Wednesday, November 4, 2015

ஆப்பம் - தேங்காய்ப்பால்

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1கப்
புழுங்கலரிசி -1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உளுந்துப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பழைய சாதம் - 1/4 கப்
தேங்காய்த் தண்ணீர் 

செய்முறை
மறுநாள் ஆப்பத்துக்கு அரைக்க சில முன்னேற்பாடுகள் : 
அரிசிகள், வெந்தயம், உளுந்து இவற்றை நன்றாக 2-3 முறை அலசி 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஃப்ரிட்ஜில் ஊறவைக்கவும்.
தேங்காய் வாங்கி வைத்துக்கொள்ளவும். :)

1.காலையில் அரிசிகளை தண்ணீர் வடித்துவைக்கவும். 
2.பழைய சாதத்தையும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைக்கவும்.
3.தேங்காயை உடைத்து கவனமாக தண்ணீரை எடுக்கவும்.அதனை வடித்து வைத்துக்கொள்ளவும்.
4.அரிசி, பழைய சாதம் இவற்றை கிரைண்டரில் போட்டு தேங்காய்த்தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். [சில தேங்காய்களில் தண்ணீர் குறைவாக இருக்கும், அப்படியாயின், தேங்காய்த்தண்ணீருக்குப் பிறகு தேவையான தண்ணீரையும் சேர்த்து அரைக்கவும். நான் வாங்கிய தேங்காயில் நிறையத் தண்ணீர் இருந்தது. மாவரைத்தது போகவும் மீதமானது! :)]
5. மாவு நைஸாக அரைபட்டதும் கொஞ்சமாக உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
6. சுமார் 8-10 மணி நேரங்கள் புளித்ததும் மாவு நன்றாக பொங்கி மேலே வந்திருக்கும்.

தேவையான அளவு மாவை எடுத்து தண்ணீர் சேர்த்து கரைக்கவும். தோசை மாவை விடவும் கொஞ்சம் தண்ணீராக இருக்கவேண்டும்.
ஆப்பச்சட்டி அல்லது குழிவான தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊற்றி, ஆப்பச்சட்டி/தோசைக்கல்லை சுழற்றி மாவு வட்டமாக பரவச் செய்யவும். மூடி போட்டு வேக விடவும்.
ஆப்பம் வெந்ததும் கல்லை விட்டு எழும்பி வரும். சூடான ஆப்பத்தை தேங்காய்ப்பால் மற்றும் விருப்பமான சட்னி- குருமா- ஸ்டூவுடன் பரிமாறவும்.

தேங்காய்ப்பால் (ஷார்ட் கட்)
தேவையான பொருட்கள்
பசும்பால் - 1 கப்
தேங்காய்ப்பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன் 
சர்க்கரை - சுமார் 1/4கப் (சுவைக்கேற்ப)
ஏலக்காய் - 2 
செய்முறை
பாலை காய்ச்சவும்.
பால் பொங்கி வந்ததும் அடுப்பின் தணலை குறைத்து சர்க்கரை மற்றும் தேங்காய்ப்பால் பொடியைச் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிடவும்.
சர்க்கரை கரைந்து சில நிமிடங்கள் சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கி, பொடித்த ஏலக்காயைச் சேர்க்கவும். 

குறிப்பு 
தேங்காய்த் தண்ணீர் சேர்த்து அரைத்தால் அருமையாக இருக்கும், கிடைக்காத பட்சத்தில் டெஸிகேடட் தேங்காய்த்துருவல் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்தும் அரைக்கலாம். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை! :) 
நேரமும் வசதியும் பொறுமையுமிருப்பவர்கள் தேங்காயை அரைத்தே பால் எடுத்து சர்க்கரை ஏலக்காய் சேர்க்கலாம். :) 
பழைய சாதம் சேர்க்காமல் செய்தால் ஆப்பம் வறண்டு போன மாதிரி இருக்கும், அதனால் கண்டிப்பாக சோறு சேர்க்கவேண்டும். 

24 comments:

  1. ஆஹா..! பாலப்பம் ஸ்டெப் பை ஸ்டெப்பாக விளக்கம் அருமை!
    நாங்கள் தேங்காய்த்தண்ணீர் என்று சொல்வதில்லை
    அதனையும் இளநீர் என்போம்..:)
    அடுத்தமுறை செய்து அங்கு படத்துடன் காட்டுகிறேன்.

    தே பால் நடுவில் ஊற்றி அதனையும் சேர்த்துச் சுடுவது எங்களூர் வழக்கம்.
    அப்படிச் சுடும்போது வற்றிச் சுண்டியிருக்கும் தே பால் வாசனையுடன் இரண்டு அப்பம் இன்னும் அதிகமாகச் சாப்பிடச் சொல்லும் சுவையாயிருக்கும்.

    இவ்வகையையும் செய்து பார்ப்போம்.
    பகிர்விற்கு நன்றி மகி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளமதி! தேங்காய்ப்பாலை ஆப்பத்தின் மீது ஊற்றி சுடுவதா?? மாவு ஓரளவு வெந்தவுடன் ஊற்றணுமா? நானும் செய்து பார்க்கிறேன். புது தகவலுக்கு நன்றிங்க! :)

      Delete
  2. மிக வித்தியாசமான செய்முறை மகி. ஊரில் அம்மா வேறு முறையில் செய்வார்கள். எனக்கு அது சரிவரவில்லை. பின்பு என் friend சொன்ன முறையில் செய்கிறேன். எனக்கு மட்டுமே விருப்பமான டிஷ்.
    சூப்பரா இருக்கு ஆப்பம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மகி.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் உளுந்தும் சேர்க்க மாட்டோம், புழுங்கலரிசியும் கிடையாது..இது நம்ம சித்ராக்கா ரெசிப்பில இருந்து கத்துகிட்டேன். தேங்காய்த்தண்ணி சேர்த்து அரைப்பது வழக்கம்தான்..செய்து பாருங்க ப்ரியா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  3. அருமையா அப்பம்.. மகி சுட்ட அப்பம்... நாங்கள் தோசைக்கு மட்டுமே பழைய சாதம் சேர்ப்பதுண்டு, நீங்க அப்பத்துக்கு சேர்க்கிறீங்க புது முறை, ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே....

    ReplyDelete
    Replies
    1. அடடே...பாட்டுப் பாடீட்டீங்க அதிரா!! தோசைக்கு பழைய சாதம்!!! அவ்வ்வ்வ்....அப்ப நீங்க எப்படி ஆப்பம் சுடுவீங்க??! உங்க முறை எனக்கு புதுசா இருக்கும்னு நினைக்கிறேன். ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு வழக்கம்! :)
      செஞ்சு பார்த்து சொல்லோணும் அதிராவ்வ்வ்வ்வ்வ்! நன்றி!!

      Delete
  4. ஆப்பம் எங்க விருப்பமான உணவு ....உங்க ஆப்பம் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா அனு? ரொம்ப சந்தோஷம்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்! :)

      Delete
  5. தேங்காய் பால் உணவு மட்டுமல்ல, அது உடலுக்கான மருந்தும். தேங்காய் பாலில் அவ்வளவு நல்ல சத்துள்ளது, தேங்காயை இதுபோன்று பச்சையாக பயன்படுத்தினால் மிகவும் நல்லது, அதை நெருப்பில் ( சமையல் செய்தால், கொழுப்பு தன்மை கூடுகிறது ) முடிந்தளவு பச்சையாக பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

    நாங்கள் வீட்டிலேயே ( home made coconut oil ) தூய்மையான தேங்காய் என்னை தயாரித்து, அதைதான் பயன்படுத்துகிறோம். நல்ல மனம் ஒரிஜினல், எந்த கலப்படமும் இல்லாதது, தலை முடிக்கு அவ்வளவு நல்லது, முடிகொட்டுபவர்களுக்கு இது மிகவும் நல்லது. நாம் கடையில் வாங்கும் அத்தனையும் கலப்படம்தான், உண்மை தெரிந்தால் யாரும் பயன்படுத்தமாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. ராஜேஷ், வார இதழ்கள், மற்ற இடங்களிலிருந்து காப்பி - பேஸ்ட் செய்யப்படும் கருத்துக்களை இங்கே பிரசுரிக்க விரும்பவில்லை, அதனால் உங்களது ஒரு கருத்தை மட்டும் வெளியிட்டிருக்கிறேன், புரிதலுக்கு நன்றி!

      Delete
  6. Replies
    1. ஆஹா!!! பேஷா இருக்கோம் தக்குடு! நீங்கள்லாம் சௌக்கியமா?? :)

      Delete
  7. இளநீர் சேர்த்து அரைப்பது இப்பொழுது தான் பார்க்கிறேன்.பார்க்கவே ஆப்பம் நன்றாக இருக்கு.தேங்காய்பால் ஷார்ட்கட் அருமை..முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்க ஷமீ...ரொம்ப நல்லா இருக்கும். நன்றி!

      Delete
  8. ஆப்பம் நல்லா வந்திருக்கு மகி. :)!

    ReplyDelete
  9. மகி தேங்காய் தண்ணீர், சாதம் சேர்க்க மாட்டோம்... தேங்காய்ப் பாலுக்கு பவுடருக்கு பதில் தேங்காய்ப் பால் அவ்வளவுதான் வித்தியாசம்.. மாவு தான் வித்தியாசமா இருக்கு.. ஒரு நாள் செய்து பார்க்கிறேன்...... அபி..

    ReplyDelete
    Replies
    1. சாதம் சேர்க்கலைன்னா கொஞ்சம் டிரை-யா இருக்கற மாதிரி இருக்கும் அபி..அதனால நான் சாதம் சேர்க்காம செய்யறதில்ல..செய்து பாருங்க, வித்தியாசம் தெரியும். நன்றி!

      Delete
  10. Looks yummy, haven't tried for sahana yet, will do soon, nice detailed instructions :)

    ReplyDelete
    Replies
    1. Mine doesn't like aappam! She eats only idli & dosai..this is for my elder one u c! ;) :) He loves this for breakfast!
      Thx for the comment appavi!

      Delete
  11. ஆகா நாக்கில எச்சில் ஊறுதே!

    ReplyDelete
  12. Appam Thengai Paal is our favorite combo, when I was in the US, most of the time, I would follow your shortcut method only for making the milk..

    ReplyDelete
    Replies
    1. Thanks Hema..i've never prepared fresh coconut milk (all by myself) so far! heheh!! :D

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails