வீட்டிலேயே பொடிவகைகள் அரைத்து வைக்கும் திறமை எல்லாம்
எனக்கு கிடையவே கிடையாது. ஊரில் அம்மா மிளகாய்த்தூள் அரைத்துவைப்பார்கள். மெஷினுக்கு கொண்டுபோய் அரைத்துக்கொண்டு வந்து கொடுப்பதுடன் நம்ம வேலை முடிந்தது..அதிலே என்னென்ன சாமான்கள்,என்னென்ன ப்ரபோர்ஷன் எல்லாம் நான் ஒரு முறை கூட பார்த்ததில்ல. அதுக்கு மெயின் ரீஸன்,இந்த மிளகாப்பொடிக்கு எல்லாம் வறுத்து எடுத்துவைப்பதற்குள்ள அம்மா ஒரு ஆயிரத்தெட்டு தும்மலாவது போட்டுடுவாங்க..இதுக்கப்புறமும் அந்த டேஞ்சரஸ் ஜோனுக்கு நம்ம எட்டிப்பாப்பமா என்ன??
திருமணத்தின் பின்னரும் என் கணவர் எம்.டி.ஆர்.-இல் எத்தனை பொடிவகைகள் உண்டோ,அத்தனையும் வாங்கி கிச்சனை நிறைத்து வைத்திருந்தார். அதனால் என் சமையலும் சுமாரா:) ஓடிக்கொண்டு இருந்தது.காமெடி என்னன்னா, எனக்கு சாம்பார் பொடிக்கும்,ரசப்பொடிக்கும் வித்யாசம் தெரியாது..இரண்டும் ஒரே கலர்ல இருக்கும். இவரானா பிக்பஸார்ல அழகழகா ஒரேமாதிரி டப்பா(வித் ஸ்பூன்) வாங்கி கிச்சன் கப்போர்ட் எல்லாம் அடுக்கி வைச்சிருந்தார்.அட்லீஸ்ட் பேக்கட் இருந்தாலாவது கண்டு பிடிச்சிருப்பேன்னு வைங்க.ஏதோ சமைத்துட்டு இருந்தேன். அப்புறம் ஒருமுறை மாமியார் வந்தப்ப அவங்ககிட்ட கேட்டேன்..கொஞ்சம் லைட் கலர்ல இருப்பது ரசப்பொடி,டார்க் கலர்ல இருப்பது சாம்பார் பொடின்னு சொன்னாங்க. (எனக்கு எல்லாமே ஒரே கலர்ல தெரிந்தது!!ஹிஹி)
வீட்டிலிருந்த இட்லிப்பொடி தீர்ந்துடுச்சு. திருமணத்துக்கு முன் அம்மா பொடிக்கு வறுத்து தந்தா,அம்மியில் நுணுக்கி எடுப்பது என் வேலை. அந்த அனுபவத்திலே(!!) ஒருமுறை நானே இட்லிப்பொடிக்கு வறுத்துஅரைப்போம்னு முடிவு செய்து, து.பருப்பு, க.பருப்பு,உ.பருப்பு,கொள்ளு,அரிசி,ப.பயிறு,வரமிளகாய்,பெருங்காயம் இப்படி வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் வறுத்து எடுத்துவைச்சேன்.இவையெல்லாமே அம்மா இட்லி பொடிக்கு போடுவாங்க..ஆனா, ப்ரபோர்ஷன்-னு ஒண்ணு இருக்கில்ல? அதுபத்தி யோசிக்காம நான்பாட்டுக்கு ஏதோ வறுத்து,என்னமோ அரைத்தும் விட்டேன். வாசனை எல்லாம் நல்லாவே வந்தது..பக்கத்துவீட்டு ஆன்ட்டி இட்லிப்பொடிக்கு வறுத்தாயா?-ன்னு கேட்கும் அளவுக்கு சூப்பர் வாசனை. ஆனா டேஸ்ட்டுதான் கொஞ்சம் காமெடியாடிடுச்சு.காரம்,உப்பு இரண்டும் தூக்கலா தெரிந்தது.அத்தோட விட்டேன்,இந்த இட்லி பொடி அரைப்பதை!!
அதுக்கப்புறம் நேரா ரோட் ஐலேண்ட் வந்து இறங்கினோம்..எனக்கும் சமையல்ல இன்ட்ரஸ்ட் வந்தது.இருந்தாலும், எல்லாம் ரெடிமேட் மசாலா பொடிகள்தான்! சாம்பார் பொடி,ரசப்பொடி,எம்.டி.ஆர்.மெட்ராஸ் கறி பவுடர் இவை மூன்றும் என் ப்ரீஸரில் எப்பொழுதும் இருக்கும்.இட்லி பொடி அப்பப்ப வாங்கிப்போம்..போனவருஷத்தில ஒருமுறை அறுசுவை.காம்-ல உலவிட்டு இருக்கும்போது இந்த இட்லிப்பொடி கண்ணுல பட்டது..1:1 கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பு, கூட மிளகாய்,பெருங்காயம்,உப்பு!! வறுத்து அரைத்தா அவ்ளோதான்..ரொம்ப சிம்பிளா இருக்கே,ட்ரை பண்ணிப்பார்ப்போம்னு கொஞ்சமா செய்தேன்..ரொம்ப நல்லா வந்தது.அதிலிருந்து வீட்டிலேயேதான் இட்லிப்பொடி அரைத்துக்கொள்வது.
ஒரிஜினல் ரெசிப்பியின் லிங்க்-ஐ கொடுக்கலாம்னு தேடிப்பாத்தேன்.கண்டுபிடிக்க முடியவில்லை..அதனால அந்தப்பிரிவின் லிங்க் இதோ. இந்த ரெசிப்பியை கொடுத்தவருக்கும், அறுசுவைக்கும் என் நன்றிகள்!
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு-1/4கப்
உளுந்துப்பருப்பு-1/4கப்
வரமிளகாய்-12(காரத்திற்கேற்ப)
பெருங்காயத்தூள்-3/4 ஸ்பூன்
உப்பு
செய்முறை கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பை தனித்தனியாக வெறும் கடாயில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவைக்கவும். மிளகாயையும் கருகாமல் வறுத்து எடுத்து வைக்கவும். இவை அனைத்தும் நன்கு ஆறியதும் மிக்சியில் கொறகொறப்பாக பொடித்து,உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
பலமுறைகள் இதனை செய்த பின்னர் கான்பிடென்ஸ் வந்து இப்ப இதே பொருட்களுடன் 2 டேபிள்ஸ்பூன் வெள்ளை எள்ளையும் வறுத்து அரைக்க ஆரம்பித்திருக்கேன்.கூடவே சிறு துண்டு வெல்லமும்.
என் அன்புக்கணவருக்கு(இமா&சந்தனா,நோட் திஸ் பாயின்ட்:)) இந்த இட்லிப்பொடி மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் நான் இட்லிப்பொடி அரைப்பதே அவருக்குத்தான்!(எனக்கு இட்லிப்பொடி அவ்வளவா பிடிக்காது.) இதோ,அதற்கான சாட்சி..:))))))
இட்லிப்பொடியை எப்பவும் நான் ப்ரிட்ஜில்தான் வைப்பது.மற்ற பொடிவகைகள் எல்லாம் ப்ரீஸர்ல..இதுமட்டும் ப்ரிட்ஜ்ல.(அது ஏன்னு யாரும் கேட்டுடாதீங்க,எனக்கே தெரியாது!ஹிஹி)
ப்ரிட்ஜ்/ப்ரீஸர்ல வைச்சா பொடிகள் ப்ரெஷ்ஷா இருக்கும் என்று படித்த ஞாபகம்.
இந்த இட்லிப்பொடியுடன் இதயம் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட்டால் அருமையா இருக்கும்,இதயத்துக்கும் நல்லது. நல்லெண்ணெய் இல்லயா? இட்ஸ் ஓக்கே, பாராசூட் தேங்காயெண்ணெய் கூட ஊற்றி சாப்பிடலாம்..அதுவும் இல்லையா, அப்ப சமையல் எண்ணெய்,ஆலிவ் ஆயில் இதுல ஒண்ணு கண்டிப்பா உங்க கிச்சன்ல இருக்கும்ல?அதை ஊற்றி சாப்பிடுங்க.:)
இட்லிப்பொடியில் செய்த பொடிதோசை..(தோசைய தோசை மாவில் சுட்டு,இந்த இட்லிப்பொடிய தூவணுங்க:) )
பொடிதோசை &இட்லிப்பொடி (சாம்பார்,சட்னியெல்லாம் செய்யலை..பொடியேதான்! அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க:))
பின்குறிப்பு
இந்த மைண்ட்வாய்ஸ்(நன்றி அப்பாவிதங்கமணி:)) தொந்தரவு தாங்க முடீலங்க.
"வெள்ளிக்கிழமயும் அதுவுமா காலங்காத்தால, /அட்லீஸ்ட் பேக்கட் இருந்தாலாவது கண்டு பிடிச்சிருப்பேன்னு வைங்க./ன்னு பொய் சொல்லறியே,நீயெல்லாம் உருப்படுவியா? இன்னும் ப்ரீஸருக்குள்ள எல்லா பொடியும் பேக்கட்,பேக்கட்டா தானே வைச்சிருக்கே? உண்மைய ஒத்துக்கோ"-ன்னு டிஸ்டர்ப் பண்ணுது. ஸோ..ஒத்துக்கிறேன்!ஹிஹிஹி!!
இந்த போஸ்டிங்-ஐ சமையல் குறிப்புல போடுவதை விட 'மொக்கை'ல போட்டா பொருத்தமா இருக்குமேன்னு லேபிள்ஸ்லயும் மாத்திட்டேன்.
Podiya vida enakku antha rendu dosa melaye kanna irukku...eduthukkava?? nenka vera padam pottukkonka...nan sapda poren antha dosaikalai..
ReplyDeleteபோட்டோஸ் சூப்பராயிருக்கு மகி..தோசையை அப்படியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு..
ReplyDeleteஎடுத்துக்கோங்க நித்து! கைவசம் நிறைய தோசை இருக்கு.நோ ப்ராப்ளம் :)
ReplyDeleteமேனகா,நீங்களும் சாப்பிட வாங்க.:)
never tried podi dosai looks delicious and yummy, beautiful
ReplyDeleteமகி போட்டோஸ் பார்க்கும் பொழுதே.. தோசை ருசியா இருப்பது தெரியுதே..
ReplyDeleteஃபாயிஸா,வாங்க,வாங்க! எப்படி இருக்கீங்க? குட்டீஸ் ரெண்டுபேரும் நலமா? பேர் வைச்சுட்டீங்களா?
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வேணி,எங்க வீட்டுப்பக்கம் கல்யாணங்கள்ல நைட் டிபன்ல இந்த பொடிதோசை கட்டாயம் இருக்கும்.ட்ரை பண்ணிப்பாருங்க.நன்றி!
மகி நானும் கூட அம்மா மாதிரி இட்லி பொடி செய்யறேன்னு, ரொம்ப கேவலமா வந்தது. அதனால இட்லி பொடி மட்டும் எப்பவும் ஊர்ல இருந்து வந்துரும்(மத்த எல்லா பொடியும்தான்).
ReplyDeleteதோசை நல்லா முறுகலா இருக்கு!
//அட்லீஸ்ட் பேக்கட் இருந்தாலாவது கண்டு பிடிச்சிருப்பேன்னு வைங்க.// ம். இப்படி எனக்கும் முன்னால தோன்றும். இப்ப லேபிளை அப்படியே பிச்சு டேப் போட்டு டப்பால ஒட்டி வைக்கிறேன்.
ReplyDeleteஎனக்கும் இட்லிப் பொடி பிடிக்கும். ஒருமுறை அரைத்து வைத்து நானே முழுக்கத் தீர்க்க வேண்டி வந்ததில் கடைலயே வாங்குறது. நெக்ஸ்ட் டைம் இந்த ரெசிபி ட்ரை பண்றேன். ஒன்றுக்கு ஒரு ஆயிரம் குறிப்பா கொடுத்து இருக்கீங்க. ;)
ஓகே. பாயின்ட் நோட்டட் ஆனரபிள் இட்லி டீச்சர். ;) இட்லிப் பொடிக்குக் கூட ஆட்டோக்ராப் போட்டுக் கொடுப்பாங்களா என்ன? அதிஷ்டக்காரப் பொடி.
//அப்ப சமையல் எண்ணெய்,ஆலிவ் ஆயில் இதுல ஒண்ணு கண்டிப்பா உங்க கிச்சன்ல இருக்கும்ல?// இல்லையே! க்ருஷ்ணாயில் ஓகேயா?
ஜெய்லானி..........?
ReplyDeleteஉள்ளேன் ஐயா....!!!
//உள்ளேன் ஐயா....!!!//
ReplyDelete? தூக்கத்துல கண்ணு தெரியலயா!!!
//அதுவும் இல்லையா, அப்ப சமையல் எண்ணெய்,ஆலிவ் ஆயில் ஒண்ணு கண்டிப்பா உங்க கிச்சன்ல இருக்கும்ல?அதை ஊற்றி சாப்பிடுங்க.:)//
ReplyDeleteஎங்க கிச்சன்ல மன்னென்னைய் தாங்க இருக்கு . அதை ஊத்தி சாப்பிட்டா வயிறு எரியாதா...?
//இட்லிப்பொடியை எப்பவும் நான் ப்ரிட்ஜில்தான் வைப்பது.மற்ற பொடிவகைகள் எல்லாம் ப்ரீஸர்ல..இதுமட்டும் ப்ரிட்ஜ்ல.(அது ஏன்னு யாரும் கேட்டுடாதீங்க,எனக்கே தெரியாது!ஹிஹி)//
ReplyDeleteஹி..ஹி...ஏன் அங்கதான் எலி வராதா...?
//என் அன்புக்கணவருக்கு(இமா&சந்தனா,நோட் திஸ் பாயின்ட்:)) இந்த இட்லிப்பொடி மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் நான் இட்லிப்பொடி அரைப்பதே அவருக்குத்தான்!(ஏனா எனக்கு இட்லிப்பொடி அவ்வளவா பிடிக்காது.) இதோ,அதற்கான சாட்சி..:))))))//
ReplyDeleteநீங்க செய்யரது உங்களுக்கே பிடிக்காது... பாவம் அவரு..!! அதை நினைச்சா அழுவாச்சியா வருது.....என்ன் இருந்தாலும் மாம்ஸ் தி கிரேட்...!!!
//பலமுறைகள் இதனை செய்த பின்னர் கான்பிடென்ஸ் வந்து இப்ப இதே பொருட்களுடன் 2 டேபிள்ஸ்பூன் வெள்ளை எள்ளையும் வறுத்து அரைக்க ஆரம்பித்திருக்கேன்.கூடவே சிறு துண்டு வெல்லமும்.///
ReplyDeleteஉங்க மாம்ஸுக்கு இந்த கமெண்ட்:-
அப்ப இத்தனை நாளா எப்படிசார் சாப்பிட்டீங்க . நீங்களும் என் கட்சிதானா .பாருங்க என்ன அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நல்லா இருக்குன்னு சர்டிபிகேட் தரவேண்டிருக்கு.
இநத கமெண்ட் உங்களுக்கு மஹி..
எதுஎதுல இன்னும் கான்ஃபிடண்ட் வரல லிஸ்ட் பிளீஸ்...ஹி..ஹி..
இட்லி பொடி சூப்பர் .பாக்கும் போதே கேக்குது அதுவும் மெல்லிசா சுட்ட தோசையுடன் அருமை...!!!
ReplyDelete@@@இமா--//உள்ளேன் ஐயா....!!!//
ReplyDelete? தூக்கத்துல கண்ணு தெரியலயா!!!
ஓஹ் இது யாரு நம்ம இமா மாமியா..?
அப்ப
உள்ளேன் டீச்சர்..
//இட்லிப்பொடியில் செய்த பொடிதோசை..//
ReplyDeleteஅய்யய்யோ, இட்லிப்பொடியிலே தோசை செய்ய முடியாதுங்கோ, அரிசி மாவுல தோசையை ஊற்றி அது மேல இட்லிப் பொடியைத் தூவி சுடணுமுங்கோ? யாராச்சும் இட்லிப்பொடியைக் கரைச்சு தோசை சுட்டுடாதீங்க. இட்டிலிப்பொடி வேஸ்ட் ஆயிடும்.
ஜெய் அண்ணா,எல்லாரும்'தோசை நல்லாருக்கு,பொடி நல்லாருக்கு'ன்னு ஸ்ட்ரெயிட்டா மூக்கத் தொட்டுட்டாங்க..ஆனா நீங்க நாலு கமண்ட்டப் போட்டு,தலைய சுத்தி, கடைசியா /இட்லி பொடி சூப்பர்.பாக்கும் போதே கேக்குது அதுவும் மெல்லிசா சுட்ட தோசையுடன் அருமை...!!!/ன்னு சொல்லிருக்கீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
ReplyDeleteவெள்ளிக்கிழம பொய் சொல்லமாட்டேன்னு தெரிஞ்சே/எதுஎதுல இன்னும் கான்ஃபிடண்ட் வரல லிஸ்ட் பிளீஸ்...ஹி..ஹி../ இந்தமாதிரி க்ரிட்டிகல் கொஸ்டின் எல்லாம் கேக்கலாமோ? :)
இந்த ப்ளாக்ல இதுவரை வராத குறிப்புகள் எல்லாமே என் கான்ஃபிடன்ட் லிஸ்ட்ல வராதவை!
@தெய்வசுகந்தி-->சுகந்திக்கா,நீங்களும் என்ன மாதிரியே உண்மைய சொல்லீட்டீங்க,வெரிகுட்!:)
@இமா-->/இல்லையே! க்ருஷ்ணாயில் ஓகேயா?/ அச்சச்சோ..க்ருஷ்ணாயில்ல சமைப்பீங்களா இமா?? எ.கொ.இ.இ??நீங்க அப்படிலாம் சாப்பிடவேணாம்,வெறும் பொடியவே சாப்பிட்டுடுங்க!
//அப்ப சமையல் எண்ணெய்,ஆலிவ் ஆயில் இதுல ஒண்ணு கண்டிப்பா உங்க கிச்சன்ல இருக்கும்ல?// இல்லையே! க்ருஷ்ணாயில் ஓகேயா?//
ReplyDeleteஅச்சோ..!! இமா மாமியின் கமெண்டை பாக்காம் நான் வேர போட்டுட்டேனே ...!!
கேள்விகளுக்கு பதில்:
ReplyDelete/இட்லிப் பொடிக்குக் கூட ஆட்டோக்ராப் போட்டுக் கொடுப்பாங்களா என்ன?/ நீங்கதான் பார்க்கறீங்களே இமா? இது பொடி அரைத்த அடுத்தநாள் காலை ப்ரிட்ஜ்-ஐ திறக்கும்போது இட்லிப்பொடி பாக்ஸ்மீது வைத்திருந்தது.:)
/எங்க கிச்சன்ல மன்னென்னைய் தாங்க இருக்கு . அதை ஊத்தி சாப்பிட்டா வயிறு எரியாதா...?/இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கலை..நீங்களும் ப்ளெய்ன் பொடியவே இட்லி/தோசைக்கு தொட்டு சாப்பிடுங்க.இது உங்க நல்லதுக்கு மட்டுமில்லை,உங்க வீட்டிலிருப்பவங்க நன்மைக்காகவும்தான்!:)
/ஹி..ஹி...ஏன் அங்கதான் எலி வராதா...?/ஹிஹிஹிஹி,நோ கமெண்ட்ஸ்!
/அப்ப இத்தனை நாளா எப்படிசார் சாப்பிட்டீங்க /இது என்ன சின்னப்புள்ளத்தனமா ஒரு கேள்வி?கையால எடுத்து வாயாலதான் சாப்ட்டாரு.
/பாருங்க என்ன அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நல்லா இருக்குன்னு சர்டிபிகேட் தரவேண்டிருக்கு./இது 101% பொய்யான கருத்து.நாங்கள்லாம் அப்பாவிங்க,அடிதடிக்கெல்லாம் போகமாட்டோம்.
/எதுஎதுல இன்னும் கான்ஃபிடண்ட் வரல லிஸ்ட் பிளீஸ்../ஹை..இப்படி பொலைட்டா கேட்டா,நானும் மோர்குழம்பு,அவியல்,வெந்தய இட்லி,ஐசிங் கேக் இப்படி பதில் சொல்லிடுவேன்னு பாத்தீங்களா? உஷாரா இருப்பம்ல?
/இட்லிப்பொடியிலே தோசை செய்ய முடியாதுங்கோ, அரிசி மாவுல தோசையை ஊற்றி அது மேல இட்லிப் பொடியைத் தூவி சுடணுமுங்கோ?/கவுண்டரே,நீங்களுமா? இதோ..இதோ..இப்பவே எடிட் பண்ணிடறனுங்க.:)
அரிசிமாவுல தோசை சுட முடியாதுங்.அரிசி,உளுந்து வெந்தயம் இதெல்லாம் போட்டு அரைச்சு சுடோணுமுங்க.:):)
//ஹி..ஹி...ஏன் அங்கதான் எலி வராதா...?// ம். அடுத்த 'நோட் தி பாயின்ட்' லிஸ்ட்டுக்கு இன்னொரு பேர். ;)
ReplyDelete//அச்சோ..!! இமா மாமியின் கமெண்டை பாக்காம் நான் வேர போட்டுட்டேனே ...!!// ம். யாரோ சாபம் விட்டு இருக்காங்க. அதான் தூக்கத்துல கண்ணு தெரியல மருமகனுக்கு. ;)
எலி ஆட்டோக்ராஃப் எல்லாம் போட்டுக்கொடுத்திருக்காரு.. :)) அம்புட்டு ஃபேமசா அவரு?
ReplyDeleteஜெய்லானி... கலக்கல் கமெண்ட்ஸ்..
இதய வச்சுத் தான் நானும் சமாளிக்கனும்ன்னு நினைக்கறேன்.. கண்டிப்பா பண்ணிப் பாக்கறேன் மஹி.. இதுவரைக்கும் செஞ்சதில்ல.. அறுசுவைக்கும் மூல ஆசிரியருக்கும் நன்றிகள்..
எல்ஸ்...
ReplyDeleteஅவங்க சொல்லி இருக்கிற 'பாயின்ட்டை' நோட் பண்ணிக் கொள்ளவே மாட்டீங்களா!! ;(
;))
மஹி மொக்கை ரொம்ப நல்லா இருக்கு , நான் கூட இப்போ சில மாதாமாக தான் பொடி தனியே செய்துகிறேன் இல்லனா அம்மா தான் கொடுத்து விடுவாங்க . நானும் இது போல தான் செய்வேன் சிறிது கருவேப்பில்லை, மற்றும் பூண்டு சேர்த்து கொள்வேன், நான் பிளெயின் தோசையில் பொடி போட்டது இல்லை , வெங்காயம் போட்டு ஊத்தப்பம் மாதிரி செய்றதுல தான் போடுவேன் , ரொம்ப நல்லா இருக்கும் . உங்க போட்டோஸ் வழக்கம் போல சூப்பர்.
ReplyDeleteமொறு மொறு பொடி தோசை பார்க்கவே சாப்பிடவேண்டும் போல் உள்ளது.
ReplyDeleteபெயர்தான் இட்லிப்பொடி, ஆனால் அதன் பின்னாலே.... பெரிய விளக்கங்கள் கொடுத்து அசத்திட்டீங்க.
ReplyDeleteஎனக்கும் புடிக்கும்.. ஆராவது இப்பூடிச் சுட்டுச் சுட்டுத் தந்தால்:).. நோட் திஸ் குட் பொயிண்ட் யா..:).
ஹி..ஹி...ஏன் அங்கதான் எலி வராதா...?// என்னாது எலியோ? ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க???????
மகி, சூப்பர் பொடி. நான் இந்த விபரீத விளையாட்டுக்கெல்லாம் போவதில்லை. எப்போதும் சட்னி, சாம்பார் தான். அது தான் பாதுகாப்பும் கூட.
ReplyDeleteஅடடா! ரொம்ப டச்சிங் ஆஆ இருக்கு??? எலியின் கையெழுத்து தானா அது???
( பாவம் அதீஸ் ஒன்றுமே விளங்கவில்லை )
@@@athira --//ஹி..ஹி...ஏன் அங்கதான் எலி வராதா...?// என்னாது எலியோ? ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க??????? //
ReplyDelete@@@vanathy --//பாவம் அதீஸ் ஒன்றுமே விளங்கவில்லை //
பேபி அதிரா எதுவா இருந்தாலும் சொல்லுங்க, மஹி கோபப்படமாட்டங்க
இட்லிப்பொடி அருமையாக இருக்கு.மொக்கையும் சூப்பர்.
ReplyDelete//எனக்கு சாம்பார் பொடிக்கும்,ரசப்பொடிக்கும் வித்யாசம் தெரியாது//
ReplyDeleteஇதுக்கு தான் என்னை மாதிரி புத்திசாலிதனமா label எல்லாம் ஒட்டி வெச்சுக்கணும்... எப்பூடி? ஹி ஹி ஹி
ஆஹா... mindvoice இங்கயும் தொல்லையா... என்ன செய்யலாம்? பேசாம உங்க பொடி தோசைய குடுத்து பாருங்க... ஓடி போய்டும்... ஜஸ்ட் கிட்டிங்... nice recipe ... ஹா ஹா ஹா
ReplyDeleteWow Mahi! I want to eat those dosas right now, so drool worthy.
ReplyDelete@சந்தனா~~>/அம்புட்டு ஃபேமசா அவரு?/இல்லையா பின்னே? ஹீரோவாக்கும்!:)
ReplyDelete@இமா~~>நீங்க நோட் பண்ணிகிட்டீங்க..அவங்க அவசரத்துல க்ராஸ் பண்ணிருப்பாங்க.தனியா சொல்லிடறேன்.
@சாரு~~>நான் கறிவேப்பிலை போட்டிருக்கேன்,பூண்டு சேர்ததில்லை.ப்ளெயின் தோசைல போட்டுப்பாருங்க சாரு,நல்லா இருக்கும்.
@ஸாதிகா அக்கா~~>வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அக்கா!
@அதிரா~~>/எனக்கும் புடிக்கும்.. ஆராவது இப்பூடிச் சுட்டுச் சுட்டுத் தந்தால்:)/ எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதிரா!
/பெயர்தான் இட்லிப்பொடி, ஆனால் அதன் பின்னாலே.... பெரிய விளக்கங்கள் கொடுத்து அசத்திட்டீங்க./ பத்து லைன்ல இட்லிப்பொடின்னு போட்டிருக்கலாம்..ஆனா கூடவே வந்த குசும்பு இப்படி மொக்கை போடவைத்திடுச்சு. :) நன்றி அதிரா!
@வானதி~~>அவ்வளவு விபரீதம் இல்ல.கொஞ்சம் ஈஸிதான்.நானே செய்திருக்கேன்,உங்களால முடியாதா என்ன? செஞ்சுபாருங்க.
/அடடா! ரொம்ப டச்சிங் ஆஆ இருக்கு???/ஆஹா,அப்படியா?நன்றி வானதி!
@ஜெய் அண்ணாஆஆஆ,/
பேபி அதிரா எதுவா இருந்தாலும் சொல்லுங்க, மஹி கோபப்படமாட்டங்க/ அதிராவுக்கும்,உங்களுக்கும் இன்னும் சரியாத் தெரில..தெரிந்துக்கிட்டு குழம்பறதை விட,இந்த எலி மேட்டரை இத்தோட விட்டுடுங்கோ என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
@ஆசியாக்கா~~>நன்றி ஆசியாக்கா.ஊர்ல பார்பிக்யூ பண்ணி கலக்கிட்டு இருக்கீங்க.:)
@புவனா~~>நன்றிங்க புவனா! /label எல்லாம் ஒட்டி வெச்சுக்கணும்/ நாங்கள்லாம் பேக்கட்டையே வச்சிருக்கோம் அம்மணி(எல்லாம் ஒரு அனுபவந்தான்)!
உங்களுக்கு 'ஹா ஹா ஹா'தங்கமணி-ன்னு பேரு வைக்கப்போறேன்.என்ன சொன்னாலும் ஒரு ஹா ஹா சொல்லாம இருக்கறதில்லை நீங்க! கரெக்ட்டா புவனா? ஹா..ஹா..ஹா!!!
@மஹேஸ்,வீட்டுக்கு வாங்க,சாப்பிடலாம்:)!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
yummy and simple dosas
ReplyDeleteநன்றிங்க ஷாந்தி!
ReplyDeleteI luv podi dosai...looks super crispy and perfect
ReplyDeleteHai mahi mam
ReplyDeleteEnaku samaikavae theriyathu.but unga samaiyal tips ellam okpa.
enga ammakita soli samaika soluraen. sapdu pathdudu than nan ceratificate tharvaen.
enga rmba supera samipanga.avanga native nagerkovil. so aviyal,aappam la supera seivanga. nan athulaum ethavathu oru kurai solidu than sapduvaen.
athu epadi nu kekathenga. apdi than.
ஷர்மிலி,உங்க கமெண்ட்டை இப்பதான் பார்க்கிறேன்.தாமதமான நன்றீங்க!:)
ReplyDeleteசங்கரி,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.அம்மாகிட்ட சமைச்சு தரச் சொல்லி சாப்ட்டீங்களா? எப்ப நீங்களா சமைக்கப் போறீங்க? :)
மஹி நானும் இந்த முறையில் தான் பொடி தயார் செய்வேன்.என்னவருக்கும்,என் பெரிய பைய்யனுக்கும் இந்த பொடி இருந்த படியே இருக்கணும்.உங்கள்ட்ட ஒரு புது விஷயம் கற்றுக் கொண்டேன் மஹி.அதாங்க....ஃபிரிட்ஜில் பொடியை வைத்தால் ஃப்ரஷ்ஷாக இருக்கும் என்பதை... இனி நாங்களும் ஃபாலோ பண்ணுவோமுல்ல... ஆமாங்க நிறைய செய்து வச்சோமுன்னா பாதிக்கப்புறம் கொஞ்சம் நமத்தா மாதிரி தானே போயிடுது.அதனாலேயே கொஞ்சம் கொஞ்சமாக அரைத்துக் கொள்வேன்.இனி......ஹி...ஹி...
ReplyDeleteநல்ல ஐடியாவுக்கு நன்றி மஹி...
அன்புடன்,
அப்சரா.
Hai dear, I enjoyed your writings. Such a nice writeups.
ReplyDeleteBest expressios. felt like talking with you directly.
viji