தோசையில் உளுந்துக்கு பதிலாக கொள்ளு சேர்த்து செய்த தோசை, இட்லி அரிசி/புழுங்கல் அரிசிக்கு பதிலாக "கைக்குத்தல் அரிசி"/ப்ரவுன் ரைஸ் சேர்த்து செய்தது இந்த தோசை. எப்படியும் இட்லி தோசைய நம்ம டயட்-ல இருந்து விலக்க முடியாது என்று இருப்பதால.. அட்லீஸ்ட் கில்ட் ஃப்ரீயாச் சாப்பிடலாமே!! எங்க வீட்டில வாரத்துக்கொருமுறை இந்த தோசையும், கீன்வா-ப்ரவுன் ரைஸ் தோசையும் மாற்றி மாற்றி இடம் பிடிக்கின்றன இப்போது. நீங்களும் செய்து பார்த்துச் சொல்லுங்களேன்!
தேவையான பொருட்கள்
ப்ரவுன் ரைஸ் - 2 கப்
வெந்தயம்-1டீஸ்பூன்
கொள்ளு-1/2கப்
உப்பு
செய்முறை
1. ப்ரவுன் ரைஸ், வெந்தயம் இரண்டையும் நன்றாக 2-3 முறை களைந்து சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. கொள்ளையும் நன்றாக களைந்து ஆறு மணி நேரம் ஊறவைக்கவும்.
3. க்ரைண்டரில் கொள்ளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும். மாவு சும்மா பொங்கிப் பொங்கி வந்தது. க்ரீம் மாதிரி எப்படி நிற்குது பாருங்க கிண்ணத்தில்!! ;)
4. கொள்ளை சுமார் 20 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும்.5. அரிசி-வெந்தயத்தையும் தேவையான தண்ணீர் விட்டு நன்கு அரைத்தெடுத்து கொள்ளுடன் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து கலந்து புளிக்க விடவும்.
6. மாவு புளித்ததும் கொஞ்சம் மாவை எடுத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலந்து தோசைகளாக வார்க்கவும்.
7. சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
8. சுவையான கொள்ளு தோசை தயார். நல்ல காரசாரமான சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு
ஊறிய கொள்ளை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தும் அரைக்கலாம்..நன்றாக மாவு காணும்.
இந்த மாவில் இட்லி செய்ய முடியாதா எனக் கேட்பவர்களுக்கு...நான் செய்து பார்க்கலை, அதனால் தெரியவில்லை. ;) :)
இந்த தோசைக்கு தேங்காய்ச்சட்னியை விட, நல்ல புளிப்பான தக்காளிச் சட்னி, அல்லது காரசாரமான சட்னி, குழம்புவகைகள் நன்றாக இருக்கும்.
தோசையும் அதுக்கு பக்கத்தில இருக்கிற கெட்டி சட்னியும் செம டேஸ்ட்டா இருக்கும் போல.. அரைத்து வைத்த கொள்ளு மாவு சும்மா ஜம்முனு பிள்ளையார் ஷேப்புல இருக்குறதை பார்த்தா இட்லியும் ரொம்ப நல்லா வரும் போல தெரியுது. நான் இட்லி செய்து பார்த்து அப்புறமா தோசை செய்கிறேன். சீக்கிரமா இட்லி போட்டோ அனுப்புறேன்...:)
ReplyDeleteவணக்கம் சகோ!
ReplyDeleteவாழ்த்துகள்
இந்த பதிவை படித்தபின்பு
எனது மனம், எனது மனைவியிடம்
இந்த கொள்ளு தோசையை வார்க்கச் சொல்லி
வறுத்தெடுக்கிறது!
ஆஹா! அருமை!
நன்றி சகோ!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
வணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன் அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கொள்ளுதோசை ஆஹா பார்க்க செய்துசாப்பிடனும் போல இருக்கு. அடுத்தமுறை கொள்ளுதான் ஊறபோடுறது.
ReplyDeleteஐய்ய் நானும் பதிவை வாசிக்க முன் படம்பார்த்து இது என்ன க்ரீம் போல இருக்கே என நினைத்தேன். கொள்ளுதான் இப்படி அழகா இருக்கு. பகிர்வுக்கு நன்றி மகி.
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDelete@ராதாராணி, நான் இப்படி (இ.அரிசி இல்லாமல்) அரைக்கும் மாவுகளில் இட்லி செய்வதில்லைங்க. அதென்னமோ இட்லின்னா வெள்ளையாதான் இருக்கணும்னு என் மூளை முடிவு பண்ணிடுச்சு! :) நீங்க செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!
@ப்ரியா, க்ரீம் போல இருப்பதைப் பார்க்க விநாயகர் போல தெரியுது எனக்கு! ;) செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!
பருப்புகூட வெந்தயம் சேர்த்துதானே அரைப்போம். இது புதுசா இருக்கே. செல்லாது செல்லாது.
ReplyDeleteதோசை அழகா வந்திருக்கு. சூடுங்கறதால கொள்ளு வாங்குவதில்லை. அதனால கண்ணாலேயே தோசையையும், சட்னியையும் முழுங்கிட்டு போயிடுறேன்.