எல்லாரும் நல்லா இருக்கீங்களா? நாந்தான் தக்காளி பேசறேன்....நலம், நலமறிய ஆஆஆஆஆவல்!! :)))))
என் பேரு பேபி டொமாட்டோ (எ) தக்காளி! எனக்கு இம்பூட்டு அயகான பேரை வச்சது எங்க வீட்டு லயா பேபி! ;) ;)
பூச்செடி வாங்க நர்சரிக்கு வந்தவங்க கண்ணில தளதளன்னு இருந்த நானும் கண்ணில படவே என்னையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. தக்காளிச்செடியே வாங்கக்கூடாதுன்னு முடிவுல இருந்தவுகளையும் மயக்கி, வீட்டுக்கு வந்தவளாக்கும் நானு! B-)
வீட்டுக்கு வந்த சிலநாள் நானும் தொட்டியிலயே இருந்தேன்..அப்புறமா தரையை (ரொம்ப கஷ்டப்பட்டு) தோண்டி, எனக்கு ஒரு புது வீடு கட்டி கொடுத்தாங்க. பார்க்க துளசி மாடம் மாதிரியே அயகான வீடு! எனக்கும் வீடு நல்லா புடிச்சுப்போச்சு...பூ பூத்து ஒரு (ஒரே ஒரு) பிஞ்சும் வளர்த்தேன்.
செடியிலே ஒரே ஒரு காய்தான் இருக்குன்னதும், நிறைய காய் வர டெக்னிக்கு, அப்படீன்னு என்னோட இலைகளை எல்லாம் சரிபாதியா வெட்டி விட்டாங்க..அது மட்டுமா?? டெய்லி வந்து என்னை சுண்டி சுண்டி விட்டாங்க...அவ்வ்வ்வ்வ்!!! வலிக்க்க்க்க்கும்..ஹூம்!! எங்க வலியெல்லாம் ஆருக்கு புரியுது??! அம்மா வந்து சுண்டி விடறதும், என்னோட வலிக்கு மருந்து போடற மாதிரி பேபி லயம் வந்து "ஹாய் பேபி டொமாட்டோ!" அப்படின்னு சொல்லுறதுமா சில நாட்கள் போனது.
என்னதான் எண்ணையத் தடவிட்டு புரண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும்ன்றமாதிரி நான் ஒரே ஒரு தக்காளிதான் வளத்தேன். ஹிஹி..!! அந்த ஒரு தக்காளியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளர்ந்துச்சு. முகம் சிவந்துச்சு, பழுத்துச்சு..!! :)
தக்காளி பழுத்தாச்சு...பேபி வந்து பறிச்சாச்சு...அரிஞ்சு சமைச்சு சாப்ட்டும் ஆச்சு!! :D
இப்படியாக ஒரு முறைக்கு ஒரு தக்காளியாக எங்க வீட்டு தக்காளிச்செடி காய்ச்சுக்கொண்டு இருக்கிறாள். இரண்டாவது பழம் பழுத்தாச்சு! மூணாவது பிஞ்சும் வந்திருக்கு. யாருப்பா அங்க...கிலோ கணக்கில தக்காளி பறிக்கிறவங்க எல்லாம் எங்க தக்காளிப்பொண்ணைப் பாத்து கண்ணு போடாதீங்க!! அக்காங்க்க்க்க்க்க்க்க்க்க்!! ;) :)
evloo periya thakkaali... onru kaaythaalum perithaaka kaayththirikkirathe... baby tomatonu vaangki hyprid aayitussoo..:)
ReplyDeleteஇது Heirloom_tomato வகைங்க..பேபி டொமட்டோ எல்லாம் இல்லை! சித்ராக்கா சொல்லிருக்க மாதிரி அவளுக்கு தேவையான சாப்பாடெல்லாம் போட்டு வளத்தா இன்னும் பெரிய்ய்ய்ய்ய்ய பழங்கள் தருவா..திராட்சைக்கொடி போல படர்ந்து வரும் கொடிவகை தக்காளி. :)))))
Deletehttps://en.wikipedia.org/wiki/Heirloom_tomato
ஹா ஹா ஹா :)))
ReplyDeleteஒவ்வொன்னா காய்ச்சாலும் நமக்கு சந்தோஷமே !
இங்க சில வீட்ல, சும்மா கீழயே படர்ந்து அவ்ளோ காய் காய்க்குது. எதுக்கும் கொஞ்சம் சாப்பாடு குடுத்துப் பாருங்க :)
சாப்பாடு..இந்த ஏழெட்டு வருஷத்தில இப்பத்தான் இவங்களுக்குன்னு தனியா வாங்கிருக்கேன் அக்கா..இனிமேல் குடுத்துப் பார்க்கிறேன். ;) :)
Deleteஅது கரெக்ட்டுதான், சும்மா வேஸ்டுன்னு வீசினேன், செடியில் கிலோ கணக்கில் தக்காளி காய்க்குதுன்றாங்க..என்ன செய்ய? நாமள்லாம் அவ்ளோ லக்கி இல்லை! ஹூம்!! ;) :)
அழகான தக்காளி.கலர்,ஷேப் அருமை. லயாவுடன் பேசும் தக்காளிக்கு கவிதையும் சொல்லி விடுவாள் லயா. கதை நன்றாக இருக்கு. ஒவ்வொன்றாகவே பழுக்கட்டும். லயாவிற்கு என் அன்பு. அன்புடன்
ReplyDeleteநன்றிம்மா..அவளுக்கு பேபி பீன்ஸ், பேபி பிரிஞ்சால், பேபி டொமட்டோ இவையெல்லாம் ரொம்ப பிரியம்..போரடிச்சா, " வா...பேபீஸ் பார்க்கலாம்!" அப்படின்னு என்னை கூட்டிப்போவா!! :)
DeleteMahi, you write even about a small thing with such sense of humor, baby tomato kadaiya romba rasichu padichen..
ReplyDelete:) thank you Hema! :)
Deleteநீங்கள்லாம் இப்படி சொல்றதாலதான் நானும் விடாம எயுதிட்டே;):) இருக்கேன்...நன்றி!!
ஒரு தக்காளிக்கே அம்மாவும் பொண்ணும் போஸ்ட் போடுறீங்களே?? கிலோ கணக்கில பறிச்சா??ஆத்தி நினைச்சாலே சிரிப்பு வருது... :) :)
ReplyDeleteகிலோ கணக்கில பறிச்சா....சமைச்சு சாப்பிடவே நேரமிருக்காதே? அப்புறமெங்கே போஸ்ட் போடுறது?? ஒரு தக்காளி காய்க்கவும்தானே இதுக்கெல்லாம் டைமிருக்கு?? இப்பூடி அப்பாவியா இருக்கிறியே அபி?? ஹிஹிஹி...ஹஹஹ!!!
Deleteஇங்க இந்த தக்காளி ஒரே ஒரு செடி எங்காச்சும் களையா வளர ஆரம்பிக்கும். கவனிப்பு இல்லாவிட்டாலும், தனக்குப் புடிச்ச இடம் என்று காய்ச்சுத் தள்ளும். போன வருஷம் நாங்க வேற தக்காளி வைச்சதால கோபிச்சுட்டு பக்கத்து ட்ரைவ்வேக்கு இடம் மாறிட்டார் போல இருக்கு.
ReplyDeleteலயம்ஸ்..... எனக்கும் ஒரு பேபி டொமாட்டோ வளர்த்து அனுப்புங்க.