தேவையான பொருட்கள்
இனிப்பில்லாத பால்கோவா/கோயா/மாவா - 200கிராம்
மைதா மாவு -1/4கப்
ஆப்ப சோடா/ பேக்கிங் சோடா - 2சிட்டிகை
பால் -1/4கப்
சர்க்கரை - 11/4கப்
தண்ணீர் - 11/4கப்
ஏலக்காய்-2
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
கோயா-வை 3-4 மணி நேரங்கள் முன்பாகவே ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும். அறை வெப்பநிலைக்கு வந்தவுடன் அதனை கைகளால் உதிர்த்துக்கொள்ளவும்.
நான் காய்துருவியால் கோயாவை துருவி இருக்கிறேன்.
கைகளால் நன்றாக பொடித்துவிட்டுக் கொண்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகப் பால் தெளித்து பிசையவும்.
அழுத்திப் பிசையத் தேவையில்லை.. விரல்களால் மென்மையாக பிசிறி விட்டு மாவு ஒன்றாக சேர்த்து வந்ததும் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகள் விரிசல் விழாமல் ஸ்மூத்-ஆக இருக்கும்படி உருட்டிவைக்கவும்.
மிதமான தீயில் எண்ணெய் காயவைத்து குலாப் ஜாமூன்களை பொரிக்கவும்.
பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சர்க்கரைப் பாகுக்கு :-
11/4 கப் சர்க்கையுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்..பாகு கொதி வர ஆரம்பித்த 5 நிமிடங்களில் இறக்கி வைக்கவும். ஏலக்காயைத் தட்டிப் போடவும்.
பாகும் சற்று சூடாக இருக்கவேண்டும், ஜாமூன்களும் சற்றே சூடாக இருக்கவேண்டும். ஜாமூன்களை சர்க்கரைப்பாகில் போட்டு ஊறவிடவும்.
இரண்டு மூன்று மணி நேரங்கள் ஊறியதும் சுவையான குலாப்ஜாமூன் ரெடி.
வாவ்... சூப்பரா இருக்கு.. அந்த கடைசி போட்டோ சூப்பர்.. மூணும் நானே எடுத்துகிட்டேன்...
ReplyDeleteVery nice recipe...and pictures...!
ReplyDeleteThanks
ஆஹா.. Looks delicious.
ReplyDeleteசூப்பர் மகி.
ReplyDeleteகடையில் கிடைக்கும் ரெடிமேட் மிக்ஸ் வாங்கியே பழகிவிட்டது :) நல்லாருக்கு மகி.
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
Khoya Gulab Jamoon, this one tastes better than the ready made mix..
ReplyDelete