு..
ReplyDeleteராதாராணி, எனக்கும் அந்தப்பூ ரொம்பப் பிடிச்சதுங்க!
Deleteலயா நலம்..ஜீனோ தங்கையோட சேந்து கும்மியடிச்சுகிட்டு குதூகலமா இருக்கார்! உங்க வீட்டு செல்லம் ஸ்கூபி எப்படி இருக்கார்..வளர்ந்துட்டாரா?
அழகு.. அழகு... அழகு! கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல.. ஒவ்வொன்றும் ஒரு அழகு. மலர்ந்தும் மலராத நிலையில் ஒரு அழகு என்றால் முற்றிலும் மலர்ந்து கிடக்கையில் வேறொரு அழகு. மஞ்சள் ரோஜாக்கள் மனம் அள்ளுகின்றன.
ReplyDeleteஅழகாகக் கருத்து தந்தமைக்கு மிக்க நன்றிங்க கீதமஞ்சரி!
Deleteபூக்களை ரசித்துப் புன்னகைப் பூக்கள் சிந்த...
ReplyDeleteமென்னகை புரிந்த பூக்கள்..அழகு.
நன்றிங்க! :)
Deleteரோஜா என்பவும் அழகு. மிக அழகாக இருக்கின்றன உங்கவீட்டு ரோஜாக்கள். அழகுக்கு மேலும் அழகாக்க உங்க கவிவர்ணனை.
ReplyDeleteஅம்முலு, தேங்க்யூ! :)
Deleteபூக்களின் அழகுக்கு இனை ஏது........அற்புதம்
ReplyDeleteஅனு, நன்றிங்க!:)
Deleteரோஜா என்றாலே அழகு,அதுவும் மகியின் தோட்டத்தில் என்றால் மிக்க அழகு. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, ஆறு மாதம் ஊர் போய் திரும்பியாச்சு.குட்டி செல்லப்பொண்ணு நலமா?
ReplyDeleteஆஹ்...ஆறு மாதமா ஊருக்குப் போயிருந்தீங்களா? அல்-ஐன் ஆறு மாதம், மேலப்பாளையம் ஆறு மாதமா ஆசியாக்கா? அசத்தறீங்க போங்க! :)
Deleteஎங்க குட்டி ரோஜா நல்லா இருக்காங்க. நன்றி! :)
நோஓஓஓஓஒ மீதான் 1ஸ்ட்டு.. நேக்குத்தான் முதல் ரோஜா:)...
ReplyDeleteமகியைக் கண்டு மகிழ்ந்து ரோஜாவே பூத்திட்டுதாமே.. முந்தநாள் பிபிசில சொன்னாங்க:)... அதனாலதான் அதனையும் கொள்ளை அழகா இருக்கு மகி.. திருஷ்டி சுத்திப் போடுங்ங்ங்ங்ங்.. ஸ்ஸ்ஸ் அவசரப்படப்பூடா:) நான் சொன்னது உங்களுக்கல்ல:) ரோஜாக்கு:)..
//திருஷ்டி சுத்திப் போடுங்ங்ங்ங்ங்.. ஸ்ஸ்ஸ் அவசரப்படப்பூடா:) நான் சொன்னது உங்களுக்கல்ல:) ரோஜாக்கு:)..// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 8 எனக்கும்தான் சுத்திப்போடுவேன். என்ன பண்ணுவீங்க..என்ன பண்ணுவீங்க? :)))
Deleteபிபிசில பாத்தீங்களா..ரெக்கார்ட் பண்ணீ வைச்சிருக்கீங்கள்ல..எல்லாருக்கும் அடிக்கடி போட்டுக் காட்டுங்க பூஸக்கா! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..முதல் ரோஜாவை நீங்களே எடுத்துக்குங்கோ..அதுக்கு மேச்சிங் ஊசிமணி-பாசிமணி எல்லாம் இருக்குல்ல? :) :)
அழகோ அழகு....
ReplyDeleteநன்றிங்க எழில்! :)
Deleteஅருமையா இருக்கு ...உங்கள் வீட்டு மலர்கள் ...
ReplyDeletelovely pics of beautiful roses...surrounded by lovely nature around ur place... nalla kalainayam ungakita :)
ReplyDeleteஆஹா! மகி வந்தாச்சு! என்று சந்தோஷமாகச் சிரிக்கிற செடி ரோஜாக்களையும், வலைப்பூ ரோஜாக்களையும் கண்டு மகிழ்ந்தேன். :-) பல காலங்களுக்குப் பின் கொஞ்சம் கெ.கீஸ் ஆக்டிவேட்டட்!. :-)
ReplyDeleteஎனக்கு முழுவதாக விரிந்த பூக்களை விட முக்கால்வாசி மட்டும் விரிந்த ரோஜாக்கள் தான் பிடிக்கும். போன வருடம் சம்மர் வீட்டில் இல்லாதது இப்ப்போ தெரிகிறது. ;( நூற்றுக் கணக்கில் ப்பூத்துச் சொரிந்த வெள்ளை ரோஜாக்கள், பிங்க் ரோஜாக்கள் என்று ஏழு மரங்கள் காய்ந்து போய் விட்டன. கூடவே என்னை விட உயரமாக வளஎந்திருந்த கறிவேப்பிலையும். ;(