தேவையான பொருட்கள்
கம்பு மாவு -2 கப்
உளுந்து - 1/2கப்பிற்கும் கொஞ்சம் குறைவாக
உப்பு
செய்முறை
ரெடிமேட் கம்பு மாவு(தான்) இங்கே கிடைக்கிறது. அதனை தயாராக எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன் கம்பு மாவு மற்றும் தேவையான உப்புச் சேர்த்து அரைக்கவும்.
நான் கொஞ்சம் லேட்டா பாத்ததால மாவு பொங்ங்ங்ங்ங்....கி கீழ வழியட்டுமா? என்ற நிலையில் இருந்தது. கரெக்ட்டாப் புடிச்சட்டமுல்ல...ஹிஹி..ஃபோட்டோவத்தான்!! ;) :)
கம்பு தோசை மாவுக்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கரைத்து தோசைகளாக வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைக்கல்லை மூடி வைத்து...
கம்பு மாவு -2 கப்
உளுந்து - 1/2கப்பிற்கும் கொஞ்சம் குறைவாக
உப்பு
செய்முறை
ரெடிமேட் கம்பு மாவு(தான்) இங்கே கிடைக்கிறது. அதனை தயாராக எடுத்துக்கொள்ளவும்.
உளுந்துப் பருப்பை நன்கு அலசி 2-3 மணி நேரம் ஊறவைக்கவும். கடைசி அரை மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் நலம். :)
ஊறிய உளுந்தை மிக்ஸியில் அரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.அதனுடன் கம்பு மாவு மற்றும் தேவையான உப்புச் சேர்த்து அரைக்கவும்.
கம்பு மாவு சேர்த்ததும் தேவையான அளவு தண்ணீர் விட்டு சில நிமிடங்கள் மிக்ஸியை ஓடவிட்டால் கட்டிகளில்லாமல் மாவு கலந்துவிடும்.
வேறு பாத்திரத்துக்கு மாற்றி 8 மணி நேரம் புளிக்க விடவும்.நான் கொஞ்சம் லேட்டா பாத்ததால மாவு பொங்ங்ங்ங்ங்....கி கீழ வழியட்டுமா? என்ற நிலையில் இருந்தது. கரெக்ட்டாப் புடிச்சட்டமுல்ல...ஹிஹி..ஃபோட்டோவத்தான்!! ;) :)
கம்பு தோசை மாவுக்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கரைத்து தோசைகளாக வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைக்கல்லை மூடி வைத்து...
எடுத்தால் தோசைகள் சூப்பராக வரும். காரசாரமான சட்னியுடன் பரிமாறவும். படத்திலிருக்கும் சட்னியின் லிங்க் இங்கே.
பி.கு. இந்த கம்பு தோசையின் முன்னோடி ராகி தோசை..ஆமாங்க!! அறுசுவை.காம் -தளத்தில் பகிரப்பட்டிருந்த ராகி தோசையை முயற்சித்து பார்த்ததில் நன்றாக இருந்தது. அடுத்த முறை கடைக்குப் போயிருக்கையில் கம்பு மாவு கண்ணில் படவும் வாங்கிவந்து கம்பு தோசை சுட்டுப் பார்த்து ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்ததால் கம்புதோசை முதலில் கடைக்கு வந்துருச்சு...சாப்புட்டுப் பார்த்து எப்புடி இருந்துச்சுன்னு சொல்லீட்டுப் போங்க...நன்றி!
இன்றைக்கு உங்கள் பொடி தோசை சுடும் போது நினைத்தேன். மகிக்கு நன்றி சொல்ல வேண்டுமென்று.
ReplyDeleteஎனக்கு தேங்காய் சட்னி பிடிக்காது அது செய்யும் அன்று எனக்கு மட்டும் பொடி தோசை தான் 2 வருடங்களாக கை கொடுக்கிறது. நன்றி மகி
நன்றி அபி! :)
Deleteவாவ் சூப்பரா இருக்கு.!! இனி இந்த மாவை தேடி பார்க்கனும். தோசை எந்த விதத்திலும் இங்கு கொடுக்கலாம். விருப்ப உணவு. விதவிதமா மாவு இருக்கு.ஆனா பெயர் டிபரண்ட்.கடைசியில பார்த்த. ""அட ஆமால்ல"" என்கிற மாதிரி போட வைக்கும்.
ReplyDeleteசெய்து பாருங்க ப்ரியா, நன்றி!
Deleteகம்பு தோசையும், கார சட்னியும் கண்ணைக் கவர்கின்றன. ஆற்ரதுக்கு முன்னால ரெண்டு எடுத்துக்கிறேன் :)
ReplyDeleteசித்ராக்கா, எப்படி இருந்தது கம்பு தோசையும் சட்னியும்? :)
Deleteநன்றி அக்கா!
ஹெல்த்தி ரெசிபி , கலர்புல் அருமை. மற்ற சிறுதானியங்களும், பயன்படுத்தி பகிருங்கள். ஹெல்த் இஸ் வெல்த்.
ReplyDeleteநன்றி ராஜேஷ்..இங்கே கம்பு மாவு, சோள மாவு, ராகி மாவு மட்டும்தான் கிடைக்குது. கிடைப்பதை வைச்சு சந்தோஷப் பட்டுக்கவேண்டியதுதான்!
Delete