Wednesday, October 2, 2013

ஹெல்த்தி எள்ளுருண்டை/ Sesame seeds-Chia seeds-Peanuts Laddu

முன் குறிப்பு 
"இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு"- என்று பழமொழி உண்டு. அதனால் இளைத்தவர்கள் இந்த எள்ளுருண்டையை விரும்பிய அளவு சாப்பிடலாம்,  "மற்றவர்கள்" அளவாகச் சாப்பிடவும். இது ஒரு அடிக்டிவ் ஸ்னாக். சாப்பிட ஆரம்பித்தால் நிறுத்தாமல் சாப்பிடச் சொல்லும், ஜாக்கிரதை! :))) ;))))
தேவையான பொருட்கள்
கருப்பு எள்ளு-1/2கப்
வெள்ளை எள்ளு-1/4கப்
சியா சீட்ஸ்-2டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை-1/4கப்
வெல்லம்-4 (அ) 5 டேபிள்ஸ்பூன்

செய்முறை
வெல்லம் தவிர எல்லாப் பொருட்களையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து ஆறவைக்கவும். [நான் வறுத்த வேர்க்கடலையை உபயோகித்தேன், அதனால் சில நிமிடங்கள் சூடானது போதுமாய் இருந்தது. பச்சைக்கடலை என்றால் கருகாமல் வறுத்து தோல் நீக்கிக்கொள்ளவும், தோலுடனும் சேர்க்கலாம்.]
மிக்ஸி ஜாரில் முதலில் கருப்பு மற்றும் வெள்ளை எள்ளைச் சேர்த்து அரைக்கவும்.
கொறகொறவென்று அரைபட்டதும், சியா சீட்ஸ் மற்றும் வேர்க்கடலை சேர்த்து அரைக்கவும்.
பொடித்த வெல்லத்தையும் சேர்த்து 2-3 சுற்றுக்கள் மிக்ஸியை அரைக்கவும்.
சுவையான எள்ளுருண்டை கலவை தயார்..
விரும்பிய வடிவில் உருண்டை பிடித்துக் கொள்ளலாம்.

இப்படி கலவையான எள்ளுருண்டை முதல் முறை செய்வதால் 2 டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ்மட்டுமே சேர்த்தேன், சுவையில் எந்த மாறுதலும் தெரியாமல் சூப்பராக இருந்தது. அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே சியா விதைகள் சேர்க்கலாம் என்றிருக்கிறேன்.
சில நாட்கள் முன்பாக இந்த சியா சீட்ஸ் பற்றி என்னவருக்கு ஆஃபீஸில் யாரோ சொல்லியிருக்கிறார்கள்,  Flax seeds (ஆளி விதை) போல இதுவும் ஒரு வைல்ட் க்ரெய்ன். dietary fibers, அதிக அளவு ப்ரோட்டீன், ஒமேகா-3, மற்றும் உடலுக்கு நன்மைதரக்கூடிய பல சத்துக்கள் இந்த சியா சீட்ஸ்-ல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
எள்ளை விடவும் சிறிய விதைகளாக இருக்கிறது. தனியே குறிப்பிடத்தக்க சுவை எதுவும் இல்லை. ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என  சியா சீட்ஸ்-பேக்கட் சொல்கிறது. ஜூஸ், மில்க் ஷேக் இவற்றில் மேலே தூவிக்கொள்ளலாம். உப்புமா, ஆம்லெட், சீரியல் இவை சாப்பிடும்போதும் மேலே தூவிக்கொள்ளலாம். அதனால் வாய்ப்புக் கிடைக்கும்போது இவற்றை உணவில் சேர்த்துக்கொள்கிறோம். :)

விரும்பினால் எள்ளுருண்டைக்கு ஏலக்காயும் சேர்க்கலாம், ஆனால் எனக்கு வறுத்த எள்ளின் மணம் மட்டுமே போதுமானதாக இருப்பதால் ஏலக்காய் சேர்ப்பதில்லை. கொப்பரைத் தேங்காய் சேர்ப்பதென்றால் அதுவும் சேர்க்கலாம்.

கருப்பு எள்ளில் மட்டுமே செய்த எள்ளுருண்டைகள் இவை...ரெசிப்பி இங்கே!
எள்ளின் சுவை கொஞ்சம் ஸ்ட்ராங்க்-ஆக இருப்பதாகத் தோன்றினாலோ அல்லது ஜஸ்ட் ஃபார் எ சேஞ்ச்-ஆகவோ இப்படி கலவை உருண்டைகள் செய்து பாருங்க. :)

22 comments:

 1. அடடா... நேற்று முன்தினம் தானே செய்தார்கள்... ஆனால் இது போல் இல்லையே... ம்.... செய்முறைக்கு நன்றி சகோதரி...

  ReplyDelete
 2. சியா விதைகள் என்றால்.........கேள்விப்பட்டதில்லையே மஹா....
  அதன் போட்டோ ஒன்று போடுங்களேன் .
  வெறும் எள்ளுருண்டை செய்வேன். நான்....

  ReplyDelete
 3. சுவையான எள்ளுருண்டைகள். பார்த்தாலே நாவூறுகிறது. பகிர்வுக்கு நன்றி மகி. chia seeds தான் என்னவென்று தெரியவில்லை. கடையில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 4. சமையற்கலையில் கைதேர்ந்த சகோதரியின் பதிவு கூட மணக்கத் தான் செய்கிறது, பதிவு என்பது ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதை தாங்கள் தான் சரியாகக் கடைப்பிடிக்கீறீர்கள். தங்கள் கலை மற்றவர்களுக்கு பயன்படுவது ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது. ச்ந்திப்போம்,. நன்றீங்க சகோதரி.

  ReplyDelete
 5. தனபாலன் சார், அடுத்த முறை இப்படி செய்து தரச் சொல்லுங்க! இதுவும் ருசி சூப்பராக இருக்கும். :) கருத்துக்கு நன்றிகள்!
  ~~
  ராஜி மேடம், சியா சீட்ஸ் பற்றிய தகவல்கள் இணைத்திருக்கேன்..பாருங்க. சென்னையில் கிடைக்கிறதா என்பது பற்றி தெரியவில்லை.
  நானும் வெறும் எள்ளுருண்டைதான் முதலில் செய்தேன், என்னவர்தான் சியா சீட்ஸ் சேர்க்கச் சொல்லி ஐடியா கொடுத்தார்! :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  கீதமஞ்சரி, சியா சீட்ஸ் பற்றிய இணைப்புகளைப் படித்துப் பாருங்க. உடலுக்கு நன்மை தரும் வைல்ட் க்ரெய்ன் இது, அளவாகச் சாப்பிடச் சொல்கிறார்கள்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  பாண்டியன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! சமையல் குறிப்புகள் உங்களுக்கும் உதவியாக இருக்கும் என்றே நம்புகிறேன்! :)
  ~~

  ReplyDelete
 6. The laddus look superb, very healthy too, got to ask someone to get me these chia seeds..

  ReplyDelete
 7. மஹி,
  செய்முறை படங்கள் அனைத்தும் அருமை!
  ரெசிப்பி -யும் ரொம்ப ஈசியா இருக்கு....

  ReplyDelete
 8. சத்தான பொருளை எல்லாம் சேர்த்து உருண்டை பிடிச்சு வச்சிருக்கீங்க. ம்ம்ம்...ரெண்டு உருண்டைய இந்தப் பக்கம் கொஞ்சம் உருட்டி விட்டீங்கன்னா வலிக்காம சாப்பிட்டு பர்க்க‌லாம்.இதை கொழுக்கட்டைக்கு பூரணமா ட்ரை பண்ணுங்க மகி, சூப்பரா இருக்கும்.

  சியா சீட்ஸை கடைகளில் பார்த்த‌தோடு சரி, வாங்கியதில்லை.இதை தனியா சாப்டு பார்த்து, சுவை எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

  எங்க வீட்ல அறுவடை முடிஞ்ச புது எள்ளை அள்ளிஅள்ளி சாப்பிட்டிருக்கேன்.வறுத்த எள்&வெல்லம் சேர்த்து உரலில் இடிப்பாங்க, அவங்க இடிச்சு முடிப்பதற்குள் பாதியைக் காலி பண்ணிடுவோம்.நினைவுகள் எல்லாம் வந்துவந்து போகுது.

  ReplyDelete
 9. //விரும்பிய வடிவில் உருண்டை// ஹையா! சூப்பர்! அடுத்த தபா முக்கோண வடிவ உருண்டை, சதுர வடிவ உருண்டை, ஐங்கோணி உருண்டை எல்லாம் ட்ரை பண்ணப் போறேனே!

  ReplyDelete
 10. //சீயா// தகவல் புதிது. நன்றி மகி.

  //எள்ளின் சுவை கொஞ்சம் ஸ்ட்ராங்க்-ஆக இருப்பதாகத் தோன்றி// இங்க ஒரு ஆள் மட்டும், "தளகுளி தான் பெஸ்ட்," என்று சொல்லிட்டாங்க.

  //எள்ளை அள்ளிஅள்ளி சாப்பிட்டிருக்கேன்.// ஹை! என்னை மாதிரியே இருக்காங்க சித்ரா. ;))

  ReplyDelete
 11. எள்ளுண்டை இதைப்பார்த்தால் உடனே செய்யச்சொல்லிடுவார் என்னவர். அவ்வளவு விருப்பம். நல்லா இருக்கு பார்ப்பதற்கு.அழகான உருண்டைகளாக பிடித்திருக்கிறீங்க .செய்துப்பர்க்கிறேன்.குறிப்புக்கு நன்றி மகி.

  ReplyDelete
 12. chia seeds - tamizhla idhuku enna peru Mahi? ennavo, ellurundaya kandale odungu poven, ennayum inge izhuthuduche onga ellurundai recipe!

  ReplyDelete
 13. Wow. Very healthy recipe mahi. Had little hesitation to use chia seeds. You cleared my doubts. Thanks for sharing.

  ReplyDelete
 14. எள்ளுருண்டை கண்ணைப் பறிக்குது மகி!

  என்ன அதில் போட்டிருக்கும் சியாதான் இங்கு கிடைக்குமோவெனத் தெரியவில்லை..

  வித்தியாசமாக இருக்கிறது.. விரைவில் செய்து பார்த்துவிடுகிறேன்...:)

  நல குறிப்புப் பகிர்வு. மிக்க நன்றி மகி!

  ReplyDelete
 15. எள்ளுருண்டை சூப்பர்.இது மாதிரி ஸ்நாக்ஸ் எல்லாம் செய்ய ஆசை தான்,ஆனால் யாராவது செய்து தந்தால் அதை விட நல்லாயிருக்கும் மகி.

  ReplyDelete
 16. Ellu urundai Super mahi
  http://www.followfoodiee.com/

  ReplyDelete
 17. அடடா இது இன்னொரு முறையாக இருக்கே ஒவ்வொரு எள்ளுருண்டையும் ஒவ்வொரு வித செய்முறைபோல இருக்கு. சூப்பர். நான் எங்கு கண்டாலும் வாங்காமல் விடுவதில்லை. ஆனா இதுவரை செய்ததில்லை.

  ReplyDelete
 18. Healthy urundai. Easya panni irukingae

  ReplyDelete
 19. @அனு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  @அதிரா, எள்ளுருண்டைக்கு ஒரே செய்முறைதான், எள்ளை வறுத்து வெல்லம் சேர்த்து அரைச்சு/இடிச்சு உருண்டை செய்வது. கூட இந்த "மானே, தேனே, பொன்மானே.." எல்லாம் நம்ம விருப்பப்படி போட்டு செய்யறதுதான்! :) வீட்டில ஒரு முறை செய்து பாருங்க, பிறகு கடையில வாங்க மாட்டீங்க! ;) நன்றி அதிராவ்!
  ~~
  @கொயினி, நன்றிங்க!
  ~~
  @ப்ரீத்தி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  @ஆசியாக்கா, என்னாச்சு உங்களுக்கு? நலம்தானே? //யாராவது செய்து தந்தால் அதை விட நல்லாயிருக்கும் மகி.//இப்பல்லாம் இது உங்க ஸ்டாண்டர்ட் டயலாகா ஆகிருக்கே? அவ்வ்வ்வ்வ்! டேக் கேர் அக்கா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  @இளமதி, சியா சீட்ஸ் சும்மா கொஞ்சமாத்தானே சேர்த்திருக்கேன், அது இல்லாமலும் செய்யலாம், செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி! :)
  ~~
  @சுபா, சியா சீட்ஸ் வாங்கவே நான் ரொம்ப யோசிச்சேன்! எங்க வீட்டில இவர்தான் அடம்பிடிச்சு வாங்கி, சான்ஸ் கிடைச்சப்பவெல்லாம் அதை உபயோகிச்சு என்னையும் சாப்பிட வைச்சுகிட்டு இருக்கார்! :) தைரியமா நீங்களும் டிரை பண்ணுங்க! :)
  நன்றி!
  ~~
  @மீரா, சியா சீட்ஸுக்கு தமிழ்ல என்ன பெயர் என்று தெரிலைங்க! இப்பத்தான் இது இங்கே பிரபலமாகிட்டிருக்கு, இன்னும் சிறிது நாட்களில "Flax seeds = ஆளி விதை" என்று தெரிந்த மாதிரி சியா-வுக்கும் பெயர் தெரிந்துவிடும் என நம்புகிறேன். :)
  உங்களுக்கு எள்ளுருண்டை புடிக்காதா? எனக்கு ஃபேவரிட்! :)
  வருகைக்கும் கருத்துக்கும்நன்றி மீரா!
  ~~
  @அம்முலு, செய்து பாருங்க..ரொம்ப ஈஸீயான ரெசிப்பிதான்! //அழகான உருண்டைகளாக பிடித்திருக்கிறீங்க .// :) தேங்க்ஸ் அம்முலு!
  ~~

  ReplyDelete
 20. @இமா, தளகுளி ஒரு முறை செய்து பார்க்கணும், அப்பத்தான் என்ன வித்யாசம் என்பது எனக்குத் தெரியும்! :)
  // முக்கோண வடிவ உருண்டை, சதுர வடிவ உருண்டை, ஐங்கோணி உருண்டை எல்லாம் ட்ரை பண்ணப் போறேனே!// ஆஹா!! பண்ணுங்க, பண்ணுங்க...மறக்காம ஸ்டெப்-பை-ஸ்டெப் போட்டோஸ் எடுத்து ப்ளாகிலும் அப்டேட் பண்ணுங்க இமா! :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
  ~~
  @சித்ராக்கா, //ரெண்டு உருண்டைய இந்தப் பக்கம் கொஞ்சம் உருட்டி விட்டீங்கன்னா வலிக்காம சாப்பிட்டு பர்க்க‌லாம்// இது நல்ல ஐடியாவா இருக்கே! உருண்டைகள் உடையாம உங்கூருக்கு வந்துரும் என்ற அபார நம்பிக்கையைப் பாராட்டுகிறேன்! ஹ்ஹஹா! :))))
  //தனியா சாப்டு பார்த்து, சுவை எப்படி இருக்குன்னு சொல்லுங்க.// அவ்வ்வ்வ்வ்வ்...இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் நான் எடுக்கறதில்லையே!! என்னவரிடம் கேட்டு வேணும்னா சொல்லறேன்! ;)
  //வறுத்த எள்&வெல்லம் சேர்த்து உரலில் இடிப்பாங்க,//ஆமாம்! அப்பல்லாம் மிக்ஸி ஏது? உரல்லதானே எல்லாம் இடிப்பாங்க...பச்சைமாவு, எள்ளுருண்டை எல்லாம் உரலில் இடிச்சு சாப்பிட்டாலே தனி ருசிதான். மலரும் நினைவுகளுடன் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!
  ~~
  @ஜனா சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  @ஹேமா, அடுத்த முறை மறக்காம சியாசீட்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லுங்க. காஸ்ட்கோவில் படத்தில் இருக்க அளவு பேக்கட்ல கிடைக்குது.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா!
  ~~
  @மீனாக்‌ஷி, நன்றி!
  ~~

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails