Thursday, October 31, 2013

அவல் மிக்ஸர் (டயட் வர்ஷன்)

இந்த மிக்ஸர் சுடச்சுடச் செய்து ஈவினிங் டீ-யுடன் கொறிக்க சரியான ஜோடி! இங்கே கொடுக்கப்பட்டுள்ளது மிகக் குறைந்த அளவில் செய்த பேஸிக்  ரெசிப்பி. இதனுடன் உங்கள் விருப்பப்படி வேர்க்கடலை-முந்திரி-திராட்சை-கறிவேப்பிலை-பூண்டு இவற்றையும் சேர்த்து செய்யலாம். மிளகுத்தூளுக்குப் பதில் மிளகாய்த்தூள்-பெருங்காயமும் சேர்க்கலாம். ஷாலோ ஃப்ரை செய்வதற்கு பதிலாக டீஃப் ஃப்ரையும் செய்துகொள்ளலாம். உங்கள் தேவை மற்றும் வசதிப்படி செய்து ருசித்துப் பாருங்க. :)
தேவையான பொருட்கள்
கெட்டி அவல்-1/2கப்
பொட்டுக் கடலை-1டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள்-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்-2டீஸ்பூன்
செய்முறை
மிதமான தீயில், கடாயில் எண்ணெய் காயவைத்து அவலைச் சேர்த்து வறுக்கவும்.
அவல் கருகாமல் பொரியும் வரை கவனமாக கை விடாமல் கிளறிவிட்டு வறுக்கவும்.
 அவல் மொறுமொறுப்பாக பொரிந்ததும் பொட்டுக்கடலை சேர்க்கவும். [வேர்க்கடலை-முந்திரி-கறிவேப்பிலை சேர்ப்பதாக இருந்தால் இந்நிலையில் சேர்த்துக்கொள்ளவும்]
 மிளகுத்தூள், தேவைக்கு உப்பு சேர்த்து கலக்கவும். [மிளகாய்த்தூள்-பெருங்காயத்தூள்-உப்பு சேர்ப்பதாக இருந்தால் இப்போது சேர்க்கலாம்.]
எல்லாப் பொருட்களும் நன்றாக கலந்து சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
நிறையச் செய்து காற்று புகாத டப்பாக்களில் ஒரு வாரம் பத்து நாட்கள் வரை வைத்துக்கொள்ளலாம். நினைத்த நேரம் குற்ற உணர்ச்சி இல்லாமல் கொறிக்க ஒரு கறுக் மொறுக் ஸ்னாக்ஸ் இது. ரெசிப்பி கர்ட்டஸி என் மாமியார். படமெடுத்தது மட்டுமே நான்! :) 

14 comments:

  1. superaana mixture...

    deepavali wishes....

    ReplyDelete
  2. அடடா... அருமையா இருக்கே... அவல் என்றால் மிகவும் பிடிக்கும்... செய்முறைக்கு நன்றி...

    இனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வீட்டில் அவல் இருக்கு ....உடனே செய்யப்போறேன் :)))

    மகி குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. அட.....நல்லாருக்கே இந்த மிக்சர்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி.
    அவலின் அவதாரங்கள் இவ்வளவு இருக்கா! ஆர்வமுடனே அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. ஆவ்வ்வ்வ்வ்வ் அன்று நினைத்தேன்ன் எண்ணெயில் பொரிப்பதாக்கும் என... அப்போ இப்பூடியா செய்தீங்க சூப்பர்ர்..

    ReplyDelete
  7. சிம்பிளான ரெஸிபி, அவல் இருக்கு, செய்திடலாம்.

    ReplyDelete
  8. அச்சோ... இவ்வளவுந்தானா வேலை... நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன்...

    எனக்கும் பிடிக்குமே.. கண்டிப்பா தீபாவளி பலகாரத்துக்கு ஒரு வேலை முடிஞ்சுது...:)

    ரொம்ப நன்றி மகி! பகிர்விற்கு..:)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், மகி!

    ReplyDelete
  10. ரெம்ப ஈசியான மிக்ஸரா இருக்கே. செய்து பார்க்கிறேன்.
    நன்றி மகி.
    உங்க குடும்பத்தினருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அம்முலு, வாழ்த்துக்கும், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
    ~~
    ரஞ்சனி மேடம், வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்களுக்கும் தீபாவளி இனிமையாய் இருந்திருக்கும் என நம்புகிறேன். :)
    ~~
    இளமதி, மிக்ஸர் உங்களுக்கும் பிடித்ததில் சந்தோஷம். வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்! உங்கள் தீபாவளி இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
    ~~
    சித்ராக்கா, செய்து பார்த்து சொல்லுங்க, நன்றி!
    ~~
    அதிராவ், எண்ணெயிலும் பொரிக்கலாம், அப்ப கலோரி கொஞ்சம் அதிகமாகும், இது ஹெல்தி வர்ஷனாக்கும். செய்து பார்த்து சொல்லுங்க! நன்றி!
    ~~
    பாண்டியன், வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க! உங்கள் தீபாவளி இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
    ~~
    ராஜி மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    ஏஞ்சல் அக்கா, வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்க தீபாவளியும் இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன். அவல் மிக்ஸர் 5 நிமிஷத்தில செய்திரலாமே, செய்துட்டு சொல்லுங்க!
    ~~
    தனபாலன் சார், சிவப்பு அவல்ல கூட செய்யலாம். செய்து பார்த்து சொல்லுங்க. வாழ்த்துக்களுக்கு நன்றிகள், உங்க தீபாவளி இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
    ~~
    ஆதி, உங்க வீட்டு தீபாவளி பல பலகாரங்களுடன் இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  12. Brought me nostalgic childhood days, Mahi. When i ask for snacks suddenly, my mother used to make this version but without pottukadalai. But she added turmeric powder in it..... hm.....getting back into the nostalgic world.

    ReplyDelete
  13. Thanks for the sweet comment Mira! Its nice to be nostalgic sometimes, right? :)

    ReplyDelete
  14. மஹி நான் இப்போதான் வந்தேன். மிக்சர் நன்றாக இருக்கு.
    இனிமையான தீபாவளி வாழ்த்துகள்.
    நானும் ஒரு மிக்சரை போட்டிருக்கேன். என்ன ஒத்துமை.
    முடிந்தால் பார்.அன்புடன்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails