Tuesday, March 8, 2016

வானவில்

காலையில் கண் விழிக்கும்போதே இடியின் தாளத்துடனும் மழையின் ஜதியுடனும் மின்னலின் நடனத்துடனும் விடிந்த ஒரு நாள்..
மப்பும் மந்தாரமுமாய், சில நிமிஷம் வெயிலும் சில நேரம் கருக்கலுமாய்க் கழிந்து..
சூரியன் தன் வேலையை முடித்துக்கொண்டு கடல்மடியில் உறங்கச் செல்லுமுன் இந்த மனிதர்களுக்குச் சிலநிமிடங்கள் இன்னுமொரு அழகான சந்தோஷத்தைக் கொடுப்போமென 
கருமேகங்களுடன் கூட்டணி சேர்ந்து வானவில் தரிசனத்தைக் கொடுத்துச் சென்றது, நேற்று மாலை!

வயது வித்யாசமில்லாமல் அனைவரையும் அட்டாக் செய்து, தன் வண்ணவில்லால் சிரிப்பைச் சிதறவிட்டு, கையில் இருந்த கருவிகளால் புகைப்படமும் எடுக்கச் செய்து, பூமியில் நமது இருப்பை "Kid in a candy store"- ஆகக் கொண்டாடச் செய்யும் இயற்கைக்கு என்ன சொல்லி நன்றி சொல்ல??!!
மழைத்துளி மண்ணில் வந்து சிந்தச் சிந்த 
எழுகிறதே ஒரு வாசம்...
அது எனை வானவில்லில் கொண்டு
 சேர்த்து விடுகிறதே சில நேரம்!! அனைவரும் நலமாய் இருக்கிறீர்கள்தானே? சில நாள் வலைப்பூ பக்கம் வர இயலாது என்று நினைத்தது சிலமாதங்களாய் நீண்டுவிட்டது. இதற்கு மேலும் விட்டால் சரிவராது என்று கஷ்டப்பட்டு அப்படி இப்படீன்னு ஒரு நாலு ஃபோட்டோவை வச்சு ஒரு பதிவு தேத்தி அட்டனன்ஸ் போட்டாச்சு. இனி வழக்கம்போல அடிக்கடி சந்திக்கலாம்..என்ன சொல்றீங்க?
...
.......
..
..........அச்சச்சோ, பின்னங்கால் பிடரியில் பட ஓடாதீங்க..எப்பவும்போல, நிதானமாப் படிச்சுட்டு, படங்களைப் பாத்துட்டு, பாட்டும் கேட்டுட்டு, டைமிருந்தா ஒரு கமெண்ட்டும் போட்டுட்டு மறுபடி மறுபடி வாங்க! :)))) நன்றி, வணக்கம்! 

8 comments:

 1. ஆஹா ரொம்பவே அழகா இருக்குக் கா. நான் இப்போதான் எங்கேயோ பார்த்தேன்.. எங்கனு மறந்து போச்சு... லயாவும் என்ஜாய் பண்ணா போல..
  ஹி ஹி நீங்க போஸ்ட் போட்டதே தெரியாது.. இப்போதான் பார்த்தேன்.. சொல்லாததற்கு ஒரு கர்ர்ர்ர்ர்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அபி! லயாவுக்கு ஒரே சந்தோஷம்..இப்பவும் வானத்தைப் பாத்தா "ரெய்ன்மோ, ரெய்ன்மோ" னு கத்திட்டு இருக்கா! :)

   பதிவை நீயாப் பாத்தப்போ சர்ப்ரைஸா இருந்திருக்கும்ல? அதை கெடுக்கவேணாமேனு தான் சொல்லல! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   Delete
 2. வானவில் சூப்பர்...

  ReplyDelete
 3. வெல்கம் மகி. வானவில் படங்கள் எல்லாமே சூப்பரா இருக்கு. வானவில் வந்தால் பார்க்காம இருக்கமாட்டேன். ரெம்ப பிடிக்கும் வானவில்.இங்கு வானவில் பார்த்தால் ஏதாவது விருப்பமானது நினைக்கச்சொல்வாங்க.ஒரு நம்பிக்கை.சூப்பர் பாட்டு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ப்ரியா, இங்கும் வானவில் பாத்த அடுத்த நாள் ஏதோ நல்லது நடக்கும் அப்படினு சொல்றாங்க! :) பாட்டு உங்களுக்குப் புடிச்சுதா? எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா!

   Delete
 4. புகைப்படங்கள் அனைத்தும் கண்ணுக்கு இதம். கலர்கலரா வானவில் க்யூட்டா லயா, அழகான முற்றம். பிடிச்சிருக்கு. லயாட்ட சொல்லுங்க, ரெய்ன்மோ அடில பானை நிறைய சாக்லெட் இருக்கு என்று. :-)

  தொடர்ந்து இடுகைகளை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. //ரெய்ன்மோ அடில பானை நிறைய சாக்லெட் இருக்கு என்று. :-) // கர்ர்ர்ர்ர்ர்ர்! இப்புடியுமா புள்ளைங்களைக் கெடுப்பாங்க?? ஆனா லயா என்ன மாதிரி..சாக்லட்லாம் புடிக்காது! ஹிஹிஹி!!

   தொடர்ந்து பதிவுகளை தர முயற்சிக்கிறேன் இமா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்!

   Delete

LinkWithin

Related Posts with Thumbnails