தொட்டியில் வளரும் செடிகள் கொடுக்கும் சிறு விளைச்சல்களும் நமக்குப் பெரிய அறுவடைதானே? :) அப்படி சின்னச் சின்னதாகக் கிடைத்த பழம்-காய்-கீரைகளின் தொகுப்பே இந்தப் பதிவு. அவ்வப்பொழுது எடுத்து வைத்த படங்களைத் தேதி வாரியாகப் பிரித்து தொகுத்து ஒரு பதிவைத் தயாரிக்க சுணங்கிக்கொண்டே பலநாட்களை ஓட்டிவிட்டேன். ஒருவழியாக எங்க வீட்டுத் தோட்டம் உங்களைக் காண வந்துவிட்டது.
~~~
மணத்தக்காளிச் செடியை பூச்சிகளிடமிருந்து காப்பாற்றுவதை மட்டும் ஒழுங்காகச் செய்துகொண்டே இருந்தேன், வேறு எதுவும் செய்யவில்லை (அதாவது காய்-கீரை இப்படி எதையும் பறிக்கவில்லை! ;)) செடி தன் நன்றியைப் பழங்களாகக் கொடுத்தது! :)
தினமும் கால் கப் பழம் எனப் பழங்கள் பழுக்க ஆரம்பித்தன. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதாக பழம் தின்னும் ஆசை குறைந்துபோனதெனக்கு..
அம்மாவுடன் தொலைபேசுகையில் இதைப் பற்றி சொல்ல, காய்களைப் பறித்து குழம்பு வைத்துவிடேன் எனச் சொன்னார். ஒரு நாள் பழங்களுடன் சேர்த்துச் செடியில் காய்த்திருந்த காய்களனைத்தையும் சேர்த்துப் பறித்துவிட்டேன்.
இன்னும் ஒரு கிண்ணம் பழம் ஃப்ரிட்ஜில் பத்திரமாக இருக்கிறது. காய்களைப் புளிக்குழம்பு வைத்தாயிற்று.
மணத்தக்காளிக் காய் புளிக்குழம்பு
ஏற்கனவே போஸ்ட் செய்திருக்கும் சுண்டக்காய் வத்தக்குழம்பின் அதே ரெசிப்பி, சுண்டை வற்றலுக்குப் பதிலாக ஃப்ரெஷ் மணத்தக்காளிக்காய்/சுக்குட்டிக்காய் உபயோகித்திருக்கிறேன்.
~~~
அடுத்தபடியாக வருவது வெந்தயக்கீரை..கீரையையும் கொஞ்சம் முற்ற விட்டுவிட்டேன்.
கீரையை முழுவதுமாகப் பறிக்காமல் வேரை விட்டு தண்டுகளை மட்டும் வெட்டியெடுத்தால் அப்படியே மீண்டும் தழையும் என்று சொன்னார்களே..முயற்சிப்போம் என வேரை விட்டு செடிகளை மட்டும் கத்தரியால் வெட்டி எடுத்தேன். முதல் முறை மேத்தி ரொட்டி, பிறகு வெந்தயக்கீரை கூட்டு, வெந்தயக்கீரை பருப்பு என கீரை காலியானது. கீரை மீண்டும் தழையவில்லை! வேர்கள் அப்படியே வறண்டு போயின..ஒருவேளை செடி நன்றாக வளர்ந்துவிட்டதால் மீண்டும் தழையவில்லை போலும்.
கத்தரி..மூன்று டாலருக்கு வாங்கிய செடி மூணு மூணு காயாகவே காய்க்கிறது! :) மேலே படத்திலிருக்கும் காய்கள் கத்தரிக்காய் மசாலா பொரியலில் நீங்க ஏற்கனவே பார்த்தவை. அதன்பிறகும் பூச்சிகளின் தொந்தரவு தொடரவே இலைகள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு பிஞ்சுகளை மட்டும் விட்டிருந்தேன்.
ஞாயிற்றுக் கிழமை 3 காய்களையும் பறித்தாயிற்று. மூன்றில் ஒரு காயை போட்டு ஒரு அவசரசாம்பார் சண்டே லன்ச்சுக்கு ரெடியானது.
அப்பளம்-பூசணிக்காய் தயிர் பச்சடி-மோர் மிளகாய்-முருங்கை கீரை பொரியல்-கத்தரிக்காய் சாம்பார்
சாம்பார் ரெசிப்பி விரைவில்..
~~~
இனி வருபவை எல்லாம் இதர செடிவகைகள்!! :) கேரட் விதைகள் வாங்கும்போது ஒரு "யெல்லோ ஸ்க்வாஷ்" விதைப் பேக்கட்டும் வாங்கிவந்தேன். (படத்தில் கையில் இருப்பவையே கேரட் விதைகள்.)
கேரட்டும் ஸ்க்வாஷும் ஒரு தொட்டியில் வளர்க்கலாம் என தொட்டியில் விதைத்தும் விட்டேன். என்னவர் தோட்டத்தை செப்பனிட வந்தபோது சிலபல செடிகள் வீடு:) மாறின. அவற்றில் கேரட்-ஸ்க்வாஷ் விதைத்த தொட்டியில் ஏற்கனவே மண்ணுக்குள் போன விதைகளைத் தேடமுடியாது என அப்படியே விட்டுவிட்டு வேறொரு செடி குடியேறியது.
சிலநாட்கள் கழித்து ஸ்க்வாஷ் விதைகளில் ஒன்று மட்டும் துளிர்த்து வளர்ந்துகொண்டிருக்கிறது. மற்ற விதைகள் மூச்சுவிடக்காணோம். வரும்வரை வரட்டும் என ஸ்க்வாஷ் நாற்றை அப்படியே விட்டிருக்கேன். மஞ்சள் ஸ்க்வாஷ் காய்க்குமா என பார்க்கலாம்! :)
கொலாஜில் கீழே புதினாவும் குடைமிளகாயும்! வேருடன் நட்ட புதினா கும்மென்று தழைய, புதிதாக நட்ட புதினாக்கள் ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக வந்துகொண்டிருக்கின்றன. குடைமிளகாயில் ஒரு பிஞ்சு வந்து காய் வளர்ந்துகொண்டிருக்கிறது. பச்சைக் குடைமிளகாயாகவே பறிக்கலாம் அல்லது பழுக்க விட்டு சிவப்பாகவும் பறிக்கலாம். பறித்ததும் சொல்கிறேன், பச்சையா சிவப்பா என! :)
~~~
செடிகளைக் காட்டுகிறேன் என பதிவுமுழுக்க கொளுத்தும் வெயிலில் பால்கனியிலேயே சுத்திட்டோம், ஜில்லுன்னு அகர் அகர் சாப்பிடுங்க.
என்ன மகி வீட்டுத் தோட்டத்தில கலக்கிட்டேள்:).. மஞ்சள் ரோஸ் சூப்பர். 2வது 3 வது படங்கள் மீ பார்க்கல்ல.:) பின்ன என்னவாம்ம் மணத்தக்காளியை இப்பூடிப் படமெடுத்தால் புகையாதோ எனக்கு:).. நான் இன்னும் கண்ணால்கூட காணவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
ReplyDeleteஆனா ம்.தக்காழிக் குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்கே.
பசுமையான குளிர்ச்சியான உபயோகமான பதிவு.. ஏன்னா நேற்றும் இன்றும் தொட்டியில் மண் நிரப்பி வைத்து விட்டேன். ( மொத்தம் 10 தொட்டி) புதினா , கருவேப்பிலை மல்லி வைத்துவிட்டேன். பதிவை பார்த்து விரைவில் வீட்டுத்தோட்டம் அமைக்கும் ஆசை வந்து விட்டது. பகிர்வுக்கு நன்றி மகி.
ReplyDeleteSuper. I planted egg plant outside, but as usual I have a friend waiting for the eggplant to bloom. This time not rabbit, skunk, or raccoon. It's a groundhog avvvv....
ReplyDeleteI like the agar agar. Super.
//மணத்தக்காளியை இப்பூடிப் படமெடுத்தால் புகையாதோ எனக்கு:).. நான் இன்னும் கண்ணால்கூட காணவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..// இன்னிக்கு செவ்வாக்கெழமதானே? மறக்காம ம.தக்காழி;)ச் செடிக்கு திருஷ்டி கழிச்சிடறேன் அதிராவ்! ;))))
ReplyDeleteஇன்னுங்கொஞ்சம் புகையவெக்கலாமா உங்கள? காற்றில் விதைகள் போய் விழுந்து கண்ட நிண்ட இடமெல்லாம் ம.தக்காளிச்செடிகள் முளைக்குது எல்லாத் தொட்டியிலும். :))))
நீங்க கனடால இருந்து விதை ஏதும் கொண்டுவர முடியாதோ!! இங்கருந்து பார்ஸல் வேணா போட்டு விடவா?
குழம்பு சூப்பராத்தான் இருந்தது, பொதுவா இப்படியான கசப்புக் குழம்புன்னா வத்தலைப் பொறுக்கிப் பொறுக்கி தனியே வைக்கும் என்னவர் இந்த முறை அப்படியே சாப்ட்டுட்டார்! :)
கருத்துக்கு நன்றி அதிராவ்!
~~
//பதிவை பார்த்து விரைவில் வீட்டுத்தோட்டம் அமைக்கும் ஆசை வந்து விட்டது. // ராதாராணி, உங்க கருத்தைப் பார்த்து ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க. வீட்டில தோட்டமே வளர்க்கற ஆட்கள் எல்லாம் அமைதியா பதிவெல்லாம் எழுதாம இருக்கையில் நான் தொட்டில வளர்க்கிற ஒண்ணு ரெண்டு செடிங்களைப் பத்திச் சலிக்காம எழுதறனேன்னு அப்பப்ப நினைச்சுப்பேன், எனி ஹவ், உங்க கருத்து என் பதிவுகளுக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்துட்டது, ரொம்ப ரொம்ப நன்றி! :)))
ஸ்கூபி எப்படி இருக்கார்? வளர்ந்துட்டாரா? எங்காளுக்கு குறும்பு & அறிவு மட்டும் ஜாஸ்தியாகியிருக்கு. நாக்கு நீளமாகியிருக்கு! ;) நாங்க விசாரிச்சோம்னுனு சொல்லுங்க ஸ்கூபி கிட்ட!
உங்கள் தோட்டம் செழித்து வளர வாழ்த்துக்கள்!
~~
வானதி, மண்ணில செடி வளர்க்கையில் இந்த தொந்தரவுகள் எல்லாம் கூட இருக்கில்ல!! டொமட்டோ கேஜ் ஏதாவது வாங்கி செடிக்கு பாதுகாப்பா வைச்சுப் பாருங்களேன். வந்த ஆளு க்ரவுண்ட்ஹாக்-நா என்ன்ன்ன்ன்ன செய்ய முடியும்!! கொஞ்சம் சிரமம்தான்! :)
ReplyDeleteஅகர் அகர் செய்முறை ஆங்கிலத்திலிருக்கு, செய்து பாருங்க டைம் கிடைக்கையில். நன்றி வானதி!
வீட்டுத் தோட்டம் விளக்கங்களுடன் அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
உள்ளேன் மகி !!
ReplyDelete//மணத்தக்காளிச் செடியை பூச்சிகளிடமிருந்து காப்பாற்றுவதை// பறவைகள் வரவில்லையா? இங்க ஏராளமாக குட்டிப் பறவைகள் வருது அந்தச் செடிக்கு!
ReplyDeleteரோஜா - நிறம் அழகு.எத்தனை நாட்கள் இருக்கும் இந்தப் பூக்கள்!
புளிக்குழம்பு ரெசிப்பிக்கு நன்றி. புளிக்குழம்பு என்றாலே சிவாவின் நினைப்புதான் வருகிறது எனக்கு. ;)
இப்போ காய்கள் இல்லை. ஒரே ஒரு செடி இருக்கிறது. அதுவும் கிளைகளை நறுக்கி ட்ரிக்ஸிக்குக் கொடுத்தாயிற்று. அந்தம்மாவுக்கும் பழம் பிடிக்கும். திரும்ப செடி தழைக்கும் போது சமைக்கிறேன்.
//செடி நன்றாக வளர்ந்துவிட்டதால் மீண்டும்// தழைக்கவில்லையென்றுதான் நானும் நினைக்கிறேன். இந்த அளவிலேயே பூக்க ஆரம்பித்துவிடும்.
//மூன்று டாலருக்கு வாங்கிய செடி மூணு மூணு காயாகவே காய்க்கிறது!// அடுத்த தடவை பத்து டாலருக்கு வாங்குங்க மகி. ;)))
//மஞ்சள் ஸ்க்வாஷ்// ஓஹோ! அதுவும் மஞ்சளா? ;)
என் புதினாவும் நன்கு செழிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு வகை மட்டும் மெதுவாக வளர்கிறது.
விரைவில் சாம்பார் ரெசிபியோடு வருக.
தொட்டி தோட்டமும் அறுவடையும் சூப்பர் பகிர்வு.உபயோகமான பொழுது போக்கு,பகிர்வுக்கு மகிழ்ச்சி.டேக் கேர்.
ReplyDeleteசீராளன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete~~
சித்ராக்கா, க்ளாஸுக்கு வந்து அட்டனன்ஸ் மட்டும் குடுத்துட்டு, க்ளாஸ கவனிக்காம:) எஸ்கேப் ஆனா எப்புடி? ;))
நேரமிருக்கையில் மறுபடி எட்டிப் பாருங்கோ. நன்றி!
~~
//பறவைகள் வரவில்லையா? இங்க ஏராளமாக குட்டிப் பறவைகள் வருது அந்தச் செடிக்கு! // இமா, பழம் சாப்பிடப் பறவைகள் வருமென்றால் அதற்கு இங்கே வாய்ப்பே இல்லை! நானே கொத்திக் கொத்தி ஒரு பழம் விடாமப் பறிச்சு வைச்சிருக்கேன்! ;) ஹ்ஹிஹி!!
//எத்தனை நாட்கள் இருக்கும் இந்தப் பூக்கள்!// ஹ்ம்ம்..கவனிக்கலையே இதுவரை!! அனேகமாக 2-3 நாட்கள் ப்ரெஷ்ஷாக இருக்கும், பிறகு மஞ்சள் பூக்கள் வெளுத்து காய்ந்து போகின்றன. இந்தப் படங்கள் போன வாரம் எடுத்தது, செடியில் பூக்கள் இன்னும் இருக்கு, ஆனால் எல்லாமே வாடிப் போயாச்!
புளிக்குழம்புக்கும் மன்னையின் மைந்தனுக்கும் என்ன சம்பந்தம்? :) புரிலையே!! எங்கே அவரை ஆளையே காணோம்? பாத்தா நான் விசாரிச்சதாச் சொல்லுங்க இமா!
//அந்தம்மாவுக்கும் பழம் பிடிக்கும். // ஐ..டிரிக்ஸியும் நானும் சேம் பிச்ஞ்! :)
வெந்தயச் செடியில் ஒரு சிலது காயே வந்திருந்தது..அவ்வ்வ்வ்! ஆனால் பூவை நான் கவனிக்கவே இல்லை! ;)
//அடுத்த தடவை பத்து டாலருக்கு வாங்குங்க மகி. ;)))// இப்படி என்னவர் பர்ஸுக்கு ஆப்பு வைக்கறீங்களே! ஹஹ்ஹா!! உங்க பேரைச் சொல்லி நெக்ஸ்ட் டைம் அதே போல செய்துடறேன். :) ;)
//அதுவும் மஞ்சளா? ;)// ஆமாஆஆஆஆஅம்! கலரைப் பார்த்துத்தானே விதையையே வாங்கினேன்! ;)
புதினா அபார வளர்ச்சியா இருக்கு இங்கேயும், சீக்கிரம் பறிச்சு யாருக்காவது கொடுக்கணும்! ;)
வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி இமா!
~~
ஆசியாக்கா, உண்மையிலேயே மனதுக்கு இதமான பொழுதுபோக்குதான்! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
~~
மணத்தக்காளி படத்தில் மட்டுமே பார்க்கமுடியும்.போனமுறை ஊருக்கு போய் கொண்டுவந்து குழம்பு வைத்தாச்சு.ரோஜா பூத்து முடிந்தது.குளிர் இங்கு ஆரம்பித்துவிட்டது.உங்க வீட்டு பூ அழகான கலரு.
ReplyDelete//வீட்டில தோட்டமே வளர்க்கற ஆட்கள் எல்லாம் அமைதியா பதிவெல்லாம் எழுதாம இருக்கையில் நான் தொட்டில வளர்க்கிற ஒண்ணு ரெண்டு செடிங்களைப் பத்திச் சலிக்காம எழுதறனேன்னு அப்பப்ப நினைச்சுப்பேன்//என்ன நீங்க இப்படி சலிச்சுக்கிறீங்க.சந்தோஷப்பட்டு பதிவு போடுங்க. உங்களைப்பார்த்துத்தான் நானே புதினா,மிளகாய் வளர்த்து சமையலுக்கு யூஸ் பண்ணினேன். அடுத்தவருடம் இன்னும் செய்ய ப்ளானுக்கு இம்முறை கொம்போஸர் வீட்டிலே தயாரிக்கிறேன்.
எனக்கு ப்ளவர்ஸ் மீதுதான் விருப்பம்.நன்றி.
அம்முலு, இங்கேயும் வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைஞ்சு இருக்கிறது. இந்த ரோஜாக்கள் டிசம்பரில் தான் அமைதியா ரெஸ்ட் எடுப்பாங்க, அதுவரை பூக்கள் வரும். :)
ReplyDelete//உங்க வீட்டு பூ அழகான கலரு.// எனக்கு இந்த நிறம் பிடிக்கும்னு என்னவர் சர்ப்ரைஸா வாங்கித் தந்த செடியாக்கும்! :) நீங்க சொன்னதை அவரிடம் சொல்லிவிடுகிறேன், நன்றி அம்முலு!
//சந்தோஷப்பட்டு பதிவு போடுங்க// ஓகே! :) அது சலிப்பில்லை, ஒரு சிறு ஆதங்கம். மோஸ்ட்லி அதையெல்லாம் இங்கே வெளிப்படுத்த மாட்டேன், ஆனாலும் அவ்வப்போது கன்ட்ரோல மீறி எதாவது எழுதிடுவேன், ஹிஹி..! ;)
ரொம்ப சந்தோஷம் அம்முலு, உங்க கருத்தைப் படிச்சு! மிக்க நன்றிகள்!
~~
இந்ததடவ எங்க வீட்ல ஒரு மணத்தக்காளி செடி மட்டும் பூச்சியில இருந்து தப்பிச்சு வந்திருக்கு.பார்க்கலாம் காய்க்குதான்னு.
ReplyDeleteமூணு டாலர் கத்தரிக்காய் செடி வாங்கினதே நல்லதாப் போச்சு மகி. இதுக்குமேல காய்ச்சாலும் சாப்பிட ஆள் இல்லை.
ஸ்க்வாஷ் காய்த்து சமைச்சு பார்த்து நல்லா இருந்தா சொல்லுங்க, மார்க்கெட்ல டிஸைன் டிஸைனா வருது. நானும் வாங்கணும்.
முறம் எல்லாம் வச்சிருக்கீங்க.ஊரில் இருந்து எடுத்து வந்ததா?
@சித்ராக்கா, //பார்க்கலாம் காய்க்குதான்னு.// கட்டாயம் காய்த்து பழமும் பழுத்து பல்கிப் பெருகும், பாருங்க! :)
ReplyDelete//இதுக்குமேல காய்ச்சாலும் சாப்பிட ஆள் இல்லை// அதுவும் சரிதான்! :) பொரியல் செய்தா ஒரே முறையில் காலியாகிருக்கும், சாம்பார்-குழம்புன்னு செய்ததால இரண்டுமுறையா தீர்த்தேன்! :)
ஒருமுறை யெல்லோ ஸ்க்வாஷ் இங்கே ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் வாங்கினேன், நல்லா இருந்தது. இந்தச் செடியில் காய்த்ததும் கட்டாயம் தெரியப்படுத்தறேன்!
//முறம் எல்லாம் வச்சிருக்கீங்க.ஊரில் இருந்து எடுத்து வந்ததா?// ஆமாம்! :) ப்ளாஸ்டிக் முறம் போன வருஷம் ஊரில் இருந்து எடுத்து வந்தேன் சித்ராக்கா! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
Waaaaaaaaaawwwwwwww!!!!!!!!! மஹி... so so beautiful!
ReplyDeleteஇந்த பதிவ படிச்ச எனக்கே ஒரு வகையான ஹேப்பி feel கிடைக்குதுனா ... அறுவடை செஞ்ச உங்களுக்கு எவ்ளோ ஹேப்பி-யா இருந்துருக்கும் !!!!! வெள் டன் மஹி. Liking திஸ் போஸ்ட் அ lot!!!!!!
@மீனாக்ஷி, தேங்க்ஸ்! :) நம்ம வீட்டில வளர்த்து அறுவடை பண்ணும் சுகமே அலாதிதான்! :) நம்மளைப் பார்த்து இன்னும் நாலு பேர் ஆளுக்கு ஒரு செடியாவது வளர்ப்பாங்கள்ல, அதுக்குதான் இப்படில்லாம் பதிவப் போடுறது! :))))
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.
அறிமுகம் செய்தவர்-தியானா
பார்வையிட முகவரி -வலைச்சரம்
அறிமுகம்செய்த திகதி-31.07.2014
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-7: சின்ன வயதில் கனவு சுமந்த வாழ்க்கை சின்னநெஞ்சில் வடம் பிடித்தது துள்ளித்திரியும் வயதினிலே தூண்டில் போட்டு விளையாடிய காலங்கள் ...
வாருங்கள்அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-