தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1/2கிலோ
வெல்லம் - 1/2கப் (இனிப்புக்கேற்ப)
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்-2
தேங்காய்த்துருவல் - 2டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துண்டுகள் -2டேபிள்ஸ்பூன்
எண்ணெய்-2 டீஸ்பூன்
மாவு கெட்டியாகி வரும்போது தேங்காய்த்துண்டுகள் மற்றும் ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்து கிளறவும்.
புழுங்கல் அரிசி - 1/2கிலோ
வெல்லம் - 1/2கப் (இனிப்புக்கேற்ப)
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்-2
தேங்காய்த்துருவல் - 2டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துண்டுகள் -2டேபிள்ஸ்பூன்
எண்ணெய்-2 டீஸ்பூன்
செய்முறை
புழுங்கலரிசியைக் 2-3 முறை களைந்து 3 மணி நேரங்கள் ஊறவிடவும்.
ஊறியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்துடன் கொஞ்சமாக நீர் சேர்த்து குறைந்த தீயில் கரையவிடவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைக்கவும். அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரைத்த மாவைச் சேர்த்து கிளறவும்.மாவு கெட்டியாகி வரும்போது தேங்காய்த்துண்டுகள் மற்றும் ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்து கிளறவும்.
கடைசியாக 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறவும். மாவு கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும். அப்போது இறக்கி வைத்து ஈரத்துணியால் மூடி ஆறவைக்கவும்.
இட்லிப்பானையில் தண்ணீர் சூடாக்கவும். மாவு ஆறியதும் சிறு உருண்டைகளாக எடுத்து கைகளால் அழுத்தி இட்லித்தட்டில் வைத்து வேகவைக்கவும்.
கொழுக்கட்டைகள் 5 நிமிடத்தில் வெந்துவிடும். (நான் ஆறு ஆறு கொழுக்கட்டைகளாகத்தான் வேகவைத்தேன், அதிகம் வைத்தால் அதற்கேற்ப நேரத்தை கவனித்து வேகவிடவும்.)
சுவையான சாஃப்டான இனிப்புக் கொழுக்கட்டைகள் தயார்.
பிள்ளையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
:)
நாங்கள் பச்சரசி மாவில் சுடு நீர் கலந்து செய்வோம் ....உங்க கொழுக்கட்டை சூப்பர் ....
ReplyDeleteஆகா!.. அருமையான கொழுக்கட்டை!
ReplyDeleteசெய்முறையும் சுலபம். பகிர்விற்கு மிக்க நன்றி மகி!
உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!
நாவூறவைக்கும் கொழுக்கட்டைகள். பூரணம் வைத்ததை விடவும் இதுதான் எனக்கு மிகவும் பிடித்தமானது. பாப்பா சாப்பிட்டாளா?
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன் அசத்தல் நன்று...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கொழுக்கட்டை சூப்பரா இருக்கு மகி. புழுங்கல் அரிசியில் இதுவரை செய்ததே கிடையாது. இது புதுசா இருக்கு. டிசைனும் சூப்பர்.
ReplyDeleteவெல்லத்தின் அளவை மட்டும் சரிபாருங்கோ.
//வெல்லத்தின் அளவை மட்டும் சரிபாருங்கோ// கம்மியா இருக்குன்னு சொல்றீங்களா..இல்ல அதிகம்னு சொல்றீங்களா?? அவ்வ்வ்வ்வ்...புரீலையே! நான் அச்சு வெல்லம் போட்டேன் சித்ராக்கா, அந்த ஃபோட்டோல இருக்கு பாருங்க, அம்புட்டுதான். அது அனேகமா அரைக்கப் வரும்னு நினைக்கிறேன்..சரியாத் தெரியாததாலதான் இனிப்புக்கேற்ப போட்டுக்குங்கன்னு சொல்லிருக்கேனே..!! :)
Deleteபுழுங்கரிசில செய்து பாருங்க, நல்லா ஸாஃப்ட்டா சூப்பரா இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
இதே தான் நானும் செய்தேன். ஆனால் பச்சரிசி மாவில் ஜூனி கலந்து கொதித்த நீர் சேர்த்து கொழுக்கட்டை பிடித்தேன். அடுத்த முறை இப்படி செய்து பார்க்கிறேன். நன்றி மகி அக்கா...)
ReplyDeleteமஹி ரொம்ப நாட்களாகிறது இங்கு வந்து.. இது ஒரு புதிய தினுஸு. தோசைக்கரைக்கும்போதல்லாம் சிறிது எடுத்தும் செய்யலாம். ஸுலபமாகவும் இருக்கிறது. அரிசி ரவையைக் கிளறி வெல்லம்போட்டு இம்மாதிரி செய்வதுண்டு. நல்ல பதிவு மஹி. உங்கள் ப்ளாகர்காமில் நானும் காமாட்சி எனற பெயரில்ஒரு தளம் ஆரம்பித்து இருக்கிறேன். நீ வந்துபார். இன்னும் சூடு பிடிக்கவில்லை.
ReplyDeleteநீங்களெல்லாம் இருக்கிறீர்கள் என்னையும் பார்த்துக் கொள்வீர்களென்று வந்திருக்கிறேன். நான் வந்திருப்பது நான் சொன்னால்தானே தெரியும். லயா ப்ளாக் எழுத அனுமதிக்கிறாளா?
நானும் வரேன் . நன்றி. அன்புடன்
காமாட்சிம்மா, உங்க ப்ளாக் ஒரு முறை வந்து பார்த்தேன் என நினைக்கீறேன், அதுக்குப்பிறகு வரவே நேரம் கிடைக்கலம்மா..எங்க?? இந்த குட்டியம்மா கூட திரியவே நேரம் சரியா இருக்கு, ப்ளாக் பக்கம் வர டைமே கிடைக்க மாட்டேன்னுது..அடிச்சுப் பிடிச்சு மறுபடி வரணும்னு இந்த போஸ்டை போட்டேன். உங்க பக்கம் வரேன்மா சீக்கிரம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
Delete