Saturday, November 15, 2014

இந்த நாள், இனிய நாள்...!!

இன்றைக்குச் சரியாக 365 நாட்களுக்கு முன்பாக..
எங்கள் வாழ்க்கைத் தோட்டத்தில் வசந்தம் வீச..
 கை-கால் முளைத்த ரோஜாப்பூச்செடி ஒன்று கையில் கிடைத்தது!

இளஞ்சிவப்பு நிறத்தில், தலைகொள்ளா முடியோடு, பவள நிற உதடுகளோடு 
எங்கள் தேவதை காலை 9.45 மணிக்கு எங்களை ஆசீர்வதிக்க முதல் குரலெழுப்பினாள்! :)
இன்னொரு அப்பாவும் அம்மாவும் இந்த உலகத்தில் பிறந்தனர்! :) :) 

நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணிகளாகி, மணிகள் நாட்களாகி
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் பன்னிரண்டும் கடந்துவிட்டன இன்று!
கைக்குள் அடங்கிக் கிடந்த முல்லைப்பூ இன்று வீடெங்கும் தவழ்ந்து வாசம் வீசுகிறது!

எங்கள் வாழ்விற்கு அனுதினமும் புதுப்புது அர்த்தங்களைப் புரியவைக்க வந்த என் மகளே, 
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு பல்லாயிரத்தாண்டு நீ நலம் வாழ்கவே! 


இந்த வலைப்பூவுக்கு வருகைதரும் அன்புள்ளங்கள் தம் அன்பான ஆசிகளை, வாழ்த்துகளை லயாவிற்கும் லயாவின் குடும்பத்தினருக்கும் தருவீர்கள் என்றுணர்ந்து எங்கள் உள்ளத்தினின்றும் இப்பொழுதே நன்றிகள் நவில்கிறோம் அனைவருக்கும்!  
பிறந்தநாள் விழாவிலிருந்து ஐஸ்க்ரீம் கேக்...ருசியுங்கள்! 
:)
நன்றி! 

25 comments:

 1. மகி,

  பாப்பூ, இப்படி திரும்பு பாக்கலாம் !!

  குட்டி ரோஜாவுடன் சேர்ந்து அப்பாஅம்மாவும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழ வாழ்த்துக்கள் ! எங்களின் ஆசிகளும் உங்களின் குடும்பத்திற்கு.

  ஒவ்வொரு நொடியையும் எப்படி அனுபவிச்சு ரசிச்சிருக்கீங்க என்பதை நாங்களும் ரசிச்சோம்.

  ReplyDelete
 2. Happy Birthday Laya kutti chellam :) May God Bless you dear !!

  ReplyDelete
 3. //இன்னொரு அப்பாவும் அம்மாவும் இந்த உலகத்தில் பிறந்தனர்! :) :)
  //

  aaaaw !!! kavithai kavithai !!!

  ReplyDelete
 4. லயா பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு
  பல்லாயிரத்தாண்டு நீ நலம் வாழ்கவே!

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் லயா குட்டி....பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.நாட்கள் ஓடிவிட்டது குட்டிக்கு ஒரு வயதாகிவிட்டதா... மகி உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 6. லயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. வாழ்வில் எல்லா வளமும் புகழும் பெற்று நீடுழி வாழ்க...!

  ReplyDelete
 7. லயா பாப்பாவிற்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .......இது போல் என்றும் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்,,,,

  ReplyDelete
 8. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு பல்லாயிரத்தாண்டு நீ நலம் வளம் பெற்று வாழ்கவே! அம்மா, அப்பாவின் அனைத்து ஆசைகளும் நிறைவேறட்டும்.

  ReplyDelete
 9. Enna arputhamaana arthamulla varigal, kangal niraindhadhu anandhathinaal. Best wishes, blessings and plenty of love to laya kutti and family.

  ReplyDelete
 10. வணக்கம் மஹி!

  அள்ளி எடுத்துநல் ஆனந்தம் காணவே
  துள்ளி நடைபோடும் தேவதை! - கொள்ளையிட
  மெள்ள நகைக்கின்ற வெண்நிலா! நீடுநலம்
  கொள்ளவே வாழ்த்தினேன் கூறு!

  அழகு லயாக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
  அவள் அம்மா அப்பாவுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!..:)

  ReplyDelete
 11. wow... belated wishes to your cutie pie.. Wishing her a great year ahead!

  ReplyDelete
 12. Happy birthday to laya kutty,may god bless u !!

  ReplyDelete
 13. லயாக் குட்டி..... கொஞ்சம் திரும்பி எங்களைப் பாரேண்டா செல்லம்.
  ரொமபப் பிசியோ.....சரி சரி....
  உன் பிறந்த நாளுக்கு என் வாழ்த்துக்கள்.
  வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற ஆசிகள் பல.
  லயாக்குட்டிக்கு மட்டுமல்ல லயாவின் பெற்றோருக்கும், வாழ்த்துக்களும், ஆசிகளும்.

  ReplyDelete
 14. லயாகுட்டிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ரெம்ப அழகா லயா இருக்கின்றா. லயாசெல்லத்தின் அப்பா,அம்மாவிற்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லயா குட்டி...

  எங்கே இந்த பக்கம் கொஞ்சம் திரும்புங்க ....

  ReplyDelete
 16. லயா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மகி ரொம்ப சந்தோசம். உங்கள் அனைவருக்கும் கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்க வேண்டுகிறேன்.

  அப்புறம், எப்போ லயா-வின் முகம் காட்ட போறீங்க? காத்திருக்கோம். சீக்கிரம் ப்ளீஸ்.

  ReplyDelete
 17. வாழ்த்தும் ஆசியும் தந்த அனைவருக்கும் எங்களின் அன்பான நன்றிகள்!

  லயாவின் முகம் பார்க்க விரும்பும் தோழிகள் உங்க மெய்ல் ஐடி-யை கமெண்ட்டில் போடுங்க, மெயிலில் எங்களைப் பார்க்கலாம்! :)
  நன்றி!

  ReplyDelete
 18. Belated wishes for Laya!!!! Happy Happy Happy B'day Laya kutti...

  ReplyDelete
 19. தாமதமாக வருகிறேனா? லயாச்செல்லம் கார்த்தியன்று பிறந்தவள். கார்த்திமாதம் கிருத்திகை நக்ஷத்திரம் என்று நினைத்திருந்தேன்.
  இங்லீஷ்மாதக்கணக்கு பாட்டி க்குஞாபகம் இல்லை.
  சுருதியும்,லயமுமாக நீடூழி வாழ்ந்து, எல்லா வளங்களையும் பெற ஆசீர்வதிக்கிறேன்.
  சின்ன பாப்பா,,செல்ல பாப்பா எல்லோரையும் மகிழ்விக்க வந்த
  குட்டிப்பாப்பா. கொஞ்சம் எங்கள் யாவரையும் திரும்பிப்பார்.
  மஹி,அருண் ,லயா யாவருக்கும் அன்பான ஆசிகள்.அன்புடன்

  ReplyDelete
 20. "வாழ்க வளமுடன்" முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் அன்பு குடும்பத்திற்க்கும்,உங்கள் குட்டி தெய்வத்திற்க்கும். உங்கள் blog பார்பதிற்க்கு வாய்ப்பு கிடைத்தது, படிக்க படிக்க மன நிறைவான ஒரு சந்தோஷம். ஒவொரு நிமுடமும் அனுபவித்து ரசித்திருக்கின்றீர்கள் உங்கள் லயாவை, படிக்கும்போதே கண்களில் கண்ணீர் (ஆனந்தம்) இப்படி ஒரு அம்மா,அப்பா கிடைத்ததற்க்கு உங்கள் பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் அன்பான குடும்பத்திற்க்கு, ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் தேவையான ஒன்று. என் மனைவிக்கு உங்கள் குடும்பத்தையும், குழந்தையையும் பார்க்க ஆசை, விருப்பமிருந்தால் பகிருங்கள் " Viji Rajesh .

  இன்னொரு அப்பாவும் அம்மாவும் இந்த உலகத்தில் பிறந்தனர்! -------- அருமையான பதிவு , இதை படிக்கும்போது எனக்கு என் தந்தையை நினைக்ககின்றேன் , எங்களுக்காகவே வாழ்ந்த என் அன்பு தெய்வம்.

  உங்கள் புதிய அப்‌டேட்க்காக waiting.

  வாழ்க வளமுடன்.

  Rgds
  ராஜேஷ்,வியஜயலக்ஷ்மி, சார்வின்.

  ReplyDelete
 21. குறிஞ்சி, வாழ்த்துக்களுக்கு நன்றிங்க!
  காமாட்சிம்மா, தாமதமா வந்தாலும் உங்க ஆசீர்வாதம் எங்களுக்கு மிகத்தேவை, சந்தோஷம் உங்க பதிவைக்கண்டு! :) லயாச்செல்லம் பிறந்தது ஐப்பசி மாதத்தின் கடைசி நாளம்மா..கார்த்திகை அல்ல!
  ராஜேஷ் & விஜி ராஜேஷ், உங்கள் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் எங்களின் அன்பான நன்றிகள்! வலைப்பூவில் எங்கள் படம் வரும் என நான் சொல்லவில்லை. உங்கள் குட்டி மகனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. லயா குட்டிக்கு தாமதமான வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.
  எல்லோருக்கும் கடவுளின் அருள் கிடைக்கட்டும்.

  நானும் பாப்பாவை பார்க்கணும். என்னுடைய ஐடி - kovai2delhi@gmail.com

  ReplyDelete
 23. I missed this post Mahi, time flies away, she's already one, belated birthday wishes to Laya kutti..

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails