Sunday, October 27, 2013

நான் அவனில்லை..!

:) 
பேசுவது படத்திலுள்ளவர்! அவர் சூரியனா சந்திரனா...கண்டுபுடிங்க பார்ப்போம்!
:) 
~~~
சிலதினங்கள் முன்பாக மூன்றாம் பிறையைப் படமெடுத்துப் பகிர்ந்திருந்தேன், அப்பதிவில் மூன்றாம் பிறை முழுநிலவாவதைப் படமெடுக்க முடிந்தால் இணைக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன்.  வார இறுதியில் வந்ததால் முழுமதியைப் படமெடுக்க இயலாமல் போனது.  அதனால் இந்தப் படங்களில் இருப்பது சந்திரன் என நீங்கள் நினைத்து ஏமாறக்கூடாது என்பதற்காய், சூரியன் தானாக முன்வந்து "நான் அவனில்லை!" என டைட்டில்லயே சொல்லிட்டார்! :))) 
[போடுவதே மொக்கை..அதுல கூச்சமென்ன? நல்லா பத்தி பத்தியாப் பக்கம் பக்கமாப் போடுவம்ல? ஹிஹிஹிஹி...]
அந்தி நேரத் தென்றல் காற்று சில்லென்று வீசிய ஒரு மாலைப் பொழுதில் மேகங்கள் மஞ்சள் கொற்றக்குடை பிடிக்க, பெருமையுடன் பூமியுலா முடித்து கடலில் இறங்கும் சூரியன்..
கடலின் நீலம் கீழ்ப்பகுதி உடலெங்கும் ஆதிக்கம் செலுத்த, தன்னுடல் கொண்ட பொன்வண்ணம் மேற்பாதி உடலுக்கும், அதன் மேலே பரந்து விரிந்த வானத்திரைக்கும், மேகக் குடைக்கும் வண்ணம் செலுத்த அர்த்தநாரீஸ்வரனாய் மோனப் புன்னகையுடன்...
சில நிமிடங்களில்..
மஞ்சள் நிறம் கருநீலமாகக் குவளைப்பூவில் குழைத்த வண்ணமாக மாற..
சற்றே அருருருருருருகில் சென்று படமெடுக்க முயன்றபோது கிடைத்த ஒரு படமிது! சந்திரனின் அழகுக்குத் தானும் சற்றும் குறைவில்லை என்று நிரூபித்த சூரியன்! :)
~~~
படங்களுடன் என் கிறுக்கலை ரசித்த நட்புக்கள் "கறுக்-மொறுக்" எனக் கடிச்சு ருசிக்க அவல் மிக்ஸர்! 
பயப்படாமச் சாப்பிடலாம், டயட் வர்ஷன் தான்! :) 
இல்லை..உங்க பதிவைப் படித்து பசி எடுத்துவிட்டது என்போருக்காக...
பீர்க்கங்காய் பொரியல்-முருங்கைக்கீரை பொரியல்-சோறு & காளான் குழம்பு
என்ஸாய்! ஹேவ் எ நைஸ் வீக் அஹெட்! 
:)

14 comments:

  1. m.. கூடவே ஒரு ஸ்வீட் வைச்சிருக்கலாம்ல! :-)

    ReplyDelete
  2. அழகு படங்கள்! அவற்றையும் உங்கள் வார்த்தைகளையும் ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete

  3. கண்களின் பசிக்கு நான் அவனில்லை யா ?
    எங்களின் வயிற்றுப் பசிக்கு அவலும் மும்மூர்த்திகளுடன் சக்தி தரும் சோறா ?
    அட , பின்னிட்டீங்க போங்க !

    ReplyDelete
  4. அட...! சூரியன் அழகு...

    முருங்கைக்கீரை பொரியல்...
    பீர்க்கங்காய் பொரியல்...
    சோறு...
    காளான் குழம்பு...

    மனதும் நிறைந்தது...

    ReplyDelete
  5. படத்தோடு படைத்த கறுக்மொறுக்
    இடத்தோடு இன்னும் வேண்டுமே...:)

    அனைத்தும் அசத்தல்! அழகு..:)

    அதென்ன டயர் வர்ஷன்.. சொன்னா நாங்களும் செய்வோமில்ல..:)

    அருமை! அசத்தல் பதிவு!
    வாழ்த்துக்கள் பாலுமகேந்திரி...:)))

    ReplyDelete
  6. வா..வ் என்ன அழகு மகி.சூப்பராக இருக்கிறார் ஆதவன். அதிலேயும் முதல் படம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு. அதை நீங்க உங்க எழுத்துக்களால் கவித்துவமாக எழுதி அதை இன்னும் அழகூட்டியிருக்கிறீங்க. ஸ்நாக்ஸ்,மீல்ஸ் இரண்டுமே
    எடுத்திட்டேன்.நன்றி மகி.

    ReplyDelete
  7. அழகான காட்சிகள். காட்சிகளை விடவும் உங்கள் வர்ணனைகள் மனம் கவர்ந்தன. மஞ்சள் கொற்றக்குடையாய் மேகங்கள், மோனப்புன்னகையுடன் அர்த்தநாரீஸ்வரர், குவளைப்பூவில் குழைத்த வண்ணம்..... ஆஹா... அசத்தல். பாராட்டுகள் மகி.

    ReplyDelete
  8. அந்த கடைசிப் படம் அருமை! வட்டமான தட்டத்தில் வாட்டமான பதார்த்தங்கள்!

    ReplyDelete
  9. photos ellam romba superb mahi... (hhi hi saapaadum than).. :)

    ReplyDelete
  10. lovely clicks and azhagana varnanai..

    ReplyDelete
  11. "அப்பதிவில் மூன்றாம் பிறை முழுநிலவாவதைப் படமெடுக்க முடிந்தால் இணைக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன்"___________ நானும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோய்,'எந்த மாதம்,எந்த வருஷம்னு கேக்காமப் போயிட்டோமே'னு நெனச்சிட்டிருந்தேன்.

    சூரியனைப் பார்த்தால் உதட்டுக்குக் கீழே மச்சம் வரைந்தது போலவே இருக்கு. தனியாளாய் இருக்கும் சூரியனின் நிறமும் அழகும்...சூப்பர். அவற்றிற்கு ஈடுகொடுப்பதுபோல் உங்கள் எழுத்து நடை, இன்னும் சூப்பரா இருக்கு.

    சாப்பாட்டு தட்டுடன் கிளம்பிட்டேன்.

    ReplyDelete
  12. அடடா அடடா.... தலைபிலே தப்பிருக்கிறது யுவர் ஆர்ணர்:)).. நான் அவளில்லை எண்டுதானே வரோணும்?:)).. சந்திரன் பொம்பிளை எல்லோ?:) எங்கிட்டயேவா? விடமாட்டனில்ல:)).. இருப்பினும் படம் சுட்ட விதம் சூப்பரு:).. நோ தங்கியூ.. மீ விரதம் நேக்கு ரைஸ் வாணாம்ம்ம்:).

    ReplyDelete
  13. @அதிராவ், //நான் அவளில்லை எண்டுதானே வரோணும்?:)).. சந்திரன் பொம்பிளை எல்லோ?:) எங்கிட்டயேவா? விடமாட்டனில்ல:)).. // உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஸப்பா! பூஸாரின் வாலாட்டல் தாங்க முடீலயே!! :))) சந்திரன் எப்படீங்க பொம்பிளை ஆவார்?! நவகிரகத்தில் ஒருவன் சந்திரனல்லோ? நம் கற்பனைக்கேற்ப அவ்வப்பொழுது அவனை நிலாப்பெண்ணாக உருவகித்து கவிதை எழுதுவதும் கற்பனை செய்வதும் மனித குல வழக்கம் அல்லவோ? மற்றபடி சந்திரன் ஆண்பால்தான் என உறுதியாக சொல்லிக்கொள்கிறேன் மிஸ்.மியாவ்!

    சுட்டதை:) பாராட்டியதற்கு நன்றிங்கோ. ரைஸ் வாணாமெண்டா மிக்ஸர் மட்டும் எடுங்கோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    @சித்ராக்கா, //'எந்த மாதம்,எந்த வருஷம்னு கேக்காமப் போயிட்டோமே'னு நெனச்சிட்டிருந்தேன்.// ஹிஹி..நீங்க மிஸ் பண்ணிட்டீங்க. இப்ப எதும் பண்ண முடியாது. சூரியனை போட்டிருக்கேனே, அஜீஸ் பண்ணுங்கோ.

    சூரியனையும், உணவு வகைகளையும் ரசித்து கருத்து தந்ததுக்கு நன்றி சித்ராக்கா!
    ~~
    ஹேமா, நன்றிங்க!
    ~~
    தர்ஷினி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    ஜனா சார், தட்டிலிருந்த பதார்த்தங்கள் உங்களுக்குப் பிடித்ததில் நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  14. கீதமஞ்சரி, //குவளைப்பூவில் குழைத்த வண்ணம்..... // இது வைரமுத்து அவர்களின் வரிகள், "பச்சை நிறமே, பச்சை நிறமே" பாடலில் இருந்து சுட்டவை! ;) மற்ற இரண்டும் என் சின்ன மூளையில் உதித்தவைதாங்க! :) உங்க கருத்தைப் படித்ததும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நன்றி சொல்லத்தான் தாமதமாகி விட்டது!
    ~~
    அம்முலு, உங்களுக்குப் பிடித்த படம் என்னவர் எடுத்தது, மற்றவை எல்லாம் என் கை வண்ணம். ரசித்து கருத்தும் தந்ததுக்கு நன்றிங்க!
    ~~
    இளமதி, உங்க விருப்பப்படி அவல் மிக்ஸரை தீபாவளிக்கு செய்து ருசித்தும் விட்டீங்க, நன்றீங்க! படங்களை ரசித்தமைக்கும் ரொம்ப சந்தோஷம் + நன்றி! :)
    ~~
    தனபாலன் சார், எல்லாப் படங்களையும் ரசித்து அழகான கருத்தும் தந்திருக்கீங்க, நன்றி!
    ~~
    ஸ்ரவாணி, எதுகை மோனையுடன் கருத்தும் தந்ததுக்கு நன்றிங்க!:)
    ~~
    க்ரேஸ், வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்!
    ~~
    இமா, ஒரு ஸ்வீட் போதுமா? ஆனாலும் இப்படி சுயநலவாதியா இருக்கப்படாது! ஹஹஹ! ;) :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails