Tuesday, April 7, 2015

வெண்ணை முறுக்கு / Butter Murukku

எங்க வீட்டுப்பக்கம் முறுக்கு என்றால் புழுங்கல் அரிசியை ஊறவைத்து அரைத்து, பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் செய்வதுதான் வழக்கம். இங்கே கடையில் கிடைக்கும் அரிசிமாவை உபயோகித்தும் எப்பொழுதாவது செய்வேன். இந்த முறையில் பொ.கடலை மாவுடன் வெண்ணெயும், கூடவே காய்ச்சிய எண்ணெயும் சேர்ப்பதால் முறுக்கு சும்மா வாயில போட்டா கரைஞ்சு வயித்துக்குள்ள நழுவிரும்! :) ;) செய்து பார்த்து சொல்லுங்க! 
செய்முறை
அரிசிமாவு-2 கப் 
பொட்டுக்கடலை-சுமார் 3/4கப் (மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்)
மிளகாய்த்தூள்-2டீஸ்பூன் (விரும்பினால்)
எள்ளு-1டேபிள்ஸ்பூன்
ஓமம்-1டீஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/4டீஸ்பூன்
வெண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
உப்பு 
எண்ணெய்

செய்முறை
வெண்ணெய் அறை வெப்பநிலையில் இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும்.  எண்ணெய் தவிர எல்லாப் பொருட்களையும் அகலமான பாத்திரத்தில் எடுத்து கைகளால் நன்றாக கலந்துகொள்ளவும்.
 ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை நன்கு சூடாக்கி மாவில் ஊற்றவும்.
 கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பிசைந்துகொள்ளவும். [2 கப் அரிசிமாவுக்கு ஒரு கப்பிற்கும் கொஞ்சம் அதிகமாகத் தண்ணீர் பிடித்தது.]
 பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்துவிடவும்.
 எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் முறுக்கை எடுத்து பேப்பர் டவலில் எண்ணெய் வடிய விடவும்.
 சுவையான முறுக்கு தயார். 

8 comments:

  1. புழுங்கலரிசி முறுக்கு எங்கவீட்டில் செம ஹிட். மிச்ச மாவில் 2ம்தரம் செய்து வைச்சிருகேன் மகி. இப்ப இன்னொன்று. செய்து பார்த்திடுறேன். இப்படியான நறுக்,மொறுக் அயிட்டம்ன்னா கெதியில முடிஞ்சிடும்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //நறுக்,மொறுக் அயிட்டம்ன்னா கெதியில முடிஞ்சிடும்.// இங்கேயும் அதே கதைதான் அம்முலு! :) எப்பவாவது அத்தி பூத்த மாதிரி இந்த ப்ளாகை எட்டிப்பார்த்துட்டு அதைச் செய்து கொடு, இதைச் செய்து கொடு"-ந்னு ரிக்வஸ்ட் வேற வரும்!! அவ்வ்வ்வ்!!!

      செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

      Delete
  2. சூப்பர்! இங்கே கொஞ்சம் அனுப்பி வைங்க....:)

    நான் இதனுடன் உளுத்தமாவும் சேர்ப்பேன். சுவையாக இருக்கும்.

    1 தம்ளர் அரிசி மாவுக்கு - 1 1/2 டீஸ்பூன் உளுத்தமாவு, 1 1/2 பொட்டுக்கடலை மாவு.. ஆனா பச்சரிசியில் தான் செய்வதுண்டு...:)

    ReplyDelete
  3. ஆசையாத் தானிருக்கு இந்த உடம்பு போட்டதிலிருந்து ஐந்தாறு வருடமா முறுக்கே செய்யறதில்லை...

    ReplyDelete
  4. வணக்கம்

    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமையாக உள்ளது நிச்சயம் செய்துபார்க்கிறோம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. பார்த்ததும் சுட வேண்டும்போல்தான் இருக்கு. ஆனா நாமே சுட்டுசுட்டு போரடிக்குதுனு இந்த வாரம் கடையில வாங்கிட்டு வந்திட்டேன். காலியாகட்டும் செய்ய முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  6. murukku super! glad to follow you via gfc

    ReplyDelete
  7. முறுக்கு பார்த்ததுமே செய்து சாப்பிட தோன்றுகிறது.
    முறுக்கு அச்சு கைவசம் இல்லை :(
    படத்தை பார்த்தே ஆசையை தீர்த்துக்கிறேன் மஹி...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails