Wednesday, September 30, 2015

கொசுறு..


என்னதான் நூத்துக்கணக்கில பணத்தைக் கொடுத்து கறிகாய் வாங்கினாலும், கடேசியா கொசுறு-ன்னு ஒரு கொத்து கறிவேப்பிலை-கொத்துமல்லித் தழை வாங்கறது ஒரு தனி சந்தோஷம்தான்..நீங்க என்ன சொல்றீங்க?? "...க்க்க்கும், இதெல்லாம் ஒரு சந்தோஷம்..இதப்பத்தி படிக்க வேற வேணுமா?" என்று கேட்பவர்கள், அப்படியே இந்த ப்ரவுஸர் விண்டோவை சாத்திவிட்டு உருப்படியான வேறு வேலைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ;) 
.........
-------------
***************
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
############
@@@@@@@@@@@
~~~~~~~~
--------------------
.........................................................................
......................................
................
...---
+++++++++++++
--------
..........
..
..
.......
..
என்னது...இன்னும் படிச்சிட்டிருக்கீங்களா?? அப்பச்சரி..ஸ்டார்ட் மீசிக்!!! :))))) 


திடீருன்னு ஒரு ஞாயித்துக்கிழம காலங்காத்தால எந்திரிச்சு காப்பி குடிச்சவுடனே மண்டைக்குள்ள ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பளீஈஈஈர்-நு ஒரு பல்ப் எரியும்..இந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? இல்லன்னா பரவால்ல, இன்னும் நிறைய ஞாயித்துக்கிழம வரும். நல்ல காப்பியாக் குடிச்சுப்போட்டு வெயிட் பண்ணுங்க. இப்படியான ஒரு ஞாயித்துக்கிழமயில்  "ஃபார்மர்ஸ் மார்க்கட்" போலாம் என்று பல்ப் எரிய, உடனே குட்டீஸை எல்லாம் தூக்கி காரில போட்டுகிட்டு எட்டேகால் மணிக்கெல்லாம் மார்க்கெட் போயிட்டோம். அங்கே போனா இத விட இன்னுங்கொஞ்சம் பெரிய பல்பு எங்களுக்குக் காத்திருந்தது.
;)

மார்க்கட் ஆல்மோஸ்ட் காலி...சிலர் அப்பத்தான் வந்து கடைகளுக்குப் பந்தக்கால் நட்டுகிட்டு இருந்தாங்க..என்னங்க டைமிங்? அப்படின்னு ஒரு கடைக்காரர் கிட்ட கேட்டா இப்படியும் சில தூங்காமாறிகள்-ங்கற லுக்கை குடுத்துப்புட்டு 10-2 அப்படின்னு பதிலச் சொன்னாரு.   வந்தது வந்தாச்சு...சும்மா (காலியாக் கிடக்கிற இடத்தை) ஒரு ரவுண்டு வரலாமேன்னு போனம். ஒரு காய்கறிக்கடை ஆல்மோஸ்ட் எல்லாக் காயும் எடுத்து வைச்சிருந்தாங்க..எல்லாம் நமக்கு வேண்டிய காய்கள்..அள்ளிகிட்டாச்சு..
கோங்குரா கீரை, வெண்டைக்கா, பச்சைக் கடலைக்காய், பச்சைக் கத்தரி, ரெகுலர் கத்தரி, பேபி ஆனியன் (அதென்ன பேபின்னு தெரீலைங்க..பேரு ஃபேன்ஸியா இருந்ததால 5 எடுத்துகிட்டேன்...ஹிஹி..), சுரைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய் இப்படி நமக்குத் தேவையான காய்கள் எல்லாமே ஒரே கடைல கிடைச்சது. கூடவே தர்பூசணி, கேண்டலூப் பழங்களும் அங்கயே வாங்கிகிட்டோம். மொத போணிங்கறதால தர்பூசணி கட் பண்ணி எங்க 3 பேருக்கும் (ஜீனோ டஸிண்ட் ஆல்வேஸ் ஈட் வாட்டர்மெலன் யு ஸி...சில அரிய சந்தர்ப்பங்களில அய்யா அதுவும் சாப்பிடுவாராக்கும்!!) குடுத்தாங்க. :)  மற்ற பழ வகைகளும் பக்கத்துக் கடைல வாங்கிட்டு கம்பி நீட்டிட்டோம். 
வெகுநாட்கள் கழிச்சு கிடைச்ச பச்சைக் கடலய கழுவி, உப்பு சேர்த்து,
குக்கரில வேகவைத்து....ஆவலோடு சாப்பிட உரிச்சா...
கடலை ஒண்ணொண்ணும் சும்மா காம்ப்ளான் குடிச்ச மாதிரி புஷ்டியா, பெருசா இருந்தது. சுவையும் நம்ம ஊர் கடலை மாதிரி அவ்ளோ சுவை இல்லை..பட் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி மனசைத் தேத்திகிட்டுச் சாப்பிட்டாச்சு.
அடுத்த முறை போனபோது பூசணிக்காய் வாங்கியாந்தேன்..நல்ல சுவை! இந்தியன் ஸ்டோரில் வாங்கும் காயை விட சீக்கிரமா வெந்துவிட்டது, சுவையும் அருமை!
இவை சந்தை அருகே எடுத்த படங்கள்..வானமும் மலைத்தொடரும் புல்வெளியுமாக கண்ணுக்குக் குளிர்ச்சியான படங்களாக இருந்ததால் இங்கே சேர்த்துட்டேன்.
இப்படியாக சிலபல வாரங்கள் போனோம்..அந்தக் காய்க்கடைக்காரங்க நல்ல நட்பாகிட்டாங்க. "பாப்பா தூங்கிட்டு இருக்காளா? நிம்மதியா ஷாப்பிங் பண்ணுங்க....
உங்க பப்பி(!!) இன்னிக்கு வரலியா?
எப்ப ஸ்பினாச் கீரை கொண்டுவருவீங்க?
பாகற்காய் கொடிய பிஞ்சோட கட் பண்ணி வைச்சிருக்கீங்களே..இதை என்ன செய்து சாப்பிடுவாங்க? இது என்ன இலைதழை? ..."
அப்படினெல்லாம் அரட்டையடிச்சுகிட்டே காய்-கனிகள் வாங்கி வருவது வழக்கமானது.

கடந்த வாரம் போனபோது 2 அடி வளர்ந்த கொத்துமல்லி மரத்தை(!?!) கட்டுக்கட்டா விற்பனைக்கு வைச்சிருந்தாங்க..இது ஏன் இவ்ளோ பெரிசு இருக்கு? நல்ல மணம் இருக்குமா என்றெல்லாம் கேட்டாலும் அதை வாங்க என்னவோ தயக்கம். மத்த காய்கள் எல்லாம் வாங்கிட்டு, எடை போடப் போட அவர் குத்துமதிப்பாக கணக்குப் போட்டு $14 என்றார். [நிச்சயம் அதை விட அதிக மதிப்பில்தான் காய்கள் எடுத்திருந்தேன்] காயெல்லாம் பையில் போடப்போட, டக்கென்று ரெண்டு துண்டு இஞ்சியையும் ஒரு கட்டு கொத்துமல்லியையும் பையில் போட்டுவிட்டார். கொசுறுங்கோ...கொசுறு!! :)))
வீட்டுக்கு வந்து மரக்கட்டை எடுத்து படமும் எடுத்துவிட்டு, ஒரு சந்தேகத்துடனே இலைகளை எடுத்தேன்..ஆச்சரியமூட்டும் வகையில் நல்ல மணமாகவும் சுவையுடனும் இருந்தது. சும்மா கொடுத்தது சுவையாகவும் இருக்கவும்..கேட்கவும் வேண்டுமா? பலநாள் கழித்து இங்ஙன ஒரு மொக்கையத் தேத்தியாச்சு. ;)

பி.கு. வரும் அக்டோபர் மாதம் ஃபார்மர்ஸ் மார்க்கட் லேது...கால்பந்து விலையாட்டுக்காக மைதானத்தை உபயோகிக்கப் போறாங்களாம்..இனி நவம்பர்ல மறுபடியும் சந்தைக்குப் போலாம். நீங்களும் வாறீங்களா? :)


21 comments:

 1. கேட்காமலேயே கொசுறு. அதுவும் பழக்கமான கடைக்காரன்.ருசி எப்படின்னுபார்த்து அடுத்த முறை வாங்குவீர்கள் அல்லவா? எந்த ஊரானால் என்ன எந்த தேசமானால் என்ன மனித நேயம். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா! :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 2. It looks like Cilantro. Was the leaf bit thick?

  ReplyDelete
  Replies
  1. It is cilantro, a bit over grown! :)
   The stem were thick but the leaves were tender and aromatic..some plants had flowers also!!
   Thanks for the comments anony!

   Delete
 3. *****
  $$$$$$$$
  !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  ********&&&&&&&&&&&&
  767676
  =--0

  laif le ellaame kosuru thaan.

  subbu thatha.
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹ்ஹா!! இது சூப்பருங்க..வாழ்க்கைல எல்லாமே கொசுறுதான்! :)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   Delete
 4. ”கொசுறு” மணம் குணம் ருசியோ ருசி மகி!

  சூப்பர்!

  நீங்க எழுதுவதெல்லாம் பார்க்கும்போது பொறாஆஆமையா வருது.
  இங்க இப்படி நம்ம காய் கனியோட மார்கட் இல்லியேன்னு..:)

  எஞ்ஜோய் மகி!..:)

  ReplyDelete
  Replies
  1. இளமதி, இங்கேயும் ஒரு சில ஸ்டேட்ஸில்தான் இப்படி உழவர் சந்தைகள் இருக்கு. அப்படி ஒரு இடத்தில் இருக்கிறோம்னு ஒரு சந்தோஷம்ங்க..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

   Delete
 5. மகி,

  கொசுறுவா இஞ்சி வந்ததுதான் பொறாமையா இருக்கு. இருக்குறதிலேயே இதுதான் விலை அதிகம்.

  இதைப் பார்க்கும்போது "கொத்துமல்லி மாதிரியே இருக்கும் ஆனால் கொத்துமல்லி அல்ல" விடுகதைதான் நினைவுக்கு வரும். வந்த புதுசுல நானும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்த பிறகுதான் கவனித்தேன், இலைகள் எல்லாம் நீளநீளமாக, வித்தியாசமான வாசனையுடன், ஆனாலும் துவையல் அரைச்சு காலி பண்ணிட்டோமில்ல !

  நீஈஈண்ட நாட்களுக்குப் பிறகு பழையபடி வந்தாச்சு :))

  ReplyDelete
  Replies
  1. //கொசுறுவா இஞ்சி வந்ததுதான் பொறாமையா இருக்கு. // கிக் கிக் கீஈஈஈ!! உங்களுக்கென்ன, பக்கத்திலயே மார்க்கெட் வைச்சிருக்கீங்க...எங்களுக்குக்கெல்லாம் உங்க அளவுக்கு ஃஃஃஃப்ரெஷ் காய்கனிகள் கிடைக்கறதில்ல சித்ராக்கா!

   இந்த கொத்துமல்லி நல்ல வாசனையா சூப்பரா இருக்கு.

   ஆமாம், நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடி வழக்கம்போல எழுதலாம்னு ஆரம்பிச்சிருக்கேன்..பார்க்கலாம்!! :)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!

   Delete
 6. காய்கறி எல்லாம் ப்ரெஷா இருக்கு, இது ஆர்காணிகா. கடலை சூப்பர், ஜூனோ என்ன பண்றார், நல்ல புல்வெளியில் என்ஜாய் பண்றார். ரொம்ப நாள் கழித்து தரிசனம் தந்திருக்கிறார், எங்க உங்கள் குட்டி பெண் லயாவை காணோம்.

  வானமும் மலைத்தொடரும் அழகு , இன்னும் கொஞ்சம் போட்டோ போட்டிருக்கலாம் நாங்களும் ரசித்திருப்போம். அடுத்த பதிவில் சேர்த்து போடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆர்கானிக்-ஆ இல்லையா என்று தெரிலைங்க ராஜேஷ்..சூப்பர் மார்க்கெட்களில் வாங்குவதை விட ஃப்ரெஷ்ஷா இருக்கு, விவசாயிகளுக்கும் நம்மாலான ஒரு ச்மால்:) ஹெல்ப்!!

   ஜீனோக்கு மார்க்கெட் போனா ஜாலி...கத்தி கத்தி சுத்தி வருவார். கடைகள்ல இவங்களுக்காகவே பவுல்-ல தண்ணி ஊத்தி வைச்சிருப்பாங்க..அங்கே தாகத்தையும் தீர்த்துக்குவார். :) லயா ஸ்ட்ரோலர்-ல உட்கார்ந்திருப்பாங்க. இறக்கி விட்டா கன்றோல் பண்ண முடியாது...ஹிஹி!

   அடுத்த மாதம் போகும்போது இன்னும் படங்கள் எடுத்துட்டு வரேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

   Delete
  2. மார்க்கெட்களில் வாங்குவதை விட ஃப்ரெஷ்ஷா இருக்கு, விவசாயிகளுக்கும் நம்மாலான ஒரு ச்மால்:) ஹெல்ப்!!

   இங்கு வாங்குவதில் இரண்டு நன்மைகள், ஒன்று விவசாயிகளுக்கு வியாபாரம், ஃப்ரெஷ்ஷான காய்கறி நமக்கும் கிடைத்த சந்தோஷம். என்னை பொறுத்தவரையில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வியாபாரம் மன நிறைவான சந்தோஷம், அதை செய்த உங்களுக்கு பாராட்டு. உங்கள் ஸ்மால் ஹெல்ப் தொடரட்டும், உங்கள் வலைப்பூவும் தொடரட்டும்.

   Delete
 7. லயா எப்படி இருக்கிறாள்?பூசணிக்காயா அது போட்டோவை பார்த்திட்டு என்னவோ என்று நினைத்தேன். படிக்கவும் தான் தெரிந்தது. எனக்கும் மார்க்கெட்டில் வாராவாரம் கொத்தமல்லி இலவசமாக கிடைக்கும். ஆனால் அதற்காக கறிவேப்பிலையும் இஞ்சியும் வாங்க வேணும். வாங்கினால் ப்ரீயா கிடைக்கும்.
  ஜீனோ தர்பூசணி சாப்பிடுவாரா? அம்மா வீட்டில் இருப்பவருக்கு ஐஸ்கிரீமும், வேக வைத்த உருளை கிழங்கின் தோலும் கொள்ளை பிரியம்.

  ReplyDelete
  Replies
  1. லயா நன்றாக இருக்காங்க அபிநயா! நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? ஜீனோ ஒரு புத்தி வந்தா தர்பூசணி, கேண்டலூப் எல்லாம் சாப்பிடுவார். வேகவைத்த காய்கள் எல்லாமும் சாப்பிடுவார். ஐஸ்கிரீம் சாப்பிட்டதில்ல! உங்க ஆளு வெளுத்துக் கட்டுவார் போல! அவர் பேரென்ன? :)

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

   Delete
  2. நான் இந்தியாவில் தான் மா இருக்கிறேன். FB யில் request கொடுத்திருந்தேனே உங்களுக்கு??? அம்மா வீட்டில் இருப்பவர் பெயர் ஸ்கூபி.

   Delete
 8. Mahi, as usual enjoyed reading, always loved your sense of humor..

  ReplyDelete
 9. Always enjoy your blog Mahi!!! Love kosuru!!!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails