Saturday, July 4, 2015

சிறுவர் சிறுமியர் பாடல்கள் - பகுதி 2


மலரும் நினைவுகளின் தொடர்ச்சியாக அடுத்த பகுதி...எங்க வீட்டுக் குட்டிப்பூவின் வளர்ச்சியால் முழுமை பெறாமல் அவ்வப்போது டபக்கு டபக்குன்னு பப்ளிஷ் ஆகி, நிறையப் பேர் படித்து ஒரு சிலர் கருத்தும் தந்துவிட்டார்கள். சரி, பாடல்களைப் பார்க்கலாம்!
~~~
அகத்திக்கீர புண்ணாக்கு..
அத்த கொஞ்சம் நெய்யூத்து!'
பிஞ்சுக் கத்திரிகாயிக்கு
பின்னியுங் கொஞ்சம் நெய்யூத்து!!
... இந்தப்பாடல் இடது உள்ளங்கையில் வலது ஆள்காட்டி விரலால் தொட்டுக்கொண்டே பாடுவது..ஏழெட்டு மாதக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து நாம் பாடினால் அவர்கள் சைகை செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்! :)
~~~
பிறந்த குழந்தைகள்  முதல் 3-4 மாதங்களுக்குப் பிறகு, நம் முகம் பார்த்துச் சிரிப்பதும், ஆ...ஊ...என பேசுவதும் ( நாயம் பேசறது என்போம், எங்கூருத் தமிழில்! :)) ஆரம்பிக்கும். அப்பொழுது பாடும் பாடல்கள் இனி வருவன..

உங்கு..உங்கு..உங்கு..
இது உங்கு குடிக்கிற சங்கு..
ஊறுகா திங்கிற வாயி..
உனக்கு
~~~
ஆத்தாச் சக்கர வாச்சி...
உனக்கு அடியில முறிச்ச கரும்போ..
கொம்பிலிருக்குந் தேனோ
கோர்த்த மல்லிகப்பூவோ..
~~~
தங்கமே தாராவே
நீ தடத்துல வழியில போகாதே
தட்டாங் கண்டாப் புடிச்சிக்குவான்
தங்கமுன்னு சொல்லி உன்னத்
தராசுல வச்சு நிறுத்துக்குவான்
பொன்னுன்னு சொல்லி உன்னைப்
பொட்டியில வச்சுப் பூட்டிக்குவான்..
~~~
கொஞ்சம் வளர்ந்த (11/2 வயது, அதற்கும் மேலும்) குழந்தைகளுடன் விளையாட இந்தப் பாடல்..

சோறு சோறுங்குதாம்
கொழம்பு கொழம்புங்குதாம்
ரசம் ரசங்குதாம்
காயி காயிங்குதாம்
மோரு மோருங்குதாம்
எல்லாம் ஒண்ணாப் போட்டு
கும்மாயங் கும்மாயம் பண்ணி
அம்மாவுக்கொரு வாயி
அப்பாவுக்கொரு வாயி
அண்ணனுக்கொரு வாயி
அக்காளுக்கொரு வாயி
ஜிம்மி-க்கொரு வாயி..
நிலாவுக்கொரு வாயி...
கழுவிக் கழுவிக் காக்காயிக்கூத்து..
நண்டூறுது..நரியூறுது..
நண்டூறுது,,நரியூறுது..!!!

இது குழந்தையின் உள்ளங்கையைப் பிடித்து கட்டைவிரல் முதல் (சோறு) சுண்டுவிரல் (மோரு) வரை சொல்லி, 5 விரல்களையும் மடக்கி உள்ளங்கையில் கொட்டி (எல்லாம் ஒண்ணாப் போட்டு) பாடுபவரின் முழங்கையால் குழ்ந்தையின் உள்ளங்கையில் அழுத்தி, (கும்மாயங் கும்மாயம் பண்ணி), வீட்டிலுள்ளோருக்கும் நிலாவுக்கும் ஓரொரு வாய் ஊட்டுவதாக அபிநயித்து, உள்ளங்கையைக் கழுவிக் காக்காய்க்கும் ஊத்துவதாக அபிநயிக்கவேண்டும். பிறகு "நண்டூறுது, நரியூறுது..மாமியார் ஊட்டுக்குத் தடம் போகுது" என்று சொல்லி, உள்ளங்கையிலிருந்து தோள்பட்டை வரை இரு விரல்களால் நடந்து(!) சென்று "கிச்சு கிச்சு" பண்ணுவது.. இந்தப் பாட்டிற்கு குழந்தைகள் சிரிப்பு சூப்பரா இருக்கும்.

இந்தப்பாட்டிலேயே இன்னொரு வர்ஷன் அனானி சொல்லிருக்காங்க..
~~~
சோறு சோறுங்குதாம்
சோத்துக்கெங்கே போறதுங்குதாம்..
அம்மிச்சி வீட்டுக்குப் போங்குதாம்..
அம்மிச்சி வீடு எங்கேங்குதாம்..
அம்மிச்சி வீடு இங்கேங்குதாம்..
கும்மாயம்..கும்மாயம்..
அம்மிச்சி வீட்டுக்குத் தடம் போகுது
அப்படின்னு சொல்லிகிட்டே குழந்தைய கிச்சு கிச்சு மூட்டிச் சிரிக்கவைப்பது.

~~~
எல்லாரும் வட்டமாக உட்கார்ந்து கொண்டு ஒருவர் காதை அடுத்திருப்பவர் பிடித்துக்கொண்டு இந்தப் பாட்டைப் பாடுவதாம். இந்தப் பாடலைச் சொல்லியவரின் விளக்கம் இது.
கடுக்கு முடுக்கு நாட்டுச் சக்கர டம்மா டம்மா டை...
அஸ்கனக்கடி கோக்கனக்கடி கொய்!!
~~~
வெகு ஆர்வமாக ஆரம்பித்து முதல் பகுதியை எழுதி, இரண்டாம் பகுதி இரண்டு முறை தானாக வெளியாகி அப்படி இப்படின்னு ஒரு வழியா நிறைவு செய்தாச்சு. நன்றிங்க! :)

14 comments:

  1. Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க டிடி அண்ணா!

      Delete
  2. பேசாம உங்க பாப்புவுக்கும் ஒரு ப்ளாக் ஓபன் பண்ணிட வேண்டியதுதான்.

    ஆமாம், இப்பதிவு வருவதும் க்ளிக் பண்ணினா காணாமப் போவதுமாகக் கண்ணாமூச்சிக் காட்டியது. மகி, இதுல ஒரு பாட்டுகூட நாங்க பாடினது கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..டெரர் யோசனையாச் சொல்றீங்களே சித்ராக்கா??!! :)

      //இப்பதிவு வருவதும் க்ளிக் பண்ணினா காணாமப் போவதுமாகக் கண்ணாமூச்சிக் காட்டியது. //அந்த சோகக்கதைய ஏங்கேக்கறீங்க..ஷெட்யூல் பண்ணிவுட்டு மறந்துட்டேன், அது ஆட்டோ பப்ளிஷ் ஆகி 3 நாள் கழிச்சுத்தான் பாத்தேன். ஹிஹிஹி...அப்புறம் மறுபடி முழுசா எழுதி பப்ளிஷ் பண்ணுவோம்னு ரீஷெட்யூல் பண்ணி, அதுவும் பப்ளிஷ் ஆகி கடுப்பேத்திருச்சு. அப்புடி இப்புடின்னு ஒரு வழியா சக்ஸஸ்ஃபுல்லா பப்ளிஷ் பண்ணிட்டேன். :)
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!

      Delete
  3. மகி,
    //உங்கு..உங்கு..உங்கு..
    இது உங்கு குடிக்கிற சங்கு..
    ஊறுகா திங்கிற வாயி..
    உனக்கு//
    இப்படியும் பாடுவதுண்டு,
    தங்கோ ...உங்கூ குடிக்கீ...மா!!
    தங்கோ... ஊறு...கா திங்கீ...மா!!
    தங்கோ ...பா....லு குடிக்ககீ...மா!!
    தங்கோ... பழஞ்சோ....று(பழம், சோறு) திங்கீ...மா!! அப்படீனு நீட்டி மொழக்கி பாடிட்டு உங்க்..கு..உங்க்..கு னு சொல்லணும், அதனைப் பார்த்த குழந்த தன்னோட செப்பு வாய திறந்து 'ங்கா' அப்பிடினு ஒரே வார்த்தைல முடிச்சிட்டு, மீண்டும் நம்மள பாப்பாங்க, அப்பரமா மீண்டும் நாம அதே போல பாடுனம்னா... வாயக் கூட்டி உக்கு.. அப்பிடினு சொல்லிட்டு மறுபடியும் பொட பொடனு நம்மையே பாப்பாங்க...அதிலயும் குழந்தை முதல்ல பேசுற வார்த்தை த்தா(ஆத்தானு) (அவிங்அப்பாவோட அம்மா) சொன்னா..உடல்நலக்குறைவே வராதாம். மாறா ம்மானு சொல்லிட்டா அடிக்கடி நலங்கிட்டே இருக்குமாம்.. அப்பிடினு சொல்வாங்க... .

    உங்கு குடிக்குமா!!
    ஊறுகா திங்குமா!!
    பாலு குடிக்குமா!!
    பழஞ்சோறு திங்குமா!!
    உங்க்கு..உங்க்கு..

    ReplyDelete
    Replies
    1. அர்ஜூனம்மா, நீங்க சொல்ற எல்லாமே எங்கூட்டுப் பக்கமும் சொல்ற வழக்கந்தான்..!! :) நாயம் பேசற கொழந்தைங்க கூடப் பேசினா நேரம் போறதே தெரியாதே!! :)
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..ரொம்ப தாமதமாச் சொல்றேன், மனசில வைச்சுக்காதீங்க!

      Delete
  4. //பாப்புவுக்கும் ஒரு ப்ளாக்// :-) வழிமொழிகிறேன். :-)

    சுவாரசியமா இருக்கு இந்த இடுகை. எனக்கு எல்லாமே புதிய பாடல்கள்தான் மகி.

    ReplyDelete
    Replies
    1. ஆங்...இங்க இந்த ப்ளாகையோ ஒழுங்கா அப்டேட் பண்ணமுடியாம அந்தரத்தில ஊசல் ஆடுதாம்..இதில பாப்புவுக்கும் ஒரு ப்ளாக்-ஆ!! அவ்வ்வ்வ்வ்!! ஆராச்சும் வந்து எனக்கு பேபிசிட்டிங் பண்ணினீங்கன்னா ஐ வில் கன்ஸிடர் யுவர் ரிக்வஸ்ட்...!! ;)

      பாடல்களை பத்திரமாப் படிச்சு வைங்கோ..பேரக்குழந்தைகளுக்கும் சொல்லணும்ல சீக்கிரம்!! ;) :)

      நன்றி இமா!

      Delete
    2. ஹாங்!!! ;)) செபா இந்திக்காரப் பாப்பாக்களுக்கு, 'ஆனையாடுமாம் பிள்ள ஆனையாடுமாம்' சொல்லிக் கொடுத்த கணக்கால்ல இருக்கும்! நமக்கே பாதி புரியல. ;)

      Delete
  5. எனக்கு புதுசா இருக்கு அக்கா இந்த பாட்டு எல்லாம் ஆனா நல்லா இருக்கு என் பொண்ணுக்கு சொல்லி கொடுக்க ட்ரை பண்றேன் பாட்டுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. அபிநயா, சொல்லிக்கொடுங்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)

      Delete
  6. உங்கள் வலைத்தளம் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்புமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இது வலைப்பதிவர் விழா! வலைப்பதிவர்களே திரண்டு வாருங்கள்!
    http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.html

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க க்ரேஸ்..அனுப்பிட்டேன்!

      Delete
  7. அனுப்பிட்டேன் அண்ணா, நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails